தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

View previous topic View next topic Go down

இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? Empty இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

Post by முரளிராஜா Sat Jan 18, 2014 10:17 am

இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? E_1389501879

மனித குலத்திற்கு, இயற்கை அளித்த மாபெரும் பரிசு, இளநீர். சுத்தமான, சுவையான சத்தான பானம். கோடையின் வெப்பத்தை தணிக்கும், குளிர்பானம். ஒரு லிட்டர் இளநீரின் கலோரி அளவு, 17.4/100 கிராம்.

'இளநீர் வழுவழுப்பானது, இனிப்பானது, விந்துவை அதிகரிக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், சிறு நீரகத்தைச் சுத்திகரிக்கும்' என்று ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன.


இளநீரின் மருத்துவக் குணங்கள்:


* ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு, இளநீர் ஒரு நல்ல மருந்து.


* வளர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள், இளநீரில் உள்ளன.


* இளநீர் உடல் சூட்டைத் தணிக்கிறது.


* வேர்க்குரு, வேனற்கட்டி, பெரியம்மை, சின்னம்மை மற்றும் தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த, இளநீரை உடம்பின் மீது பூசிக் கொள்ளலாம்.


* இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.


* இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக, காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானம்.


* ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்கிறது.


* முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும், இளநீர் சிறந்த டானிக் ஆகும்.


* சிறுநீர் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது.


* சிறுநீரக கற்களைக் கரைக்க உதவுகிறது.


* சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது.


* நெருக்கடி காலக்கட்டங்களில், நோயாளிகளுக்கு இளநீரை நரம்பு ஊசி மூலம் செலுத்தலாம்.


* இளநீர் மிகமிகச் சுத்தமானது. உடலில் சூட்டை உண்டாக்காது. சிவப்பு ரத்த அணுக்களை அழிக்காது. இதனால் தான், ரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக, இளநீர் பயன்படுத்தப்படுகிறது.


* இளநீரின், சிறந்த மின் பகுனித்தன்மை, மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது.


* ரத்தத்தில் கலந்துள்ள, நச்சுப்பொருளை அகற்ற இளநீர் உதவுகிறது.


நம் ரத்தத்தில் இருப்பது போல, சரியான அளவில் மின்பகுனி உப்புக்கள் இளநீரில் இருப்பதால், இளநீர், இயற்கை தந்த நல்லதொரு டானிக். சரியாகச் சொல்வதானால், இளநீர் ஒரு உயிர்த்திரவம். புது இளநீர், உடலுக்கு நல்லது. எப்போதும், வெட்டிய உடனேயே, இளநீரைப் பருகி விட வேண்டும். இதை உண்டால், சளி பிடிக்காது; மாறாக, சளி அகலும்.


இளநீரில் அதிக அளவில் சர்க்கரைப் பொருட்களும், தாது உப்புக்களும் மற்றும் குறைந்த அளவில் கொழுப்புச் சத்தும், புரதச் சத்தும் உள்ளன.

சர்க்கரை சத்துக்கள்: குளுக்கோஸ் மற்றும் புரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள், இளநீரில் காணப்படுகின்றன. இளநீரிலுள்ள, குளூக்கோஸ் மற்றும் புரக்டோஸ், தேங்காய் முதிர்ச்சியடையும் போது, சுக்ரோசாக மாறி விடுகிறது. முற்றின தேங்காய் நீரில் காணப்படும் மொத்த சர்க்கரைச் சத்தில், 90 சதவீதம், சுக்ரோஸ் ஆகும்.

தாது உப்புகள்: இளநீரில், பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புகள், அதிக அளவில் காணப்படுகின்றன. 


இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது, பொட்டாசியம். இளநீரில் காணப்படும் பொட்டாசியத்தின் அளவு, தென்னைக்கு இடப்படும் பொட்டாஷ் (சாம்பல் சத்து) உரங்களின் அளவைப் பொறுத்து, மாறுபடுகிறது. பொட்டாசியமும் மற்ற தாது உப்புகளும் நிறைந்த இளநீர் தான், நம் உடலிலிருந்து, சிறுநீரை அதிக அளவில் வெளியேற்ற உதவுகிறது.



புரதச் சத்துக்கள்: இளநீரில், புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச்சத்தின் தரம், பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது. இளநீரில், கூட்டுப் புரதங்கள் அதிக அளவில் இல்லாததால், நோயாளிகளுக்கும், அதிர்ச்சியினால் ஏற்படும் அபாயம் மிகக் குறைவு.

வைட்டமின்கள்: இளநீரில், அஸ்கார்பிக் அமிலமும், வைட்டமின் பி பிரிவு அமிலங்களும் உள்ளன. அஸ்கார்பிக் அமிலத்தின் அளவு, 22 - 37 மி.கி./100 மி.லி., ஆகும். இளநீரைச் சுற்றியிருக்கும் பருப்பின் வளர்ச்சிக்கேற்ப, இதன் அளவு குறைந்து வரும். காபி, டீயை கைவிட்டு, எல்லாரும் இளநீர் பருகிட, எங்கும் அமைப்போம் இளநீர் பந்தல்!


நன்றி ஹலோ டாக்டர் மற்றும் 
டாக்டர் பா.இளங்கோவன்,
கோவை.


 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? Empty Re: இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

Post by செந்தில் Sat Jan 18, 2014 10:23 am

கைதட்டல் இளநீரின் மகத்துவத்தை உணர்த்தும் பகிர்வுக்கு நன்றி அண்ணா  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? Empty Re: இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

Post by kanmani singh Sat Jan 18, 2014 12:33 pm

பதிவுக்கு மிக்க நன்றி முரளி..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? Empty Re: இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum