தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆட்கடத்தல் வியாபாரம்

View previous topic View next topic Go down

ஆட்கடத்தல் வியாபாரம்  Empty ஆட்கடத்தல் வியாபாரம்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 23, 2014 10:56 pm

ஆட்கடத்தல் வியாபாரம்  Wbz6ti
சட்டம் உன் கையில்

உலக அளவில் போதைப் பொருள் மற்றும் ஆட்கடத்தல் வியாபாரமே பிரதான குற்றங்களாக நிலவி வருகிறது. குறிப்பாக, ஆட்கடத்தல் வியாபாரத்தில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளும் பெண்களுமே. இந்தச் சூழலில் சிக்கிக் கொள்ளும் பெண்களும் குழந்தைகளும் கொத்தடிமைகளாக, கடுமையான வேலைக்கு பயன்படுத்துவதற்கும், பிச்சையெடுப்பதற்கும், உடல் உறுப்புகளை திருடுவதற்கும், பெருமளவில் பாலியல் தொழிலுக்குமே உட்படுத்தப்படுகிறார்கள்.

மனித இனம் தோன்றிய முதலே பாலியல் தொழிலும் மனித சமுதாயத்தில் வேரூன்றிவிட்டது. நம்முடைய நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் பல இடங்களில் பல பெயர்களால் பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது. உதாரணமாக, தேவர்களுக்கு அடியார்களாக குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த பெண்களை மதத்தின் பெயரால் இறைவனுக்கு அர்ப்பணித்து, தேவதாசிகளாக அவர்களை வகைப்படுத்தி அரசர்களும், ஜமீன்தார்களும், ஊர் பெரிய மனிதர்கள் என்ற ஏனைய ஆண் மகன்களும் தங்களுடைய உடல் இச்சையை தீர்த்துக்கொள்ள பயன்படுத்தினார்கள்.

பெண் இனக் காவலர்களாக விளங்கிய தந்தை பெரியார், மூவலூர் ராமாமிர்த அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்கள் ஒட்டுமொத்த பெண்ணின விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர்கள். முக்கியமாக, தேவதாசி முறையை ஒழிக்க பெரிதும் பாடுபட்டார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. அவர்களின் பெரும் முயற்சியின் பயனாக தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1950ல் நியூயார்க்கில் நடந்த ஆட்கடத்தல் வியாபாரத்துக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையில் இந்தியாவும் கையொப்பமிட்டுள்ளது.  அதன் அடிப்படையில் 1956ம் ஆண்டு ஆட்கடத்தல் வியாபார தடுப்புச் சட்டம் (Immoral Traffic ( Prevention ) Act, 1956) இயற்றப்பட்டது. இதற்கு முன்னர் ஒருசில மாநிலங்களில் இது குறித்த சட்டங்கள் இருந்தபோதிலும் அவை நிறைவானதாக இருக்கவில்லை. பாலியல் தொழில் மற்றும் ஆட்கடத்தல் வியாபாரத்துக்கான பொதுவான ஒரு மத்திய சட்டமும் அதுவரை இல்லை. இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு இருமுறை திருத்தமும் செய்யப்பட்டுள்ளது. நம்முடைய அரசியல் அமைப்பு சாசனத்தின் 23ம் ஷரத்தின் கீழும் ஆட்கடத்தல் வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளது.

அதன் 35வது ஷரத்தின் கீழ் அரசியல் அமைப்பு சாசனம் அமலுக்கு வந்தவுடன் இவ்வாறான குற்றங்களை தடுக்க தனிச் சட்டம் இயற்றப்படவேண்டும் என்று விளம்புகிறது. அதன் அடிப்படையிலேயே இந்தச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கான நோக்கம் பாலியல் தொழிலை ஒரு குற்றமாக பார்க்கவோ, அதில் ஈடுபடும் பெண்களை தண்டிக்கவோ அல்ல... வியாபார ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆட்கடத்தலை (ஆண், பெண், குழந்தைகள் உள்பட) தடை செய்வதற்கே. இந்தச் சட்டத்தின் கீழ் பாலியல் தொழில் என்பது ஒரு தனிநபரின் உடலை வியாபார நோக்கில் தவறாக பயன்படுத்துவது, ஒருவர் தன் உடலை பணத்துக்காகவோ, வேறு ஒரு பொருளுக்கு ஈடாகவோ பயன்படுத்த அனுமதிப்பது. அதாவது, ஒருவர் தவறான முறையில் ஒருவரை தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதிப்பதும், அதற்கு ஈடாக பணமோ பொருளோ பெற்றுக்கொள்வதும் மட்டுமே தண்டனைக்குரிய குற்றம்.


நன்றி : தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஆட்கடத்தல் வியாபாரம்  Empty Re: ஆட்கடத்தல் வியாபாரம்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 23, 2014 10:57 pm

இந்தச் சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்...

* அந்தந்த மாநில மற்றும் மத்திய அரசு தவிர, ஒரு தனிநபர் உரிமம் பெறாமல் முன் அனுமதியின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு மையங்களோ, இல்லங்களோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காரணம், இவ்வாறான இடங்களை பாலியல் தொழிலுக்கு ஏதுவாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

* கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களின் அருகில் (சுமார் 200 மீட்டர்) பாலியல் தொழில் மேற்கொள்ளுவது இச்சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

* இச்சட்டத்தின் கீழ் பாலியல் தொழில் தடுப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* பாலியல் தொழில் நடைபெறும் இடங்களை சோதனை இடும்போது, அவ்வாறான சோதனை ஒரு பெண்மணியின் முன்னிலையில் நடைபெற வேண்டும். அந்தப் பெண் அந்த குறிப்பிட்ட இடத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

* இச்சட்டத்தின் கீழ் 16 வயதுக்குட்பட்டவர் குழந்தைகளாகவும், 16 வயதிலிருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள் சிறார்களாகவும், 18 வயதுக்கு மேற்பட்டோர் வயது வந்தவராகவும் கருதப்படுவார்கள்.

*  இச்சட்டத்தின் கீழ் இவ்வாறான வழக்கு களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களையும் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பாலியல் தொழில் என்பது பொருளாதார ஆதாயத்துக்காக பாலியல் ரீதியாக ஒருவருடன் தவறான உறவு வைத்துக்கொள்வதும் அல்லது ஒருவரை தவறான நோக்கில் பயன்படுத்திக் கொள்வதுமேயாகும். எந்த ஒரு வீடோ, அறையோ, வாகனமோ அல்லது அவற்றில் ஒரு பாகமோ இப்படிப் பயன்படும்போது, அதனை பாலியல் தொழில் விடுதியாக சட்டம் கருதுகிறது. ஒருவர் பாலியல் தொழில் விடுதியை நடத்துபவராகவோ, பொறுப்பாளராகவோ அல்லது அவ்வாறு இருப்பவரின் உதவியாளராக இருப்பவரோ  முதன்முறை குற்றம் சாட்டப்பட்டிருப்பின் குறைந்தபட்சம் ஓர் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.  அடுத்தடுத்த குற்றங்களுக்கு குறைந்தது 2 ஆண்டிலிருந்து 5 ஆண்டு வரை சிறைத்தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஆட்கடத்தல் வியாபாரம்  Empty Re: ஆட்கடத்தல் வியாபாரம்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 23, 2014 10:58 pm

ஒரு நபர் வாடகைதாரராகவோ, குத்தகைதாரராகவோ, தங்கியிருப்பவராகவோ, அந்த இடத்தின் பொறுப்பாளராகவோ இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தை தெரிந்தே முழுமையாகவோ, ஒருபகுதியையோ பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்த அனுமதிக்கும் பட்சத்தில் இச்சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும். அது முதன்முறை குற்றமாக இருப்பின் 2 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். அடுத்தடுத்த குற்றங்களுக்கு 5 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

இவர்கள் அறியாமையினால் இந்தக் குற்றம் நடைபெறுகிறது என்பதை நிரூபணம் செய்ய முடியாத நிலையில் இவர்களைக் குற்றவாளிகளாகவே இந்தச் சட்டம் கருதும். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் இவர்களின் வாடகை ஒப்பந்தம் மற்றும் குத்தகை ஒப்பந்தம் சட்டப்படி செல்லத்தகாது என்று நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

15 வயது நிரம்பிய எந்த ஒரு நபரும் பாலியல் தொழிலில் ஈடுபடும் ஒருவருடன் வசிக்கும் பட்சத்தில் அல்லது பாலியல் தொழில் செய்து அவர் ஈட்டும் பொருளில் வாழ்க்கை நடத்துவது அல்லது அப்படி ஈடுபடுபவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அல்லது தன்னுடைய ஆளுமையை அவர் மீது செலுத்துவது அனைத்துமே தண்டிக்கத்தக்க குற்றங்களாக இந்தச் சட்டம் கருதுகிறது. பொது இடங்களில் ஒரு நபர் அடுத்தவரை தன் பேச்சாலோ, செய்கையாலோ, உடல் அசைவாலோ ஒருவரை பாலியல் உறவுக்கு அழைக்கும் முயற்சி யில் ஈடுபடுவது சமூக நலனை பாதிப்பதோடு, தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகிறது.

விபசாரத் தொழில் பெருக்கத்தின் மூலம் பல நாடுகளில் எய்ட்ஸ் போன்ற பாலின நோய்கள் பெருமளவில் பரவி வருகின்றன. இந்தியாவும் அதற்கு ஒரு விதிவிலக்கல்ல. இப்போது பாலியல் தொழில் என்பது ஒரு சில நிலைகளில் மட்டுமே தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தைகளும் இந்தக் கொடுமை யில் தள்ளப்பட்டு தங்களுடைய எதிர்காலத்தை தொலைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

உச்ச நீதிமன்றம் ‘Vishal Jeet Vs Union of India’ வழக்கில் மாண்புமிகு நீதியரசர் எஸ்.இரத்தினவேல் பாண்டியன் கொடுத்த தீர்ப்பில், ‘வறுமையின் காரணமாகவே நம்நாட்டில் பல குழந்தைகள், மேலும் வயது வராத சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் இந்த பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள். அதனால் மனித இனத்தின் ஒழுக்கமும் பண்பாடும் சீர்குலைய வழிவகை ஏற்படுகிறது’ என்கிறார் அவர் தம் தீர்ப்பில் இக்குற்றத்தைத் தடுப்பதற்கான முறைகள் சிலவற்றை கொடுத்திருக்கிறார்கள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஆட்கடத்தல் வியாபாரம்  Empty Re: ஆட்கடத்தல் வியாபாரம்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 23, 2014 10:59 pm

* மாநில மற்றும் மத்திய அரசாங்கம் தங்களுடைய சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகளை இவ்வாறான குழந்தை பாலியல் தொழிலுக்கு பலியானவர்களை மீட்டு மறுவாழ்வளிக்க விரைவான துரித நடவடிக்கை எடுக்க பணிக்க வேண்டும்.

* மாநில மற்றும் மத்திய அரசாங்கம் ஒவ்வொரு  மண்டலத்துக்கும் ஒரு ஆலோசனை குழு அமைத்து அதில் சமூக நல ஆணையத்தின் செயலாளரும், சட்டத் துறையின் செயலாளரும், சமூகவியலாளர்களும், குற்றவியலாளர்களும், பெண்கள் நல அமைப்பை சார்ந்த உறுப்பினர்களும், குழந்தைகள் நல வாரியத்தின் உறுப்பினர்களும் போன்ற பல்வேறு தரப்பட்டவர்களை ஆலோசனை குழுவில் உள்ளடக்கி அவற்றின் மூலம் குழந்தை பாலியல் தொழிலை ஒழிக்க முயற்சி எடுக்க வேண்டும். சமுதாயத்தில் இவ்வாறான பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கவும், பாதுகாக்கவும், அவர்களின் வளர்ச்சிக்கும், நல்வாழ்வுக்கும் செயலாற்ற வழிவகை செய்தலும் வேண்டும்.

* மாநில மற்றும் மத்திய அரசாங்கம் தேவையான அளவு சீர்திருத்தப் பள்ளிகளையும் மறுவாழ்வு இல்லங்களையும் அமைத்து அவற்றில் தேர்ச்சி பெற்ற சமூக சேவையாளர்கள், மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்களுடன் செயல் படுதல்.

* மாநில மற்றும் மத்திய அரசாங்கம் மேற்கூறிய ஆலோசனை குழுவின் பரிந்துரையின் பேரில் குழந்தைகளை பாலியல் தொழிலில் இருந்து காப்பாற்ற இப்போது இருக்கும் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

* இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும் ஆலோசனைக் குழு தேவதாசி, ஜோகின் போன்ற இனவழி பாலியல் தொழிலை முற்றிலும் ஒழிக்க செயலாற்ற வழிவகை செய்யலாம்.

‘Gaurav Jain Vs Union of India’ இந்த வழக்கின் தீர்ப்பினை வழங்கிய மாண்புமிகு நீதியரசர் கே.இராமசாமி அவர்கள் பாலியல் தொழிலிலிருந்து மீண்ட பெண்கள் மற்றும் அவர்தம் குழந்தைகளுக்கு மறுவாழ்வுக்கான சில வழிமுறைகளை வழங்கியுள்ளார்.

* ஆட்கடத்தல் வியாபாரம் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்த ஆலோசனையின் மூலமாகவோ, அறிவுரையின் மூலமாகவோ அல்லது சற்று கடினமான நடவடிக்கையின் மூலமாகவோ முயற்சி செய்வது அவசியம்.

* பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண் களை அதிலிருந்து காப்பாற்றி மறுவாழ்வு அமைத்து, இந்த நாகரிக சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய ஒரு வாழ்வினை ஏற்படுத்த அரசு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.

* பாலியல் தொழிலில் ஈடுபடும் அல்லது மீட்டெடுக்கப்படும் ஒரு பெண்ணை இந்த சமூகம் குற்றவாளியாக எண்ணுவதைத் தவிர்த்து, பாதிக்கப்பட்ட ஒரு நபராக பார்வையை செலுத்து வதே நலன் பயக்கும். பொருளாதார ஈட்டுக்காக ஒருவர் தன் உடலை விற்பது வேண்டுமென்றால் குற்றமாக கருதப்படலாம். காலகால மாக நம் சமூகத்தில் ஒரு சில சமுதாயத்தை சார்ந்தவர்களை பாலியல் தொழிலில் தள்ளியது இந்த சமூகத்தின் குற்றமேயன்றி அந்தப் பெண்களின் குற்றமல்ல.

சட்டங்களால் மட்டுமே சமுதாயத்தில் நிலவும் குற்றங்கள் அனைத்தையும் ஒழித்துவிடுவது என்பது நடைமுறையில் சாத்தியமன்று. மனித சமுதாயம் ஒன்று திரண்டு ஒழிக்க முயற்சித்தால் அன்றி, இவ்வாறான குற்றங்கள் சமுதாயத்திலிருந்து மறைவது அவ்வளவு எளிதல்ல

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஆட்கடத்தல் வியாபாரம்  Empty Re: ஆட்கடத்தல் வியாபாரம்

Post by செந்தில் Thu Jul 24, 2014 11:11 am

விரிவான பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆட்கடத்தல் வியாபாரம்  Empty Re: ஆட்கடத்தல் வியாபாரம்

Post by sawmya Thu Jul 24, 2014 1:34 pm

சட்டங்களால் மட்டுமே சமுதாயத்தில் நிலவும் குற்றங்கள் அனைத்தையும் ஒழித்துவிடுவது என்பது நடைமுறையில் சாத்தியமன்று. மனித சமுதாயம் ஒன்று திரண்டு ஒழிக்க முயற்சித்தால் அன்றி, இவ்வாறான குற்றங்கள் சமுதாயத்திலிருந்து மறைவது அவ்வளவு எளிதல்ல
 கோபம் சோகம் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ஆட்கடத்தல் வியாபாரம்  Empty Re: ஆட்கடத்தல் வியாபாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum