தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

View previous topic View next topic Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by செந்தில் Mon Sep 17, 2012 1:46 pm

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! 253036_424568254245640_1955524333_n

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

தாவரவியல் பெயர்: Solanum nigrum

கத்தரி இனத்தைச் சேர்ந்ததாகும், மணத்தக்காளி. அறுபது சென்டிமீட்டர் உயரம் வரை இச்செடி வளரும். இச்செடியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த சத்துணவாகும்; உணவு மருந்தும் ஆகும்.
மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.

மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது, மணத்தக்காளிக் கீரை, இதன் விஞ்ஞானப் பெயர், ஸோலனம் நைக்ரம் என்பதாகும். இப்போது உலகம் முழுவதும் இது பயிர் செய்யப்படுகிறது.
காரணம், குறைந்த செலவில் சிறந்த உணவாகவும் நோய்களைக் குணப்படுத்தும் மருந்துணவாகவும் இருப்பதால்தான்.

இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது, மணத்தக் காளி. இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை டானிக்காக மணத்தக் காளிக் கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன.

இக்கீரை சத்துணவுப் பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பி விடுகிறது. இக்கீரையை உணவாகச் சாப்பிட்டால் அன்றைய தினம் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும்.
எந்த உறுப்பு எந்தப் பொருளைக் கிரகித்துக் கொள்ள வேண்டுமோ அதற்கு ஏற்ற வகையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை உடனே வெளியேறவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது.

குத்தலா? எரிச்சலா?

மனம் காரணம் இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும். இந்த நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும். உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது.

சிறுநீரகக் கோளாறு தீர்க்கும் இலைக் காய்கறி!
இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.

மலச்சிக்கலா?

மணத்தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும். பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத் தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது. வாரத்துக்கு இரு நாள் மட்டுமே மலம் கழிக்கிறவர்கள் இப்பழத்தைச் சாப்பிடலாம். இதனால் கழிவுகள் உடனே வெளியேறும்.
இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.

நீர்க்கோவை குணமாகும்!
நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. இக்கீரையைக் கஷாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.

வயிற்று வலி குணமாகும்!

ஒரு கைப்பிடி அளவு சுத்தம் செய்யப்பட்ட இக்கீரையை சாறாக மாற்றி பிடித்த பழ இரசப் பானம் ஒன்றுடன் இந்தக் கீரைச் சாற்றையும் சேர்த்து அருதினால் வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும். இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிட லாம். மேற்கண்ட வயிறு சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாக இக்கீரையுடன் பாசிப் பருப்பு, வெங்காயம் முதலிய சேர்த்து கூட்டாகச் செய்தும் சாப்பிடலாம்.

நல்ல தூக்கம் இல்லையா?
இக்கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் களைப்பு நீங்கும். இத்துடன் நன்கு தூக்கத்தையும் கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.

மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. இதே சாறு கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தையும் கணிக்கிறது. கல்லீரல் கோளாறுகள் அனைத்தையும் இக்கீரைச்சாறு குணமாக்கும்.

காய்ச்சலுக்கும் மருந்து..
எல்லா வகையான காய்ச்சல்களையும் இக்கீரை தணிக்கும். உலர்ந்த மணத்தக்காளிக் கீரையை (அல்லது கீரைப் பொடி என்றால் ஒரு தேக்கரண்டி) தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். உடனே வடிகட்டி, சூட்டுடன் அருந்த வேண்டும். இது உடனே செயல்பட்டு நோயாளியை நன்கு வியர்க்கச் செய்துவிடும். வயிர்வை வெளியேறுவதால் காய்ச்சலின் தீவிரம் குறையும். காய்ச்சல் குணமாகும்வரை இக்கீரையைச் சமையல் செய்து உண்ண வேண்டும். மணத்தக்காளிப் பழமும் விரைந்து இதுபோல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

கீரையைப் போலவே பழமும் சக்தவாய்ந்த மருந்தாகும். ஆஸ்துமா நோயாளிகள் சளியுடன் ‘கர்புர்’ என்று சிரமத்துடன் மூச்சு விட்டுக்கொண்டு இருப்பார்கள். இவர்களும் காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும்.

நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. புதுமணத்தம்ப திகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். இப்பழம் உடனே கருத்தரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப் பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும்.

தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம்.
நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வரவேண்டும்.

மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது. காசநோய், ஆஸ்துமாகாரர்கள் தொந்தரவு இன்றி இரவில் அயர்ந்து தூங்க வற்றல் குழம்பு உதவும்.

தினமும் சாப்பிடலாமா?
மனத்திற்கு மகிழ்ச்சியைத் தந்து உடலில் உள்ள நோய்களையும் குணப் படுத்தும் இக்கீரையைத் தினமும் உணவில் உண்ணலாம்.

100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன. நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சிய மும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் பாஸ்பரஸும், நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளன.

மகிழ்ச்சி வேண்டுமா?
மேலும், தசைகளுக்குப் பலம் சேர்ப்பதற்கும் கண்பார்வை தெளிவாய்த் தெரிவதற்கும் ரிபோஃபிலவின் என்னும் வைட்டமின் பி2ம், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும் ‘பி’ குரூப்பைச் சேர்த்த வைட்டமின் நியாஸினும் உள்ளன.
பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது.

நெஞ்சவலி இனி இல்லை!
இக்கீரையையும், பழத்தின் விதைகளையும் உலர வைத்துப் பொடியாக்க வேண்டும். அவற்றைத் தலா அதைக் கரண்டி வீதம் காலையும் மாலையும் உட்கொண்டால் நெஞ்சுவலி குணமாகும். காய்ச்சல் நேரத்திலும் நாள்பட்ட புண்கள் இருந்தாலும் இதுபோல் உட்கொள்ள வேண்டும். இப்பொடியைத் தேன் கலந்தும் சாப்பிடலாம்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by முரளிராஜா Mon Sep 17, 2012 2:58 pm

உண்மைதான் மிகவும் அருமையான கீரை இது
வயிற்று புண்ணுக்கு மிகவும் நல்லது

பகிர்வுக்கு நன்றி செந்தில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by செந்தில் Mon Sep 17, 2012 3:40 pm

நம்மில் பலருக்கு இந்த கீரை பற்றியே தெரியாது கண்ணீர் வடி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by Manik Mon Sep 17, 2012 3:42 pm

எங்க வீட்ல சமைப்பாங்க நல்லாயிருக்கும் சாப்பிட

பகிர்ந்தமைக்கு நன்றி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by yaazh Mon Sep 17, 2012 3:56 pm

இதெல்லாம் தினம் சாப்பிடணும்னா கிராமத்திலேயே கெடந்துருக்கணும்...கெரகம் யார விட்டுச்சு... கண்ணீர் வடி
avatar
yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by செந்தில் Mon Sep 17, 2012 4:00 pm

yaazh wrote:இதெல்லாம் தினம் சாப்பிடணும்னா கிராமத்திலேயே கெடந்துருக்கணும்...கெரகம் யார விட்டுச்சு... கண்ணீர் வடி
என்ன பண்ணுறது பிழைப்பை தேடி வெளில வந்ததுதானே ஆகணும் கண்ணீர் வடி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by yaazh Mon Sep 17, 2012 4:08 pm

செந்தில் wrote:
yaazh wrote:இதெல்லாம் தினம் சாப்பிடணும்னா கிராமத்திலேயே கெடந்துருக்கணும்...கெரகம் யார விட்டுச்சு... கண்ணீர் வடி
என்ன பண்ணுறது பிழைப்பை தேடி வெளில வந்ததுதானே ஆகணும் கண்ணீர் வடி

சோறு பாஸு சோறு...அது படுத்துற பாடுதான் எல்லாம்...
avatar
yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by செந்தில் Mon Sep 17, 2012 4:10 pm

ம்ம்ம் , சரியா சொண்ணீங்க,அதுக்குமேல சில ஆடம்ப்பர ஆசைகளும் காரணம் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by yaazh Mon Sep 17, 2012 4:11 pm

செந்தில் wrote:ம்ம்ம் , சரியா சொண்ணீங்க,அதுக்குமேல சில ஆடம்ப்பர ஆசைகளும் காரணம் முழித்தல்

ஆடம்பரம்லாம் அப்புறம்தான்...அலாரம் அடிக்குற வயிறுதான் முதல்ல...
avatar
yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by Manik Mon Sep 17, 2012 4:13 pm

சோறுதான் எல்லாத்துக்கும் காரணமா

தன்னம்பிக்கை உடையவர் அதிசயமான திறன் உடையவர் அவர் நினைத்தால் நடக்காதது எதுவும் இல்லை யாழ்

கிராமத்திலும் வாழ்ந்திருக்கலாம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by செந்தில் Mon Sep 17, 2012 4:14 pm

yaazh wrote:
செந்தில் wrote:ம்ம்ம் , சரியா சொண்ணீங்க,அதுக்குமேல சில ஆடம்ப்பர ஆசைகளும் காரணம் முழித்தல்

ஆடம்பரம்லாம் அப்புறம்தான்...அலாரம் அடிக்குற வயிறுதான் முதல்ல...
சரிதான் யாழ் ,ஆனால் எல்லோருடைய கஷ்டங்களுக்கும் வயிறுதான் காரணம்னு சொல்லிடமுடியாது கோபம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by yaazh Mon Sep 17, 2012 4:15 pm

Chellam wrote:சோறுதான் எல்லாத்துக்கும் காரணமா

தன்னம்பிக்கை உடையவர் அதிசயமான திறன் உடையவர் அவர் நினைத்தால் நடக்காதது எதுவும் இல்லை யாழ்

கிராமத்திலும் வாழ்ந்திருக்கலாம்

தன்நம்பிக்கைய மட்டும் வெச்சுகிட்டு தலை சுத்தி விழும்போது
தெரியும் பாஸ் சோத்தோட அருமை...
உங்களோடு ஓரளவு உடன்பட்டாலும் முரண்படுகிறேன்...
avatar
yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by yaazh Mon Sep 17, 2012 4:17 pm

செந்தில் wrote:
yaazh wrote:
செந்தில் wrote:ம்ம்ம் , சரியா சொண்ணீங்க,அதுக்குமேல சில ஆடம்ப்பர ஆசைகளும் காரணம் முழித்தல்

ஆடம்பரம்லாம் அப்புறம்தான்...அலாரம் அடிக்குற வயிறுதான் முதல்ல...
சரிதான் யாழ் ,ஆனால் எல்லோருடைய கஷ்டங்களுக்கும் வயிறுதான் காரணம்னு சொல்லிடமுடியாது கோபம்

சரிதான்...ஆனால் போராட்டத்தின் தொடக்கம் சோற்றில்தானே தொடங்குகிறது...
வயிறு முட்ட சாப்பிட்ட பின் வாந்தி எடுப்பதில் தொடங்குகிறது மற்ற கஷ்டங்கள்...
avatar
yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by Manik Mon Sep 17, 2012 4:18 pm

இல்ல பாஸ் நான் என்ன சொல்ல வர்ரேனா நானும் கிராமத்துலதான் இருக்கேன் நம்ம ஜெயமும் கிராமத்துலதான் இருக்காரு எங்களுக்கும் கஷ்டங்கள் இருக்கு பாஸ்

ஆனா கிராமத்தை விட்டு போகல நாங்க கிராமத்தை நகரமா மாத்த முயற்சி பன்றோம்........

யாரோ சொல்லியிருக்காங்க வெற்றி என்பது நாம் தீர்மானிப்பது அல்ல நம்மை தேடி வருவது என்று அது போல் தான் வறுமையும் நம்மை தேடி என்ன வரனும்னு நாமதான் முடிவு பன்னனும்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by yaazh Mon Sep 17, 2012 4:22 pm

Chellam wrote:இல்ல பாஸ் நான் என்ன சொல்ல வர்ரேனா நானும் கிராமத்துலதான் இருக்கேன் நம்ம ஜெயமும் கிராமத்துலதான் இருக்காரு எங்களுக்கும் கஷ்டங்கள் இருக்கு பாஸ்

ஆனா கிராமத்தை விட்டு போகல நாங்க கிராமத்தை நகரமா மாத்த முயற்சி பன்றோம்........

யாரோ சொல்லியிருக்காங்க வெற்றி என்பது நாம் தீர்மானிப்பது அல்ல நம்மை தேடி வருவது என்று அது போல் தான் வறுமையும் நம்மை தேடி என்ன வரனும்னு நாமதான் முடிவு பன்னனும்

வணங்குகிறேன் உங்களை...வாழ்க வளமுடன்...வெல்க பலமுடன்...
avatar
yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by Manik Mon Sep 17, 2012 4:27 pm

இந்த நக்கல்தானே வேணாங்கிறது மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! 2282034001
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by yaazh Mon Sep 17, 2012 4:37 pm

Chellam wrote:இந்த நக்கல்தானே வேணாங்கிறது மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! 2282034001

நக்கல் இல்லை...நல்ல மனதுடன் சொன்னதுதான்...
avatar
yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 7:40 pm

yaazh wrote:
Chellam wrote:இந்த நக்கல்தானே வேணாங்கிறது மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! 2282034001

நக்கல் இல்லை...நல்ல மனதுடன் சொன்னதுதான்...

முழித்தல் முழித்தல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by ஸ்ரீராம் Mon Sep 17, 2012 11:35 pm

அருமையான தொகுப்பு... மிக்க நன்றி செந்தில்...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..! Empty Re: மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum