தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!

View previous topic View next topic Go down

நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!  Empty நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!

Post by sawmya Wed Oct 23, 2013 3:07 pm

நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!  Q54b
மனிதர்கள் சந்தோஷமாகவும், அமைதியோடும் வாழ வேண்டும். இதற்கான வழிகாட்டியாக இருப்பவைதான் மதங்கள். 
அதுவும் நாம் பிறந்திருக்கும் இந்த பூமி உலகத்திலேயே மிகச் சிறந்த பூமி. 
அன்பாலான நல்லதொரு வாழ்க்கையை வேர்களாக கொண்ட பூமி. உலகத்துக்கே ஒழுக்கத்தைப் போதிக்கும் தகுதியுள்ள பூமிகூட. 

அப்படிப்பட்ட பூமியில் பிறந்துள்ள நாம் ஒருபோதும் மதவெறி கொண்டவர்களாய் இருக்கக் கூடாது. 
மதங்களுக்கு அப்பால் மனிதர்களை நேசிப்பவராய் இருக்க வேண்டும். மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதர்களாக வாழ முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். 
மதமா? மனிதனா? என்ற பிரச்சினை வரும்போது, முதலில் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும். 

மனிதன் இல்லையேல் இந்த உலகில் எதுவும் இல்லை. உலகமே இல்லை. 

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் அர்ப்பணிக்கும் பண்பு. 
அப்பண்பை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். 
பிறருக்கு நன்மையைத் தருவதிலேயே நமது கவனம் முழுக்க இருக்க வேண்டும்.

உங்கள் வேலியில் படர்ந்திருக்கும் பாகல் கொடியைப் பாருங்களேன்.

நீங்கள் அதற்கு முறையாகப் பந்தல் அமைத்தாலும் சரி... அமைக்காவிட்டாலும் சரி! நீர் ஊற்றினாலும் சரி.. ஊற்றாவிட்டாலும் சரி! உரமிட்டாலும் சரி...உரமிடாவிட்டாலும் சரி! பாதுகாப்புக்காக வேலியிட்டாலும் சரி.. அல்லது அப்படியே விட்டு விட்டாலும் சரி! அந்த சின்னஞ்சிறு செடி தனது காய்க்கும தன்மையை விட்டுவிடுவதில்லை. நீருக்காகத தனது பிஞ்சு வேர்களை பூமிக்குள் கஷ்டப்பட்டு செலுத்துகிறது. குத்தும் வேலி முள்ளையே பந்தலாக்கி.. கொடி விட்டுப் படர்கிறது. 

சில நேரங்களில் ஆடு-மாடுகள் மேய்ந்து விட்டாலோ.. மிதித்துவிட்டாலோ.. அது சோர்ந்து போவதில்லை. மீண்டும்... மீண்டும் முளைவிட்டுக் காய்த்துக் குலுங்க வேண்டும் என்ற அதன் குணத்தை என்றும் மாற்றிக் கொள்வதில்லை. சோதனைகளையும், வேதனைகளையும் பொறுத்துக் கொண்டு, கடைசியில் பூவும், பிஞ்சுமாய்க் காய்த்துக் குலுங்குகிறது. நமக்கு சுவைமிக்க காய்கறியாகிறது.

"அர்ப்பணியுங்கள்!"- என்பதுதான் இந்த சின்ன பாகல் கொடி நமக்குச் சொல்லும் செய்தி. 

நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகம்கூட இதே செய்தியைத்தான் நமக்குத் தெரிவிக்கிறது. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி இயங்குவதால்தான் நாம் அமைதியுடன் வாழ முடிகிறது. பாகல் கொடி சொல்லும் செய்தியின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் வாழும் நாடு நமது வீட்டைப் போன்றது. நமது வீட்டின் ஒவ்வொரு செங்கல்லையும் நாம் எப்படி கஷ்டப்பட்டு ஒன்று சேர்த்துக் கட்டியிருப்போம்! அப்படி கட்டிய வீட்டை நாம் உடைத்து விடுவோமா? ஒருக்காலும் செய்ய மாட்டோம். அதேபோல, நமது வீட்டாரிடம் நாம் வேற்றுமை காட்டுவோமா? ஒருபோதும் காட்ட மாட்டோம்! நமது அண்ணன்.. தங்கைக்கு ... சொந்த - பந்தங்களுக்கு தீமை வருவதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருப்போமா? அப்படி ஏதாவது நடந்துவிட்டால் துடிதுடித்து விடுவோம் அல்லவா?

அதேபோலத்தான்.. இந்த நாடும்... இந்த நாட்டு மக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்கூட!

நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..! ஆம்.. மிகச் சிறந்த மனிதர்களாக!!!

- முக நூல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!  Empty Re: நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!

Post by sawmya Wed Oct 23, 2013 3:37 pm

அடுத்தவர் துன்பத்தை தன் துன்பமாக கருதுவதும், 
பிறருடைய துன்ப துயரங்களில் உதவுவதும், "உயிர்களிடம் இரங்குதல்" என்பதன் உண்மைப் பொருளாகும். 
பிற உயிர்களை நேசிப்பவனே நல்ல மனிதனாவான்.

ஒருவருக்கு ஒருவர் இரக்கம் கொண்டு வாழ்வதே மனித வாழ்க்கையாகும். 
உலகிலுள்ள எல்லா படைப்புகளும் ஒன்றுடன் மற்றொன்று உதவியாகவும், பயன்படத்தக்கதாகவும் உள்ளன.

பிள்ளைகள் பெற்றோருக்கு இரக்கம் காட்ட வேண்டும். 
இல்லையென்றால்.. முதியோர் வாழ்வில் அமைதி பறிபோகும். முதியோர் இல்லங்கள் பெருகும்.

அப்பா-அம்மா இருவரிடையேயும் இரங்கும் தன்மை வேண்டும். 
இல்லையென்றால்.. வீட்டுக் காரியங்கள் ஒழுங்காய் நடக்காது. 

அண்ணன்-தம்பிகளிடையே இரக்கம் வேண்டும். 
இல்லையென்றால் சகோதர பாசம் என்னும் 'பூ' பூக்காது!

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இரக்கம் காட்ட வேண்டும். 
இல்லையென்றால்.. வருங்காலத் தலைமுறை செழிக்காது!

அடுத்தவர்க்கு இரக்கம் காட்டாதவன் உண்மையில் துரதிஷ்டசாலியாகவே இருக்க முடியும். 
ஒருவர் மற்றொருவருக்கு இரக்கம் காட்டி உதவி செய்து கொள்ளாமல் எந்த மனித சமூகமும் உலகில் வாழ முடியாது.


இந்திய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால்.. 
ஒருவர் மற்றொருவருடன் இரக்கம் கொண்டு வாழாததால்.. பகைமை பிறந்தது.
 விரோதம் வளர்ந்தது. 
குரோதம் தழைத்தது. ஒற்றுமையும்- நல்லிணக்கம் சீர்க்குலைந்தது. 
கடைசியல், நாடு வெள்ளையரிடம் அடிமைப்பட்டது. நம் நாட்டின் செல்வங்கள் எல்லாம் அந்நிய நாட்டுக்கு கொள்ளையடிக்கப்பட்டன. 
இதன் தீமையைப் பெரிதாக அனுபவித்த நம் பெரியோர்கள் அன்பையும், இரக்கத்தையும் மக்கள் மனதில் விதைத்தனர். 
அதன் மூலம் மக்களிடையே ஒற்றுமையும், இணக்கமும் ஏற்பட்டன.
 விடுதலை உணர்வும், போராட்ட மனப்பான்மையும் மேலோங்கின. 
நாடு அந்நிய அடிமைத்தளையிலிருந் விடுதலைப் பெற்றது. 

இன்று விடுதலை இந்தியாவில் நாம் அமைதி இழந்து வருகின்றோம். 
இதற்குக் காரணம் நம் மக்களிடையே இரக்கம், பரிவு என்ற நல்ல குணங்கள் தொலைந்து போனதுதான்!

உயிர்களிடம் இரங்குவது சம்பந்தமான சிறந்த எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.

ஒருமுறை. அன்பு நபியும், அவர்களுடைய தோழர்களும் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். 
சற்று ஓய்வு எடுக்க வழியில் கூடாரம் அமைத்துத் தங்கினார்கள். 

சக பயணிகளில் ஒருவர் குளிர் தாங்காமல் தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தார். 
அவரை நோக்கி நடக்கத் தொடங்கிய நபிகள் நாயகம் சட்டென்று ஓரிடத்தில் நின்றார்.

அங்கே ஒரு மண் புற்று. அதில் நிறைய எறும்புகள் இருந்தன. 
எறும்புகள் மண் புற்றைச் சுற்றி பற்பல வேலைகளுக்காக ஓடித் திரிந்து கொண்டிருந்தன. 

அன்பு நபி பெரிதும் கவலை அடைந்தார். அற்ப உயிரினங்கள்தான் என்றாலும், அவையும் இறைவனின் படைப்புகள் அல்லவா?

உடனே அன்பு நபி குரல் கொடுத்தார்கள்:

" யார் அங்கே தீ மூட்டியது?"

குளிர் காய்ந்து கொண்டிருந்தவர் பதறி எழுந்தார். நான் இறைத்தூதர் அவர்களே! என்ன விஷயம்?" - என்று புரியாமல் நின்றார்.

"முதலில் அந்த நெருப்பை அணையுங்கள்.. உம் சீக்கிரம்!"


அன்பு நபிகளாரின் குரலில் பதட்டம் இருந்தது.
எறும்புகள் எங்கே தீயில் சிக்கி உயிரிழக்க நேருமோ என்ற பரிதாபத்தால் எழுந்த பதட்டம் அது.

அன்பு நபியின் கட்டளைக்கு அந்தத் தோழர் கீழ்ப்படிந்தார். 

தீயும் அணைக்கப்பட்டது.

அவருடைய தோழர் விஷயம் என்னவென்று புரிந்து கொள்ள சுற்று முற்றும் பார்த்தார். 
நபிகளாரின் பதற்றம் அவருக்கும் புரிந்தது. 

அற்ப ஜீவிகளான எறும்புகளின் உயிர்களுக்குக் கூட இந்த அளவு மதிப்பும், 
கண்ணியமும் அளித்த அன்பு நபி அந்தத் தோழரின் உள்ளத்தில் இமய மலையை விட அதிகம் உயர்ந்து நின்றார்.

இத்தகைய குணத்தை நாமும் பெற வேண்டும். ஒருவர் மற்றவரை நேசிக்க வேண்டும். பூமி எங்கும் அமைதி நிலவ செய்ய வேண்டும். 

- ரியாஸ்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!  Empty Re: நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!

Post by முழுமுதலோன் Wed Oct 23, 2013 5:04 pm

சிறப்பான பதிவுகள் 

நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..! ஆம்.. மிகச் சிறந்த மனிதர்களாக!!சூப்பர் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!  Empty Re: நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!

Post by ரானுஜா Wed Oct 23, 2013 5:19 pm

அருமையான பகிர்வு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!  Empty Re: நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!

Post by sawmya Wed Oct 23, 2013 7:35 pm

நன்றி! நன்றி!புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!  Empty Re: நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 12:04 pm

பதிவு சூப்பர் சகோ.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!  Empty Re: நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!

Post by sawmya Thu Oct 24, 2013 12:13 pm

நன்றி! சகோ.  நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!  Icon_smile 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!  Empty Re: நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!

Post by kanmani singh Thu Oct 24, 2013 12:53 pm

மனிதர்கள் சந்தோஷமாகவும், அமைதியோடும் வாழ வேண்டும். இதற்கான வழிகாட்டியாக இருப்பவைதான் மதங்கள். 
அதுவும் நாம் பிறந்திருக்கும் இந்த பூமி உலகத்திலேயே மிகச் சிறந்த பூமி. 
அன்பாலான நல்லதொரு வாழ்க்கையை வேர்களாக கொண்ட பூமி. உலகத்துக்கே ஒழுக்கத்தைப் போதிக்கும் தகுதியுள்ள பூமிகூட. 
நாம் நல்லவர்களாக இருந்துவிட்டால் நம்மை சுற்றி இருப்பவர்களும் நல்லவர்களாவே இருப்பார்கள்..

கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!  Empty Re: நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!

Post by sawmya Thu Oct 24, 2013 12:56 pm

நன்றி! சகோ.  நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!  Icon_smile 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!  Empty Re: நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!

Post by sawmya Thu Oct 24, 2013 1:13 pm

மனித நேயத்தை வளர்ப்போம்!!!


குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. 

ஒருவர் பிறரைப் பற்றி உங்களிடம் எவ்வாறு பேசுகிறார் எனக் கவனித்துக் கேளுங்கள். 
அவ்வாறே அவர் உங்களைப் பற்றியும் பிறரிடமும் பேசுவார்.


மனிதன் தன்னிடம் உள்ளதைத்தான் பிறரிடம் காண்கிறான்.


நாம் எல்லோரும் மனிதர்கள், ஒரே தாய் தந்தையிலிருந்து வந்தவர்கள் என்ற மனித சகோதரத்துவம் 
மனிதர்களுக்கிடையே நாளுக்கு நாள் மங்கி வருகின்றது. 
ஒருதாய் மக்களாக வாழ வேண்டியவர்கள் அனைதும் மறந்து சிதறுண்டு, சீரழிந்து, சின்னாபின்னமாகி???
தீவிரவாதம் ஒழியட்டும் ! ஆத்மாக்கள் சாந்தி அடையட்டும்.
அன்பை வளர்ப்போம் மனித நேயம் காப்போம்!
மனிதர்களுக்கிடையில் பாச உணர்வு என்ற நற்பண்புகுறைந்து வெறுப்பும், 
குரோதமும் தலை தூக்கி விட்டது.பொது நலம் மங்கி, சுய நலம் ஓங்கி விட்டது.


ஒவ்வொருவரும் தன் இனம், தன் நிலம், தன் மொழி, தன் உரிமை என்று பேசத் துவங்கிவிட்டனர். 
இனத்திற்காகக் குரல் கொடுப்பவர்களும் போராட்டங்கள் நடத்துபவர்களும் மலிந்து விட்டார்களே 
தவிர மனிதர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் குறைந்து விட்டனர்.


மனிதர்கள் யாராக இருந்தாலும் எந்த மொழியைப் பேசக்கூடியவர்களாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் மனிதர்களே, 
அவர்கள் என் சகோதரர்கள். 
அவர்கள் பாதிக்கப்படும் போது நான் அவர்களுக்காககுரல் கொடுப்பேன் என்ற பண்பு 
ஒவ்வொருவரிடமும் வருகின்ற போதுதான் மனித நேயம் மலரும். 
மொழி, ஜாதி, இவற்றிக்கு அப்பாற்பட்டு எல்லோரும் மனித சகோதரர்களுக்காக 
குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மனிதர்களிடத்தில் தலை தூக்காதவரை மனித நேயம் மலரப்போவதில்லை, 
பூமியில் சாந்தியையும் சமாதானத்தையும் பார்க்க முடியாது. படைத்த இறைவன் கூறுகிறான்:


‘மனிதர்களே! நிச்சயமாக நாம்உங்கள் அனைவரையும் ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்தே படைத்தோம், 
பின்னர் நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு,
உங்களை பல கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.
உங்களில் எவர் மிகச் சிறந்த மனிதர்களாக வாழ்கிறாரோ அவர் தான் ஆண்டவனுக்கு மிக்க கண்ணியமிக்கவர்.


மனிதா! நீ நடைபாதியில் சென்று கொண்டு இருக்கும் போது, 
சாலையை கடக்க ஒரு பார்வையற்றவன் உதவியை நாடுகிறான்.  
நீயோ உனது காரியம் தான் முக்கியமென எண்ணிக் கொண்டு 
ஏன் மற்றவர்கள் அவனுக்கு உதவவில்லை என அங்கலாய்த்துக் கொண்டோ 
அல்லது குறை கூறிக்கொண்டோ உன் வழி சென்றால் ஏது பயன்?  
இப்பொழுது சிந்தி.  இது நேற்று நடந்தது போல் என்றும் நடக்கும் நிகழ்ச்சியாகக் கொள்ளாதே.  
ஊனமுற்றோர் உங்களிடம் எதிர்பார்ப்பது அனுதாபம் அன்று.  
உங்களை சிநேகிதனாக, 'நான் உங்களைப் பற்றி கவலை கொள்ளுகிறேன்"
என்று மனித நேயத்துடன் பலனை எதிர்பாராத உதவும் கரங்களாக.


மக்களே இன்றே உங்களிடம் 'மனித நேயம்" தோன்றட்டும். 
எல்லோரும் சகோதர, சகோதரிகள் என்ற உயர்ந்த கருத்தும் பிறக்கட்டும். 
'மனித நேயத்தை" வளர்ப்போம்.
(முக நூல் பதிவுகளை கொண்டு தொகுத்தேன், மிகவும் பிடித்தது,  'மனித நேயம்" அவசியம் கருதி பகிர்ந்தேன்)
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!  Empty Re: நாம் வாழ்வோம்...நல்ல மனிதர்களாக..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum