தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அன்பை வெளிப்படுத்துங்கள் ஆண்களே! பெண்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!!

View previous topic View next topic Go down

அன்பை வெளிப்படுத்துங்கள் ஆண்களே! பெண்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!! Empty அன்பை வெளிப்படுத்துங்கள் ஆண்களே! பெண்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!!

Post by முழுமுதலோன் Wed Oct 09, 2013 10:38 am

அன்பை வெளிப்படுத்துங்கள் ஆண்களே! பெண்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!! Z
தம்பதியரிடையேயான பிரச்சினைக்கு மூல காரணமே அன்பை சரியான அளவில் வெளிப்படுத்தாமல் விடுவதுதான். மனதில் டன் கணக்கில் அன்பும்பாசமும் இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது வெற்றியின் ரகசியம். நான் இங்கே தவிக்கிறேன். அவருக்கு என்மேல அக்கறை இல்லாம இருக்கிறாரே என்று நினைத்தாலே போதும் விரிசலின் விதை ஊன்றப்பட்டு விடும். எனவே ஆண்களே உங்களின் மனைவி மீதான பிரியத்தை ஏதாவது ஒரு விதத்தில் வெளிப்படுத்துங்கள் ஏனெனில் அவர்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான் என்கின்றனர் நிபுணர்கள். கணவரிடம் இருந்து மனைவி என்ன எதிர்பார்க்கிறார்அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து மனைவியின் இதய சிம்மாசனத்தில் இடம் பெறுவது எப்படி என்றும் நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

நம்பிக்கைதான் வாழ்க்கை
நகை விளம்பரத்தில் சொல்வதைப் போல நம்பிக்கை அதானே எல்லாம்இது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ இல்லற வாழ்க்கைக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். எந்த சூழ்நிலையிலும் தன்னை சந்தேகப்படாத தன்மீது முழு அளவில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது மனைவியின் எதிர்பார்ப்பாகும். அதேபோல கணவன் நேர்மையானவனாகதன்னை ஏமாற்றாதவனாக இருக்கவேண்டும் என்றும் பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.
புரிந்து கொள்ளுங்கள்
பொதுவாகக் கணவன் மனைவிக்கு இடையில் புரிந்துணர்வு முக்கியம். எந்த அளவு புரிந்துணர்வு இருந்தாலும்சந்தேகம் என்பது எப்போதும் வரலாம். அதனால்புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளும் அதே நேரம்எந்தப் பிரச்சினை மனதில் தோன்றினாலும்தெளிவாக அதைப் பேசி அதற்கான தெளிவான முடிவைக் காண்பதே இதற்குச் சிறந்த வழி.
உங்கள் மனைவி உங்களது நண்பர் ஒருவருடன் யதார்த்தமாகப் பழகும் விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால்அவருடன் அன்பாகப் பேசிநீங்கள் எந்த அளவுக்கு அவரை நேசிக்கின்றீர்கள் என்பதை உணர்த்திஎதிர்காலம் பற்றியும் குழந்தைகள் பற்றியும் பேசிபிரச்சினை இல்லாத ஒரு அழகான வாழ்க்கையைக் கண்ணில் காட்டிஉங்களது மனதில் உள்ள சந்தேகத்தை எடுத்துக் கூறினால்மனைவி அதை எளிதாக புரிந்து கொள்வார். இதைத்தான் பெரும்பாலான மனைவிகளும் எதிர்பார்க்கின்றனர் என்கிறது சர்வே ஒன்று.
திருப்தியான உறவு
குடும்ப உறவுகளுடன் நமக்கு ஏற்படும் அன்பு வேறு தம்பதியரிடையே ஏற்படும் அன்பு வேறு. இந்த அன்பு மற்றைய எல்லா அன்பை விடவும் வேறு பட்டது. பொதுவாக ஆண்களும் பெண்களும் ஒரேயடியாகத் தாம்பத்திய உறவில் திருப்தி காண்பது குறைவு. சிலவேளை கணவன் முதலில் திருப்தி அடையலாம் அல்லது மனைவி முதலில் திருப்தி அடையலாம். இதில் முதலில் திருப்தி அடைந்தவர் மற்ற நபரின் திருப்தி அடையாத நிலையை உணர்ந்தாலே பாதிப் பிரச்சினை தீர்ந்து விடும். எனவே உறவின் போது ஆணின் திருப்தியை பற்றி மட்டுமே கருத்தில் கொள்ளாமல் பெண்களையும் கொஞ்சம் பரிவோடு கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் பெண்கள்.
அன்பாய் இருங்களேன்
ஆண்களை விடப் பெண்கள் பொதுவாக ஆரம்பத்தில் போலவே கடைசிவரைத் தனது கணவனிடம் இருந்து அன்பை எதிர் பார்க்கின்றனர். அதே நேரம் சில ஆண்களும் இதை எதிர் பார்க்கின்றனர். இது கடைசிவரை ஒரே மாதிரி இருக்க வாய்ப்புக் குறைவாகவே அமைகிறது.
வேலைப் பளு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக மனைவி மீது அன்பு செலுத்தும் வாய்ப்பு குறைவாகவே அமைகிறது. மனைவிக்கு ஏதாவது துன்பம் வந்தாலோஒரு நோய் வாய்ப்பட்டாலோ அல்லது அவர்களது உறவினர்களில் யாருக்காவது ஏதேனும் துன்பம் நேர்ந்தாலோஅவற்றை கணவர் அக்கறையாய் அணுகி ஆறுதல் அளிக்கவேண்டும் என்பது மனைவியின் எதிர்பார்ப்பாகும்.
இடைவெளி வேண்டாமே
தம்பதியரிடையே இடைவெளி ஏற்படாமல் இருக்க மாதத்திற்கு ஒரு நாலாவது இருவரும் சேர்ந்து எங்காவது சென்று சாப்பிடலாம் அப்பொழுது கிடைக்கும் தனிமையில் மனதுவிட்டுப் பேசலாம். எந்தப் பிரச்சினை வந்தாலும் கோபத்தில் வார்த்தைகளை வெளிவிடாமல் இருப்பதோடுஆத்திரத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கவேண்டும். ஒருவரது உணர்வை மற்றவர் மதித்துபுரிந்து கொண்டு நடக்கலாம். பெண்களின் அன்பான இந்த எதிர்பார்ப்புகளை மதித்து அவற்றிர்க்கு ஏற்ப நடந்து கொள்ளும் கணவரை மனைவிகள் இதய சிம்மாசனத்தில் வைத்து பூஜிப்பார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
நீங்க எப்படி நல்ல கணவரா நடந்துக்கிறீங்களா?
http://manakkalayyampet.blogspot.in/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அன்பை வெளிப்படுத்துங்கள் ஆண்களே! பெண்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!! Empty Re: அன்பை வெளிப்படுத்துங்கள் ஆண்களே! பெண்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!!

Post by kanmani singh Wed Oct 09, 2013 1:29 pm

நல்ல கட்டுரை..

கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

அன்பை வெளிப்படுத்துங்கள் ஆண்களே! பெண்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!! Empty Re: அன்பை வெளிப்படுத்துங்கள் ஆண்களே! பெண்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!!

Post by மகா பிரபு Wed Oct 09, 2013 3:52 pm

நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அன்பை வெளிப்படுத்துங்கள் ஆண்களே! பெண்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!! Empty Re: அன்பை வெளிப்படுத்துங்கள் ஆண்களே! பெண்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!!

Post by sawmya Wed Oct 09, 2013 4:52 pm

முக நூலில்  படித்ததில் பிடித்தது ...

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்...

1.
எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

2.
கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.

3.
மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

4.
இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

5.
எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

6.
மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

7.
மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

8.
கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்
தான் நடத்துகின்றனர்.

9.
கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.

10.
அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.

நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

அன்பை வெளிப்படுத்துங்கள் ஆண்களே! பெண்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!! Empty Re: அன்பை வெளிப்படுத்துங்கள் ஆண்களே! பெண்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum