தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்

View previous topic View next topic Go down

முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்    Empty முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்

Post by முழுமுதலோன் Fri Jun 27, 2014 3:09 pm



நாம் நிமிர்ந்து நிற்கும் போதும், நடக்கும் போதும், உட்காரும் போதும் நமது உடல் எடையை முதுகு தாங்குகிறது. எனவே அதிக உடல் பருமனே முதுகுவலிக்கு முக்கிய காரணம்.   


முதுகு என்பது எலும்புகள் மட்டும் கொண்டது அல்ல. முதுகு எலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.   
இரண்டு எலும்புகளுக்கு நடுவே டிஸ்க் எனப்படும் ஓர் தட்டு உள்ளது. இது உராய்வை தடுக்கின்றது.   
இந்த டிஸ்க் தெரித்து பிதுங்குவதாலும் சிலருக்கு முதுகுவலி ஏற்படலாம். மேலும் முதுகு எலும்பினைச் சுற்றி தசைகள், மற்றும் நார்கள் உள்ளன. இவையாவும் சேர்ந்து உடல் எடையை சீராகத் தாங்குகின்றன. இதைத் தவிர முதுகெலும்பு வழியாகத்தான் நரம்புகள் செல்கின்றன.   
எனவே முதுகுவலி என்பது இவற்றில் ஏதாவது ஒன்றிலிருந்து அதாவது முதுகெலும்பு, டிஸ்க், தசைகள், நார்கள், முதுகெலும்பு சந்திப்புகள் நரம்புகள் போன்றவற்றில் எதிலிருந்தும் முதுகுவலி வரலாம்.   

காரணங்கள்: 

தண்டுவட- டிஸ்க் பாதிப்பினால் ஏற்படும் முதுகுவலி:   

முதுகெலும்புகளுக்கு இடையே உள்ள இண்டர் வெர்பல் டிஸ்க் தேய்வதால், பிதுங்குவதால் வீங்குவதால் மேலும் நரம்புகளை அழுத்துவதால் ஏற்படுகிறது.   
20 சதவீத முதுகுவலி டிஸ்க் பிரச்சினையால் வருகிறது. 20-40 வயதுள்ளவர்களுக்கு வருகிறது. நீண்ட நேரம் உட்காரும் போதும், படுக்கும் போதும் நடு முதுகில் வலி இருக்கிறது.   
மேலும் காலின் ஒரு பக்கமாக வலி பரவலாம். டிஸ்க் பிதுங்கி நரம்புகளை அழுத்துவதால் காலில் வலி பரவலாம். கால்களை தூக்கும் போதும், குனியும் போதும், கனமான பொருள்களை தூக்கும் போதும் வலி இருக்கும்.   

இத்தகைய முதுகுவலி வந்தால் என்ன செய்ய வேண்டும்? முதல் தடவையாக வரும் முதுகுவலிக்கு உடனடி ஓய்வு தேவை. என்ன செய்தால் வலி அதிகமாகிறதோ அதனை தவிர்க்க வேண்டும்.   

உடனடியாக மருத்துவரை அணுகி வலியின் காரணத்தை உறுதி செய்து மாத்திரை மற்றும் ஓய்வு ஆகியவற்றாலேயே முழுவதுமாக சரி செய்திட முடியும்.   
சுயமருத்துவம், கை மருத்துவம், சுளுக்கு எடுத்தல், மசாஜ் செய்தல் ஆகியவை ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும். இத்தகைய வலிகளை ஆரம்பத்திலேயே சரி செய்வது மிக எளிது. சரியாக சிகிச்சை எடுத்து கொள்ளாவிடில், நிரந்தர முதுகு வலியாகவோ, அல்லது நரம்புகளை அழுத்தி நரம்புகள் செயலிழக்கவோ வாய்ப்புகள் உள்ளது.   

தண்டுவட நரம்பு பாதிப்பினால் ஏற்படும் முதுகுவலி:   

முதுகு எலும்பு தேய்வதாலும், முதுகு எலும்புகள் விலகுவதாலும், தண்டு வட நரம்புகளில் அழுத்தம் ஏற்படுவதால் முதுகு வலி வருகின்றது.   

சுமார் 15 சதவீத முதுகுவலிக்கு இது காரணம், இது போன்ற நரம்பு அழுத்த முதுகுவலி பெரும்பாலும்வயதானவர்களுக்கும், முதுகில் பலமான அடி ஏற்பட்டவர்களுக்கும் வருகிறது. இந்த முதுகு வலி ஒரு பக்கமாக இருக்கும்.   
முதுகில் இருந்து கால்வரை வலி இருக்கும். நடக்கும் போதும், கால்களை தூக்கும் போதும், பொருட்களை குனிந்து தூக்கும் போதும் வலி இருக்கும். இத்தகைய வலி பெரும்பாலும் ஓய்வு பயிற்சி போன்றவைகளாலும் சிலருக்கு அறுவை சிகிச்சை மூலமாகவும் சரி செய்ய முடியும்.   


கீழ் இடுப்பு வலி:   

முதுகெலும்புகளும், இடுப்பு எலும்புகளும் சேரும் சந்திப்பு சில சமயம் முதுகுவலிக்கு காரணமாகிறது. இந்த சந்திப்பு மூட்டுகளில் தேய்மானம் அடிபடுதல் மற்றும் எலும்பு நோய்கள் போன்றவைகளால் பாதிப்படைவதால் முதுகுவலி ஏற்படுகிறது. சுமார் 10%முதுகுவலிக்கு இது காரணமாகிறது. இந்த கீழ் இடுப்பு சந்திப்பு வலி பெரும்பாலும் உட்காரும் பகுதியில் வலி இருக்கும்.   
தொடைப்பகுதியின் வெளிப்பக்கத்தில் வலி இருக்கும், கால்களை மடக்கும் போதும் வலி அதிகமாகும். இது போன்ற முதுகுவலியை சிடி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள் மூலமாக கூட கண்டறிய இயலாது.   

நோயாளியை பரிசோதனை செய்வதாலும் இந்த குறிப்பிட்ட சந்திப்பில் எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து ஊசி மருந்துகளை செலுத்துவதால் மட்டுமே வலியின் காரணத்தை அறியவும் அவற்றை நீக்கவும் இயலும்.

நன்றி"தமிழ்வின்"
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்    Empty Re: முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Jun 27, 2014 4:39 pm

பலருக்கு இருக்கின்ற பிரச்சினை. பயனுள்ள பதிவு.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்    Empty Re: முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்

Post by செந்தில் Fri Jun 27, 2014 8:00 pm

தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்    Empty Re: முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்

Post by முரளிராஜா Sat Jun 28, 2014 10:49 am

பயனுள்ள பதிவு.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்    Empty Re: முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்

Post by mohaideen Sat Jun 28, 2014 2:03 pm

பயனுள்ள தகவல்கள்

நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்    Empty Re: முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum