தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

View previous topic View next topic Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 14, 2013 11:12 am

நல்லது கெட்டது
****************
ஒரு சீடன் தன குருவிடம் கேட்டான்,''நல்லதைப் படைத்த ஆண்டவன் தானே கெட்டதையும் படைத்துள்ளான்.அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன?''குரு சிரித்துக் கொண்டே,''அது அவரவர் விருப்பம்,''என்றார்.பகல் உணவு வேலை வந்தது.அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான்.ஒரு கிண்ணத்தில் பசு மாட்டு சாணம் மட்டும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது. சீடன் விழித்தான்.குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார்,''பால்,சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது.பாலை ஏற்றுக் கொள்ளும்போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா?''

nanri ;Face book
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 14, 2013 11:16 am

பொய்யன்
***************
ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.

அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று கத்தினான்
.
உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.

''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.உடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய் சொல்லவில்லை.

''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.

நன்றி முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by முழுமுதலோன் Thu Nov 14, 2013 12:47 pm

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  559439_406751092781504_2030212715_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by sawmya Thu Nov 14, 2013 2:55 pm

சூப்பர் சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 14, 2013 7:16 pm

ஆடும் மீன்கள்
**************************
ஒரு மீனவன் தன வலையைக் கரையில் போட்டுவிட்டு ,புல்லாங்குழலை எடுத்து ஊத ஆரம்பித்தான் .அப்படி ஊதினால் மீன்கள் ஆடிக் கொண்டு வலையில் வந்து விழும் என்று அவன் நினைத்தான்.நீண்ட நேரம் வாசித்தும் ஒரு மீன் கூட வரவில்லை.மீனவனுக்குக் கோபம் வந்தது புல்லாங்குழலைக் கீழேவைத்துவிட்டு வலையை எடுத்துத் தண்ணீரில் வீசினான்.வலையில் ஏராளமான மீன்கள் அகப்பட்டன.வலையில் அகப்பட்ட மீன்களை பக்கத்தில் இருந்த பாறையில் போட்டான்.உடனே வலையில் இருந்த மீன்களெல்லாம் துள்ள ஆரம்பித்தன.அதைப் பார்த்த மீனவன்,''நான் புல்லாங்குழல் வாசித்தபோது நீங்கள் ஆடாமல் இருந்தீர்கள்.இப்போது ஆடுகிறீர்களே!எதற்காக?என்ன ஆடினாலும் உங்களை நான்விடப்போவதில்லை..''என்று சொன்னான்.

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 14, 2013 7:18 pm

அனுபவங்கள்
*********************
ஒரு பயணி,டாக்சியில் சென்று கொண்டிருக்கும்போது,அதன் ஓட்டுனரிடம் ஏதோ கேட்பதற்காக,அவன் முதுகில் லேசாகத் தட்டிக் கூப்பிட்டான்.உடனே ஓட்டுனர் நிலை குலைந்து,இன்னொரு காரை நெருங்கி மோதாமல் தப்பித்து,அடுத்து வந்த ஒரு லாரியின் மீது இடிக்காமல் தப்பித்து,ஒரு மரத்தின் மீது மோதுமுன் காரை நிறுத்தினான்.சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது.ஓட்டுனர் பயணியிடம் சொன்னார்,''என் உயிரே போகும் அளவுக்கு என்னைக் கலங்க வைத்து விட்டாயே?''பயணி மன்னிப்புக் கேட்டுக்கொண்டே, ''உன் முதுகில் லேசாகத் தட்டியது இவ்வளவு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.''ஓட்டுனர் சொன்னார்,''இல்லை,இது என்னுடைய தவறுதான்.இன்று தான் முதல்முதலாக நான் டாக்சி ஓட்டுகிறேன். கடந்த பத்தாண்டுகளாக நான் வேனில் பிணங்களைத்தான் எடுத்துப் போய்க்கொண்டிருந்தேன்.''
நமது அனுபவங்கள் கடந்த காலத்தால் பாதிக்கப் படுகின்றன.

நன்றி ;முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 14, 2013 7:19 pm

மனிதனும் சிங்கமும்
*******************************
தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி ஒரு மனிதனுக்கும் ஒரு சிங்கத்திற்கும் ஒரு நாள் தர்க்கம் ஏற்பட்டது.ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல பக்கத்தில் ஒரு சிலை இருந்தது.''அதைப் பார்த்தாயா?யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.''என்றான் மனிதன்.
''ஓ,அது மனிதன் செய்த சிலை.ஒரு சிங்கம் சிலை செய்யுமானால்,மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது,தான் நிற்பது போலச் செய்திருக்கும்.''என்று சொல்லியது சிங்கம்.
தனக்கென்றால் தனி வழக்குதான்.
--ஈசாப் நீதிக் கதை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 14, 2013 7:22 pm

வீண் செலவு
***********************
மரணப் படுக்கையில் தந்தை. சுற்றிலும் அவருடைய மூன்று பையன்கள். மூத்தவன் சொன்னான்,''அப்பா இறந்ததும்,மிகப் பிரமாதமாகச் செலவு செய்து அடக்கம் செய்ய வேண்டும்,''இரண்டாம் மகன் சொன்னான்,''ரொம்ப ஆடம்பரம் வேண்டாம்.சுமாராகச் செய்யலாம்.''மூன்றாம் மகன் சொன்னான்,''அப்பாவே இறந்த பின் வீண் செலவு எதற்கு? சிக்கனமாகச் செய்யலாம்.''மரணப் படுக்கையிலிருந்த தந்தை சிரமப்பட்டுப் பேசினார்,''பிள்ளைகளே,கட்டிலுக்கு அடியில் என் கைத்தடி இருக்கிறது.அதை எடுத்துக் கொடுத்தீர்களேயானால் நான் மெது மெதுவே நடந்து சுடு காட்டிற்குச் சென்று விடுவேன்.அங்கு சென்றதும் நான் இறந்து விடுவேன்.உடனே செலவு ஏதும் இன்றி நீங்கள் அடக்கம் செய்யலாம்.''

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 14, 2013 7:24 pm

ஆற்றில் விழுந்த அழகி
*************************************
அழகி ஒருத்தி ஆற்றில் அடித்துச் செல்லப்படும் போது
''நமக்கென்ன''என்று பாராமல் இருப்பவன் மனித மிருகம்.
''ஆபத்து,ஆபத்து!''என்று அலறுபவன் பொது ஜனம்.
''ஐயோ பாவம்''என்று முணுமுணுப்பவன் அனுதாபி
''ஆண்டவனே, அவளைக் காப்பாற்று'' என்பவன் பக்தன்.
''அற்புதமான அழகு''என்று அந்த நிலையிலும் ரசிப்பவன் கவிஞன்.
''பெண்களும் நீச்சல் கற்க வேண்டும்''என்பவன் சீர்திருத்தவாதி.
''ஆற்றில் குளிக்கக்கூடப் பாதுகாப்பில்லை''என்பவன் எதிக்கட்சிக்காரன்.
''எவ்வளவு இழப்பீடு வழங்கலாம்''என யோசிப்பவன் ஆளும் கட்சிக்காரன்.
காப்பாற்றும் முயற்சியில் உயிர் துறப்பவன் தியாகி.
ஆற்றில் இறங்கி,காப்பாற்றி,தன வழியே செல்பவன் கர்மயோகி.

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:43 am

ஜலதோஷம்
********************
காட்டில் ஒரு சிங்கம்,ஒரு ஆட்டை அழைத்தது.''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.ஆடு முகர்ந்து

பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து.அதனுடைய கருத்தைக் கேட்டது.ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,''கொஞ்சம் கூட

நாறவில்லை,''என்றது.சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.நரி சொன்னது,''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.

புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:46 am

அயிரை மீன்
*******************
ஒரு முறை சிவனும் பார்வதியும் வானத்தில் உலா வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு குளக்கரையில் ஒரு கொக்கு ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.உடனே பார்வதி சிவனிடம்,''இந்தக் கொக்கு ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது?''என்று கேட்டார்.

சிவன்,''கொக்கே,உனக்கு என்ன வேண்டும்?சொர்க்கத்திற்கு வருகிறாயா?''என்று கொக்கிடம் கேட்டார்.'சொர்க்கத்தில் அயிரை மீன் கிடைக்குமா?'என்று கேட்டது கொக்கு.கிடைக்காது என்றார் சிவன்.

'அப்போ,சொர்க்கத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.எங்கே அயிரை மீன் கிடைக்கிறதோ,அதுவே எனக்கு சொர்க்கம்.'என்றது கொக்கு.

எங்கே நமக்கு நிம்மதி கிடைக்கிறதோ,அதுவே நமக்கு சொர்க்கம்.

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:50 am

ஏன்,எதற்கு?
******************
தாய் ஒட்டகத்திடம் குட்டி கேட்டது,''அம்மா,எதற்காக நம் கால்கள் நீளமாக இருக்கின்றன?''
தாய்: பாலைவன மணலில் புதையாமல் நடப்பதற்காகத் தான்.

குட்டி: கண் இமை இவ்வளவு சிறிதாக நிறைய முடியுடன் இருக்கிறதே,அது ஏன்?
தாய்: மணல் புயல் வந்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான்.

குட்டி: அது சரி,பின்புறம் ஏன் திமில் இருக்கிறது?
தாய்:அது தண்ணீர் சேமித்துக்கொள்ள.அப்படி இருந்தால் தான் பாலைவனத்தில் எளிதாகப் பயணம் செய்ய முடியும்.

குட்டி:நாம் இருக்கும் மிருகக் காட்சியில் தான் பாலைவனமே இல்லையே? பிறகு இவை எல்லாம் நமக்கு எதற்கு அம்மா?

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by செந்தில் Fri Nov 15, 2013 8:27 pm

:நாம் இருக்கும் மிருகக் காட்சியில் தான் பாலைவனமே இல்லையே? பிறகு இவை எல்லாம் நமக்கு எதற்கு அம்மா?
நெஞ்சை நெகிழவைக்கும் வரிகள் சோகம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 8:29 pm

நன்றி நன்றி
அருமை அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 16, 2013 1:22 pm

கூண்டுக்கிளி
**********************
ஆப்பிரிக்கக் கிளி ஒன்றை கூண்டினுள் வைத்து ஒருவர் வளர்த்து வந்தார். ஒரு முறை அவர் ஆப்பிரிக்கா செல்லும் போது கிளி சொல்லிற்றாம்,''என் ஜோடிக் கிளி அங்கிருக்கும்.அதனிடம் நான் இங்கு கூண்டில் இருப்பதாகச் சொல்லுங்கள்.

''அவரும் தன வேலை முடிந்த பின் சிரமப்பட்டு காட்டில் தனியாக இருந்த அந்தக் கிளையைக் கண்டு விபரம் சொல்ல,அது உடனே கண்ணீர் உகுத்துக் கீழே சுருண்டு விழுந்து விட்டது.

'அடடா,இந்தக் கிளி இறந்ததற்கு நாம் காரணமாகிவிட்டோமே,'என்று வருத்தப்பட்டு ஊருக்கு வந்து கூண்டுக் கிளியிடம் விபரம் சொல்ல,அக்கிளியும் கண்ணீர் உகுத்து கூண்டினுள்ளேயே விழுந்து விட்டது.

நம்மால் இந்தக் கிளியும் அநியாயமாய் இறந்து விட்டதே என்ற வருத்தத்துடன் கூண்டைத் திறந்தார்.உடனே அந்தக் கிளி ஜிவ்வென்று பறந்து போய் பக்கத்திலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. உடனே அவர்,''உன் ஜோடிக் கிளி இறந்தது தெரிந்தும் நீ என்னிடம் நடித்துத் தப்பி விட்டாயே!''என்றார்.

அதற்கு அக்கிளியும்,'என் ஜோடிக் கிளியும் இறக்க வில்லை.கூண்டில் அடைபட்ட நான் தப்பிக்கும் வழியை உங்களிடமே அது சொல்லி அனுப்பியிருக்கிறது.'என்று கூறி விட்டுத் தன ஜோடிக் கிளியைத் தேடி பறந்து விட்டது.

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 16, 2013 1:26 pm

மாத்தி யோசி
**********************
அமெரிக்காவின் நாசா,விண்வெளியில் மனிதர்களை அனுப்ப ஆரம்பிக்கும் போது,அவர்களுக்கு ஒரு பிரச்சினை வந்தது.வானத்தில் புவி ஈர்ப்பு விசை இல்லாததால் அங்கு பேனாவால் எழுத முடியவில்லை.

ஆனால் பார்த்த விசயங்களை எழுதி ஆக வேண்டுமே!என்ன செய்வது?அதற்கான வழியைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை ஒரு பெரிய நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள்.

அவர்களும் பத்துஆண்டுகள் ஆராய்ச்சி செய்து,ஒரு கோடி டாலர் செலவழித்து புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும்.நீருக்கு அடியிலும்,கடுமையான வெப்ப நிலையிலும் மேலிருந்து கீழும்,கீழிருந்து மேலும் எந்த நிலையிலும் எழுதக் கூடிய ஒரு பேனாவைக் கண்டுபிடித்தனர்.

ஒரு ஆர்வத்தினால் ரஷ்யர்கள் இந்தப் பிரச்சினையை எப்படி சரி செய்தார்கள் என்று விசாரித்த போதுதெரிய வந்தது;''அவர்கள் பென்சிலை உபயோகித்தார்கள்!''

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 16, 2013 1:29 pm

மோதிரம்
**********************
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது,ஒரு ஆங்கிலேய பிரபு மன்னர் ஒருவரை விருந்துக்கு அழைத்தார்.மன்னர் அழகான விலை உயர்ந்த வைர மோதிரம் அணிந்திருந்தார்.ஆவலுடன் அதை பிரபு பார்த்ததைக் கண்ட மன்னர் அதை கழற்றி அவரிடம் காண்பித்தார்.பிரபு அதைத் தன விரலில் போட்டுப் பார்த்தார்.பின் மன்னர் புறப்படும் வரை கழற்றவில்லை.தயங்கியபடியே மன்னர் அதைக் கேட்ட போது பிரபு சொன்னார்,''எங்கள் கைக்கு வந்த எதையும் திரும்பக் கொடுக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை.''

சில நாட்கள் கழித்து மன்னர் பிரபுவையும் அவர் மனைவியையும் விருந்துக்கு அழைத்தார்.அவர்கள் வந்தவுடன் மன்னரின் மனைவி பிரபுவின் மனைவியை அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றார்.

விருந்து முடிந்து பிரபு புறப்படும் போது தன் மனைவியை அழைத்தார்.அப்போது மன்னர் சொன்னார்,''எங்கள் அந்தப்புரம் வந்த எந்தப் பெண்ணையும் திரும்ப அனுப்பும் பழக்கம் எங்களுக்கு இல்லை.''

பிரபுவின் கை மோதிரத்தைக் கழட்டியது.

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 16, 2013 1:30 pm

எடை
காட்டுவழி சென்ற ஆசிரியர் ஒருவரை பிடித்துக் கொண்டனர் கொள்ளைக் கூட்டத்தினர்.அவர் கணித ஆசிரியர் என்று தெரிந்து கொண்டஅக்கூட்டத்தின் தலைவன் ஆசிரியருக்கு ஒரு சோதனைவைத்தான்.தன கையில் இருக்கும் பூசணிக்காயின் எடையை அவர் சரியாகக் கூறினால் விடுதலை என்றும்,சரி பார்க்கையில் தவறாக இருந்தால் தலையை எடுத்து விடுவதாகவும் கூறினான்.ஆசிரியர் சொன்னார்,''பூசணிக்காய் உன் தலையின் எடையளவு இருக்கும்'' என்று கூறினார்.எப்படி சரி பார்ப்பது?'நீங்கள் சொன்ன விடை சரிதான்,'என்று கூறி விடுதலை செய்தான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 16, 2013 1:32 pm

ஒற்றுமை
சாகும் தருவாயில் இருந்த தந்தை தன் பிள்ளைகளைக் கூப்பிட்டு,தான் இறந்த பின் அவர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.மூத்தவனைக் கூப்பிட்டு ஒரு கம்பைக் கொடுத்து,இது உடைப்பது எவ்வளவு இலகுவானது என்று உன் தம்பிகளுக்குக் காட்டு என்றார்.
அவனும் உடைக்க முயன்று அது வலுவாக இருந்ததால் உடைக்க முடியாமல் திணறினான்.தந்தை உடனே,''பரவாயில்லை.இதோ பல கம்புகள் உள்ள கட்டு.இதை உடைப்பது எவ்வளவு கடினம் என்று உன் தம்பிகளுக்குக் காட்டு,''என்றார். அவனும் அதை உடைக்க முயற்சிக்க,அது எளிதாக உடைந்து விட்டது.தந்தை முகம் வாடிவிட்டது.உடனே மூத்தவன் தன் தம்பிகளிடம் சொன்னான்,''அப்பா என்ன சொல்ல வருகிறார் என்பது தெரிகிறதா?தரமற்ற பல கம்புகளை விட தரமான ஒரு கம்பு சிறந்தது என்று தெரிகிறது.அதே போல் தந்தையை பல டாக்டர்களிடம் காண்பிப்பதை விடுத்து,ஒரு நல்ல டாக்டரிடம் மட்டும் நம்பிக்கை வைப்போம்,என்று சொல்கிறார்.''
உடனே குடும்ப டாக்டர் வரவழைக்கப்பட்டார்.சில நாட்களில் தந்தையும் குணமடைந்தார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 16, 2013 1:36 pm

பண்டிதர்கள்
**********************
ஒரு செல்வந்தர் இரண்டு ஞான பண்டிதர்களை விருந்துக்கு அழைத்தார்.ஒருவர் முகம் கழுவச் சென்றபோது அவரைப்பற்றி புகழ்ந்து பேசினார்.ஆனால் கூட இருந்த பண்டிதரோ மற்றவரை ஒரு கழுதை என்றார்.

பின் முகம் கழுவப் போனவர் வந்ததும் இவர் முகம் கழுவச் சென்றார். இரண்டாமவரைப் பற்றி முதல்வரிடம் பெருமையாகப் பேச 'அவர் ஒன்றும் தெரியாத மாடு,''என்றார்.பின்னர் இரண்டு பண்டிதர்களும் உணவு அருந்த அமர்ந்தனர்.

ஒருவர் தட்டில் புல்லும்,மற்றவர் தட்டில் தவிடும் வைக்கப் பட்டபோது இருவரும் கூச்சலிட்டனர்.தங்களை அவமானப் படுத்தி விட்டதாகக் கூறி கோபப்பட்டனர்.செல்வந்தர் சொன்னார்,''நான் உண்மையில் உங்களை மகா பண்டிதர்கள்என்று கருதித் தான் விருந்துக்கு அழைத்தேன்.

ஆனால் நீங்கள் யாரென்று உங்கள் மூலமாகவே தெரிந்த பின் அதற்கேற்றாற்போல் உணவு படைத்தேன்.என் மீது ஏன்வீணாய்க் கோபப் படுகிறீர்கள்?''பண்டிதர்கள் முகம் கவிழ்ந்து வெளியே சென்றனர்.

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by mohaideen Sat Nov 16, 2013 2:48 pm

சிந்திக்கக்கூடிய கதைகள்

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 16, 2013 3:07 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்  Empty Re: சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum