தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்களுக்கு தெரியுமா?

View previous topic View next topic Go down

உங்களுக்கு தெரியுமா? Empty உங்களுக்கு தெரியுமா?

Post by முழுமுதலோன் Sun Aug 10, 2014 10:54 am

புனித அல்ஃபோன்சா இந்தியாவின் முதல் பெண் புனிதர் ஆவார்.

காந்தியடிகளுக்குத் தமிழில் கையொப்பமிடக் கற்றுத் தந்தவர் இரட்டைமலை சீனிவாசன் ஆவார்.

பொதுவாக எல்லா நொதிகளும் புரதங்களே என்று பலகாலமாய் நம்பப்பட்டு வந்தது. பின்னரே ரிபோசைம் எனும் நியூக்ளிக் அமிலங்களும் நொதிகளாய்ச் செயல்படுவது கண்டறியப்பட்டது.

இராவண காவியத்தை எழுதிய புலவர் குழந்தை தந்தை பெரியாரின் கட்டளையை சிரமேற்கொண்டு இருபத்தைந்தே நாட்களில் திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதினார்.

எறும்பு தின்னிகளின் இரைப்பையில் செரிமானத்திற்குதவும் ஐதரோகுளோரிக் அமிலம் சுரக்கப்படுவதில்லை. அவை தங்களின் இரையான எறும்புகளின் உடலில் உள்ள ஃபார்மிக் அமிலத்தையே செரிமானத்திற்கு நம்பி உள்ளன.

மொகலாயர்களின் வரலாற்றை உலகறியச் செய்த அக்பர் நாமாவின் ஆசிரியர் அபுல் ஃபசல் மொகலாய இளவரசன் ஜகாங்கீர் தீட்டிய சதியால் தலைவெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.

அதிக குளிரால் மரணமடைவோரில் ஐந்தில் ஒருவர் முரண்பாடான உடையவிழ்ப்பு என்ற நிலை ஏற்பட்டு குளிரடிக்கும் போதும் தன் உடைகளைக் களைந்து கொள்வார்.

இந்தியாவின் மலைத்தொடர்களில் மிகப்பழமையானது ஆரவல்லி மலைத்தொடர். இது ராஜஸ்தான், ஹரியானா, குசராத், பஞ்சாப், சிந்த் ஆகிய பகுதிகளின் ஊடே செல்கிறது.

இந்தியாவில் இயக்கத்திலுள்ள ஒரே எரிமலை அந்தமான்-நிக்கோபர் தீவுகளுள் ஒன்றான பேரன் தீவிலுள்ள எரிமலையே.

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளுள் மிகவும் நீளமானது NH 7. வாரணாசியிலிருந்து கன்னியாகுமரி வரையிலுள்ள இதன் மொத்த நீளம் 2369 கி.மீ.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா? Empty Re: உங்களுக்கு தெரியுமா?

Post by முழுமுதலோன் Sun Aug 10, 2014 10:54 am

மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்வில் பங்கேற்றுப் பட்டம் வென்ற முதல் இலங்கைத் தமிழர் யாழ் நூல் இயற்றிய சுவாமி விபுலாநந்தர் ஆவார்.

1862 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் 1870க்குப் பிறகே ஆங்கிலேயர்கள் தவிர்த்த இந்தியரும் வழக்கறிஞராக ஆக முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

கொலம்பஸ் இறந்த வேளையிலும் தான் கண்டறிந்தது ஆசியாவின் கிழக்குக்கரை தான் என்று உறுதியாக நம்பினார்.

தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என்பவை முறையே நைதரசன், பாசுபரசு மற்றும் பொட்டாசியம் ஆகியனவாம்.

கடற்பாம்புகள் அனைத்துமே நச்சுத் தன்மை உடையவை.

ஒரு பொருள் புவியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு விண்ணிற்குச் செல்லவேண்டுமென்றால் அதன் திசைவேகம் நொடிக்கு 11.2 கிலோ மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

பெனசீர் பூட்டோ, ஒரு முஸ்லீம் அரசை தலைமை தாங்கி நடத்தி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.

மலேசியாவின் பட்டுவா குகையில் உள்ள முருகன் சிலை  தான் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலையாகும்.

வழுதுணங்காய் என்பது கத்தரிக் காயின் பழந்தமிழ்ப் பெயராகும்.

பிரபஞ்சத்திலேயே அதிக அடர்த்தி உள்ள பொருள் கருந்துளை ஆகும்.

தெளிகுற்றம் இழைத்தோரை காவல்துறையினர் எவ்வித பிடி உத்தரவும் இன்றிக் கைது செய்யலாம்.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் சுவாமி விவேகானந்தரின் ஆலோசனைப் படி ஜாம்ஷெட்ஜி டாடாவால் தொடங்கப்பட்டது.

பசுமைப் புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக்கின் கண்டுபிடிப்புகள் 245 மில்லியன் மக்களைப் பசியின் பிடியிலிருந்து காப்பாற்றியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

பணவீக்க உயர்வால் கடனாளிகள் இலாபமடைகிறார்கள். ஏனெனில் அவர்களின் உண்மையான வட்டி குறைகிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா? Empty Re: உங்களுக்கு தெரியுமா?

Post by முழுமுதலோன் Sun Aug 10, 2014 10:55 am

ஹபிள் தொலை நோக்கி பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சத்தில் நடந்ததை நமக்குக் காட்டும் காலப் பொறியாகச் செயல்படுகிறது.

புகழ் பெற்ற கருநாடக இசைப் பாடலான "குறை‌யொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!" வை எழுதியவர் மூதறிஞர் இராஜாஜி ஆவார்.

சண்டிகர் நகரம் பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்குமே தலைநகராக விளங்கினாலும் இது எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல.

காந்தியின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை முதன் முதலில் அமெரிக்க நாடு தான் வெளியிட்டது.

'தி ஜங்கிள் புக்' நூலின் ஆசிரியரான ருத்யார்டு கிப்ளிங்க் தனது புத்தகங்களின் பழைய பதிப்புகளின் அட்டையில் ஸ்வஸ்திகா சின்னத்தைப் பயன்படுத்தியிருந்தார்.

வெள்ளைக் காண்டாமிருகம் என அறியப்படும் வெள்ளை மூக்குக்கொம்பன் உண்மையில் சாம்பல் நிறமுடையது.

சங்க காலத்தில் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது.

தமிழக அரசு 1970-ம் ஆண்டு அங்கீகரித்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 1891ம் ஆண்டு பெ. சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்ட மனோன்மணீயம் எனற நாடகத்தில் இடம் பெற்ற தமிழ் தெய்வ வணக்கப் பாடல் ஆகும்.

ரோம எண்ணுருவில் சுழியத்தை குறிக்கும் எண்ணுருக்கள் இல்லை; இடமதிப்பு சார்ந்த எண்முறையில் இல்லை.

பைக்கால் ஏரி உலகின் மிக ஆழமான ஏரியாகும். உருசியாவின் தென் சைபீரியா மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள இந்த ஏரி பூமியினை சுற்றியுள்ள மொத்த நன்னீர் நிலைகளில் 20 சதவிகித நன்னீரினை தன்னகத்தே கொண்டுள்ளது.

ஒரு கடதாசியை 7 முறைக்கு மேல் பாதிபாதியாக மடிக்கமுடியாது என்பதை அறிவீரா?, அது எவ்வளவு மெலிதாக இருந்தாலும் சரி எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி 7 முறைக்கு மேல் பாதிபாதியாக மடிக்க இயலாது.

ஒவ்வொரு மனிதனின் நாக்கின் ரேகைக்கும் வேறுபாடு உண்டு.

1895 இல் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய மோகனாங்கி என்பது தமிழில் எழுதப்பட்ட முதலாவது வரலாற்றுப் புதினம் ஆகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா? Empty Re: உங்களுக்கு தெரியுமா?

Post by முழுமுதலோன் Sun Aug 10, 2014 10:56 am

*நேபாள நாட்டின் கொடி ஒன்று மட்டுமே உலக தேசியக் கொடிகளில் செவ்வக வடிவமாக இல்லாத கொடியாகும்.

தாய்லாந்தில் மன்னர் முடிசூட்டலின் போது திருவெம்பாவை பாடப்படுகிறது.

நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற தற்போதுள்ள நடைமுறையைவிட செம்மை நெல் சாகுபடி முறையினை கையாளுவது அவசியம்.

சாவகத்தீவம் தான் உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும்.

முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படம் எடுத்தவர் ஏ. கே. செட்டியார். தமிழ்ப் பயண இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி என புவியியல் வரலாறு கூறுகிறது.

கறையான்கள் பூஞ்சைகளை வளர்ப்பதோடு மட்டுமின்றி அப் பூஞ்சைகளுக்குப் போட்டியாக வேறு தாவரங்கள் வளராமலும் பார்த்துக் கொள்ளும்.

இப்போதைய மலையாள எழுத்துமுறையை வடிவமைத்தவர் துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் என்று கருதப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் நடப்புத் தலைவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை ஆவார்.

நவகண்டம் என்பது தன் கழுத்தை தானே அறுத்து பலியிட்டுக் கொள்வது ஆகும்.

சுசுமு ஓனோ பழங்கால ஜப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக் கொணர்ந்தவர் ஆவார்.

இந்தியாவில் மாநிலங்களவை ஒரு நிரந்தர அவையாகும். மக்களவையைப் போல் இது கலைக்கப்பட மாட்டாது.

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை 1968ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடந்த வேளையில் நிறுவப்பட்டது.

பொய்க் கர்ப்பம் என்பது கருவுறாத நிலையிலுள்ள ஒரு பெண் விலங்கு கருவுற்றிருப்பதற்கான மருத்துவ அறிகுறிகள் தோன்றுவதாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா? Empty Re: உங்களுக்கு தெரியுமா?

Post by முழுமுதலோன் Sun Aug 10, 2014 10:57 am

*ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில், கிபி 13ம் நூற்றாண்டில் கங்கப் பேரரசன் நரசிம்மதேவரால் சூரியபகவானுக்காக கட்டப்பட்ட கொனார்க் சூரியன் கோயில் சிவப்பு மண்பாறை, கறுப்புக் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்டது.இக்கோயிலைக் கட்டப் பேரரசின் 12 ஆண்டு வருமானம் செலவிடப்பட்டது.

*நீரானது, நீராவியுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படும் வெந்நீரூற்றுகள் உலகில் ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன. இவற்றில் பாதிக்கு மேல் அமெரிக்காவிலுள்ள வயோமிங்கு என்னும் இடத்தில் உள்ள எல்லோசுட்டோன் தேசியப் புரவகம் எனும் இடத்தில் இருக்கின்றன.

*சீனாவின் பீக்கிங் நகரருகில் 1929 இல் 2,50,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த முழுவளர்ச்சியடையாத மனிதக் குரங்கு மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பீக்கிங் மனிதன் என்றழைக்கின்றனர்.

*கம்போடியா மக்கள் பொரித்த சிலந்திகளை உணவாக உட்கொள்கின்றனர்.

*பரிவு மசக்கை என்பது ஒரு கருவுற்ற பெண்ணின் நெருங்கிய ஆண் துணைவருக்கு மசக்கை போன்ற அறிகுறிகள் தென்படும் பரிவு விளைவு ஆகும்.

*கேரளத்தில் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இடுக்கி அணை ஆசியாவிலேயே உயரமான வளைவு அணைகளுள் ஒன்று.

*பனையின் பெருமைகளைக் கூறும் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூல் தாலவிலாசம். சோமசுந்தரப் புலவர் இதனை இயற்றினார்.

*தென்னிந்தியாவின் முதல் இசை மாநாட்டை நடத்தியவர் கருணாமிர்த சாகரம் எழுதிய தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ஆவார்.

*வலை 2.0 எனும் சொல் வைய விரிவு வலையில் பரந்துள்ள இரண்டாந்தலைமுறை இணையச்சேவைகளை குறிக்க பயன்படுகிறது.

*பகீரா கிப்லிங்கி எனும் சிலந்தி வகை மட்டுமே தாவர உணவுண்ணும் சிலந்தியெனக் கண்டறியப்பட்டுள்ளது.

*இந்திய நடுவணரசின் தலைமையமைச்சராயிருந்த நேருவின் வருகையை ஒட்டியே பூட்டான் நாட்டுக்கு நாட்டுப்பண் ஒன்றுக்கான தேவை ஏற்பட்டது.

*அலெக்சாண்டர் கன்னிங்காம் இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை என அறியப்படுகிறார்.
பிட்யின் என்பது பொது மொழியொன்றைக் கொண்டிராத இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள் தம்மிடையே தொடர்பு கொள்வதற்காக உருவாக்கப்படும் எளிமையான ஒரு மொழியைக் குறிக்கும்.

*கடுவேகக் கெடு பிரசவம் எனும் நிலையில் நிறைமாதமாய் இருக்கும் பெண் பிரசவமேற்படப் போவதை உணராமலேயே குழந்தை பெற வாய்ப்புண்டு.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா? Empty Re: உங்களுக்கு தெரியுமா?

Post by முழுமுதலோன் Sun Aug 10, 2014 10:58 am

*இந்திய நாளிதழ்களிலேயே முதன் முறையாய்க் கேலிச் சித்திரம் வெளியிட்டவர் மகாகவி பாரதியார்  ஆவார்.

*சமயக்குரவர் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகர் 63 நாயன்மார்களுள் ஒருவர் அல்லர்.

*ஹெலிகோபேக்டர் பைலோரி எனும் பாக்டீரியா இரைப்பைக் குடற்புண் மற்றும் இரைப்பைப் புற்று நோய் போன்ற நோய்களை உண்டாக்கவல்லது.

*இரவுநேர வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது புவி வளிமண்டலத்தின் தாக்கத்தினாலாகும். ஆனால் சூரியன் மட்டும் இதற்கு விதிவிலக்காகும்.

*மேற்குத் தொடர்ச்சி மலையின் உட்பிரதேசத்திற்குரிய உயிரிகளில் ஒன்றான கேழல்மூக்கன் பிற தவளையினங்களைப் போலன்றி தன் வாழ்நாளைப் பெரும்பாலும் நிலத்தடியிலேயே கழிக்கும்.

*மீரா(1945) படத்தில் இடம்பெற்ற “காற்றினிலே வரும் கீதம்” பாடலை எழுதியவர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி ஆவார்.

*9x9 என அமைந்த 81 சிறுகட்டங்கள் அடங்கிய ஒரு பெரிய கட்டத்தில் குறிப்பிட்ட விதிகளுடன் எண்களைக் கொண்டு விளையாடும் ஒரு புதிர் விளையாட்டான சுடோக்கு யப்பான் நாட்டில் 1986 ஆம் ஆண்டில் அறிமுகமானது.

*காபோன் நாட்டின் ஓக்லோ என்ற இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

*இசுலாமியர்களின் புனித நூலாகக் கருதப்படும் திருக்குர்ஆன் இறைத்தூதர் முகம்மது நபி மூலமாக இறைவனால் அருளப்பட்டதாக இசுலாமியர்கள் நம்புகின்றனர்.

*டி. பி. ராஜலட்சுமி தமிழ்த் திரையுலகின் முதல் நடிகை ஆவார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

*ஆஸ்திரேலியாவின் முதல் மனிதர் 42,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறினர். 

*கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் தற்போதைய தென்கிழக்காசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது.

*1796 இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து 1948 வரை யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி நீடித்தது.

*பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் 1773இல் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேறிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டம். இந்த நிகழ்வு அமெரிக்கப் புரட்சியை தொடங்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.



[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா? Empty Re: உங்களுக்கு தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum