தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உவமை, உருவகம், குறியீடு

View previous topic View next topic Go down

உவமை, உருவகம், குறியீடு Empty உவமை, உருவகம், குறியீடு

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 03, 2014 6:20 pm

உவமை உருவகம் குறியீடு
தமிழ் இலக்கியத்துறையில் திறனாய்வினூடான வளர்ச்சி இன்று குறிப்பிடத்தக்க ஒன்றாகிறது. இலக்கிய வடிவம், இலக்கியப் பொருள், பொருளை வடிவமாக்குவதில் படைப்பாளன் பயன்படுத்தும் இலக்கிய உத்திமுறை, இலக்கியப் பொருளில் அமைந்துள்ள புதிய அணுகுமுறைகளை திறனாய்வுத் துறை இன்று விரிவாக வளர்த்து வருகிறது. அதேநேரத்தில் ஒரு இலக்கியப் படைப்பியலினூடான பல்வேறு இலக்கியப் பாங்குகளையும் தரம் பிரித்து – ஆழமாகக் கூர்ந்து நோக்கி விளக்குவது இன்றைய திறனாய்வாளர்களின் முக்கியப்பணியாகிறது. அதனூடாக மரபுக் குறியீடுகள் மீதான பரிணாமவளர்ச்சியை இக்கட்டுரை கூர்ந்து நோக்க எத்தணிக்கிறது.

தமிழிலக்கிய வரலாற்றில் குறியீட்டியல் சங்க்காலத்திலேயே மேலோங்கி விளங்கிற்று. சங்ககால சமுகம், அஃது உருவாக்கியுள்ள பாடுபொருளின் வரையறை, இவைத்தொடர்பான இன்றைய ஆய்வுகள் சங்ககாலம் பொற்காலம் என்னும் கருத்தியலினூடான இருக்கத்தினை அசைத்துக்கொண்டிருக்கும் நிலையிலும் மொழி, நடை, கற்பனை, அணிநயம், செறிவு இவை நிறைந்த சங்க இலக்கியத்தின் கவித்துவச் சிறப்பு பற்றிய ஐயம் யாருக்கு எழவாய்பில்லை எனலாம். இத்தகைய இலக்கிய மேம்பாடு நிறைந்த சங்க இலக்கியத்தில் நாம் காணும் உள்ளுறை, இறைச்சி என்னும் குறிப்புப் பொருள் அடங்கிய இலக்கிய நயங்கள் ஒன்றைச்சொல்லி, வேறொன்ரை உணர்த்தும் குறியீடுகளாக (உள்ளுறையாக) நூற்றுக்கணக்கில் சங்க இலக்கியப் பாடல்களில் காணக்கிடைகின்றன.

இலக்கியப் படைப்பாளிகள் இம்மரபுகளின் அடிப்படையில் தம் கற்பனை திறனுக்கும், சொல்லாற்றலுக்கும் ஏற்ப புதிய புதிய குறியீடுகளை அமைத்துத் தருகின்றனர். குறியீடு என்பது இலக்கிய வகைகள் அனைத்திலும் காணக்கூடியதே. என்றாலும், தமிழிலக்கியத்துறையில் அது குறித்த வளர்ச்சி என்பது மரபிலக்கண நெகிழ்வினூடாக விளங்கிக்கொள்ளக் கூடிய ஒன்றாகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உவமை, உருவகம், குறியீடு Empty Re: உவமை, உருவகம், குறியீடு

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 03, 2014 6:20 pm

உவமை

உவமை என்பது சொல்லும் பொருளும் விளங்குவதற்கு உத்தி. பேச்சு வழக்கிலும் உவமைகள் இடம்பெறுவதுண்டு. உவமை எங்கே பயம் படுத்தப்பட்டாலும், அது கற்பனையின் செயல்தான். தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகள் எட்டு என்கிறார். கற்பனை அல்லது உவமை அதில் சேர்க்கப்படவில்லை. ஆகவே,
உகற்பனையின் பயனாகக் கருதப்படும் உவமையை செய்யுள் உறுப்புகளில் இன்றியமையாத ஒன்றாக அவர் கருதவில்லை எனக் கொள்ளலாம். (பா.அருணாச்சலம்., தொல்காபியம்., ப.67) ஆனால் செய்யுளுக்கு இலக்கணம் கூறும் முன்பாகவே உவமையை விளக்குவதற்கு ஓர் அதிகாரமே வகுத்திருப்பது எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்றாகும். தொல்காப்பியர் உவமையை எவ்வாறு விளக்க வருகிறார். உவமை என்பது 1. எடுத்துக்கொண்ட பொருள், 2. அதனை ஒத்தப் பொருள், 3. இரண்டிற்கும் இடையேயுள்ள பொதுத்தன்மை, 4. இவ்விரண்டையும் இணைப்பதற்குப் பயன்படும் சொல் (உவம உருபு) என்னும் நான்கு கூறுகளைக் கொண்டது. தொல்காப்பியர் இந்த உவமையை வினை, பயம், மெய் (வடிவம்), உரு (நிறம்) என நான்காப் பாகுபாடு செய்கிறார்.

வினைபயன் மெய்உரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமைத் தோற்றம் (தொல்.,பொருள்., 272)

_இவ்வகைமையின் கீழ் உவமையை விளக்கிப் பொருள்கண்டு, மகிழும் தொல்காப்பியர் உருவகம், உள்ளுறை, இறைச்சி, என்பவற்றின் மூலம் செய்யுளில் அமையும் கற்பனையின் திறத்தை விளக்க வரும்போது,

பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மரு(வு)ளறு சிறப்பின் அஃது உவமமாகும் (தொல்., பொருள்., 285)

_என்கிறார். இங்கு எடுத்துக்கொண்ட பொருளையே உவமையாக்கிக் கூறுவதும் ஒருவகை உவமை என்பது தொல்காப்பியர் கருத்தாகிறது. இதனையே பிற்காலத்துத் தண்டியாசிரியர்,

உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும் (தண்டி.35)

_என்கிறார். இதனடிப்படையிலேயே இன்றைய உவமைகள் சூழலுக்கு ஏற்ப பொருள் உணர்த்துவதாகவும் நிகழ்ச்சிகளை ஒப்பிடும் பொழுது காட்சி வெளிப்பாடுகளாகவும் அமைகின்றன. உதாரணமாக,

கானலிகளின்
குப்பிச் சலங்கை போல்
தாலி கதிகளால்
ஆனது எனது பேச்சு
(பச்சியப்பன்., உனக்கு பிறகான நாட்களில்., ப.53)

_என்ற கவிதையில் படபடவெனப் பேசும் பேச்சுக்குக் குப்பிச் சலங்கை எழுப்பும் ஓசை உவமையாகக் கூறப்பட்டதைக் காணலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உவமை, உருவகம், குறியீடு Empty Re: உவமை, உருவகம், குறியீடு

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 03, 2014 6:20 pm

உருவகம்

உவமையின் வளர்ச்சியே உருவகம். உவமைகள் அடக்கப்பட்டு அல்லது மாற்றுருவாக்கப்பட்டு உருவகங்களாகின்றன. போல, ஒப்ப என்ற சொற்கள் விடுப்பட்டுப் போன உவமைகளே உருவகங்களாக உருவெடுக்கின்றன. தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை பொருள் உவமையாகவும், உவமையே பொருளாகவும் வரும் மரபே உருவகம் எனப்படுகிறது. இதனையே இதுவே இது என்று நேர்முக வெளிப்படையாகக் கூறாதபடியால், மக்கள் உவமையை விடுத்து உருவகத்தில் ஆர்வம் காட்டினார் என்கிறார் அரிச்டாட்டில் (Aristotle, Rhetoric, Princeton Encyclopaedia of poetry and poetics., P.767) ஆக, ஒப்புமை இல்லாமல் உருவகம் பிறப்பதில்லை. உவமை இருவேறுபட்ட பொருட்களைத் தொடர்புபடுத்திக்காட்டுகிறது. உருவகம் இரண்டையுமே ஒன்றாக்கி விடுகிறது. இந்த ஒப்புமையே உருவகத்தில் காணப்படும் ஒரே உறவு.(George Cambell, Philosophy of Rehtorics Encyclopaedia of poetry and poetics., 1841.,P.490 ) என்ற ஜியார்ஜ் கேம்ப்பெலின் கூற்றும் அரண் செய்கிறது.

ஆனால், ஒரு பெயர் அல்லது விளக்கத்தொடர் முற்றிலும் சரியாகப் பொருத்திக்காட்டமுடியாத மற்றொருப் பொருளுக்கு மாறுதல் செய்யப்படுவதே உருவகம் என்றும் (Shorter oxford English Dictionary), முற்றிலும் சரியாகப் பொருத்திக் காட்டமுடிந்த மற்றொருப் பொருளுக்குப் பொருத்திக்காட்டுவதே உருவகம் என்றும் (New English Dictionary), மாறுபட்டக் கருத்துகள் நிலவுகின்றன. இங்கு ஒரு சொல்லை (பெயரை) வழக்கமான ஆட்சியிலிருந்து, புதுவகையான ஆட்சிக்கு உட்படுத்துகின்ற மாற்றத்தினூடான முயற்சியே உருவகமாகிறது. இவ்வுருவகத்தை ஐ.ஏ.ரிச்சர்ஸ்ட் (I.A.Richards) என்பவர் கருத்துருவகம் (சாதாரண அல்லது தெளிவான உருவகம்), உணர்ச்சி உருவகம் (சிக்கலான உருவகம்) என இருவகையாகப் பிரிக்கிறார். கருத்துருவகம் என்பது பொருள்விளக்கத்துக்குப் பயன்படுவது. உணர்ச்சி உருவகம் என்பது முற்றிலும் புதிய உணர்ச்சித் தூண்டலுக்குப் பயன்படுவது. இவ்விரு உருவகத்திற்கும் இடையே உள்ள அளவுமட்டத்தினை உவமை திறமே பாகுபடுத்துகிறது. ஏனேனில் சில உவமைகள் உருவக அளவில் வெற்றி பெறுவதும், சில உருவகங்கள் அமிழ்ந்த உவமைகளாக மாறுவதுமுண்டு. இதானால் உவமைக்கும் உருவகத்திற்கும் இடையேயுள்ள நெருக்க உறவை உணரமுடிகிறது.

ஆக, கருத்து விளக்கத்திற்கும், உணர்ச்சித் தூண்டலுக்கும் கருவியாக இருப்பது உவமை உருவகங்களே. இதன் காரணமாகவே அரிச்டாட்டில் கவிதையில் தலையாய அம்சம் உருவகம். அது கவிஞனின் உள்ளுணர்வின் மூலம் உருவாவதால் கற்பிக்க முடியாதது (க.கைலாசபதி., கவிதை நயம்., ப.20) என்கிறார். உதாரணமாக,

கூரை மார்பு அதிர்கிறது
சுவர்களை
வீறல்கள் வந்து வந்து
விசாரிக்கின்றன
(தமிழன்பன்., பனிப்பெய்யும் பகல்., ப.29)

_என்ற கவிதை, சுவர்கள் ஆணி அடிக்கும் அதிர்வுக்குத் தாங்காமல், கீறல் விடுவதை (பலவீணப்படுவதை)காட்சிப் படிமமாக வெளிப்படுத்துகிறது. இதில் வரும் கூரைமார்பு என்ற கருத்துணர்வு காட்சியாக அமைந்து, சிறந்த உருவமாக வெளிப்பட்டுள்ளதைக் காணலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உவமை, உருவகம், குறியீடு Empty Re: உவமை, உருவகம், குறியீடு

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 03, 2014 6:21 pm

குறியீடு

தமிழ் இலக்கியத்திற்குக் குறியீடு புதிதல்ல. ஆயினும் இன்றைய தமிழிலக்கியத் துறையில் ஒரு மறுசிந்தைனை என்ற அளவிலாவது குறீயிடு பற்றி நினைக்க வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் யார் எனில், மேலை நாட்டுத் திறனாய்வாளர்களே. இலக்கியம் சார்ந்த குறியீட்டியல் என்பது 19 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு நாட்டில் வாழ்ந்த மல்லார் மே (Mallare me), வெர்லெய்ன் (Varllaine), ரிம்பாட் (Rimbad) போன்ற பிரெஞ்சுக் கவிஞர்களால் விளக்கப்பட்ட ஒரு இலக்கியக் கோட்பாடாகும். பின்னர் ரில்க் (ஜெர்மனி), ஆந்திரபெலி (ரசியா) ஆகிய அறிஞர்களின் சிந்தைனையும் இணைந்து உலகமெல்லாம் பரவித் தமிழகத்தையும் தொட்டது. (எஸ்.தேசிகாமணி., இலக்கிய இயங்கள்., பக்.85,86)

SYMBOL என்ற ஆங்கிலச்சொல்லின் மூலம், கிரேக்கமாகும். சிம்பலின் என்ற கிரேக்கச் சொல் ஒருங்கே இணைப்பது என்று பொருள்படுகிறது. சிலம்பலின் என்ற சொல் அடையாளம் அல்லது சின்னம் என்று பொருள்படுகிறது (Princeton Encyclopaedia of poetry and poetics., 1841.,P.883) குறீயிடு என்பது சார்பாண்மையை அல்லது பிரதிநிதித்துவத்தைக் குறிப்பதாக அமைகிறது. ஒரு படிமத்தையும் கருத்துருவாக்கத்தையும் இணைப்பதே குறியீடு என்றும் கூறப்படுகிறது. மிகுதியான குறியீடுகள் ஒப்புமையின் அடிப்படையிலேயே எழுகின்றன. () _என்று என்சைக்கிளோபீடியோ அமெரிக்கானா உரைக்கிறது. மேலும் அது கண்புலனாகாததையும் (Invisible) கண்புலனாவதையும் (Visidle) ஓர் ஒப்புமை அல்லது உருவகத்தின் மூலம் இணைப்பது என்றும் விளக்கம் தருகிறது.

ஒன்றை மற்றொன்றால் குறிப்பதே குறியீட்டின் அடிப்படை இலக்கணம். ஆனால் நமது உள் மனதின் எண்ணங்களை மறைக்க முடியாத போது உடலின் சில அசைவுகள், சில கோணங்களின் வாயிலாக அவற்றை அருகிலிருப்போருக்குப் புலணாக்கி விடுகிறது. இதனையே உடல்மொழி (Bogy Language) என்று அழைக்கின்றோம். (அ.வெ. சுப்பிரமணியன்., சங்கப் பாட்டில் குறியீடு., ப.146) பெரும்பாலானக் குறியீடுகள் இவ்வுடல்மொழியின் வெளிப்பாடாகவே அமைகின்றன. இயல்பாக மொழி குறிப்புத் தன்மைமிக்கச் சொறகளைப் பெற்று நிற்கிறது என்பது வெளிப்படை. அதிலும் அது நேரடியாக அர்த்தத்தை மட்டும் குறிப்பதாக அமையாமல் வேறொன்றையும் குறியீடாக உணர்த்தி நிற்கிறது. உதாரனமாக, தராசு என்ற சொல் எடைபார்க்கும் கருவியாக மட்டுமல்லாமல் நீதி என்ற கருத்தையும் குறித்து நிற்கிறது. இதுபோல் புற சமாதானத்தையும், சிங்கம் வீரத்தையும் (ஆண்மையாய்)யும் லில்லிப்பூ தூய்மையையும் முன்னதாக பூத்து அழகுறத் திகழ்ந்து விரைவிலேயே மடிந்து முடிவதால் சேர்ரிமலர் ஜப்பானியப் போர் வீரனையும் குறிக்கிறது. இப்படியாக ஒவ்வொரு மொழிக்கும் நாடுசார்ந்த – இயற்கை சார்ந்த – தொல் கதைகள் சார்ந்த – புராணங்கள் சார்ந்த குறியீடுகள் இருக்கின்றன.

ஆக, இலக்கியத்தில் பரிணாம வளர்ச்சியினூடான குறியீடு சுக்கமானதாக – ஒரு கருத்தை அல்லது நிகழ்வை விளக்க அமைவதாக உவமை, உருவகம் இவற்றினும் மிகுந்த அழகியல் அம்சமாக – நின்று புரிதலினூடான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது என்பது வெளிப்படை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உவமை, உருவகம், குறியீடு Empty Re: உவமை, உருவகம், குறியீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum