தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முதியோர்-சுகமா. சுமையா...

View previous topic View next topic Go down

முதியோர்-சுகமா. சுமையா... Empty முதியோர்-சுகமா. சுமையா...

Post by முழுமுதலோன் Fri Feb 21, 2014 2:47 pm

சுகமா. சுமையா.: முதியோர்


இன்றைய சூழலில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளில், குழந்தைகளை விட முதியோர் அதிகம் இருப்பர். வளரும் நாடுகளிலும் முதியோரின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது.

வயதான காலத்தில், இவர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்., 1ம் தேதி, சர்வதேச முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள், முதியோரை மகிழ்விக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இன்றைய விரைவான உலகில், குடும்ப உறவுகள் முன்பு இருந்ததை போல இல்லை. பெற்ற பிள்ளைகளால் கவனிக்கப்படமால் கைவிடப்பட்டு, பொருளாதாரத்தாலும் பாதிக்கப்பட்டு, அனாதைகளை போல வாழும் நிலைக்கு முதியோர் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களைப் பாதுகாக்க ஒவ்வொரு பிள்ளையும் முன்வர வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

முதியோர் சுமையா:

முதியோர், குழந்தைகளுக்கு சமம் எனக் கூறுவர். 50 வயதை கடந்தவர்கள், முதியோராக கருதப்படுகின்றனர். உடல் மற்றும் மனதளவில் அவர்களின் செயல்பாடுகள் மாறிவிடும். முதியோரின் அறிவு மற்றும் வழிகாட்டி, இன்றைய தலைமுறையினருக்கு அவசியம். அவர்களை சுமையாக கருதாமல், வரமாக கருதுங்கள். குடும்பத்தில் முதியோரை அரவணைத்து செல்லுங்கள்; நாமும் எதிர்காலத்தில் முதியோர் ஆவோம் என்பதை நினைவில் நிறுத்தி, அந்த சுயநலத்துக்காவது முதியோரை கவனிக்க முன்வர வேண்டும்.

குறையுமா முதியோர் இல்லம்:

பிள்ளைகள் நல்ல வசதியோடு இருந்தும், பெற்றோரை பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் நடக்கிறது. யாருடைய பெற்றோராவது முதியோர் இல்லத்தில் இருந்தால், மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர இத்தினத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசும் முதியோருக்கு, பென்ஷன் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்.

உதிர்ந்து போன சருகுகளா…

முதியவர்கள்? கொடிது கொடிது… முதுமை கொடிது; அதனினும் கொடிது… முதுமையில் வறுமை. முதுமையின் வேதனையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மதுரை அரசு மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் அலசி ஆராய்ந்தால், அங்கே முதியவர்கள் மட்டும், ஆதரவின்றி தனியாய் நின்று சிகிச்சை பெறுவர். நீண்ட வரிசையில் தள்ளாடி தள்ளாடி நின்று மருந்து வாங்கிச் செல்வர். இன்னும் சொல்லப் போனால், சிகிச்சை பெற முடியாமல், எங்கோ ஒரு மூலையில் ஓய்ந்து உட்கார்ந்திருப்பர்.நீண்ட வரிசையில் நிற்கும் போது, சில முதியவர்கள் மயக்கமடைந்து, இறந்த சம்பவங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முதுமையின் கொடுமையால், மாதம் 10 பேர் வரை, இங்கு இறக்கின்றனர். சட்டைப் பையில் முகவரியோ, மொபைல் போன் எண்ணோ இருந்தால், போலீசார் உறவினர்களிடம் தெரிவிக்கின்றனர். இல்லாவிட்டால், அனாதைப் பிணமாகிறது.

இளமையில் மனைவிக்காக… :

பிள்ளைகளுக்காக ஓடியாடி உழைத்த கால்கள்… முதுமையில் தள்ளாடும் போது, அரவணைக்க ஆளைத் தேடி தவிக்கும். மனைவி இழந்த முதியவருக்கோ, கணவனை இழந்த முதிய பெண்மணிக்கோ… உறவினர்களிடம் மதிப்பு குறைந்து விடும். அலட்சியம் கூடிவிடும். “நாம் தானே பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று, “சுடு சொல்லை மழையாய்’ பொழிவர். உடல் தளர்வோடு, உள்ளமும் தளர்ந்து, உழைத்த நாட்களை அசைபோட்டு உதவிக்கரம் தேடி தவிப்பர். பணமும், வசதியும் இருக்கும் இடத்தில் தங்குமிடத்திற்கு பிரச்னை இருக்காது. ஆனால் பேசுவதற்கு ஆளின்றி தனிமையின் பெரும் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருப்பர். வசதியற்ற மற்றும் நடுத்தர வீடுகளின் நிலைமையே வேறு. ஒண்டுவதற்கு இடமின்றி, உணவுக்கும் வழியின்றி… உருக்குலைந்து போய் விடுவர்.

ஏன்? முதுமை என்றால் இத்தனை பாராமுகம்? இன்றைய இளமை நாளைய முதுமையாய் மாறித் தானே ஆகவேண்டும்?

முதுமையின் கொடுமையை விவரித்த முதியவர்கள், தன் முகம் காட்ட மறுத்துவிட்டனர். “போட்டோ போட்டீங்கன்னா… பாவம் பிள்ளைங்க மனசு கஷ்டப்படும். நமக்கு வயசாகிப் போச்சு. அனுபவிச்சுத் தான் தீரணும்,’ என்று மறுத்துவிட்டனர்.

இதுதானே பெத்த மனசு. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?



http://padugai.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முதியோர்-சுகமா. சுமையா... Empty Re: முதியோர்-சுகமா. சுமையா...

Post by kanmani singh Fri Feb 21, 2014 4:40 pm

அருமையான பதிவு. நன்றி!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

முதியோர்-சுகமா. சுமையா... Empty Re: முதியோர்-சுகமா. சுமையா...

Post by ஜேக் Fri Feb 21, 2014 7:19 pm

முதியோரின் அறிவு மற்றும் வழிகாட்டி, இன்றைய தலைமுறையினருக்கு அவசியம். 


அவர்களது அனுபவம், முதிர்ச்சி நம் வாழ்விற்கு உறுதுணை.


முதியோர் இருப்பது குடும்பத்திற்கு பலம். இல்லாதிருப்பது மிகப் பெரிய பலவீனம்.


குழந்தைகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம்.


பதிவிற்கு நன்றி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முதியோர்-சுகமா. சுமையா... Empty Re: முதியோர்-சுகமா. சுமையா...

Post by முரளிராஜா Fri Feb 21, 2014 7:22 pm

ஜேக் wrote:முதியோரின் அறிவு மற்றும் வழிகாட்டி, இன்றைய தலைமுறையினருக்கு அவசியம். 


அவர்களது அனுபவம், முதிர்ச்சி நம் வாழ்விற்கு உறுதுணை.


முதியோர் இருப்பது குடும்பத்திற்கு பலம். இல்லாதிருப்பது மிகப் பெரிய பலவீனம்.


குழந்தைகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம்.


பதிவிற்கு நன்றி

அது மட்டுமல்ல அவர்களை அரவணைப்பதும் நம் கடமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முதியோர்-சுகமா. சுமையா... Empty Re: முதியோர்-சுகமா. சுமையா...

Post by ஜேக் Fri Feb 21, 2014 7:23 pm

மிகச் சரியாக சொன்னீர்கள் சூப்பர்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முதியோர்-சுகமா. சுமையா... Empty Re: முதியோர்-சுகமா. சுமையா...

Post by Muthumohamed Fri Feb 21, 2014 10:11 pm

முரளிராஜா wrote:
ஜேக் wrote:முதியோரின் அறிவு மற்றும் வழிகாட்டி, இன்றைய தலைமுறையினருக்கு அவசியம். 


அவர்களது அனுபவம், முதிர்ச்சி நம் வாழ்விற்கு உறுதுணை.


முதியோர் இருப்பது குடும்பத்திற்கு பலம். இல்லாதிருப்பது மிகப் பெரிய பலவீனம்.


குழந்தைகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம்.


பதிவிற்கு நன்றி

அது மட்டுமல்ல அவர்களை அரவணைப்பதும் நம் கடமை


 நண்பேன்டா  நண்பேன்டா  நண்பேன்டா இருக்கும் போது அவர்களின் மதிப்பு தெரியாது
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

முதியோர்-சுகமா. சுமையா... Empty Re: முதியோர்-சுகமா. சுமையா...

Post by sreemuky Fri Feb 21, 2014 10:22 pm

நண்பரே எனக்கு இதில் கொஞ்சம் மாற்று கருத்து உண்டு. இன்றைய தனிக் குடும்ப சூழலில் பெற்றோர் தனது குழந்தைகளுக்கு சொந்த பந்தங்களின் அருமையை சொல்வதை தவிர்த்து வசதியான வாழ்கை ஒன்றையே போதிக்கின்றனர். இதனால் தான் குழந்தைகளும் பணம் கொடுத்தால் போதும் பெற்றோர் சந்தோஷமாக இருப்பார்கள் என்ற மன நிலைக்கு ஆளாக்கப் படுகிறார்கள். நம் விரலை கொண்டு நாமே கண்ணை குதிக்கொண்டுவிட்டு விரலை குற்றம் சொல்வது தவறு என்பது எனது தாழ்மையான அபிப்ராயம்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

முதியோர்-சுகமா. சுமையா... Empty Re: முதியோர்-சுகமா. சுமையா...

Post by Muthumohamed Fri Feb 21, 2014 10:25 pm

sreemuky wrote:நண்பரே எனக்கு இதில் கொஞ்சம் மாற்று கருத்து உண்டு. இன்றைய தனிக் குடும்ப சூழலில் பெற்றோர் தனது குழந்தைகளுக்கு சொந்த பந்தங்களின் அருமையை சொல்வதை தவிர்த்து வசதியான வாழ்கை ஒன்றையே போதிக்கின்றனர். இதனால் தான் குழந்தைகளும் பணம் கொடுத்தால் போதும் பெற்றோர் சந்தோஷமாக இருப்பார்கள் என்ற மன நிலைக்கு ஆளாக்கப் படுகிறார்கள். நம் விரலை கொண்டு நாமே கண்ணை குதிக்கொண்டுவிட்டு விரலை குற்றம் சொல்வது தவறு என்பது எனது தாழ்மையான அபிப்ராயம்.


உங்களது கருத்தை நானும் வரவேற்கிறேன்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

முதியோர்-சுகமா. சுமையா... Empty Re: முதியோர்-சுகமா. சுமையா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum