தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உண்மை கதைகள்

View previous topic View next topic Go down

உண்மை கதைகள் Empty உண்மை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 04, 2013 8:52 am

பழக்கமில்லாத எந்தச் செயலைச் செய்தாலும், ஆரம்பத்தில் குறை ஏற்படுவது சகஜம்.
அதனால் சில நேரங்களில் பிறரது நகைச்சுவைக்கும் ஆளாக வேண்டியது வரும்.
காந்தியடிகள் அப்படித்தான் முதன் முதலில் தமக்குத் தாமே முடிவெட்டிக் கொண்ட போது கேலிக்கு ஆளானார்.

இத்தகைய சுவையான சம்பவம் தென்னாப்பிரிக்காவுக்கு காந்தியடிகள் சென்றபோது நிகழ்ந்தது.

அங்கே வெள்ளை நிறத்தவர்கள் முடிவெட்டும் நிலையங்கள் மட்டுமே இருந்தன.
கருப்பு நிறத்தவரான காந்தியடிகளுக்கு முடிவெட்ட அந்த வெள்ளையர்கள் மறுத்தனர்.
முடிவெட்டிக் கொள்ளாமலிருக்க காந்தியடிகள் சாமியாருமல்ல... சாமிக்கு நேர்த்திக் கடனாக முடிவளர்க்கவும் இல்லை.

அதனால் எப்படியும் முடிவெட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்தார். அதற்கென கத்தரிக்கோல், முடிவெட்டும் மிஷின் போன்றவற்றை விலைக்கு வாங்கி தமக்குத் தாமே முடிவெட்டிக் கொள்ள தீர்மானித்தார்.
அதன்படி முகம் பார்க்கும் கண்ணாடிகளை முன்னும் பின்னும் வைத்துப் பார்த்தவாறே முடிவெட்டினார்.

மறுநாள் நீதிமன்றத்திற்குச் சென்றபோது, அங்கேயிருந்த வெள்ளைக்கார வழக்கறிஞர்கள் காந்தியடிகளின் தலையைச் சுட்டிக்காட்டி கைகொட்டி சிரித்தனர்.
மீண்டும் மீண்டும் வெள்ளையர்கள் விழுந்து விழுந்து சிரிப்பது கண்டு காந்தியடிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இப்படிச் சிரிக்கின்றனர்? காரணம் என்னவென்று கேட்டு விட முடிவெடுத்தார்.

அதற்குள் வெள்ளைக்கார வழக்கறிஞர்களில் ஒருவர், ''என்ன காந்தி! உமது தலைமுடிக்கு என்ன வந்தது? இரவிலே நீங்கள் தூங்கும் போது எலி உங்களுடைய தலைமுடியைக் கத்தரித்து விட்டதா?'' எனக் கேட்டு மீண்டும் சிரித்தனர்.
வெள்ளையர்கள் கேட்டது கண்டு காந்தியடிகள் வருத்தப்படவில்லை. பதிலாக, ''நண்பர்களே! எனக்குச் சேர வேண்டிய பெருமையை எலிக்குக் கொடுக்கிறீர்கள். அது தவறு. ஏனென்றால், தலைமுடியை எலி போல கரம்பினது என் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டது என்பதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். இது முதன் முதலில் எனக்கு நானே முடிவெட்டிக் கொண்டதனால் இப்படியாகிவிட்டது. அடுத்த தடவை பார்க்கும் போது தெளிவாக முடிவெட்டியிருப்பேன்,'' என்று சிரித்துக் கொண்டே காந்தியடிகள் சொன்னார்.

நன்றி தினமலர்!
நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உண்மை கதைகள் Empty Re: உண்மை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 04, 2013 8:54 am

குழந்தைகள் விரும்பும் உள்ளம் கொண்ட நேரு மாமா சில நேரங்களில் குழந்தைகளை போலவே மாறி விடுவார். ஒரு சமயம் மதுரை மாவட்டத்தில் பயணத்தை மேற்கொண்ட போது வழியில் பலூன் விற்கப்பட்டுச் சென்றது இவரைக் கவர்ந்தது. காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார்.

''பலூன் என்ன விலை?'' என்று கேட்டார்.
படிப்பு வாசனை அறிந்திருந்த பலூன் வியாபாரி, நாளிதழ்களில் பிரதமர் நேருஜியின் படத்துடன் கூடிய செய்தியினைப் படித்துப் பழக்கப்படுத்தி வந்ததனால் நேருவைப் பார்த்ததும் அகமகிழ்ந்தார்.

''காசே வேண்டாம் சார்... ஓசியில் தர்றேன் சார்...'' என்றார் மகிழ்வோடு.
''ஏம்ப்பா காசு வேண்டாம் என்கிறாய்?''
''இந்த நாட்டிற்காக எவ்வளவோ செய்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு நான் ஏதாவது என் பங்குக்கு செய்ய வேண்டுமில்லையா?''

''இந்த நாட்டிற்கு நானொரு வேலைக்காரன்... என் கடமையைத்தான் நான் செய்கிறேன். எனக்கு சர்க்கார் சம்பளம் தருது... அந்தச் சம்பளத்தை வைத்து நான் சாப்பிட்டு விடுவேன்... உன்னோட வேலை பலூனை விற்பது. பலூனை விற்றுத்தான் உன் வயிற்றுப்பாட்டைக் காப்பாற்றுவாய்... அதனால் இனாமா ஒண்ணும் தரவேணாம்... மொத்த பலூன்களும் எத்தனை ரூபாய் சொல்லுங்க,'' என்று கேட்டார்.
இனி நாம் என்ன சொன்னாலும் நேருஜி கேட்க மாட்டார் என்பதை உணர்ந்த பலூன் வியாபாரி... ''இருபத்தைந்து ரூபாய்,'' என்று சொன்னார்.

நேருஜி தன் சட்டைப் பைக்குள் கைவிட்டுத் துழாவிப் பார்த்தார். வழக்கம் போல அவர் பை காலியாக இருந்தது.
தம்மோடு பயணம் செய்த ஒருவரிடம் இருபத்தைந்து ரூபாய் வாங்கி பலூன் வியாபாரியிடம் கொடுத்தார்.

கார் செல்லும் திசையில் வரும் சிறுவர்களுக்கெல்லாம் பலூனைக் கொடுத்து மகிழ்ந்தார்.
அதோடு மிச்சமிருந்த ஒரு பலூனை நேருஜியும் குழந்தை போல ஊதி சிறுவர்களிடம் வேடிக்கைக் காட்டி சிரித்து மகிழ்ந்து கொண்டே பயணத்தை மேற்கொண்டார்.

நன்றி தினமலர்!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உண்மை கதைகள் Empty Re: உண்மை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 4:12 pm

விளம்பரத்துக்காகவும் வருமான வரியிலிருந்து தப்பிப்பதற்கும் தர்மம் என்ற பெயரில் பெயருக்கு உதவி செய்பவர்கள் தான் நாட்டில் ஏராளம்.
வலது கை கொடுப்பது இடது கைக்குக் தெரியக் கூடாது என்பதற்காக தான் செய்கிற தர்மம் பிறருக்குத் தெரியாமல் செய்யும் தர்மசீலர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் அந்த வரிசையில் இடம்பெறக் கூடியவர்.
எளியவர் மீது இரக்கம் காட்டுபவர்... பிறரின் துயர் துடைக்க தம்மிடம் பொருள் இல்லாவிட்டாலும் மற்றவரிடம் உதவி பெற்று உதவி செய்யும் குணம் கொண்டவர்.

ஒருநாள் இவர் குளிப்பதற்காக குளம் ஒன்றிற்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் நடுத்தர வயது கொண்ட ஒருவர் அழுது கொண்டிருந்தார். அவர் உடுத்தியிருந்த கிழிந்த உடையும் கவலை தோய்ந்த முகமும் வித்யாசாகரின் மனத்தினை நெகிழச் செய்தது.

''ஏம்ப்பா... அழுதுக்கிட்டிருக்கே? உனக்கு என்னாச்சு?'' என்று கேட்டார். முதலில் விஷயத்தைச் சொல்லத் தயங்கியவன் பின்பு, ''ஐயா! நான் என் மகள் திருமணத்திற்காக 25 ஆயிரம் ரூபாய் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தேன். இன்னும் இரண்டு நாளிலே திரும்பக் கொடுக்கணும். அப்படிக் கொடுக்காவிட்டால் உயிரோட என்னை சமாதி கட்டி விடுவதாகச் சொல்கின்றனர்.

''கடனைத் தீர்ப்பதற்காக பணக்காரர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன். ஒருவர் கூட உதவ முன்வரவில்லை. எனக்கு நேரப் போகும் துன்ப நிலையைக் கண்டு எனக்கு அழுகையே வந்துவிட்டது,'' என்று துயரத்தின் காரணத்தை அந்த மனிதர் கூறினார்.

வித்தியாசாகரிடம் அப்போது பணமில்லை. இருப்பினும், ''கவலைப்படாதீங்க... இரண்டு நாளில் உங்களுக்குப் பணம் கிடைக்கும்... உங்களுடைய விலாசத்தைக் கொடுங்கள்,'' என்று பேப்பரில் குறித்துக் கொண்டார்.

இரண்டு நாளில் அந்த மனிதருக்குப் பணம் போய்ச் சேர்ந்தது. மகிழ்வு கொண்ட ஏழை கைமாறு கருதாது தனக்குதவிய அப்பெரியவர் யார் என அறிந்து கொள்ள எவ்வளவோ முயற்சித்தும் பயனற்று போய்விட்டது.

நன்றி தினமலர்!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உண்மை கதைகள் Empty Re: உண்மை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 4:14 pm

ஒரு சமயம் மாவீரன் நெப்போலியனின் வீரத்தை சோதிக்க விரும்பிய ஐரோப்பியத் தலைவர்கள், அவருக்கு ஒரு சோதனை வைத்தனர்.
அதன்படி ஓர் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் நெப்போலியன் உட்பட அவரது படைத் தளபதிகள் மற்றும் முக்கிய வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அனைவரும் தேநீர் அருந்தும் போது வெளியே ஒரு பீரங்கியை வெடிக்கச் செய்வது என்று ஏற்கனவே திட்டம் தீட்டப்பட்டிருந்தது. வெளியே பீரங்கி ஒன்று தயார் நிலையில் இருந்தது. உள்ளே நெப்போலியன் உட்பட அனைவரும் தேநீர்க் கோப்பைகளை எடுத்து தேநீரை அருந்தத் தொடங்கினர்.

அப்போது�

பலத்த ஓசையுடன் வெளியே இருந்த பீரங்கியை வெடிக்கச் செய்தனர். சற்றும் எதிர்பாராத அந்தச் சத்தத்தைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போன அனைவரும் பயத்தால் நடுங்கி, கையிலிருந்த தேநீர்க் கோப்பைகளைக் கீழே போட்டு விட்டனர்.
ஆனால் �

நெப்போலியன் திடுக்கிடவே இல்லை. மிகவும் இயல்பாக இருந்த அவர் தேநீரைச் சுவைத்தபடி, ''அங்கு என்ன சத்தம்?'' என்று மட்டும் கேட்டார். அவரது மன உறுதியைக் கண்ட ஐரோப்பியத் தலைவர்கள் மெய்சிலிர்த்துப் போயினர்.

நன்றி தினமலர்!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உண்மை கதைகள் Empty Re: உண்மை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 4:16 pm

ஒரு சமயம் புத்தரும், அவருடைய சீடர்களும் காட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு திருடன் அங்கு வந்து ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு ஓடினான். அப்போது அவனது கால், புத்தரின் காலில் பட்டு இடறியது.

புத்தர் விழித்துக் கொண்டார். இடறியதால் சற்று தடுமாறிய அந்தத் திருடன், சற்று சமாளித்துவிட்டு வேகமாக ஓடினான். அவன் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு ஓடுவதைப் பார்த்தார் புத்தர்.
உடனே தன் அருகில் படுத்திருந்த ஒரு சீடனைத் தட்டி எழுப்பினார். பிறகு துணி மூட்டையிலிருந்து ஓர் அழகிய கிண்ணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

''யாரோ ஒருவன் நம்மிடமிருந்த ஓட்டைக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறான். பாவம்... அந்தக் கிண்ணம் அவனுக்குப் பயன்படாது. நீ வேகமாக ஓடிச் சென்று இந்தப் புதிய கிண்ணத்தை அவனிடம் கொடுத்து விட்டு வா. இதோ... இந்தப் பக்கம்தான் அவன் ஓடினான். விரைந்து ஓடு,'' என்றார் புத்தர்.

அவர் காட்டிய திசையில் சீடன் ஓடினான். நீண்ட நேரம் ஓடிய பின் திருடனைப் பிடித்தான்.
''அன்பனே! சற்று நில்! நீ தூக்கிக் கொண்டு ஓடி வந்தது ஓட்டைக் கிண்ணம். அது எதற்கும் பயன்படாது. அதற்குப் பதில் இந்தப் புதுக் கிண்ணத்தை வைத்துக் கொள்.

என் குருநாதர்தான் இந்த விஷயத்தை உன்னிடம் சொல்லி இந்தக் கிண்ணத்தை கொடுத்துவிட்டு வரச் சொன்னார்!'' என்று சொல்லி விட்டுக் கிண்ணத்தை அவன் கையில் திணித்தான்.
திருடனோ நெகிழ்ந்து விட்டான்.

அவன் கண்களில் நீர் திரண்டது. புத்தரின் அன்பு அவனைத் தடுமாற வைத்தது.அவன் சீடனுடன் நடந்து புத்தரை வந்தடைந்தான்.
''என்னை மன்னித்து விடுங்கள்!'' என்று கூறி அப்படியே அவர் கால்களில் விழுந்தான்.
புத்தர் அவனை வாஞ்சையோடு அள்ளி அணைத்தார்.

அப்போதே அவனும் அவரது சீடர்களில் ஒருவனாகிவிட்டான்.
அன்பு, மன்னிப்பு என்ற இந்த இரண்டு குணங்கள் மனிதர்களை எப்படி மாற்றிவிடுகிறது பார்த்தீர்களா?

நன்றி தினமலர்!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உண்மை கதைகள் Empty Re: உண்மை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 4:18 pm

இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று போற்றப்பட்டவர் சர்தார் வல்லபாய் படேல். அவர் 1911ம் ஆண்டு லண்டனில் பாரிஸ்டர் படிப்பு படித்துக் கொண்டிருந்தார். அப்போது தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. அதனால், அவர் பாடங்களைத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில், சற்றும் எதிர்பாராத விதமாக அவரது ஒரு காலில் பெரிய காயம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு சாதாரண வைத்தியம் செய்தார். ஆனால், காயம் குணமாகவில்லை. அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்குக் காயம் பெரிதாகிவிட்டது. அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனாலும், காயம் குணமாகவில்லை.

இரண்டாம் முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் அந்தக் காயம் குணமாகவில்லை. மேலும், காயத்தில் சீழ் பிடித்து படேலுக்குப் பெரும் உபாதை கொடுத்தது. அந்தக் காயம் டாக்டர்களுக்கும் சவாலாக இருந்தது. இருந்தாலும், அவருக்கு மூன்றாம் முறையாக அறுவை சிகிச்சை செய்துவிட முடிவு செய்தனர்.

அப்போது ஒரு டாக்டர் வல்லபாய் படேலிடம், ''மூன்றாவதாக ஓர் ஆபரேஷன் செய்தால் காயம் நிச்சயம் குணமாகிவிடும். ஆனால், அந்த ஆபரேஷனை மயக்க மருந்து கொடுக்காமல்தான் செய்ய வேண்டும். அதைத்தான் எப்படிச் செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்,'' என்றார்.

அதற்கு வல்லபாய் படேல், ''இதற்கு ஏன் தாங்கள் யோசிக்க வேண்டும்? அந்தக் கவலையே தங்களுக்கு வேண்டாம். எவ்வளவு பெரிய வலியாக இருந்தாலும் நான் பொறுத்துக் கொள்வேன். நீங்கள் தாராளமாக மயக்க மருந்து கொடுக்காமலேயே எனக்கு ஆபரேஷன் செய்யலாம்!'' என்றார்.

அவரது மன உறுதியைக் கண்டு டாக்டர்களே திகைத்தனர். பின்னர் அவருக்கு மயக்க மருந்து கொடுக்காமலேயே அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். பட்டேல் இரும்பு மனம் படைத்தவர் என்பது புரிகிறதா?

நன்றி தினமலர்!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உண்மை கதைகள் Empty Re: உண்மை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 4:19 pm

இந்திய சுதந்திரப் போராட்ட காலம்.

டில்லி பார்லிமென்டில் வெடிகுண்டு வீசியதற்காகப் புரட்சி வீரர்களான பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று இளைஞர்களையும் ஆங்கிலேய அரசு கைது செய்தது. டில்லி செஷன்ஸ் நீதிமன்றம் அவர்கள் மூவருக்கும் மரண தண்டனை விதித்தது. வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, பகத்சிங்கின் தாயைச் சந்தித்த வெள்ளை அதிகாரிகள், ''ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுங்கள், உங்கள் மகனை விட்டுவிடுகிறோம்,'' என்றனர்.

அதற்குப் பகத்சிங்கின் தாய், ''என் மகனுக்கு மரண தண்டனை கிடைத்தாலும் நான் அஞ்ச மாட்டேன். உங்களிடம் மன்னிப்புக்கேட்பது என்பது பெரும் கோழைத்தனம்,'' என்றார்.
அவருடைய நாட்டுப்பற்றுடைய பேச்சைக் கேட்ட ஆங்கிலேய அதிகாரிகள் ஒரு கணம் ஆடிப்போய் விட்டனர். அதன்பிறகு மார்ச் 23, 1931ல் லாகூர் சிறையில் (தற்போது பாகிஸ்தானில் உள்ள நகரம்) மாலை ஏழு மணிக்கு, பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

நன்றி தினமலர்!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உண்மை கதைகள் Empty Re: உண்மை கதைகள்

Post by ஸ்ரீராம் Thu Dec 05, 2013 4:33 pm

கதைகள் அனைத்தும் அருமை இனியவன் அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உண்மை கதைகள் Empty Re: உண்மை கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum