தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"வாசித்ததில் நேசித்தது "

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:10 am

நாம் ஒரு வேலை செய்யும் போது அது கடினமாக இருந்தாலும்கூட எம் மனதுக்கு பிடித்தால் விருப்புடனே இலகுவாக செய்வோம். அதுவே மாறாக இருந்தால் எமக்கு கடினமாக இருக்கும்.இதே போலத்தான் யாரையாவது பிடித்து
போனால் அவர்கள் குறை கூட கண்ணுக்குத் தெரியாது. பிடிக்கவில்லை என்றால் சிறு குறை கூட பெரிதாகி விடும். மனம் ஒரு மா பெரும் சக்தி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:11 am

பயம்
எம் மனதைப் பலவீனப்படுத்தி நொருங்க வைக்கும் பெரும் எதிரி. இது மனதில் குழப்பம் ஏற்படுத்தி எதிலும் துணிந்து ஒரு முடிவு எடுக்க விடாது. என்ன
ஆகுமோ ஏது ஆகுமோ என மனம் சலித்தபடி இருக்கும். கோவில் போனால் கூட இறைவனை வழிபடும் போது அட அந்த சாமிக்கு ஒன்னும் பண்ணலை கோபிக்கும் என பயம்.
எதிர்காலம் நினைத்து என்னாகுமோ பயம் பக்கத்தில்
நோய் வந்தால் நோய் வரப்போகுதே பயம்.நாம்
செய்யும் செயல்களை பிறர் இகழ்வர்களோ பயம்
எனவே பயப்பட்டு என்ன ஆகப் போகிறது .
நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.எது வந்தாலும்
எதிர்த்து போராடுவோம். துணிவு நம்பிக்கை இரு
கரமாக இருக்கட்டும் . பயம் எங்களை விட்டு போகும் . அச்சம் இல்லை அச்சம் இல்லை என பாரதியார் பாடலைப்பாடி பார்ப்போம் வெற்றி
உங்கள் கைகளில்தான்.எண்ணம்தான் வாழ்வு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:12 am

மனம் ஒரு விசித்திரமானது சில தவறுகளை ஏற்றுக்கொள்ளாது. அதற்க்கு ஏதோவொரு ஒரு நொண்டிச் சாட்டு சொல்லி அதை செய்வதில் ஆர்வம் காட்டும் . ஆனாலும் எம் ஆழ் மனதுக்கு புரியும் சரி பிழை. இந்த ஏமாற்றும் மனதில் தப்புவதும் ஒரு போராட்டம் ஆகாமல் இருந்தால் சரிதான்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:13 am

இரக்கம் உள்ள இதயம் சிந்தனை ஆற்றல் படைத்த
மூளை வேலை செய்யக் கூடிய கைகள் ஆகிய
இந்த மூன்றும் நமக்குத் தேவை. வலிமை நிறைந்த ஒரு களஞ்சியமாக உன்னை உருவாக்கிக்கொள். முதலில் உலக மக்களின்
துன்பங்களைக் குறித்து நீ வருந்து .......
வெறுப்புணர்ச்சி கோபம் ஆகியவை அடுக்கடுக்காகச்
சுமத்தப்பட்டு வருகின்றன. அது காரணமகா
நல்ல காரியங்கள் தொடர்ந்து பல காலமாக நிறை
வெற்றப்படாமல் போயிருக்கின்றன. மாறாகத் தீமையே விளைவிக்கப்பட்டிருக்கிறது. நீ தூய்மை
உள்ளவனாக இருந்தால் வலிமை உள்ளவனாக
இருந்தால் நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமான வனாவாய்

சுவாமி விவேகானந்தர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:13 am

எமக்கு சில விடயங்கள் பிடிக்கும் சில பிடிக்காமல்
விடும். எமக்கு பிடிக்காத விடயங்களை பிறர் எமக்கு
செய்யக் கூடாது என நாம் எதிர்பார்ப்பது போல
நாமும் மற்றவர்களுக்கு அதை செய்யாமல் விடுவதே சாலச்சிறந்தது அது கூட நன்னெறிக்கு ஒரு பாதையே
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:14 am

மரணம் வரும் வரையிலும் வேலை செய். நான் உன்னுடன் இருக்கிறேன். நான் இறந்த பிறகும்என்
ஆவி உன்னுடன் இருந்து வேலை செய்யும். இந்த
வாழ்க்கை வருவதும் போவதுமாக இருக்கிறது செல்வம் புகழ் இன்பங்கள் இவையெல்லாம் ஏதோவொரு சில நாட்களுக்குத்தான் நிலைத்திருக்கப் போகின்றன. உலகப் பற்று நிறைந்த ஒரு புழுவைப் போல இறந்து போவதை
விட உண்மையை எடுத்துப் போதித்துக்கொண்டே
கடமை என்னும் களத்திலே உயிரை விடுவது
மிக மிக மேலானது முனேறிச் செல்

சுவாமி விவேகானந்தர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:15 am

உங்கள் மனதில் முடிந்த அளவுக்கு அழகு செய்யுங்கள் அதை மலர்களால் அலங்கரியுங்கள்
முதலில் உங்களுடைய மனம் அழகு மயமாகட்டும்
நறுமணம் நிறைந்த இந்த மனத்தோட்டத்தின்
வழியாக மட்டும்தான் நீங்கள் எந்த மோதலும் இல்லாமல் மவுனமாக கடந்த நிலைக்குப் போக
முடியும்
மனம் உங்களுக்கு ஒரு உதவிக் கரம் காலை வாரி
விடும் தடை அல்ல. அது ஒரு தடையாக இருக்கும்
என்று நான் நம்பவில்லை. அதை எப்படிப் பயன்படுத்தி கொள்வது என்றுதான் உங்களுக்குத்
தெரியவில்லை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:15 am

நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை
பிறருக்கு உதவி புரிவதும் உலகிற்கு நன்மை
செய்வதாகும்......
நாம் ஏன் உலகிற்கு நன்மை செய்ய வேண்டும்
மேலோட்டமாக உலகிற்கு நன்மை செய்வதனால்
உண்மையில் நமக்கு நாமேதான் உதவி செய்து
கொள்கிறோம்

சுவாமி விவேகானந்தர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:16 am

செரிப்பதற்குக் கடினமனா உணவை வயிறு புடைக்க
உண்ட பிறகு மனதை கட்டுப்படுத்துவது சிரமமான
செயல் என்பது நீங்கள் அறிந்ததுதான். மனம் எந்நேரமும் ஏதாவது ஒன்றினை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும். உணர்ச்சிகளை தூண்டுகிற
சில வகை உணவுகள் உள்ளன. இவற்றை உண்டால் மனத்தைக் அடக்க இயலாது. என்பதை
அறியலாம் அளவுக்கு அதிககமாக மதுவையோ
வேறு ஏதேனும் போதை தரும் மதுபான வகைகளையோ அருந்தியவன் மனத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை என்பதைக் காண்கிறான். அவனிடமிருந்து கட்டுக் கடங்காமல்
மனம் நழுவி ஓடுகிறது

சொன்னவர் விவேகானந்தர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:16 am

அன்பு ஒரு உறவாக உருவாகி விடக்கூடாது. அது
குறுகிப் போகாமல் விரிந்து பரவ வேண்டும். அன்பு
உங்களுடைய அடிப்படைப் பண்பாக மலர வேண்டும்.
உங்களுடைய இருப்பாக உங்களுடைய கதிர் வீச்சாக
மாற வேண்டும். தனது ஒளிக் கதிர்களை சூரியன்
ஏதோ குறிப்பிட்ட ஒன்றுக்காக மட்டுமலாமல் எல்லாவருக்குமாக எங்கும் பாய்ச்சுவது போல
தியானமும் அன்புக் கதிர்களை இது .இவர் என்ற
பாகுபாடில்லாமல் பாச்சுகிறது. முதலில் ஒருவரிடம்
தனக்கும் தனக்காகவும் உண்ணரப்படுகிறது.
என்பது உண்மைதான். அடுத்து எங்கும் அதன் கதிர்கள் பரவிப் பாய்கிறது. பிறகு நீங்கள் அன்பு காட்டுவது மனிதர்களிடம் மட்டுமல்ல மரங்களை
நேசிக்கிறிர்கள். பறவைகளிடம் அன்பைக் பொலிகிறிர்கள் உங்களிடம் அன்பே சுரக்கிறது நீங்களே அன்பு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:17 am

நாம் நாமாகவே......

அழகான உடை
மிடுக்கான நடை
ஆகா... உனைப் பார்க்க
அஜித் போலத்தான்
மெல்லிடை நெளிய
மெதுவாக அசைந்து வர
அந்த சிம்ரான்தான்...
அவர் போல..
இவர் போல
என்பதில்தான் எவ்வளவு
சந்தோசம்தான்...
நம்மை நம்மில்
ஏன் இந்த மாய வலை
நாம் நாமாகவே
இருந்து பார்ப்போமே
ஒரு முறைதான்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:18 am

ஒத்திவைப்பு

தினமும்தான் ஒரு
தீர்மானம்தான்
இன்று...இல்லை
நாளை...இப்படியே
காலங்கள்தான் நகரும்
அத்தனையும் ஒரு
புத்தகமாகவும் கூட
கட்டலாம் ஆனால்
தீர்மானங்கள் அனைத்தும்
திர்மனாமாக வே ...இந்த
ஒத்திவைப்பு நாடகம்
ஒரு நாள் நிறைவு
பெரும் போது
மூச்சு மட்டும் தன்
வாயைப்பொத்திக்
கொள்ளும் .......
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:18 am

ஒரு நாள் காலையில் நீங்கள் எழப்போவதில்லை.
ஒரு நாள் பால்க்காரன் உங்கள் கதவை தட்டப்
போகிறான். உங்கள் மனைவி குறட்டை விட்டுக்
கொண்டிருப்பாள்.ஆனால் நீங்கள் இருக்கப்போவதில்லை.ஒரு நாள் மரணம் வரும்.
அது உங்களைப் விழுத்ததுவதற்கு முன்பு நன்றாகச்
சிரயுங்கள். நேரம் இருக்கும் போதுதே வாய் விட்டு
சிரயுங்கள்.

எல்லா கேலிக் கூத்துக்களையும் பாருங்கள்.....
மறுபடியும் அதே தினம் ஆரம்பம் உங்கள் வாழ்க்கை
முழுவதும் ஒரே மாதிரியான விஷங்களை திரும்ப
திரும்ப செய்கிறிர்கள். மறுபடியும் நீங்கள் செருப்புக்குள் கால்களை திணித்துத் கொண்டு
குளியறைக்குள் ஓடுகிறீர்கள்...எதற்க்காக? பல் தேய்க்க ..குழாயில் குளிக்க...எதற்க்காக? எங்கே
போய்க்கொண்டிருக்கிறிர்கள். தயாராகி விட்டீர்கள்..
போவதற்கு இடமில்லை. ஆடை அணிந்து கொண்டு..
அலுவலகத்துக்கு பறக்கிறிகள்....எதற்க்காக?
நாளைக்கும் இதே கதையைத் தொடர்வதற்கு....?

இந்தக் கேலிக் கூதத்தையெல்லாம் பார்த்து நன்றாகச் சிரியுங்கள். தூக்கம் போன அதே
தருணத்திலேயேயே முதலில் சிரித்து விடுங்கள்
நாள் முழுதும் சந்தோசம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:19 am

சில நேரங்களில் தோல்வி அவமானம் ஏற்படலாம்.
இது இயற்க்கை. எவரும் எல்லாக் காலத்திலும்
எல்லாக் காரியங்ளிலும் வெற்றி பெற முடியாது.

தவறு செய்யாதவர்கள் ஒருவரும் இருக்க முடியாது
ஆனால் சிலர் செய்த தவறுகள் வெளிப்பட்டவுடன்
மற்றவர்கள் ஏதோ தவறு செய்யாதவர்கள் போல்
தவறு செய்தவர்ரை இகழ்கிறார்கள். இவர்கள்
செய்த தவறு வெளியே தெரியாது என்ற நம்பிக்கைதான் காரணம்.

யாருக்கும்தெரியாது யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்ற தவறான மன உறுதியுடன் தொடர்ந்து தவறுகளைக் செய்யக் கூடாது.அதற்குரிய
தண்டனையை நாம் அனுபவித்தே தீரவேண்டும்.
இதை யாராலும் மாற்ற முடியாது.

இவர்கள் செய்த தவருக்களுக்காத் தண்டனை
அனுபவிக்காவிட்டாலும் செய்யாத குற்றத்திற்காக
தண்டனை அனுபவிப்பார்கள்.

தீதும் நன்றும் பிறர் தர வாரது.....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:20 am

உலகில் எப்படி வாழ்ந்து மறைந்தோம் என்பதுதான்முக்கியம். எப்படியும் வாழலாம் என்ற கொள்கைகளை உதறிவிட்டு இப்படித்தான் வாழ்வேன்
என்று தர்ம நெறியில் வாழ ஆரம்பியுங்கள். எவ்வித
தீங்கும் உங்களுக்கு வாரது.எல்லாவற்றையும் விட
மன அமைதி அதனால் நோயில்லதா வாழ்க்கை
மிக மிக எளிதாக உங்களுக்கு கிடைக்கும்
ஒவ்வொரு தீய பழக்கதத்தையும் நன்கு படியுங்கள்.
அது எந்த அளவு நம்மிடம் உள்ளது என்று சிந்தியுங்கள். அவற்றை எப்படி விடுவது என்று
ஆராயுங்கள். முயற்சி செயுங்கள். எப்போதும்
வெற்றி உங்களுக்குத்தான். முதல் தவறு என நினைப்பதை மைனஸ் என போடுங்கள் அதை பிளஸ்
ஆக்கி பாருங்கள் உங்கள் வாழ்வில் எல்லாமே பிளஸ்தான்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:21 am

உங்கள் கோபங்களின் மையம் என்ன ஒரு கணம்
பாருங்கள். உங்கள் அளவுக்கு எல்லோரும் எல்லாவற்றையம் புரிந்து கொண்டு இருப்பார்கள்
என அர்த்தம் கொள்ளள் கூடாது உங்கள் இயலாமையும் ஆற்றாமையும் கோபமாக உருப்பெறுகிறது. நிதானமாக சிந்தித்தால் தவறுகள்
புரியும் . உன் கோபங்களால் உறவுகள் கூட விலகலாம். ஒரு நாள் அன்பாக வாழ்ந்து பார்
அதன் இனிமை உன்னை ஆட் கொள்ளும் .
வள்ளுவர் சொன்ன இனிய உளவா இன்னாத கூறல்............வாழ்ந்து பார் வாழ்க்கை ஒரு தடவையே....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:21 am

நிரந்திரமாக ஒரே விதமான மன நிலையோடு இருங்கள். என்ற போலியான சிந்தனையை நீங்கள் ஏற்ருக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்மல்ல. நீங்கள் மரணமடையும் போது
தான் அது சாத்தியம். நீங்கள் உயிரோடு இருக்கும்
போது சீதோஷ்ண நிலை மாறும் பருவ காலங்கள்
மாறும் குளிர் காலங்கள் மூலமாக கோடை காலங்கள்
மூலமாக மழைக் காலங்கள் நீங்கள் கற்றுக்கொள்ள
வேண்டும். உங்கள் நெஞ்சம் ஆடிப்பாட எல்லாப்
பருவங்களையும் நீங்கள் கடந்து வர வேண்டும்
இருத்தல் எப்போதுமே உங்களுக்கு எதிரானது
அல்ல என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து
கொண்டு அது எதைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொளுங்கள் அது கசப்பாககூட இருக்கலாம் ஆனால்
அது மருந்து ஆரம்பத்தில் அது உங்களுக்கு
இனிக்காமல் இருக்கலாம் மனிதனின் ஒரு உணர்வு
மட்டுமே கொடுத்திருக்க முடியாத ஏதோ ஒன்றை
அது உங்களுக்கு கொடுத்திருக்கிறது. என்று கடைசியில் கண்டு கொள்வீர்கள்.
ஆகையால் என்ன நடை பெற்றுக் கொண்டிருக்கிறதோ அது நல்லது. அலட்டி
கொள்ளாதீர்கள். இது அப்படியே இருக்கப்போவதில்லை இதுவும்கூட மாறும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:22 am

இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தும்
அழகானவைகள் அவசியமானவை இரசிக்கப்படும்
எம் கண்களைப் பொறுத்தே வேறுபடுகின்றன
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:23 am

ஆசைகள் எவ்வளவு விசித்திரமானது
ஒன்று நிறைவேற முன்பே
அடுத்ததற்கு கணக்கு போட ஆரம்பிக்கும்
தினவு எடுக்கும்போது சொறிய சொறிய
சுகம் இருப்பது போல
முடிவு.........
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:24 am

ஒரு குரு என்பவர்எப்போதுமேமுரண்பட்டவர் அல்ல. உங்கள் மனதைக் காதலியுங்கள். உடலுக்கு மரியாதை கொடுங்கள். உங்கள் மனதிடம் நன்றியுணர்வோடு
நடந்து கொளுங்கள்.என்றெல்லாம் உங்களுக்கு
கற்றுக் கொடுப்பதுப் யார்? அது அபாரமானது
அற்புதமான செயல்படுவது அதுதான் உங்களுக்கும்
மனத்துக்கும் இடையே தோழமையை உருவாக்கும்
இந்த தோழமை உறவு ஆழமடைந்தால் தியானத்தின்
போதெல்லாம் மனம் தொந்தரவு செய்யாது . தியானம்
மனதிற்கு எதிரானது அல்ல. உண்மையில் இது மனதின் பூரணத்துவம். இது மனதின் மறுமலர்ச்சி.
மனதிற்கு அப்பால் செல்வது என்பதுஅதற்கு விரோதமான போக்கு அல்ல.மாறாக அது ஒரு
தோழமையான பரிணாம வளர்ச்சி.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:24 am

வாய்ப்புக்கள் நம் வாசல் கதவை
பல முறை தட்டிப் பார்க்கின்றன
எட்டிப் பார்த்து அதை அடையாளம்
கண்டு கொண்டு ஏறி விட்டால்
வெற்றிக் கனி பறிக்க உன் முயற்சிகள் போதும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:25 am

உனக்கு கீழ் உள்ளோரை ஒப்பிட்டு
பார்க்கும்போது உன் மனம்
திருப்தி அடைகிறது மேல்
உள்ளோரை பார்க்கும்போது
அதிருப்தி அடைகிறது
ஒப்பீடு உள்ளவரை அமைதி இல்லை
நாம் நாமாகவே இருந்து கொள்வோம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:25 am

எந்தப் பிரச்சனைக்கும் ஒரு
தீர்வு இருக்கும் அதை
விட்டு விலகி நின்று பார்
விடை கிடைக்கும் நீ
கலங்கும் போது அது பெரிதாகும்
தெளியும் போது அது சிறிதாகும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:26 am

முள்ளும் புதரும் நிரம்பிய காட்டில் வெறுங் காலுடன்
நடப்பது முடியாத காரியம். ஆனால் காடு முழுவதையும் தோலால் மூடினாலாவது தன் காலுக்குச் செருப்புப் போட்டுக்கொண்டாலவது
ஒருவன் நடக்கலாம். காடு முழுவதையும் தோலால்
மூடுவது முடியாத காரியம் ஆதலால் உன் காலுக்கு
செருப்பு போட்டுக் கொள்வதே நியாமானது.
அது போல இவ்வுலகில் மனிதனுக்கு அளவற்ற தேவைகளும் ஆசைகளும் உண்டாகித் துன்பத்தைக்
கொடுக்கின்றன. அவைகளினின்றும் தப்பித்துக்கொள்ள இரண்டே மார்க்கங்கள் உள்ளன.
அவ்விதத் தேவைகளைப் பெற்றுத் திருப்பியடைதல்
அல்லது அவைகளை வேண்டாத்திருதல் ஆனால்
மனிதனுக்கு உண்டாகும் இச்சைகளை எல்லாம் திருத்திப்படுத்துவது முடியாத காரியம் ஏனெனில்
ஒன்று திருப்தியானதும் இன்னொன்று தோன்றும்.
ஆதலால் கிடைத்தவற்றல் திருப்தியடைதல்
உண்மை ஞானத்தைப் பெறுதல் ஆகிய இவ்விரண்டினாலும் மனிதன் தனது இச்சைகளையும்
தேவைகளையும் குறைக்க வேண்டியதுதான்
நியாமான காரியம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:27 am

கற்றுக்கொள்ள வேண்டிய முதற் பாடம் இதுவே.
வெளியிலுள்ள எதையும் சபிக்காமலும்; வெளியிலுள்ள ஒருவர் மீதும் பழி சுமத்தாமலும்
இருக்க தீர்மானியுங்கள். மனிதனாக இருங்கள்.
எழுந்து நில்லுங்கள் பழியை உங்கள் மீதே சுமத்திக்
கொள்ளுங்கள். எப்போதும் அதுவே உண்மை என்பதை
அப்போது காண்பீர்கள். உங்களையே வசப்படுத்திக்
கொள்ளுங்கள்.
ஒருகணம் நமது மனிதத் தன்மையைப் பற்றியும்
நமது தெய்வத் தன்மையைப் பற்றியும் நமக்கு எல்லாம்' தெரியும்என்றும் நம்மால் எதையும் செய்ய
முடியும் என்றும் நாம் குற்றமற்றவர்கள் களங்கமற்றவர்கள் உலகிலே தன்னலமின்மையில்
அனைவரையும் மிஞ்சியவர்கள் என்றும் அவ்வளவு
பேசிக் கொள்கிறோம். மறுகணம் ஒரு சிறு கல்
நம்மைப் புண்படுத்தி விடுகிறது ஒரு சிறு மனிதனின்அற்பக் கோபம் நம் மனதைப் புண்ணாக்கி
விடுகிறது தெருவில் போகும் எந்த முட்டாளும்
இந்தத் தெய்வங்களை த் துயருறச் செய்கிறான். இது
வெட்க்ககேடு அல்லவா
நாம் அத்தகைய தெய்வங்கள் ஆனால் இவ்வாறு
நடக்குமா உலகமே பழி சுமக்க வேண்டும்
என்பது உண்மையா ஆன்மாக்கள் அனைத்திலும்
தூய்மை மிகுந்தவரும் பெருமை பொருதியவரும் ஆன கடவுளை நம் தந்திரங்களால் துயருறச்
செய்ய முடியுமா நீங்கள் அவ்வளவு தன்னலமற்றவர்கள் ஆனால் நீங்களும் இறைவனுக்கு
சமமானவரே
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 "வாசித்ததில் நேசித்தது " Empty Re: "வாசித்ததில் நேசித்தது "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum