தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்

View previous topic View next topic Go down

ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்  Empty ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்

Post by mohaideen Tue Feb 25, 2014 4:58 pm

ஒரு மனிதனின் உணவுத் திட்டம், தூக்கம் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ச்சியாக இல்லாமல் அடிக்கடி மாறும் போது உடலை கண்டிப்பாக சர்க்கரை நோய் தாக்கும். யார் புரோகிராம் செய்ததோ தெரியாது, நம் உடல் எனும் சிஸ்டத்தில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஹார்மோன்கள் சுரப்பதும், அதற்கான பணிகளை செய்வதும் வழக்கம் போல் நேரம் தவறாமல் நடந்து வருகிறது. புறச்சூழலுக்கு ஏற்ப தன் சிஸ்டத்தை மாற்றிக் கொள்வது மற்றும் நோய் தாக்குதலுக்கு ஏற்ப எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது என தன் வேலையை மிகவும் அறிவுப் பூர்வமாக உடல் தனக்குத் தானே செய்து கொள்கிறது.

ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்  Open_office_1237727c

உயிர்ச்சங்கிலியில் ஒரு கன்னி அறுந்தாலும் அது இயற்கையின் செயல்பாட்டில் மிகப்பெரிய மாறுதல்களை உருவாக்கும். ஒரு உயிரினம் அழிக்கப்படும் போது அதற்கான விலையை இந்த சமூகம் கொடுக்கத் தவறுவதில்லை. இதே போல் தான் உடலும். கணினியில் வைரஸ் தொற்று ஏற்பட்டால் செயல் இழக்கிறது. தான் சேமித்து வைத்ததை எல்லாம் தொலைத்து விடுகிறது. கணினியால் தனக்குத் தானே ஆன்ட்டி வைரஸை உற்பத்தி செய்து கொள்ளத் தெரியாது. ஆனால் உடலுக்குத் தெரியும்.

உடலுக்கான செயல்பாடுகள் நேர் கோட்டில் இருந்தால் தான் இடையில் வரும் தடைகளை முன் கூட்டியே அனுமானித்து அதனால் தடுக்க முடியும். அடிக்கடி பாதையை மாற்றிக் கொண்டே இருப்பது போல் உணவு, தூக்கம் மற்றும் அன்றாட செயல்பாடுகளுக்கான நேரம் ஷிப்ட் முறையில் மாறும் போது உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயை உடல் சந்திக்கிறது

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஷிப்ட் வேலை செய்யும் போது சர்க்கரை நோய் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடை கூடுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் பகலில் வேலை மறு வாரம் இரவுப் பணி என மாறும் போது சர்க்கரை நோய் தாக்கும். மாதத்திற்கு 4 நாட்கள் வரை இரவு ஷிப் வேலை செய்யும் பெண்கள் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.

தூங்கும் நேரம் மாறும் போதும் இரவு நேரத்தில் கண் விழித்து வேலை பார்க்கும் போதும் ஹார்மோன் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் இன்சுலின் ஹார்மோன் வேலை செய்வது குறைகிறது. தூக்கம் கெடும் போது அதிக பசியைத் தூண்டுகிறது. இதன் காரணமாக அதிக உணவு எடுத்துக் கொள்வதால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகிறது. பகல் மற்றும் இரவு ஷிப்ட் என வேலை மாறுவதால் குறித்த நேரத்துக்கு உடற்பயிற்சி செய்ய முடியாது. இரவு நேர வேலையால் உடற்பயிற்சி பாதிப்பதுடன் தூக்கம் கெட்டு மனக்குழப்பத்துக்கு ஆளாக நேரிடும்.


ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்  Britain-commuters_1721232c


பகலில் வேலை பார்ப்பவர்கள் மாலை நேர ஷிப்ட் பார்க்கும் போது பெரிய பாதிப்பு ஏற்படாது. எனவே பெண்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் ஒரே ஷிப்ட் வேலை பார்ப்பது போல் சூழலை மாற்றிக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாமல் ஷிப்ட் வேலை பார்க்கும் சூழல் அமைந்து விட்டால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யக் கூடாது. நடந்து கொண்டே வேலை பார்க்க வேண்டும். டீ, காபி, பிஸ்கட் ஆகியவற்றை தேவையற்ற நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். வேலை நேரத்தில் டென்சன் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்,”


http://tamilrockers.net/index.php/topic/25113-%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்  Empty Re: ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்

Post by kanmani singh Tue Feb 25, 2014 5:50 pm

இது என்னப்பா வம்பா போச்சு....
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்  Empty Re: ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்

Post by sreemuky Tue Feb 25, 2014 9:22 pm

நமது முன்னோர்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறை நாம் மறந்ததுதான் இதற்கெல்லாம் காரணம்.

ஸ்ரீமுகி
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்  Empty Re: ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்

Post by Muthumohamed Tue Feb 25, 2014 10:12 pm

sreemuky wrote:நமது முன்னோர்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறை நாம் மறந்ததுதான் இதற்கெல்லாம் காரணம்.

ஸ்ரீமுகி


 நண்பேன்டா  நண்பேன்டா  நண்பேன்டா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்  Empty Re: ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்

Post by ஸ்ரீராம் Wed Feb 26, 2014 10:06 am

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி முகைடீன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்  Empty Re: ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்

Post by rammalar Wed Feb 26, 2014 10:22 am

ஒரு சிறுவன் மற்றொருவனிடம் கேட்டானாம்

உங்க தாத்தா எப்படி செத்தார்?

சிறுவன் 2: கடலில் மீன் பிடிக்க போனபோது புயலில்
மாட்டிக்கிட்டு..!
-
சிறுவன் 1: உங்க அப்பா..?
-
சிறுவன் 2: அவரும் அப்படித்தான்..!
-
சிறுவன்1: அப்படி இருக்கும்போது மீன்பிடி தொழிலுக்கு
நீயும் போவேன்னு சொல்றியே...உனக்கு பயமாயில்லையா?
-
சிறுவன்2: அதிருக்கட்டும் உங்க தாத்தா எப்படி செத்தாரு?
-
சிறுவன் 1: படுக்கையில் தூங்கிக்கிட்டு இருக்கம்போதே...!
-
சிறுவன் 2: அப்படின்னா உனக்கு படுக்கையில் தூங்க
பயமாயில்லையா...?!
-
----------------------
இதைப் போன்றதுதான் விஞ்ஞானிகளின்
ஆராய்ச்சிகளும்...
-
உருளைக் கிழங்கை சாப்பிடாதே என எச்சரிப்பார்கள்..
-
கொஞ்ச நாள் கழிச்சு, உருளைக்கிழங்கில் சத்துகள் பல
உள்ளன, எனவே அதைப் புறம் தள்ளாதீர்கள் என்பார்கள்...!!
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்  Empty Re: ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum