தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆன்மிக சிந்தனை துளிகள்

View previous topic View next topic Go down

ஆன்மிக சிந்தனை துளிகள் Empty ஆன்மிக சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Tue Dec 10, 2013 10:37 am

படித்தால் மட்டும் போதுமா?

* உடலை அடக்கி, நாவை அடக்கி, மனதையும் அடக்கியுள்ள ஞானிகளே உண்மையில் அடக்கம் உடையவர்கள் ஆவர்.

* தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை தவறுதலான வழியில் பயன்படுத்தி தீங்கு செய்பவன் நிச்சயம் வாழ மாட்டான்.
* பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாக மட்டுமே பகையை வெல்ல முடியும்.
* அறிவும், கல்வியும் மட்டுமே பாராட்டத்தக்கது என்று கருதுபவன் எந்நாளும் தனித்தே தான் வாழ நேரிடும்.
* அநீதி செய்து மற்றவர்களுக்கு துன்பம் இழைப்பவர்கள் வென்றாக சரித்திரம் இல்லை. அவர்கள் தோல்வியைத் தழுவுவது உறுதி.
* நல்லவழியில் செம்மையாக நிர்வகிக்கப்பட்ட மனமே நமக்கு என்றென்றும் உதவி செய்ய தகுதி உடையதாக இருக்கும்.
* நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்கு நன்மையையும், ஆறுதலையும் தருவதாக அமையவேண்டும். ஆனால், மாறாக துன்பத்தை அல்லவா நமக்குத் தருகின்றன.
* ஒருவரின் சொல்லும், செயலும் ஒன்றாக இருக்குமானால் அவர் அழகும், சுகந்தமும் நிறைந்த வண்ண மலரைப் போல எல்லோருக்கும் பயன்உடைய மனிதராக இருப்பார்.

-புத்தர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக சிந்தனை துளிகள் Empty Re: ஆன்மிக சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Tue Dec 10, 2013 10:42 am

தானே தனக்குத் தலைவன்

* சத்தியத்தையே தீபமாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். அடைக்கலமாக ஒருவன் சத்தியத்தை சரணாகதி அடைந்து விட்டால், அதன் பின் வேறொன்றையும் சரணடைய வேண்டியதில்லை.
* ஒருவன் தானே தனக்குத் தலைவன். வேறு யார் தலைவனாக இருக்க முடியும்? தன்னை நன்றாக அடக்கப்பழகிக் கொண்டவன் பெறுவதற்கு அரிய நல்லபேறுகளை அடையத் தகுதியுடைவனாகிறான்.
* கரை செம்மையாக வேயப்பட்டிருந்தால் வீட்டில் மழைநீர் இறங்குவதில்லை. அதுபோல, நன்கு நெறிப்படுத்தப்பட்ட மனதில் வீணான ஆசைகள் புகுவதில்லை.
* மனிதனின் வாழ்க்கையை அவனுடைய மனோதர்மமே நிர்ணயம் செய்கிறது. நல்ல எண்ணத்தையே சிந்திக்கும் ஒருவனை நிழல்போல இன்பம் தொடர்ந்து கொண்டிருக்கும்.
* நல்ல எண்ணங்களால் தன் உள்ளத்தை தூய்மையாக்கிய நிலையில் மனமானது, ஆழமான,அமைதியான ஏரியைப் போல் தூய்மையும், நிம்மதியும் பெற்றுவிடும்.
* மடிமை என்னும் சோம்பலில் வாழவேண்டாம். மூடர்கள் மட்டுமே சோம்பலில் மூழ்கி விடுவார்கள்.
* பரிசுத்தமான ஒழுக்கம் மனிதனை அபாயங்களில் இருந்தும், நெருக்கடியான சூழ்நிலைகளில் இருந்தும் பாதுகாக்கும். வாழ்வில் உயர்நிலைகளை அடைய ஏணிபோல தூயஒழுக்கம் உதவுகிறது.

புத்தர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக சிந்தனை துளிகள் Empty Re: ஆன்மிக சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Tue Dec 10, 2013 11:30 am

அமைதியாக செயலாற்று!

* சுயலாபத்திற்காக பிறருக்குத் துன்பம் விளைவிப்பவர்கள் வெறுப்பு என்னும் வலையில் சிக்கித் தவிப்பர்.
* கருமியை ஈகையாலும், பொய்யரை உண்மையாலும் வெற்றி கொள்ள முயலுங்கள்.
* வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அமைதியுடன் செயலாற்றிக் கொண்டிருங்கள்.
* மிதமிஞ்சிய சுகபோகம் தேவையில்லை. கொடிய விரதத்தையும் கடைபிடிக்க வேண்டியதில்லை.
* நூறு ஆண்டுகள் ஒழுங்கீனமாக வாழ்வதை விட, ஒழுக்கத்துடன் ஒருநாள் வாழ்வது சிறந்தது.
* சாத்திரங்களை படித்து ஒப்புவிப்பதை விட அதில் ஒன்றையாவது கடைபிடித்து வாழ்வது நல்லது.
* மனத்தூய்மையுடன் வாழ்பவன் இம்மைக்கும், மறுமைக்கும் நன்மையைத் தேடிக் கொள்கிறான்.
* மெய்யைப் பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும் காண்பவன் வாழ்வில் கடைத்தேற முடியாது.
* பாவச் செயலில் மறந்தும் ஈடுபடுவது கூடாது. அது பழுத்து பயன் விளைக்கும்போது தாங்க முடியாத வேதனையை உண்டாக்கும்.
- புத்தர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக சிந்தனை துளிகள் Empty Re: ஆன்மிக சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Tue Dec 10, 2013 11:32 am

ஒவ்வொரு கணமும் முக்கியம்

* உன் வாழ்க்கை உன் குடும்பத்துக்கு மட்டுமின்றி, நீ வாழும் சமூகத்திற்கும், உலகத்திற்கும் பயன் அளிப்பதாக இருக்கட்டும்.
* ஒருவர் சோம்பிக் கிடந்தாலும் சரி, அளவுக்கு மீறி ஆர்வம் கொண்டவராயினும் சரி.. அவர் உண்மையான ஆன்மிகவாழ்வு வாழ முடியாது.
* வாழ்வு என்பது ஒரு கணம் அன்று. ஒவ்வொரு கணமாய் வாழ வேண்டும். ஒவ்வொரு கணப்பொழுதிலும் முழுமையாக வாழ முயல வேண்டும்.
* மலர்களின் அழகில் ஈடுபடுங்கள். பறவைகளின் இனிய ஒலிக்கு காது கொடுங்கள். சூரியனின் அழகை கண்டு மகிழுங்கள். இயற்கையை நேசியுங்கள்.
* யாரையும் துன்புறுத்தக் கூடாது. பிறருக்கு உங்களால் இயன்ற நன்மைகளைச் செய்யுங்கள்.
* பொய், களவு, சூது, வாது போன்றவை தொடக்கத்தில் நன்மை அளித்தாலும் முடிவில் தீமையையே அளிக்கும்.
- புத்தர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக சிந்தனை துளிகள் Empty Re: ஆன்மிக சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Tue Dec 10, 2013 11:33 am

மனநிறைவுடன் வாழ்வோமே!

* நன்கு வேயப்பட்ட கூரைவீட்டில் மழைநீர் இறங்காது. அதுபோல நன்னெறியை பின்பற்றும் மனதில் தீய ஆசைகள் புகுவதில்லை.
* பொறாமை, பேராசை, தீய ஒழுக்கம் இவற்றைக் கொண்டவன் பேச்சாலும், உடல் அழகாலும் மட்டும் நல்லவனாக முடியாது.
* நாம் செய்த நன்மையும், தீமையும் நிழல் போல நம்மைத் தொடர்ந்து வருகின்றன.
* நல்லோரின் புகழ், காற்றில் நறுமணம் பரவுவது போல, நாலாபுறத்திலும் பரவி நிற்கும்.
* உதடுகளை அரண்மனைக் கதவு போல பாதுகாத்துக் கொள்ளுங்கள். வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் நன்மை தருவதாக மட்டுமே அமைய வேண்டும்.
* நம்பிக்கைக்கு உரியவரே நல்ல உறவினர். நோயற்ற வாழ்வே ஒருவன் அடைய வேண்டிய பாக்கியம். மனநிறைவே மிகப் பெரிய செல்வம்.
- புத்தர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக சிந்தனை துளிகள் Empty Re: ஆன்மிக சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Tue Dec 10, 2013 11:34 am


நன்மை செய்யுங்கள்

* பிறரிடம் தீய சொல் பேசுவது உனக்கு இன்பமாக இருந்தால், அவர்கள் திருப்பி தாக்குவதையும் இன்பமாகவே கொள்ள வேண்டும்.
* மூடனைப் பிறர் அழிக்க வேண்டியது இல்லை. அவன் தன்னைத் தானே அழித்து கொள்வான்.
* அறிவின்றித் தியானமில்லை. தியானமின்றி அறிவில்லை. அறிவும், தியானமும் ஒன்றிணைந்து விட்டால் அங்கே சாந்தம் குடியிருக்கும்.
* பழுத்த பழங்கள் மரத்திலிருந்து உதிர்வது போல மனிதர்களும் ஒருநாள் இறக்க வேண்டியவர்களே.
* சத்தியத்தை ஒளியாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். சத்தியமே வெற்றி தரும்.
* நீங்கள் யாரிடமும் அடைக்கலமாகாதீர்கள். நீங்களே உங்களுக்கு அடைக்கலமாக இருங்கள்.
* தீமையைத் தவிர்த்து நன்மை செய்யப் பழகுங்கள். இதனால் மனம் தூய்மை பெறும்.
- புத்தர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக சிந்தனை துளிகள் Empty Re: ஆன்மிக சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Tue Dec 10, 2013 11:34 am

நல்லதைப் பேசுங்கள்!

* அறிவின் முதற்படி செல்வத்தைப் புறக்கணிப்பதாகும். அன்பின் ஆரம்பம் செல்வத்தை பலருக்கும் கொடுத்து மகிழ்வதாகும்.
* செல்வம் உள்ள காலத்திலேயே தர்மம் செய்து விடுங்கள். இல்லாவிட்டால் அது நம்மை விட்டு விலகிச் சென்று விடும்.
* உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வெளிப்படுத்துங்கள். இல்லாவிட்டால் மவுனத்தைக் கடைபிடியுங்கள்.
* ஆயிரம் வீண்வார்த்தைகளை விட, கேட்பவர்களுக்கு இதம் தரும் ஒரு நல்ல வார்த்தை மேலானது.
* பயனில்லாத சொற்களைப் பேசுபவன் மணம் இல்லாத மலருக்கு ஒப்பானவன்.
* கேள்விப்பட்டதை எல்லாம் கண் மூடித்தனமாக நம்பி விடாதீர்கள். அதிலிருக்கும் உண்மையை அறிய முற்படுங்கள்.
* ஆயிரம் ஸ்லோகங்களை அர்த்தமில்லாமல் உச்சரிப்பதைக் காட்டிலும், தர்மசிந்தனையூட்டும் ஒரு பாடலை பாடுவது அமைதியைக் கொடுக்கும்.
* விடுதலைக்குரிய வழியை அடைய பிறரை எதிர்பார்க்காதீர்கள். அது உங்களிடமே உள்ளது.
- புத்தர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக சிந்தனை துளிகள் Empty Re: ஆன்மிக சிந்தனை துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum