தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Go down

படித்ததில் பிடித்தது  Empty படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Sat Nov 09, 2013 2:49 pm

படித்ததில் பிடித்தது  1461392_557052094362886_417697704_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது  Empty Re: படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Sat Nov 09, 2013 2:50 pm

பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் - தேசிக விநாயகம் பிள்ளை. 

தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு - ஒளவையார்

பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது - நேரு.

எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் - மகாபாரதம்

பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை - லாண்டர்.

பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி - வில்சன் மிஸ்னர்.

பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது - ஷேக்ஸ்பியர்.

அழகு என்பது, சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி, அதற்கு நீ அடிமையாகாதே – வால்டேர்

வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை – காண்டேகர்

அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல். -நெப்போலியன்

பெண்ணாக ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்
 — 


படித்ததில் பிடித்தது  1391962_751216631561413_156847688_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது  Empty Re: படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Sat Nov 09, 2013 2:51 pm

படித்ததில் பிடித்தது  1467389_556714031063359_1723458425_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது  Empty Re: படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Sat Nov 09, 2013 2:52 pm


எங்களுக்காக எங்கும் கல்விக்
கூடங்கள் திறந்தாய்...
சீருடைத் திட்டத்தினால்
பள்ளிகளில் ஏழை, பணக்காரன்
பிள்ளைகள் என்கிற
பாகுபாடுகள் நீக்கினாய்...
இலவச மதிய உணவுத் தந்தாய்...

அரசு செலவிலேயே ஆசிரியர்
பயிற்சிகள் அளித்தாய்...
எல்லாக் கிராமங்களிலும் இரவுப்
பாடசாலைகள் திறந்தாய்...
இன்னும்
சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் அதில்
எதிலாவது உனக்கான
முத்திரையோ,
அடையாளமோ உண்டோ...?
எல்லாக் கல்விகூடங்களிலும் உன்
படமாவது உண்டா...?
உன்னால் படித்த எங்களை தவிர
உனக்கு வேறு அடையாளம்
உண்டா...?
எம் "பச்சை தமிழரே"

பார்த்தீரா இன்றைய
தலைவர்களை,
இவர்கள் அறிமுகம் படுத்தும்
ஒவ்வொன்றிலும்
இவர்களது அடையாளங்களை...


படித்ததில் பிடித்தது  1452364_556694854398610_1280325032_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது  Empty Re: படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Sat Nov 09, 2013 2:53 pm

அமெரிக்கர்கள் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள்.
500 அடி ஆழத்தில் மின்சார
கேபிள்கள் கிடைத்தன.
உடனே அவர்கள் அறிவித்தார்கள்,
"எங்களது முன்னோர்கள்
மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்
கு முன்னரே பயன்படுத்தியிரு
க்கிறார்கள்."

இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில்
பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள்.
500 அடி ஆழத்தில் டெலிபோன்
கேபிள்கள் கிடைத்தன. அவர்கள்
சொன்னார்கள், "எங்களது முன்னோர்கள்
அந்தக்
காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியிரு
க்கிறார்கள்."

இந்தியர்களும் தோண்டினார்கள். 1000
அடி தாண்டியும் ஒன்றும்
கிடைக்கவில்லை.
உடனே அறிவித்தார்கள்,
"எங்களது மூதாதையர் வயர்லெஸ்
தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தியிருக்கிறார்கள்."
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது  Empty Re: படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Sat Nov 09, 2013 2:54 pm

உண்மையான அன்பை புரிந்துக் கொள்ள பிரிவு அவசியமோ இல்லையோ, பிரச்சனை மிக அவசியம். பிரச்சனை வரும் போது அதை அணுகும் முறையை வைத்தே எவரின் ஆழமான அன்பையும் சரியாக புரிந்துக் கொள்ளலாம்.

-ஆதிரா


படித்ததில் பிடித்தது  1390502_556624784405617_1718421143_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது  Empty Re: படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Sat Nov 09, 2013 2:55 pm

படித்ததில் பிடித்தது  1457467_556617481073014_24821586_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது  Empty Re: படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Sat Nov 09, 2013 2:56 pm


சிந்திக்க வைத்த கதை:

"ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். தாவரவியல் மாணவர்கள். ஒரே ஒரு பரீட்சையைத் தவிர, மற்ற எல்லா பரீட்சையும் எழுதிவிட்டார்கள். மிச்சமிருந்த ஒரு பரீட்சைக்கு இன்னும் ஒரு வார காலம் இருந்தது.

மேலும், அது சுலபமான பேப்பர் என்பதால், இடைப்பட்ட காலத்தில் பக்கத்தில் இருந்த ஒரு மலைவாச ஸ்தலத்துக்கு பிக்னிக் போனார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக இருந்தார்கள். அவர்கள் கிளம்ப வேண்டிய தருணம் வந்தது.

அப்போது ஒரு நண்பன், "கிளைமேட் அருமையாக இருக்கிறது. இன்றிரவும் இங்கே தங்கிவிட்டு, நாளை காலை ஆறு மணிக்கு காரில் கிளம்பினால் போதும். பரீட்சை நேரத்துக்கு கல்லூரி போய்விடலாம்" என்றான்.

அதுவும் சரிதான் என்று நண்பர்கள் அன்று முழுவதும் அங்கேயே கோலாகலமாக கழித்துவிட்டு, இரவு தாமதமாக தூங்கினார்கள். நெடுநேரம் கழித்தே கண் விழித்தார்கள். 'சரி, பேராசிரியரிடம் ஏதாவது பொய் சொல்லி, மாற்றுப் பரீட்சைக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்' என்ற நம்பிக்கையோடு புறப்பட்டார்கள்.

பேராசிரியர் முன்பு நல்ல பிள்ளைகளைப் போல் நின்றவர்கள், 'சார்.. நாங்கள் அரிதான சில தாவரங்களைச் சேகரிப்பதற்காக ஒரு மலைப்பகுதிக்கு சென்றிருந்தோம். அங்கிருந்து நேராக பரீட்சை எழுத கல்லூரிக்கு வந்துவிடலாம் என்ற திட்டத்தில், விடியற்காலை காரில் புறப்பட்டோம். வழியில் கார் பஞ்சராகிவிட்டது. அதனால் பரீட்சை எழுத முடியவில்லை. நீங்கள் தான் பெரிய மனசு பண்ணி, எங்களுக்கு மாற்றுப் பரீட்சை வைக்க வேண்டும் .." என்று பொய்யை மெய்போல் உருகி சொன்னார்கள்.

பேராசிரியரும் ஒப்புக் கொண்டார். அந்த நான்கு மாணவர்களையும் நான்கு வெவ்வேறு அறைகளில் அமர வைத்து பரீட்சை எழுதச் சொன்னார். மாணவர்களுக்கு செம குஷி. உற்சாகத்துடன் பரீட்சை எழுத உட்காந்தார்கள். முதல் கேள்வி மிகவும் சுலபமாக இருந்தது. மாணவர்கள் அதற்கு விடை எழுதி விட்டு அந்த கேள்விக்கான மதிப்பெண் என்ன என்று பார்த்தார்கள். ஐந்து. சரி என்று அடுத்த பக்கத்தை திருப்பினார்கள். 95 மதிப்பெண்கள் என்ற குறிப்புடன் காணப்பட்ட அந்த கேள்வி, அவர்களின் முகத்தை அறைந்தது. அந்தக் கேள்வி- 'உங்கள் காரில் பஞ்சரானது எந்த டயர்?'

பஞ்சர் என்று பொய் சொன்னார்களே தவிர.. இப்படி ஒரு கேள்வி வரும், அதற்கு இந்த டயர் தான் பஞ்சர் ஆனது என்று நாலு பேரும் ஒன்று போல் பதிலளிக்க வேண்டும் என்று பேசி வைத்துக் கொள்ளவில்லையே!

பொய் என்பது ஒரு தீக்குச்சியைப் போல. அது அந்த கணத்துக்கு மட்டுமே பலன் கொடுக்கும். உண்மை என்பது சூரியனைப் போல.. அது வாழ்நாள் முழுதும் மட்டுமல்ல. வாழ்ந்து முடிந்த பிறகும் கூட பலன் கொடுக்கும்..."


@ நல்லதோர் வீணை செய்தே
 — with Parthipan Prasanna.


படித்ததில் பிடித்தது  581171_556618061072956_1435690986_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது  Empty Re: படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Sat Nov 09, 2013 2:59 pm


அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன், ஒருமுறை தேர்தல் பணிகளில் மும்முரமாக இருந்தார்.

அப்போது அவருக்கு முன்பொரு முறை உதவிய, எழுபது வயது மூதாட்டி ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன்னுடைய மகனைப் போலீஸôர் அழைத்துப் போயிருப்பதாகவும், உடனே வந்து அவனைக் காப்பாற்ற வேண்டுமென்றும் ஆபிரகாம் லிங்கனைக் கேட்டுக் கொண்டார்.

லிங்கன் உடனே புறப்பட்டார்.

இன்னும் சில மணி நேரத்தில் இந்த வேலைகளை முடிக்க விட்டால் நீங்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை வரும். எனவே இப்போது போக வேண்டாம் என்று அவருடைய நண்பர்கள் தடுத்தனர்.

""ஜனாதிபதி ஆக வேண்டுமானால், இன்னொரு முறை அடுத்த தேர்தலில் நிற்கலாம். ஆனால், எனக்கு உதவிய இந்த மூதாட்டிக்கு இப்போது போய் நான் உதவி செய்யவில்லையென்றால், எப்போதுமே முடியாதல்லவா?'' என்று கூறிவிட்டு, உடனே போய்விட்டார்.
 — with Akalvily Tharmalingam.


படித்ததில் பிடித்தது  1377214_713844745311690_1535557080_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது  Empty Re: படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Sat Nov 09, 2013 2:59 pm


ஒரு பெரிய பணக்காரர், புதிதாக வாழைத் தோட்டம் அமைத்தார். முதலில் கிடைக்கும் வாழைத்தாரை பழனி முருகனுக்கு அளிப்பதாகப் பிரார்த்தனை செய்து கொண்டார்.

முதல் தாரை வெட்டி வந்து பழுக்க வைத்தார்.

பழத்தாரில் 125 கனிகள் இருந்தன. பணக்காரர், பண்ணையாள் வேலனை அழைத்து அவனிடம் வாழைத் தாரைக் கொடுத்து பழனி கோவிலுக்குக் கொண்டுபோய் கொடுக்கும்படி சொன்னார்.

15 கி.மீட்டர் தூரம் வரை வாழைத்தாரை சுமந்து செல்ல வேண்டியிருந்தது. ஆனால் வேலனுக்கு செலவுக்கு ஏதும் பணம் அவர் கொடுக்கவில்லை.

வேலனும் தட்டாமல் தூக்கிச் சென்றான்.

நெடுந்தூரம் நடந்த வேலனுக்குக் களைப்பும் பசிமயக்கமுமாக வந்தது.

ஓரிடத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தவன், பழத்தாரைப் பார்த்தான்.

பசி தாங்க முடியாமல் அதிலிருந்து 5 பழங்களைப் பிய்த்து சாப்பிட்டு விட்டான்.

பின்னர் கோவிலுக்குச் சென்று பழத்தாரை உரிய அதிகாரியிடம் ஒப்படைத்தான்.

அந்த அதிகாரி பழங்களை எண்ணிப் பார்த்துவிட்டு, 120 பழங்கள் பெற்றுக் கொண்டதாக ரசீது எழுதிக் கொடுத்துவிட்டார்.

திரும்பி வந்து ரசீதைக் கொடுத்தான் வேலன்.

அதைப் பார்த்ததும் பணக்காரருக்கு வந்ததே கோபம்!

5 பழங்களைத் திருடிவிட்டதாகக் கூறி, வேலனைக் கை வலிக்குமளவுக்கு அடித்து விட்டார். அடித்த களைப்பில் பணக்காரர் தூங்கி விட்டார்.

அவருடைய கனவில் முருகன் தோன்றி, ""நீ அனுப்பிய ஐந்து பழங்களும் வந்து சேர்ந்தன'' என்று கூறிவிட்டு மறைந்தார்.

பணக்காரருக்கு அப்போதுதான் புத்தி வந்தது. வேலன் தின்ற பழங்கள்தான் முருகனுக்குப் போய்ச் சேர்ந்தது என்பதை உணர்ந்தபடி வேலனிடம் மன்னிப்பு கேட்டார்.
— with Maha Jaya.


படித்ததில் பிடித்தது  1385037_713830388646459_596097103_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது  Empty Re: படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Sat Nov 09, 2013 3:00 pm


நேருஜி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய தந்தை மோதிலால் நேரு, வாரம் ஒருமுறை அவருக்குப் பணம் அனுப்புவார்.

ஒருமுறை நேரு, மேலும் பணம் தேவை என்று தந்தைக்குக் கடிதம் எழுதினார்.

கடிதத்தைக் கண்ட மோதிலால் நேரு, இரண்டாம் முறையாகப் பணம் கேட்கிறானே பிள்ளை, என்ன செலவு செய்கிறானோ? என்ற எண்ணத்தில்,

""முன்பு அனுப்பிய பணத்துக்குக் கணக்கு அனுப்பவும்..'' என்று கடிதம் போட்டார்.

கடிதத்தைப் படித்த நேரு, பதில் கடிதம் அனுப்பினார். அந்தப் பதிலைக் கண்டதும் மோதிலால் நேரு மறுவார்த்தை பேசாமல் மகன் கேட்ட பணத்தை உடனடியாக அனுப்பி வைத்தார். தந்தை அப்படிச் செய்வதற்கு நேரு அனுப்பிய பதில் இதுதான் -

""என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், என்னிடம் கணக்கு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி நம்பிக்கையில்லாத பட்சத்தில் நான் அனுப்பும் கணக்கினால் உங்களுக்கு பலனில்லை


படித்ததில் பிடித்தது  1384304_713829458646552_674027552_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது  Empty Re: படித்ததில் பிடித்தது

Post by முழுமுதலோன் Sat Nov 09, 2013 3:01 pm


அறிஞர் அண்ணா முதல்வராகப் பதவியேற்றதும் அவரது வீட்டுக்கு, முதல்வர் என்ற வகையில் பலவிதமான வீட்டு உபயோகப் பொருட்களை அரசு அதிகாரிகள் கொண்டு வந்து வைத்தனர்.

அப்போது அண்ணாவின் மனைவி, ""மாடியிலும் கொஞ்சம் மேஜை, நாற்காலிகள் போடச் சொல்லுங்கள்....'' என்று மெதுவாகக் கேட்டார்.

அதற்கு அண்ணா, ""வேண்டாம்... பதவிக்காலம் எப்போது வேண்டுமானாலும் முடியலாம். அப்போது வந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். இந்த அரசுப் பொருட்கள் அனைத்தும் கீழே இருந்தால்தான் அவர்கள் எளிதாக எடுத்துக் கொண்டு போக வசதியாக இருக்கும்...'' என்றார்.

பணிதான் நிரந்தரம் பதவி நிரந்தரமல்ல என்பதை எவ்வளவு எளிதாக விளக்கியிருக்கிறார் அண்ணா!
 — with Akalvily Tharmalingam.

படித்ததில் பிடித்தது  1376628_713826501980181_104510395_n
https://www.facebook.com/pages/உயிரெனும்-தூரிகை-உறவெனும்-ஓவியம்/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது  Empty Re: படித்ததில் பிடித்தது

Post by sawmya Sat Nov 09, 2013 5:14 pm

அனைத்தும்
சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது  Empty Re: படித்ததில் பிடித்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum