தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தோல்விக்கு நன்றி சொல்!

View previous topic View next topic Go down

தோல்விக்கு நன்றி சொல்!  Empty தோல்விக்கு நன்றி சொல்!

Post by முழுமுதலோன் Sat Mar 15, 2014 11:20 am

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் ஏதாவது ஒரு இலக்கை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறான். இவை குறுகிய கால இலக்காகவோ அல்லது நீண்ட கால இலக்காகவோ இருக்கலாம். இருந்தபோதிலும், அவற்றிற்கேற்ப அவன் சில இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனினும் அவற்றில் சிலர் மட்டுமே வெற்றி பெற்று உயர்ந்து நிற்க முடிகிறது. பலர் வெற்றிப்பாதையில் வரும் தடைகளை எண்ணி மனம் துவண்டு தனது குறிக்கோள்களைக் குறுக்கிக் கொள்வது அவர்களின் தன்னம்பிக்கையின்மையையே காட்டுகிறது. எவ்வித தடை வருமாயினும் சிலர் குறிக்கோள்களை விடா முயற்சியுடன் அடைய முனைவதே தன்னம்பிக்கையாகும்.

வெற்றியாளர்களில் இருவகை, ஒன்று வெற்றிக்கான அடிப்படை வசதிகள், அனைத்தும் கொடுக்கப்பட்டவர்கள், மற்றொன்று வெற்றிக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் உருவாக்கி அதில் வெற்றி காண்பவர்கள். இவற்றில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களே மேலோங்கி நிற்பவர்கள். ஏனென்றால், இவர்களுக்கு எந்த வசதியும் எந்த ஒரு நபரின் உதவியுமின்றி, தனது தன்னம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்துச் செயல்படுவார்கள். இதற்கு ஒரு உளவியல் காரணமும் உண்டு. பல சாதனையாளர்கள் தங்கள் கடந்த வாழ்வில் ஒரு வேளை உணவிற்குக் கூட எதுவுமில்லாமல் கஷ்டப்பட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். உளவியல் ரீதியாகச் சொல்லப்போனால், தேவை என்ற ஒன்று உருவாகும் போது ஏதாவது ஒரு இலக்கை அடைய வேண்டுமென்ற உந்துதல் பிறக்கும், அந்த இலக்கை அடையும் வரை அந்த உந்துதல் நீடிக்கும். இலக்கை அடைந்துவிட்டால் உந்துதலின் வேகம் குறைந்து கடைசியில் நின்று விடும். இது நமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் முதல் வானளாவிய சாதனைகள் வரை இந்த அடிப்படையிலேயே நமது மனம் செயல்பட்டு வருகிறது. தேவை என்ற ஒன்று மட்டும் மீண்டும் மீண்டும் தோன்றக்கூடிய ஒன்று, பிறந்தது முதல் சாகும் வரை ஏதாவது ஒரு தேவை நம்மை ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கிறது. இதனையே Motivational Process என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

எனவே, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். நிறைவேறும் வரை போராடிக் கொண்டிருக்கிறான். இந்த இலட்சியப் போராட்டத்தில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். பலர், இடர்வரும் தடைகளால் மனம் துவண்டு குறிக்கோளை விட்டுவிடுகிறார்கள். தன்னம்பிக்கை இழந்து, மனச்சோர்வடைந்து “எனது விதி”, “என்னால் இயலாது”, “சூழ்நிலைக்காரணம்” என்றெல்லாம் புலம்பும் குணத்தைக் காணலாம்.

இவை அனைத்திற்கும் காரணம், இலட்யத்தை அடைவதற்கான குணாதிசயங் களை வளர்த்துக் கொள்ளாமையே. அவரவருக் கேற்ப துறையை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் தன்னுடைய முழு ஈடுபாட்டையும், உடல் உழைப்பையும், தன்னம்பிக்கையோடு உட்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தோல்வியைக் கண்டு துவண்டு போகாத குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு இலட்சியப் பயணத்திலும், தோல்வி யென்பது இல்லாமல் வெற்றி பெற இயலாது. இடைவரும் தடைகளால் தோல்வியும், சரிவும் வரும்போது அவற்றைக் கண்டு மனம் தளரா மலும் தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் மட்டுமே வெற்றி நிச்சயம். வெற்றியாளர்களைப் பட்டியலிட்டால், தோல்வியே அவர்களை உந்திய மாபெரும் சக்தியாக இருந்திருக்கும். அவர்கள், தோல்வியையும், சரிவுகளையும், வெற்றிப்படிகளாகவும், சிறந்த அனுபவங் களாகவே அனுசரித்திருக்கிறார்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தோல்விக்கு நன்றி சொல்!  Empty Re: தோல்விக்கு நன்றி சொல்!

Post by முழுமுதலோன் Sat Mar 15, 2014 11:21 am

முயற்சிகளில் வெற்றிகாண கீழ்க்கண்ட வற்றை பின்பற்றினால் வெற்றி பெறுவது எளிதாகும். 

இலக்கை நிர்ணயித்தல் (Goal Setting) 

ஒவ்வொரு மனிதனும் தனது இலக்கை தனது ஆர்வத்திற்கேற்ப தேர்வு செய்து கொள் வது அவசியமாகும். இலக்கை நிர்ணயிக்கும் முன்னரே, அது வெற்றி கொள்ளக்கூடியது தானா? அதனால் ஏற்படும் தீமை, நன்மை. பின்னர் அடுத்த நிலை என்ன? என்ற கூர்நோக்குப் பார்வையோடு இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல் – குறள்

திட்டமிடல் (Planning)

இலக்கை அடைவதற்கான எளிய முறையை வகுத்துக் கொள்ள வேண்டும். சரியான திட்டமிடல் ஆரம்ப நிலையிலேயே ஏற்படும் இடர்பாடுகளை சரியான முறையில் களைய வழிவகுக்கும். எந்த ஒரு செயலுக்கும் சரியான திட்டமிடல் மிகவும் இன்றியமையாத ஒன்று. எந்த ஒரு மாபெரும் தோல்விக்கும் சரியான திட்டமிடாமையே காரணமாகும்.

ஒருங்கிணைத்தல் (Organizing)

தேவையான மூலப்பொருட்கள் (resources) பயன்படுத்தக்கூடிய வழிமுறைகளையும், மனிதர்களின் உதவிகள், பலரின் அனுபவங் களையும் ஒன்று சேர்த்து ஆலோசித்து, அவற்றை சரிவர உபயோகப்படுத்துதல் மிக மிக அவசியமாகும். 

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல் – குறள்

செயல்படுத்துதல் (Materialize)

மேற்சொன்ன அனைத்தையும் செய்து விட்டு, செயல்படுத்தாமல் காலம் தாமதம் செய்வது, செயல்படுத்துதலாகாது. எதிர்வரும் தடைகளுக்காக அச்சம் கொள்ளாமல், முறை யாக, நிதானமாக, ஆலோசித்து சிந்தனையைச் செயல்படுத்த வேண்டும். எந்த ஒரு காரியத்திலும் முயற்சி செய்யாமல், எந்த இலட்சியமும் முழுமையடையாது. எனவே ஆக்கபூர்வமாக செயல்படுத்துதல் அவசியமாகும்.

தன்னம்பிக்கை (Self Confidence)

இந்த இலட்சியப் பயணத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இருக்க வேண்டும். இடைவிடாது உழைப்போம். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் கிடைக்கு மென்ற நம்பிக்கை வேண்டும். வீழ்ந்தாலும் எழ வேண்டுமென்ற எண்ணம் வேண்டும். தோல்வியை அனுபவமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தோல்வியைப் படிக்கட்டுகளாக எண்ணும் மனோபாவம், தோல்வியே வெற்றியின் வழிகாட்டி என்கிற தொலைநோக்கு பார்வை யோடு செயல்பட வேண்டும்.

சகிப்புத்தன்மை (Tolerance)

இடர்ப்பாடுகளையும், சரிவுகளையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். எவ்வளவு பிரச்சனை ஏற்பட்டாலும், சகித்துக் கொள்ளும் குணம் மிகவும் இன்றியமையாத தாகும். பொறுமையோடு, ஏற்படும் சங்கடங் களையும், குழ்நிலைக்கோளாறுகளையும், சரிவு களையும் ஆராய்ந்து செயல்படுதல், தோல்வியைக் கண்டு மீண்டும் மன சோர்வடை யாமல், தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் மிக அவசியமான ஒன்றாகும்.

அர்ப்பணித்தல் (Sacrificing)

தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்படுதல் வேண்டும். எந்த ஒரு துறையிலும், முழு ஈடுபாட்டுடன், தான் அதற்காகவே வாழ்வதாகவே எண்ணி தன் வாழ்க்கையின் முக்கியத்துவம் முழுவதும் தனது இலட்சியமே என்று பாவிக்கிற தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்காக எந்த ஒரு ஆசையையும், விட்டுக் கொடுக்கிற மனப் பக்குவமே அர்ப்பணித்தலாகும்.

முழுஈடுபாடு (Involvement)

எந்த ஒரு இலட்சியப் பயணத்திலும், முழு ஈடுபாடு அவசியம். ஈடுபாடு இல்லாமல் செயல் படும் நபரால் நிச்சயமாக வெற்றிபெற இயலாது. தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது நமது இலட்சியம், கவனத்துடனும், முழு முனைப்புடனும் செயல்பட்டு வெற்றிபெற வேண்டும் என்கிற முழு ஈடுபாடு அவசியம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தோல்விக்கு நன்றி சொல்!  Empty Re: தோல்விக்கு நன்றி சொல்!

Post by முழுமுதலோன் Sat Mar 15, 2014 11:23 am

மேற்சொன்ன திறமைகளையும், குணாதிசயங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்வியைக் கண்டு பின்வாங்காமல் எதிர்கொள்ளும் மனோபலத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்விகள் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் நல்ல அனுபவங்களே. அவை நம்மை பண்பட்ட நபர்களாக உருவாக்கும் உபகரணம். மனித மனதை சிற்பமாக உருவாக்கும் உளிகள். உளிகளால் உருவாகும் வலிகளே நம்மை உயர்ந்தவர்களாக உருவாக்கும்.

வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள் நம்மை மேலும் உயர்த்தெழச் செய்யும் ஊக்கிகள். தோல்வியால் துவண்டுவிடும் மனிதர்களை நாம் இன்று மிகுதியாகக் காண்கிறோம். தேர்வில் வெற்றி பெறா விட்டால், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது வீட்டை விட்டு வெளியேறிவிடுவது, போன்ற அர்த்தமில்லாத செயல் களில் ஈடுபடும் நபர்கள் இன்று ஏராளம். வாழ்க்கை யினுடைய தத்துவத்தை மறந்து போனவர்களே இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இரவு-பகல், ஏற்றம்-இறக்கம், இது போலத்தான் வெற்றி-தோல்வியும் தோல்வி என்பதும், தோல்வியினால் மனச் சோர்வடைவதும், அதனால் முயற்சியில் மெத்தனம் காட்டுவதும் தன்னம்பிக்கையின்மையையே காட்டுகிறது.

இன்றைய சமுதாயத்தில் இளைஞர்கள் பலபேர் முயற்சி செய்ய முற்படுவதில்லை. ஏனென்றால், தோற்றுவிட்டால்? என்ற பயம். தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத மனபக்குவமின்மை. தோல்வியும் நமக்கு ஏற்படும் அனுபவமே. அதனையும் சந்திப்போம், வெற்றி பெறவேண்டும் என்பது தவறில்லை. வெற்றி மட்டுமே பெறவேண்டும் என்று நினைப்பது, தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையை உருவாக்குகிறது. எனவே வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுபவர்கள் தோல்வியில் மனம் வருந்தாமல், அந்தத் தோல்வியைத் தோற்கடிக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்.

இன்றைய கால கட்டத்தில் பலபேர் முயற்சி செய்ய கூட முற்படுவதில்லை. முயற்சியில் தோற்றுவிட்டால் என்ன செய்வது? அடுத்த முயற்சியில் வெற்றி காண்பது! என்று எண்ணி தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும். நமது பலம் – பலவீனம் எவை? வெற்றி பெற்றவருடைய பலம் என்ன என்பதை எல்லாம் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

நாம் எப்படி வெற்றியை பெருமிதத்தோடு ஏற்றுக் கொள்கிறோமோ, அதுபோலவே தோல்வியையும் ஏற்றுக் கொண்டு பாவிக்கிற தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உண்மையிலேயே நாம் தோல்விக்குத் தான் அதிகமாக நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் அவையே நம்மை பக்குவப்படுத்தும் எந்திரம் என்ற மந்திரத்தை புரிந்து கொண்டால், முயற்சியில் வெற்றி என்பது நிச்சயம்.

பிறந்தது முதல் நாம் ஒவ்வொரு முயற்சியிலும், தோல்வியைக் கடந்தே வந்திருக்கிறோம். இன்று நாம் நடக்கிறோம் என்றாலும், பேசுகிறோம் என்றாலும், பல முயற்சிகளில் தோல்வியைக் கடந்தே வெற்றி கண்டிருக்கிறோம். முதல் முயற்சியிலேயே நடக்கவும் இல்லை, பேசவும் இல்லை. அது போலதான் நமது குறிக்கோள்களை அடையும் போதும், முதல் முயற்சியே வெற்றி தரும் என்ற நிச்சயம் இல்லை. எனவே எப்படி வெற்றியை பாவிக்கிறீர்களோ அதைப் போன்று தோல்வியையும் பாவியுங்கள். தோல்வி என்பது நிரந்தரமல்ல. உங்கள் விடாமுயற்சி நிரந்தரமாக இருந்தால் “தோல்வியும் ஒருநாள் உங்களிடம் தோற்கும்”.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தோல்விக்கு நன்றி சொல்!  Empty Re: தோல்விக்கு நன்றி சொல்!

Post by முழுமுதலோன் Sat Mar 15, 2014 11:24 am

வாழ்க்கையை நாம்தான் உருவாக்கிக் கொள்கிறோம். எப்படி என்றால் இன்பத்திற்கும் துன்பத்திற்கும், வெற்றிக்கும் தோல்விக்கும், வளமைக்கும் வறுமைக்கும், ஏற்றத்துக்கும் இறக்கத்திற்கும் நம்முடைய எண்ணங்களே காரணமாக இருக்கின்றன.

ஊடும் பாவும் சேர்ந்து ஆடை உருவாவது போல, அரிசியும், நீரும் சேர்ந்து சோறு ஆவது போல எண்ணமும் செயலும் சேர்ந்து வாழ்க்கையின் வெற்றியை அழைத்து வருகிறது.

எண்ணம் ஒரு மலர் அதனுடைய இதழ் களாக இருப்பது செயல். அதன் நறுமணமாக இருப்பது வெற்றி.

விதையின் வீரியத்தையும் நிலத்தின் வளத்தையும் பொறுத்து விளைச்சல் அமைகிறது. எண்ணத்தின் செம்மையையும் செயல் திறனையும் பொறுத்துதான் வாழ்க்கை அமையும்.

உயிரின் ஓட்டத்திற்கும், உடலின் வளர்ச்சிக்கும் ரத்தம் ஓட்டம் எப்படி இன்றியமை யாததாக இருக்கின்றதோ அப்படி வர்ணத்தின் இயக்கத்திற்கு செயல் அவசியமாக இருக்கிறது.

கடலிலே ஓயாது அலைகள் அடித்துக் கொண்டிருப்பது போல நம்முடைய எண்ண அலைகள் தொடர்ந்து எழுந்து செயல் என்னும் கரையில் மோதி வெற்றி என்ற நிகழ்வை நடத்துகிறது. 

உடலுக்கு மூச்சு உயிராக இருப்பது போல, பயிருக்கு மழை தேவையானது போல, பறவைக்கு இறகு ஆதாரமாக இருப்பது போல நம்முடைய வாழ்க்கைக்கு எண்ணம் அடிப்படையாக இருக்கிறது.

வாழ்க்கை ஒரு இசை என்றால் அதனுடைய நாதம் எண்ணம். வாழ்க்கை ஒரு களஞ்சியம் என்றால் அதன் செல்வம் எண்ணம். வாழ்க்கை ஒரு கதை என்றால் அதன் கரு எண்ணம்.

சோலையில் மலரும் மலர்கள் பலவகை வடிவமும் தன்மையும் தரமும் இருப்பதைப் போலவே, நம்மிடம் தோன்றும் எண்ணம் பல் வேறு தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது.

நாம் நல்ல எண்ணங்களை விரைந்து ஏற்றுக் கொள்ளும்போது செயலும் உடனடியாக செயலாற்றாத் தோன்றும்.

அழகிய புனிதமான உணர்ச்சியில் பொங்கி வரும் எண்ணங்களை ஆக்க வழியிலே அரவணைத்துச் செயலாற்றும் போது நிச்சயம் வெற்றி வீரர்களாக திகழ முடியும்.

நம்முடைய எண்ணத்தை எப்பொழுதும் தெளிவாகவும் உறுதியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். 

நாம் வாழப் பிறந்திருக்கிறோம். நம்மால் முடியாதது எதுவும் இல்லை. நம்முடைய செயலாற்றலினால் எதையும் சந்திக்க முடியும். அதற்குரிய அறிவும் ஆற்றலும் நம்மிடத்தில்தான் இருக்கிறது.

இந்த விதமான ‘பாசிடிவ்’ எண்ணத்தை எப்பொழுதும் கொண்டிருக்க வேண்டும்.

இதுதான் வெற்றியை எப்பொழுதும் நம்முடனேயே இருக்கச் செய்யும் எண்ணம் இளமை பற்றியதாக இருக்குமானால் இளமை யுடன் இருக்க முடியும்.

எண்ணம் கிழத் தன்மையுடன் இருந்தால் இளமையிலேயே கிழத் தோற்றத்துடன் காட்சி அளிக்க இயலும். முதுமை முதலில் தன்னுடைய வேலையைத் தொடங்குவது உடலில் அல்ல! எண்ணத்தில்தான்!

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தோல்விக்கு நன்றி சொல்!  Empty Re: தோல்விக்கு நன்றி சொல்!

Post by முழுமுதலோன் Sat Mar 15, 2014 11:25 am

உள்ளத்தில் விதைக்கப்பட்ட முதுமைப் பற்றிய எண்ணமே இதற்கு மூல காரணமாக இருக்கிறது. உடலில் பூத்துக் காயாகிப் பழமாகிக் குலுங்குகிறது.

எண்ணத்தில் வேப்பமர விதைகளைப் பயிரிட்டால் வேப்பம் பழங்களைத்தான் பெற முடியும். மாங்கொட்டையைப் பயிரிட்டால் மாம்பழங்களைத்தான் பறிக்க முடியும்.

எண்ணங்கள் முதலில் உருவமற்ற பொருளாகவே இருக்கும். பின்பு அவை செயல் உருவில் ஆகும் போது உருவமான பொருள் களாக மாறும்.

நாம் எண்ணும் எண்ணமே நம்மை உயர் வடையச் செய்யவோ அல்லது தாழ்வடையச் செய்யவோ செய்யும். வறுமையான எண்ணம் ஆழமாகப் பதிந்து விட்டால் அது வறுமையை தவிர வேறு ஒன்றையும் கொண்டு வராது.

வளமான எண்ணத்தைக் கொண்டிருந்தால் வளமையை நம்மிடம் குடிகொண்டிருக்கும்.

வறுமையான எண்ணத்தை விதைத்து விட்டு வளமான வாழ்வை எதிர்பார்ப்பது முரட்டுத் துணி நெய்யும் தறியில் காஞ்சிபுரப் பட்டுப்புடவையை எதிர்பார்ப்பது போலாகும். தரக்காரனிடம் புதிய விஞ்ஞானக் கண்டு பிடிப்பை எதிர்நோக்குவது போலாகும். 

வளவாழ்வு வாழ விரும்பினால் முதலில் நம்முடைய எண்ணத்தில் உள்ள வறுமையான நினைவை விரட்டி அடிக்க வேண்டும்.

நம்பிக்கை மகிழ்ச்சி, நல்ல எண்ணம் பரந்த நோக்கு விரிந்த மனப்பான்மை இவைகளே வள வாழ்வை பிடித்து இழுத்துவரும். வளவாழ்வு வாழ விரும்பினால் அதைப் பற்றியே பேசவும் சிந்திக்கவும் வேண்டும்.

வளவாழ்வை அடைந்தே தீருவது என்ற எண்ணம் தொடர்ந்து இருப்பது மிகவும் அவசியமாகும்.

சிற்பியின் மனதில் உருவாகும் எண்ணம் இறுதியில் சலவைக்கல்லில் உருவமாக அமைந்து விடுகின்றது. இதே போன்று நாம் எண்ணும் எண்ணங்கள் நிச்சயமாக ஒருநாள் நடந்தே தீரும்.

பாரதியார் சிறுவராக இருந்த போது அவர் தந்தை கணக்குப் போடு என்றார்.

“கணக்கு, மணக்கு பிணக்கு” என்று அடுக்கிக் கொண்டே போனார்.
“என்னடா விழிக்கிறாய்” என்று கேட்டார் தந்தை.

“விழி, பழி முழி குழி” என்று கூறினார் பாரதியார். இளவயதிலேயே கவிதைகளில் அவருடைய எண்ணம் ஆழ்ந்தபடியினால் தான் பிற்காலத்தில் தலைசிறந்த கவிஞராகத் திகழ முடிந்தது. உலகம் போற்றும் உன்னதக் கவிஅரசராகப் புகழ் பெறமுடிந்தது.

எண்ணத்துடன் எண்ணிய செயலை எய்தியே தீர்வது என்றஉறுதியுடன் ஒருமுகப்பட்ட நிலையுடன் இருந்தால் வெற்றி நமக்கேதான்.



http://www.no1tamilchat.com/

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தோல்விக்கு நன்றி சொல்!  Empty Re: தோல்விக்கு நன்றி சொல்!

Post by sreemuky Sat Mar 15, 2014 8:30 pm

கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம்
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

தோல்விக்கு நன்றி சொல்!  Empty Re: தோல்விக்கு நன்றி சொல்!

Post by முரளிராஜா Sun Mar 16, 2014 8:22 am

தன்னம்பிக்கை ஊட்டும் பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தோல்விக்கு நன்றி சொல்!  Empty Re: தோல்விக்கு நன்றி சொல்!

Post by rammalar Sun Mar 16, 2014 9:39 am

வளமான எண்ணத்தைக் கொண்டிருந்தால்..!!
-
 சூப்பர் 
-
அதனால்தான் ஆசிர்வாதம் செய்யும் முதியவர்கள்
''எண்ணத்தைப் போல வாழு''
என சொல்வாரகள்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

தோல்விக்கு நன்றி சொல்!  Empty Re: தோல்விக்கு நன்றி சொல்!

Post by ஸ்ரீராம் Sun Mar 16, 2014 2:52 pm

சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தோல்விக்கு நன்றி சொல்!  Empty Re: தோல்விக்கு நன்றி சொல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum