Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பூமிக்கடியில் குப்பை தொட்டி ! : சென்னையில் விரைவில் அறிமுகமாகிறது
Page 1 of 1 • Share
பூமிக்கடியில் குப்பை தொட்டி ! : சென்னையில் விரைவில் அறிமுகமாகிறது
சுகாதார சீர்கேட்டை தவிர்க்கும் வகையில், சாலை ஓரங்களில் பூமிக்கு அடியில் குப்பை தொட்டிகளை புதைக்கும் புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி விரைவில் செயல்படுத்த உள்ளது. சென்னையில் தினசரி, 5,000 டன் குப்பை சேகரமாகிறது. சென்னையின் தீராத பிரச்னைகளில் குப்பை சேகரிப்பதும் ஒன்று.
செயல்விளக்கம்
இந்த நிலையில், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில், பூமிக்கடியில் குப்பை தொட்டியை புதைத்து குப்பை சேகரிக்கும் திட்டத்தை போல், சென்னையிலும் அமல்
படுத்த, மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தின் பிரதான நோக்கம், துர்நாற்றம், சுகாதார சீர்கேட்டை உடனடியாக தடுப்பது. குப்பை சேகரிப்பை மேலும் எளிமையாக்குவது, செலவை குறைப்பது ஆகியவை தான்.
ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்தை, பின்லாந்து நாட்டை சேர்ந்த, 'மொலாக்' நிறுவனம், கண்டுபிடித்து அதற்கான குப்பை தொட்டிகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. அதனால், இந்த திட்டத்திற்கு 'மொலாக்' திட்டம் என்று கூட பெயர் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் அடிப் படையில் தயாரிக்கப்படும் குப்பை தொட்டி மாதிரிகள் குறித்து 'மொலாக்' நிறுவன பிரதிநிதிகள் நேற்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
குப்பை தொட்டி எப்படி இருக்கும்?
* 'ஹை டென்சிட்டி பாலி எத்திலின்' என்ற பொருள் மூலம் தயாரிக்கப்படும், இந்த குப்பை ட்டி, 9 அடி உயரம் கொண்டது.
* உருளை வடிவிலும், செவ்வக வடிவிலும் இருக்கும்.
* உருளை வடிவம் 0.5 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை விட்டம் கொண்டது.
* 300 லிட்டர் முதல் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த குப்பை தொட்டியில், அதிகபட்சம் 2 டன் குப்பை வரை சேகரிக்கலாம்.
* இதன் விலை 30 ஆயிரம் ரூபாய் முதல் 1.6 லட்சம் ரூபாய் வரை.
* 6 அடி வரை பூமிக்கடியில் குப்பை தொட்டி புதைக்கப்படும். மூன்று அடி உயரம் மட்டும் வெளியே தெரியும்.
* மேல்பகுதியில் 2 அடி விட்டம் கொண்ட மூடி இருக்கும். அதை திறந்து குப்பையை உள்ளே போட வேண்டும்.
* இந்த தொட்டியில், மூடியுடன் 'பாலி எத்திலின்' உறை, கோணி போன்று பொருத்தப்பட்டிருக்கும்.
* மக்கள் போடும் குப்பை, இந்த உறையில் சேகரமாகும். அதை கிரேன் பொருத்தப்பட்ட குப்பை வாகனம் மூலம் வெளியே எடுத்து, லாரியில் நிரப்ப முடியும்.
* குப்பை தொட்டியின் உட்புறம் 'பாலி எத்திலின்' பொருளாலான உறை இருப்பதால், திரவ கழிவுகளை கொட்டினாலும் துர்நாற்றம் வீசாது.
* 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு குப்பை தொட்டி, மூன்று இரும்பு காம்பாக்டர் தொட்டிகளுக்கு இணையானது. குப்பை தொட்டி நீண்ட காலத்திற்கு உழைக்கும்.
* தமிழகத்தின் 11 சுற்றுலா தலங்களில், இதுபோன்ற 300 குப்பை தொட்டிகளை, சுற்றுலா வளர்ச்சி கழகம் பொருத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை நகர சாலைகளில் இந்த குப்பை தொட்டிகளை பொருத்த மூன்று முதல் ஐந்து அடி அகலத்திற்கு இடம் போதும். இவற்றை சென்னை சாலைகளில் பொருத்துவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக கடற்கரை, பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், சினிமா திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ள இடங்களில் பொருத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விரைந்து செய்வரா?
பூமிக்கடியில் குப்பை தொட்டியை புதைக்கும் இந்த திட்டம், ஐரோப்பா மற்றும் பிரிட்டன் நாடுகளில், ௧௯௮௦களிலேயே நடை முறைக்கு வந்து விட்டது. கடந்த, 2012ல், ஆப்ரிக்காவின் நமீபியா நாட்டிலும் அமல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் இப்போது தான் இதுபற்றியே யோசனை பிறந்துள்ளது.
நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பூமிக்கடியில் குப்பை தொட்டி ! : சென்னையில் விரைவில் அறிமுகமாகிறது
நல்லது. மக்கள் தெருக்கு தெரு கொட்டாமல் இருந்தால் சரி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பூமிக்கடியில் குப்பை தொட்டி ! : சென்னையில் விரைவில் அறிமுகமாகிறது
வரவேற்க்கப் பட வேண்டிய திட்டம்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பூமிக்கடியில் குப்பை தொட்டி ! : சென்னையில் விரைவில் அறிமுகமாகிறது
இது போன்ற குப்பைத் தொட்டிகளை பின்லாந்து
நாட்டிடமிருந்துதான் வாங்க வேண்டுமா?
-
இதனை உள்நாட்டிலேயே தயாரிக்க முடியாதா..??
-
அரசு பரிசீலிக்க வேண்டும்..
-
நாட்டிடமிருந்துதான் வாங்க வேண்டுமா?
-
இதனை உள்நாட்டிலேயே தயாரிக்க முடியாதா..??
-
அரசு பரிசீலிக்க வேண்டும்..
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பூமிக்கடியில் கற்களாக பலர் புதைந்து புழுங்குகின்றனர்....
» வயிறு ஒன்றும் குப்பை தொட்டி அல்ல !
» கணினி, பில்லிங் மிஷின் உள்ளிட்ட நவீன வசதி கொண்ட ஆட்டோக்கள்- சென்னையில் விரைவில் அறிமுகம்
» தங்கத்துக்கு மாற்றாக அறிமுகமாகிறது 'லுமினக்ஸ் யூனோ' உலோகம்
» பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகள்
» வயிறு ஒன்றும் குப்பை தொட்டி அல்ல !
» கணினி, பில்லிங் மிஷின் உள்ளிட்ட நவீன வசதி கொண்ட ஆட்டோக்கள்- சென்னையில் விரைவில் அறிமுகம்
» தங்கத்துக்கு மாற்றாக அறிமுகமாகிறது 'லுமினக்ஸ் யூனோ' உலோகம்
» பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|