தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாழ்வின் மொழி

View previous topic View next topic Go down

வாழ்வின் மொழி Empty வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 3:52 pm

சிரமங்களுக்கும் சிக்கல்களுக்கும் நடுவே வாழ்வை ரசிப்பதற்கான காரணங்களை யாரெல்லாம் கண்டுணர்கிறார்களோ, அவர்களின் உறவும் உற்ற துணையும் வாழ்வெல்லாம் உடன் வருமாறு உறுதி செய்து கொள்ளுங்கள். 

வாழ்க்கை பற்றிய வருத்தமும் விரக்தியும் எங்கும் பரவச் செய்வதால் எந்தப் பயனும் கிடையாது. இதை உங்கள் வாழ்வின் முக்கியமான அம்சமாகக் கைக்கொள்ளுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 3:53 pm

::::: சில கேள்விகள் ! தினமும் பதில் கொடுங்கள் ! ::::::

ஒவ்வொரு நாளும் நிதானித்து இதற்கான பதிலை பூர்த்தி செய்யுங்கள் ! நீங்கள் அனு தினமும் உங்களிடம் கேட்கின்ற இந்த கேள்வி உங்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய பல விஷயங்களை கற்று தரும் .

1.எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் ?
2.எவ்வித செயல்களுக்கு நேரம் ஒதுக்குகிறோம் ?
3.எதை நாம் கற்று கொள்கிறோம் ? 
4.எந்த பாதையை தேர்ந்தெடுக்கிறோம் ?
5.எதில் மாற்றம் செய்தோம் ?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 3:54 pm

பொய் மூலம் நமக்குப் பணம், பதவி, இன்பம் போன்றவை கிடைக்கக்கூடும். ஆனால், நம்மையல்லவா தொலைத்துவிடுகிறோம்? நம் கௌரவத்தையல்லவா இழந்துவிடுகிறோம்? 

உண்மையாய் இருப்பதன் மூலம் நமக்குக் பொருள் நட்டங்கள் கூட ஏற்படலாம். ஆனால், நம் கௌரவமும், அமைதியும் நிலைபெறுமே! பொய்யால் வந்த லாபம் லாபமே அல்ல. மெய்யால் வந்த நட்டம் நட்டமே அல்ல. நமக்கு, நம் ஆன்மாவைக் காட்டிலும் அரிதானவொன்று இருக்க முடியுமா? இந்த வாக்கியத்தின் ஆழத்தைப் புரிந்துகொண்டால், நாம் இயல்பாகவே உண்மையாக இருக்கமாட்டோமா?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 3:55 pm

எந்த ஒரு விஷயத்திற்கும் துரிதமான முடிவு எடுக்கும் முன்னே , சிலநேரம் மௌனமாய் நிதானித்துக்கொள்ளுங்கள் . ஒரு நொடி தனிமை நமக்கு எத்தனையோ விஷயங்களை உணர்த்திவிடும் . தீர்க்கமாய் , மனநிறைவுடன் செயல்படுதலே என்றும் சிறந்தது .
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 3:56 pm

பணத்தின் அருமையை உணர்ந்திருப்பது என்பது செலவே செய்யாமல் சேமித்து மட்டும் வைப்பது என்று அர்த்தம் அல்ல. 

ஒரு பொருளை அதன் சரியான விலையில் வாங்குவது, ஆசைப்படுவதையெல்லாம் வாங்கிக் கொண்டிருக்காமல் தேவைப்படுபவற்றை மட்டும் வாங்குவது, திட்டமிட்டு செலவு செய்வது என்று இதற்கு இலக்கணம் வகுத்துக்கொண்டு போகலாம்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 3:57 pm

ஒரு சூழ்நிலையில், நாம் தவறாக இருக்கலாம். அல்லது, விதியின் சூழ்ச்சியால் நாம் தவறு செய்ததாகக் காணப்படலாம். அப்போதும் உண்மையாய் இருத்தல் என்னும் நமது ஒரே உரிமையைத்தான் நாம் மேற்கொள்ள வேண்டும். 

உண்மையை பேச சந்தர்ப்பம் கிடைக்கும்போது நாம் தவறவிடக் கூடாது. அதே சமயம், பேசாமல் இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். உண்மை, பேசப்பட வேண்டும்தான். ஆனால், சில நேரங்களில், மௌனம், உண்மையை இன்னும் வலுவாக முழக்குகிறது!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 3:58 pm

நம்மைப் பற்றி பிறர் சிறப்பாய் பேசவேண்டுமென்று நாம் விரும்புகின்றோம். மற்றவர் நம்மை நல்லவிதமாய் நம் எதிரிலோ அல்லது பிறரிடமோ பேசுவதைக் கேட்கும்போது மகிழ்கின்றோம். 

பிறர் நம்முடைய குறைபாடுகளைச் சுட்டும் போது அதே மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறோமா என்றால் இல்லை. குறைந்த பட்சம் சாதாரணமாகவாவது அவற்றை ஏற்று சரிசெய்ய முற்படுகின்றோமா என்றால் அது சொல்பவரைப் பொறுத்தும், சொல்லப்படும் விஷயத்தைப் பொறுத்தும் அமைகிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 4:00 pm

மனிதனின் மனம் கடுகுப்பொட்டலம் போன்றது. அந்தப் பொட்டலம் கிழிந்து கடுகு நாலாபுறங்களிலும் ஓடிவிட்டால் அதை ஒன்றுசேர்ப்பது சிரமம். அதுபோல, மனம் உலகவிஷயங்களில் சிதறத் தொடங்கினால் அதைக் குவித்து ஒருமுகப்படுத்துவது சுலபமானதல்ல.

சூரிய உதயத்திற்கு முன்னரே பணிகளைத் தொடங்கினால், அன்றைய பணிகள் யாவும் நன்றாக நடைபெறும். அதுபோல, சிறுவயதிலேயே ஆன்மிக விஷயங்களைத் தெரிந்து கொண்டால் அது முதுமை வரை துணைநிற்கும்.

ஒளியை உணர்பவன் இருளையும் உணர்கிறான். பாவத்தைப் பற்றித் தெரிந்தவனுக்குப் புண்ணியமும் இன்னதென்று தெரிந்திருக்கும். குணத்தைப் பற்றி அறிந்தவன், குற்றத்தைப் பற்றியும் அறிந்திருப்பான்.

பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் கனத்தினால் தாழ்ந்து வளையும். அதுபோல நீங்கள் பெருமை மிக்கவராக வாழவேண்டுமானால் அடக்கமும் பொறுமையும் தேவை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 4:01 pm

சிரமங்களுக்கும் சிக்கல்களுக்கும் நடுவே வாழ்வை ரசிப்பதற்கான காரணங்களை யாரெல்லாம் கண்டுணர்கிறார்களோ, அவர்களின் உறவும் உற்ற துணையும் வாழ்வெல்லாம் உடன் வருமாறு உறுதி செய்து கொள்ளுங்கள். 

வாழ்க்கை பற்றிய வருத்தமும் விரக்தியும் எங்கும் பரவச் செய்வதால் எந்தப் பயனும் கிடையாது. இதை உங்கள் வாழ்வின் முக்கியமான அம்சமாகக் கைக்கொள்ளுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 4:01 pm

பெற்றோரின் கோபத்தால் உள்ளொடுங்கி நடைப்பிணங்களாக வாழ்கின்றன பல குழந்தைகள்.

உங்களிடம் ஒருவர் கடுமையாக
கோபப்படுகிறார். அந்த நேரம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று யோசித்துப்பாருங்கள்? பதட்டமாகி படபடப்பில் ஒன்றும் ஓடாமல் செயலற்று போய்விடுகிறீர்கள்.

கோபம் என்பது விஷம். விஷம் என்ன செய்யும் ஒருவரை முற்றிலுமாக கொன்றுவிடும். பிறகேன் கோபப்படுகிறார்கள்? கோபம் விஷம் என்பது ஏன் தெரியவில்லை? கோபம் விஷம்தான். ஆனால் ஸ்லோ பாய்சன் அதாவது மெல்ல கொல்லும் விஷம். அதனால்தான் நாம் கொடுத்தது விஷமென்றே தெரியவில்லை.

வீட்டில் எல்லோரும் உங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்பது தவிர, கோபத்தால் நீங்கள் சம்பாதித்தது என்ன?

நீங்கள் எதற்காக கோபப்பட்டீர்களோ, அதெல்லாம் அதன் பிறகு நீங்கள் நினைத்தது போல் மாறிவிட்டதா என்ன? இத்தனை வருடத்தில் எதுவும் மாறவில்லை என்பதிலிருந்தே தெரியவில்லையா! கோபத்தால் எந்த விஷயத்தையும் மாற்றிவிட முடியாது என்று.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 4:02 pm

மிகுதியான ஆனந்தத்தை உணர்வதற்குத் தேவை பெரும் துயரம் தான்--- 

இல்லையெனில் நாம் ஆனந்தமாய் இருப்பதை எப்படி உணர்வோம் ???

ஆதலால் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு நம் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்போம்.. 


- நல்லதோர் வீணை செய்தே
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 4:03 pm

உதடுகளை விரியுங்கள்
புன்னகை புரியுங்கள்
சிரிப்புக்கு அது தான்
தாய் வீடு.

மகிழ்ச்சிக்கு அது தான்
மறு வீடு.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 4:03 pm

நாம் மறக்க வேண்டிய ஒன்று இருகின்றது அது கடந்த காலம் 
நாம் யோசிக்க கூடாத விஷயம் ஒன்று அது வருங்காலம் 
நாம் இப்பொழுது நினைக்க வேண்டியது நிகற்காலம் ... 

கடந்தகாலம் மறப்போம் , வருங்காலத்தை நினைத்து அஞ்சுவதை தவிர்ப்போம் ,இந்த நாள் இந்த நிமிடம் உயிரோடு இருக்கிறோம் இதை கொண்டாடுவோம் !
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 4:04 pm

ஒரு பொழுதும் வாழ்க்கையில்,

நம்பிக்கை, 
வாக்கு, 
சுற்றம், 
இதயம் 

இந்த நான்கையும் 
முறித்துக் கொள்ள முயலாதீர்கள்.

ஏனெனில்,
அவைகளனைத்தும் உடையும் பொழுது
ஒலி எழுப்பாது போனாலும்,
பெரும் வலியை ஏற்படுத்தும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 4:05 pm

மூன்று என்ற சொல்லினிலே...


மிகக் கடினமானவை மூன்றுண்டு:

1. இரகசியத்தை காப்பது.

2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.

3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.



நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்:

1. இதயத்தால் உணர்தல்.

2. சொற்களால் தெரிவித்தல்.

3. பதிலுக்கு உதவி செய்தல்.



மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு:

1. சென்றதை மறப்பது.

2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.

3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.



இழப்பு மூன்று வகையிலுண்டு:

1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.

2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.

3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.



உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்:

1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.

2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.

3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 4:06 pm

உண்மையாக இருந்தாலுங்கூட முரட்டுத்தனமாக எதையும் சொல்லக் கூடாது. முரட்டுத் தனமாகப் பேசுவதால் உன்னுடைய இயல்பும் இனிமையற்றதாகி முரட்டுத்தனமாகி விடுகிறது. 

வாக்குக் கட்டுப்பாடும் இனிமையும் உன்னிடமிருந்து விடைபெற்று விடுகின்றன.► நீ எதைச்செய்தாலும் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் உரிய இடத்தைக் கொடுக்க வேண்டும். அவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்க வேண்டும். மற்றவர்களுக்கும் சுதந்திரம் கொடுத்துப் பணிகளில் ஈடுபடுத்தி, நாம் சற்று தள்ளி நின்று தவறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 4:07 pm

மிருகங்களுக்கு கூட அன்பு, பாசம் நேசம் இருக்குது... ஆனால் மனிதர்கள் நம்மிடம் இருக்கிறதா?

பக்கத்தில இருக்கிறவங்க கிட்ட அன்பை காட்டுங்க... சிறு புன்னகை போதும் .... தினமும் காலைல எழுந்ததும் உங்க மனைவியையோ, பிள்ளைகளையோ அல்லது பிள்ளைகள் அப்பா, அம்மாவையோ, சகோதர அல்லது சகோதரியையோ பார்த்து புன்னகைத்து பழகிக் கொள்ளுங்கள்... அப்புறம் என்ன உங்கள் குடும்பம் மகிழ்ச்சி மிகுந்த பல்கலை கழகமாகத் தான் இருக்கும்...

(பின் குறிப்பு: முதல்ல உங்களுக்கு ஏதும் ஆயிட்டோனு.. ஆமாம் நீங்க நினைக்கிற மாதிரி மரை கழண்டு விட்டதோனு கூட நினைப்பாங்க... ஆனால் போகப் போக அதுவே பழகிப்போயிடும். Be HAPPY.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 4:07 pm

ஆனந்தத்தில் திளைக்கும்போதும், அவமானப்படும்போதும், 

புகழப் படும்போதும், வாழ்வின் உச்சத்தில் இருக்கும்போதும் 

அதிகாரங்கள் நிறைந்த பதவியை அலங்கரிக்கும் போதும், 

அதிர்ச்சியூட்டும் தகவல்களை கேட்கும்போதும், 

எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்போதும் 

எப்போதும், எந்நேரமும், நமக்குத் தேவை 

நிதானம், கவனம், எச்சரிக்கை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 4:08 pm

வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு 
அடிப்படை அம்சங்கள் அவசியம். 
அவை 

"இலக்கு நிர்ணயம்," 
"ஆக்கபூர்வமான சிந்தனை," 
"கற்பனைக் கண்ணோட்டம்," 
"நம்பிக்கை." 
என நான்காகும். 

- ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 4:09 pm

ஓடுதளம் சிறப்பாக இருந்தால் ஒரு விமானத்தின் புறப்பாடு ஒழுங்காக அமையும். அது சரியில்லையெனில் புறப்பாட்டில் பாதிப்புக்கள் ஏற்படும். 

அதுபோலத்தான் மனோபாவமும். மனோபாவம் ஒழுங்காகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் அமையுமானால் செயல்பாடுகளும் சிறப்பாக அமையும்.


https://www.facebook.com/ரிலாக்ஸ் ப்ளீஸ்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் மொழி Empty Re: வாழ்வின் மொழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum