தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இலங்கையை ஆண்ட மன்னன்

View previous topic View next topic Go down

இலங்கையை ஆண்ட மன்னன் Empty இலங்கையை ஆண்ட மன்னன்

Post by M.K.R.NIROJAN KING Fri Nov 08, 2013 9:28 pm

இலங்கையின் வரலாறு


இலங்கையை ஆண்ட மநல்வரவு எற்றுக்கொள்கிறேன் ஹி ஹி னர்கள்
எல்லாளன்

எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனாவான். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சமே குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ இளவரசனாவான். ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவன் ஆவான். அதற்கான ஆதாரங்கள் உண்டு. உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர் மகாவம்சத்தில் அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத்தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக்கூறியுள்ளார்.


வரலாறு

கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர். இதில் 44 வருடங்கள் எல்லாளனுக்கும் 22 வருடங்கள் அவனது தந்தை ஈழசேனனுக்கு முரியவை. ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் சிங்கள இனத்தின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்று.



ஈழசேனன்

கி.மு 177 ஆம் ஆண்டு ஈழசேனன் (சேனன்) ,நாககுத்தன் (குத்திகன்) ஆகிய ஈழத்தமிழ் மன்னர்களால் அனுராதபுர அரியணை சூரத்தீசன் எனப்படும் சிங்கள மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்டது. அரியணையை இழந்த சூரத்தீசன் தப்பி ஓடினான். அரியணையை கைப்பற்றிய ஈழசேனன் தான் சைவன் எனினும் எந்த மதத்திற்கும் எதிரானாவனோ அல்லன் எனவும் தனது ஆட்சியில் மொழி,மத வேறுபாடில்லை. சேர்ந்தே உழைப்போம்; சேர்ந்தே உண்போம், என்றான். பெளத்த பிக்குகளும் அவனை ஆதரித்திருந்தனர். 22 வருடங்களின் முடிவில் கி.மு 155 ஆம் ஆண்டு தைமாதத்து வைகறை சிங்கள இளவல் அசேலனின் சேனை அனுராதபுரத்தினை கைப்பற்றிக்கொண்டது. அசேலன் என்பவன் சூரத்தீசனின் தமையனான மகாசிவனின் ஒன்பதாவது மகன் ஆவான். நீண்ட கால ஆட்சியும் அனுராதபுரத்தில் நிலவிய அமைதியும் மன்னனைத் தன் படைகளை தளர்த்த வைத்திருந்ததே தோல்வியை தளுவ காரணமாகியது. ஆட்சி மாற்றம் தேவைப்படாது என்றே மன்னன் எண்ணியிருந்தான். ஆனால் அசேலனின் படையெடுப்பின் போது அனுராதபுரத்து சிங்கள மக்களும் பிக்குகளும் காட்டிய ஆதரவும் படைநடவடிக்கை மீதான விருப்பும் மன்னனை நிலைகுலைய வைத்தது. இவை திடீர் மாற்றமல்ல என்பதும் நீண்டகால சதி என்பதையும் மன்னன் புரிந்துகொண்டபோது காலம் கடந்திருந்தது. நாககுத்தன் உத்தரதேசத்தில். ஈழவூருக்கு செய்தியனுப்ப கால அவகாசமில்லை. மன்னனின் படையிலிருந்த சிங்கள வீரர்களெல்லாம் அசேலனின் பக்கம். இருபத்தியிரண்டு வருடகால ஆட்சியின் அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டதை மன்னன் புரிந்துகொண்டான். கலவரமடைந்த வேளக்கார வீரரிடம் மன்னன் 'ஆட்சியென்பது இவ்வாறானதுதான். அதற்காக எதிரிகளுக்கு அஞ்சி இரகசியத்தை தூக்கிக் கொடுத்துவிட்டுப் பேடி போல ஓடிவிட முடியாது. வாளேந்திய கடைசி வீரன் இருக்கும் வரை எதிரியை எதிர்த்தே சாவோம்.' வேளக்கார வீரர்களின் தலைவன் மறுத்தான். 'நாங்கள் சம்மதமே, ஆனால் அரச வம்சம் அழிந்து விடக்கூடாது. இளவரசரையும், இளவரசியையும், மகாராணியையும் உடனடியாக ஈழவூருக்கு அனுப்பவேண்டும்' மன்னன் சம்மத்தித்தான். அரச வம்சம் காப்பாற்றப்பட்டது. மன்னனும் வீரர்களும் வீரகாவியம் படைத்தனர். மன்னனின் சிரசை கொய்த அசேலன் மூங்கில் கழியில் குத்தி கோட்டை வாசலில் வைக்க உத்தரவிட்டான்.



ஈழராஜா-(வவுனிக்குளம்)

செய்தியறிந்த நாககுத்தன் தன் சேனையுடன் அநுராதபுரம் சென்று தானும் மன்னன் வழியை தொடர்ந்தான். ஈழவூர் வந்த மாகாராணி பொன்னம்மைதேவி இளவரசர் எல்லாளன் எனப்படும் ஈழராஜாவையும் நாககுத்தனின் மகன் திக்கஜனையும் போர்க்கலைகள் கற்று வருவதற்காக சோழ நாட்டிற்கு அனுப்பி வைத்தார். சோழதேசத்தில் பலகலைகளையும் கற்ற இவ்விளவல்கள் கி.மு 145 ஆம் ஆண்டு ஈழவூர் திரும்பினர். நீதிநெறி தவறாது ஆட்சி புரிந்த தன் கணவனைக்கொன்று தமிழர்களை ஈழவூருக்கு துரத்தி விட்டதால் கோபமுற்றிருந்த மகாராணி பொன்னம்மைதேவியார் உத்தரதேசத்தில் பெரும் சைனியத்தை தயார்ப்படுத்தி வைத்திருந்தார். காலம் கனிந்தது. அநுராதபுர இராச்சியம் மீண்டும் தமிழர் வசமானது.



எல்லாளன் பற்றி மகாவம்சம்

எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவன் தவறான மார்க்கத்தினை (இந்து மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப்பின்நிற்கவில்லை. இவன் தனது ஆட்சியில் பெளத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தன் பழைய மதநம்பிக்கையைக் கைவிடவில்லை என மகாவம்சம் கூறுகிறது.எல்லாளன் பகைவர்க்கும் நண்பர்க்கும் சமநீதி வழங்கியதாக கூறும் மகாவம்சம், அவனது நீதிநெறி தவறாத ஆட்சியை மனுநீதிச் சோழனின் கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது. எல்லாளனின் சயன அறயில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்த நேரமும் கோட்டைவாசலில் தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான்.

* எல்லாளனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிள்ளைகளாவார். ஒருநாள் ஒரு தேரில் திஸ்ஸவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமாக மரணமேற்படுத்தி நீதி வழங்கினான்.
* பாம்பொன்றுக்கு இரையான குஞ்சையிழந்த தாய்ப்பறவை ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் அந்தப்பாம்பினைப்பிடித்து வரச்செய்து, அதன் வயிறு கீறப்பட்டுக் குஞ்சு வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பாம்பு மரத்தில் தொங்கவிடப்பட்டது.
* ஒரு வயோதிப மாது வெயிலில் அரிசியைக் காயப்போட்டிருந்த போது, பருவம் தப்பிப் பொழிந்த மழையால் அரிசி முழுவதும் பழுதடைந்து போனது. அவள் எல்லாளனிடம் முறையிட்டபோது, அவன் வருணனிடம் வாரத்திற்கொருதடவை இரவில் மட்டும் மழை பொழிய வேண்டுதல் விடுத்ததாக மகாவம்சம் வருணிக்கிறது.



எல்லாளனின் நீதி வழுவாமையைக் கூறமுயலும் இக்கதைகள் நம்பகமானவையல்ல. அவனது செங்கோலாட்சியைப்புலப்படுத்த மகாவம்சம் எடுத்துக் கொண்ட ஐதீகக்கதைகள் எனலாம். ஏனெனில் எல்லாளனின் மகன் இறுதிப்போரிலேயே வீரகாவியமானான் என்பதை மகாவம்சமே கூறுகின்றது. அவ்வாறானதொரு சம்பவம் நிகழ்ந்ததா, இல்லையா என்பதில் மகாவம்சமே முரண்பட்டு நிற்கின்றது. எனினும் மகாவம்சத்தின் இக்கதைகள் மகாவம்சம் எவ்வாறெல்லாம் திரித்து சாதகமாக்கி எழுதப்பட்டது என்பதற்கும் இவை சான்றாகின்றன.



மகாவம்சம் கூறுகின்ற ஒரு கதை எல்லாளன் பெளத்த மதத்தை ஆதரவளித்து போற்றிப்பாதுகாத்தான் என்பதையும் நிரூபிக்கின்றது. தன் தாய் மரணித்ததை அறிந்த எல்லாளன் தேரிலேறி சேத்தியகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தேரின் அச்சு தாதுகோபமொன்றில் பட்டு தாதுகோபத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியது. மன்னன் தேரினின்றும் கீழே குதித்து, தனது தலையை உடனடியாகச் சீவிவிடுமாறு, அமைச்சர்களிடம் கூறினான். 'தெரியாமல் நிகழ்ந்தது அமைதியடைக. தூபத்தைத் திருத்தி விடுவோம்' என்றனர் அமைச்சர்கள். பதினைந்து கற்களே சிதைவடைந்திருந்தன. அப்படியிருந்தும் அந்தத் தாதுகோபத்தை புனரமைக்க எல்லாளன் பதினையாயிரம் கஹாப் பணங்களைச் செலவிட்டதுடன் தன் தாயின் இறுதிக்கிரியைக்குச் செல்லாமல் தாதுகோபம் புனரமைக்கும் வரை அங்கேயே தங்கியிருந்தான்.


எனினும் இதே விடயம் இனவெறியை தூண்டுவதற்காக விகாரைமகாதேவியால் பயன்படுத்தப்படுவதையும் மகாவம்சம் நியாயப்படுத்தி கூறுகின்றது. அதில் விகாரைமகாதேவி தன் மகன் துட்டகாமினியிடம் 'எல்லாளன் அங்கு (அநுராதபுரத்தில்) பெளத்தவிகாரைகளை தேரால் இடித்து தரைமட்டமாக்கிறான்' என கூறுவதாக கூறப்பட்டுள்ளது.



விகாரைமகாதேவியும் எல்லாளனும்

கல்யாணி இராசதானியின் மன்னன் களனிதீசனின் மகளே மகாதேவியாவாள். பின்னாளில் இவள் விகாரைமகாதேவி என அழைக்கப்பட்டாள். விகாரைமகாதேவியின் தாயாரான களனிதீசனின் மனைவி சித்ததேவி களனிதீசனின் தம்பியாருடன் கள்ள உறவு கொண்டிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. பின்னாளில் எல்லாளனின் தோல்விக்கு விகாரைமகாதேவியே மிக முக்கிய காரணமாகிறாள். எல்லாளனின் வலுவான கோட்டையொன்றிற்கு பொறுப்பாகவிருந்த தளகர்த்தன் ஒருவனுடன் தன் உடலழகை காட்டி தவறான உறவுக்கு அழைத்துச்சென்று துட்டகாமினியின் சேனைகள் அக்கோட்டையை தாக்குவதற்கு வழி சமைத்துக்கொடுக்கிறாள். இதை மகாவம்சம் போர்த்தந்திரோபாயம் என வர்ணிக்கிறது. இவ்வாறு பெண்களின் ஆடவர்களுடனான தவறான உறவுகளும் மன்னர்கள் பல திருமணங்கள் செய்வதையும் நியாயப்படுத்தி கூறும் மகாவம்சம் பெளத்த மக்களை ஆரம்பகாலம் முதலே தவறாக வழிநடத்தியுள்ளதெனலாம்.

உருகுணையின் மன்னனான காக்கவண்ணதீசன் ஆட்சி பீடம் ஏறுவதற்காக உருகுணையின் தமிழ் இளவரசி அயிஸ்வரியாவை மணந்திருந்தான். பின்னர் பெளத்த இளவரசனே ஆட்சிக்கு வரவேண்டுமென்ற தன் ஆசையினால் விகாரைமகாதேவியினை மணந்தான். திருமணத்தின் பின் துட்டகாமினியைக்கருவில் கொண்டிருந்த போது தன் கணவனிடம் மூன்று ஆசைகளை வெளிப்படுத்தியிருந்ததாக மகாவம்சம் கூறுகின்றது.

* பிக்குகளுக்கு வழங்கித்தானும் பருகக்கூடிய பெரிய தேன் அடை
* எல்லாளனின் படைத்தளபதி ஒருவனின் தலையைச்சீவிய இரத்தம் தோய்ந்த வாளினைக்கழுவிய நீரை அருந்த வேண்டும்
* அநுராதபுரத்தின் வாடாத தாமரைகளால் மாலை கட்டி அணிய வேண்டும்

இந்த மசக்கை ஆசைகள் நிறைவேற்றப்பட்டன.


துட்டகாமினி

காக்கவண்ணதீசனினதும் விகாரைமகாதேவியினதும் மூத்தமகன் காமினி அபயன் ஆவான். இவன் தந்தையின் சொல்கேளாது இருந்தமையால் பிற்காலத்தில் துட்டகாமினி என அழைக்கப்பட்டான். துட்டகாமினி கருவிலிருந்தே தமிழருக்கெதிராக உருவாக்கப்பட்டவன். துட்டகாமினி ஒருமுறை கட்டிலில் கால்களை முடக்கிப்படுத்திருந்தபோது தாய் ஏன் என வினாவினாள், அதற்கு 'வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும் நெருக்கும்போது எப்படியம்மா கால்களை நீட்டி படுக்கமுடியும்' என்றான். இவ்வாறு கருவிலிருந்தே இனவெறியூட்டப்பட்டு வளர்த்த துட்டகாமினி தன் தந்தையின் மறைவிற்குப்பின் பெரும்சேனயுடன் எல்லாளனின் மீது படையெடுத்தான். நீண்ட நாள் தொடர்ந்த போர் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் சலிப்படைந்த துட்டகாமினி இறுதியில் வயது முதிர்ந்த நிலையிலிருந்த 'கிழப்புலி' எல்லாளனை தனிச்சமருக்கு வரும்படி வஞ்சக அழைப்பை விடுத்தான். எல்லாளனின் அமைச்சர்களோ 'உங்களின் தனிப்பட்ட வீரம், வெற்றி என்பவற்றுடன், தமிழ்க்குடி மக்களின் வீரம், வெற்றி, நல்வாழ்வு என்பனவற்றைத் தொடர்புபடுத்துவதால், இத்தனிச்சமர் தமிழ்க்குடி மக்களின் தோல்வியாக மாறிவிடும், மன்னா. வரலாறு உங்களை சிலவேளை மன்னிக்காது'. என்றனர். மன்னன் முகத்தில் வியப்பும் கவலையும் படர்ந்து பரவின. 'மக்களின் எதிர்காலத்தை நினைத்து தனிச்சமரை மறுப்பதா? அல்லது தமிழர் வீரத்திற்கேற்ப எதிரியின் அழைப்பை ஏற்று தனிச்சமர் புரிவதா?' மறு கணமே தெளிந்தான். மறுப்பதற்கு நாம் ஒன்றும் பேடிகளல்லர். கோட்டை வாயில் திறக்கப்பட்டது. இரு சேனைகளும் சூழ கிழப்புலியும் இனவாத சிங்கமும் போரிட்டன. போர் நீண்டது. எல்லாளனின் போர் வலிமை விகாரைமகாதேவியை திகைப்படைய வைத்தது. நிலைமையை புரிந்த விகாரைமகாதேவி கூட்டத்திலிருந்து வெளியே வந்து 'மகாராஜா... எலாரா...' எனக் கூக்குரலிட்டாள். குரல் வந்த பக்கம் எல்லாளன் திரும்பினான். 'என் மகன்... மகாராஜா' கூப்பிய கரங்கள் கூறின. திகைத்து நின்ற துட்டகாமினி மறுகணமே தன் தாயின் 'யுத்த தந்திரத்தை' புரிந்து கொண்டான். எல்லாளனின் மார்பை வேல் துளைத்து நிலை கொண்டது. கி.மு. 101 ஆம் ஆண்டு, 44 ஆண்டுகால ஆட்சியின் அஸ்தமனத்துடன், எந்த மதத்தை போற்றிப்பாதுகாத்தானோ அம்மதத்தினாலேயே வெட்டி சாய்க்கப்பட்டான்.
M.K.R.NIROJAN KING
M.K.R.NIROJAN KING
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 18

Back to top Go down

இலங்கையை ஆண்ட மன்னன் Empty Re: இலங்கையை ஆண்ட மன்னன்

Post by முரளிராஜா Mon Nov 11, 2013 8:02 am

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இலங்கையை ஆண்ட மன்னன் Empty Re: இலங்கையை ஆண்ட மன்னன்

Post by செந்தில் Mon Nov 11, 2013 5:22 pm

கைதட்டல்  பகிர்வுக்கு நன்றி MKR:136: 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இலங்கையை ஆண்ட மன்னன் Empty Re: இலங்கையை ஆண்ட மன்னன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum