தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!!

View previous topic View next topic Go down

ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!! Empty ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!!

Post by சுதா Tue Nov 12, 2013 12:50 pm

ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!! Annai+Mozhi+Arivom+Makkal+tv+Shows

தமிழா நான் ..!!!

கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடியில் பிறந்து
அகத்தியனின் ஞானம் பெற்று ..!!

பிள்ளைத்தமிழில் தாலாட்டி
அவ்வை மடியில் தவழ்ந்து
நெல்லியூட்டி வளர்த்தான் அதியமான் ..!!

முச்சங்கமிட்டு முக்கனி சுவையுடன்
மூதறிஞர்களால் முத்தமிழாக முடிச்சூடி
கரைபுரண்டேன் காவேரி அன்னையாக ..!!

மூவேந்தர்களின் வாளில் திலகமாகி
ஈழம் தொட்டு இமயத்தில் கொடிநாட்டி
வங்காளயெல்லை தாண்டியது வீரம் ..!!

திரிகடுகத்தில் தீரா நோய் தீர்த்து
கம்பரின் கற்பனைக்கு காதலியாகி
விடுதலை வேங்கையானேன் பாரதியால் ..!!

வீரமாமுனிவரால் பாரெங்கிலும் பவனிகொண்டு
வள்ளுவனால் உலகப் பொதுமறையாகி
வான் புகழ் அடைந்தேன் நேற்றுவரை..!!

தமிழா இன்று ..!!!

அலமாரியில் உறங்குகிறேன்
அரசியலுக்கு விளம்பரமாகி
ஊடகத்தில் கற்ப்பையிழக்கிறேன் ..!!

விதவையாக்கி விளையாடுகிறான் அந்நியன்
அனாதையாக மாண்டுபோகிறேன் வீதியிலே
ஈழத்தில் எம் மங்கையர் போல ..!!

தமிழா நாளை ..!!!

ஆங்கிலத்துடன் கலப்பு திருமணமாகும்
தமிழில் பேசினால் பரிசென்பார்கள்
அருங்காட்சியகத்திலே காட்சியளிப்பேன் ..!!

மலட்டு மொழியென பட்டம் பெற்று
தூசு படிந்து கரையானுக்கு இரையாவேன்
ஈழத்தில் எம்மினத்தைப் போல ..!!

நீ அன்னியமொழிக்கு அடிமையாகி
முகவரியிழந்து மூழ்கிவிடுவாய் இலமூரியாவாக
ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை ..!!

இப்படிக்கு
தமிழ் மொழி


Last edited by சுதா on Tue Nov 12, 2013 1:36 pm; edited 1 time in total (Reason for editing : Alignment)
சுதா
சுதா
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 30

Back to top Go down

ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!! Empty Re: ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!!

Post by Muthumohamed Tue Nov 12, 2013 12:52 pm

தமிழ் மொழி காதல் கவிதை சூப்பர் சூப்பர் சூப்பர்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!! Empty Nandri

Post by சுதா Tue Nov 12, 2013 1:24 pm

நன்றி நன்றி !!!
சுதா
சுதா
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 30

Back to top Go down

ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!! Empty Re: ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!!

Post by ஸ்ரீராம் Tue Nov 12, 2013 1:28 pm

மிகவும் அருமையான மொழி பற்று கவிதை சகோதரி
மிக்க நன்றி

ஒரு வேண்டுகோள்: பின்னூட்டத்தில் ஆங்கிலத்தில் நன்றி சொல்லி இருக்கீங்க, உங்களால் முடிந்தவரை தமிழில் பதில் அளியுங்கள். இது உங்கள் தளம், தமிழுக்கான தமிழருக்கான தளம். நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!! Empty Re: ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!!

Post by முரளிராஜா Tue Nov 12, 2013 1:30 pm

அறிவுறுத்தலுக்கு நன்றி ஸ்ரீ ராம்
தமிழில் மாற்றிவிட்டேன்



அருமையான கவிதை
நன்றி தோழி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!! Empty நன்றி

Post by சுதா Tue Nov 12, 2013 1:41 pm


ஸ்ரீ ராம் மற்றும் ராஜா அவர்களுக்கு நன்றி
சுதா
சுதா
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 30

Back to top Go down

ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!! Empty Re: ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!!

Post by sawmya Tue Nov 12, 2013 2:31 pm

ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!! 5poh
கவிதை அருமை தோழி...மிக்க நன்றி!புன்முறுவல் கைதட்டல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!! Empty நன்றி

Post by சுதா Tue Nov 12, 2013 2:37 pm

நன்றி நன்றி நன்றி
சுதா
சுதா
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 30

Back to top Go down

ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!! Empty Re: ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Nov 12, 2013 9:32 pm

கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடியில் பிறந்து
அகத்தியனின் ஞானம் பெற்று ..!!
நல்ல குடி...

கவிஞருக்கும் அமர்க்கள உறவுகளுக்கும்...

கல் தோன்றி மண் தோன்றா என்ற வரிகள் தான் நமக்குத் தெரியும்... அதற்கு முன்னர் உள்ள வரிகள் என்ன வென்று தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்... அப்துல் ரகுமான் எழுதிய கட்டுரை இது...

‘முன் தோன்றி குடி” என்ற தலைப்பில் அப்துல்ரகுமான் எழுதிய கட்டுரை அது.

தமிழினமும் தமிழ்மொழியும் தொன்மை வாய்ந்தவை என்பது வியப்பிற்கும் பெருமைக்கும் உரியது. தமிழ் ஆதிமொழி.

தமிழின் தொன்மையை கூற வேண்டி வந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பழம்பாடல் வரியை அனைவரும் ஒப்பிப்போம். அது: ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி” என்கிற வரி.

இந்த வரியை அறியாத தமிழர்களே இல்லை என்னுமளவுக்கு இந்தச் சொற்றொடர் அழியாப் புகழ் பெற்றது. இதன் புகழ் எந்த அளவுக்கு என்று கேட்டால், இதை எழுதியவர் பெயரோ, இந்தப் பாடலின் மற்ற வரிகளோ பலருக்கும் தெரியாது. அவையெல்லாமும் மங்கிப்போகிற அளவுக்கு இந்த வரி பிரகாசமடைந்துள்ளது.

ஆயினும், இதே பாடல்வரியை வைத்துக்கொண்டு, தமிழை, தமிழர்களை கேலி செய்பவர்களும் உள்ளனர். அவர்களும் தமிழர்களே என்பதுவும் அறிந்து வருந்தத்தக்கது.

“அதெப்படி, கல் தோன்றி ( பின்) மண் தோன்றாக் காலத்து” என்று வருவது சரியாக இருக்கும்?” என்பது அவர்களின் கேலி வினாக்களுள் ஒன்று. ”கல் தோன்றியா பின்பா மண் தோன்றும்?”

அது மட்டுமல்லாமல், வாளோடு முன் தோன்றி மூத்த குடி” என்பது எப்படி சரியாக இருக்கும்? என்பதும் அவர்களின் வினா.

ஒருவேளை, ‘வாலோடு முன் தோன்றி மூத்த குடி’ என்பதாக இருக்குமோ என்று கூறி நகைக்கவும் செய்கின்றனர். உண்மையில் அவர்கள்தாம் நகைப்புக்குரியவர்கள். தன் இனவரலாறு அறிந்திராத அவர்கள் நகைப்புக்குரியவர்தாமே.

இந்தப் பாடல் புறப்பொருள் வெண்பா மாலை என்ற நூலில் காணப்படுகிறது. இதை எழுதியவர் ஐயனாரிதனார் என்பார்.

மனித இன வரலாற்றில், தொடக்கக் காலத்தில் மனிதன் மலையில் தான் வசித்துவந்தான். மலையில்தான் இயற்கை உணவுகளான காய்கனிகள் கிடைத்தன. உறைவிடமாகக் கொள்ள இயற்கையான குகைகளும் வாய்த்தன. தமிழ் அகப்பொருள் திணைகளுள் முதலாவதான ‘குறிஞ்சி’ மலையும் மலைசார்ந்த இடமும் பற்றியதே, தமிழில் ‘கல்’ என்ற சொல் மலையையும் குறிக்கும்.

‘கல் இயங்கு கருங் குற மங்கையர்’ என்று கம்பர் சொல்வதில் வருகிற ‘கல்’லுக்கு, மலை என்றுதான் பொருள். (மலையில் வாழ்கிற கருநிற குறத்தியர்).

ஆக, ‘கல்’ தோன்றி என்பதற்கு ‘மலை தோன்றி’ என்று பொருள். அதாவது மலைவாழ் காலமாகிய ‘குறிஞ்சி வாழ்க்கை தோன்றி’ என்று பொருள்.

ஆதியில் மலையில் வசித்துவந்த மனிதன், பின்னர் ஆடுமாடுகள் உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளைப் பழக்கி அவற்றை ஓட்டியபடி காட்டுக்கு வந்தான். தமிழ் அகப்பொருள் இலக்கணம், காடும், காடுசார்ந்த இடத்தையும் முல்லை என்று சொல்கிறது.

சரி, “மண் தோன்றாக் காலத்து” என்றால்?
மண் என்பது சிறப்புப் பொருளில் நிலத்தைக் குறிக்கும். குறிப்பாக, விவசாய நிலத்தையே அப்படிக் குறிப்பிடுவர். (“இந்த மண்ணுக்கு என்னமா விளைஞ்சிருக்கு, பாருங்களேன்). ஆக, மண் தோன்றாக் காலம் என்றால், வயல் தோன்றாத காலம், அதாவது, மனிதன் விவசாயத்தை அறியாத காலம் என்று பொருள்படும். வயலும் வயல் சார்ந்த இடத்தை தமிழின் அகப்பொருள் இலக்கணம் ‘மருதம்’ என்றழைக்கிறது.

மலை வாழ்க்கையாகிய ‘குறிஞ்சி’ தோன்றி, வயல் வாழ்க்கையாகிய ‘மருதம்’ தோன்றுமுன்பே ‘முல்லை’யாகப் பூத்தது தமிழினம் என்பதே ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து…’ என்பதற்குப் பொருள்.

மலை வாழ்க்கையில் கற்களையே மனிதன் ஆயுதமாகப் பயன்படுத்தினான்.
உலோகத்தாலான ஆயுதங்களை மனிதன் பயன்படுத்தத் தொடங்கியது ‘காட்டு’வாழ்க்கையில்தான். கி.மு மூவாயிரத்தில் எகிப்தியர்கள் உலோக ஆயுதங்களைப் பயன்படுத்திய காலக்கட்டத்திலோ அதற்குச் சற்று முன்னதாகவோ இந்தியர்களும் உலோகப் பயன்பாட்டை அறிந்திருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய இனங்களுள் தொன்மை மிக்கது தமிழினமே. முதன்முதலாக இரும்பாலான வாளை செய்தவன் தமிழனே. சேக்ஸ்பியர் “இந்திய வாள்” என்று சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.

இப்போது முழுப்பாடலையும் பார்ப்போம்:

பொய்யகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி.


வையகம் போர்த்த வயங்கொலி நீர் என்பது எதைக்குறிக்கிறது ?

நோவாவின் காலத்தில் மிகப் பெரிய கடல்கோள் ஏற்பட்டு பூமி கடலால் சூழப்பட்டது. (நூஹ்) நோவாவின் பேழையில் இருந்த உயிரினங்களைத் தவிர அனைத்து உயிரினங்களும் அழிந்துபட்டன. இதை பைபிள் உள்ளிட்ட மதநூல்கள் தெளிவாகக் கூறுகின்றன. பின்னர், நோவாவின் சந்ததிகளிலிருந்தே மனித இனம் பல்கிப் பெருகியது.

சில காலம் கழித்து வெள்ளம் வடியத் தொடங்கியது. அப்போது, வெள்ளம் வடியவடிய, உயரமான மலைகள் தானே முதலில் தோன்றும். அதன்பிறகே மண் தோன்றும் அல்லவா!

நோவாவின் பேழையில் இருந்தவர்கள் ஆயுதங்களும் வைத்திருந்திருப்பார்கள் அல்லவா! அதில் வாளும் இருக்கத்தானே செய்யும். அதைத்தான் ஐயனாரிதனார் இப்படிக் குறிப்பிடுகிறார்:
வையகம் போர்த்த வயங்கொலி நீர் – கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே’ வாளோடு
முன் தோன்றி மூத்த குடி


நோவா எனப்படும் நூஹ் தமிழினத்தின் ஆதிமூதாதை எனக் கொள்ள இடமளிப்பதாக ஐயனாரிதனாரின் இந்தப் பிரசித்திப் பெற்ற பாடல் உள்ளது.

பின்குறிப்பு: கவிக்கோ அப்துல்ரகுமானின்,கட்டுரையின் இறுதியில் கூறப்பட்டுள்ள இந்தக் குறிப்பு அறுதியிட்டதோ, உறுதிபட்டதோ அன்று. விவாதத்திற்கு இடமளிக்கும் ஒன்றே என்று நான் நினைக்கிறேன்.

கட்டுரை கிடைத்த இடம். http://ezuthovian.blogspot.in/2011/01/blog-post_25.html
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!! Empty நன்றி

Post by சுதா Wed Nov 13, 2013 6:27 pm

அய்யா நல்ல விளக்கம் நன்றி நன்றி நன்றி
சுதா
சுதா
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 30

Back to top Go down

ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!! Empty Re: ஆதலால் காதல் செய்வீர் அன்னை மொழியை !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum