தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

View previous topic View next topic Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by mohaideen Tue Aug 12, 2014 11:05 am

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

சமீபத்தில் ஒரு தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, சாப்பிட்டவுடன், அவர் கலர்கலரான மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருந்தார்.  'இத்தனை மாத்திரைகள் எதற்கு?’ என்றதும், அவர் தந்த பதில் நம்மைத் திடுக்கிட வைத்தது. 'லேசா முடி நரைச்சிருக்கேனு, 'டை’ யூஸ் பண்ணினேன். நல்ல பிராண்ட் தான். ஆனா, தொடர்ந்து யூஸ் பண்ணப் பண்ண, தலைக்குள்ள லேசா ஊறல்ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! P18 எடுத்துச்சு... அப்புறம் தலை முழுக்க பயங்கரமான அரிப்பு. பயந்துபோய், தோல் டாக்டர்கிட்ட போனப்ப, அவர், உடனே 'ஹேர் டை’ போடறதை நிறுத்தச் சொன்னார். 'டை’யில் இருக்கிற ரசாயனம் ஏற்படுத்திய பக்க விளைவுதான் காரணமாம்!' என்றார் பரிதாபமாக.
'நடுத்தர வயதை நெருங்கும் பெரும்பாலானவர்கள் கண்ணாடி முன் நிற்கும்போதெல்லாம் அனிச்சையாக முடி நரைத்திருக்கிறதா, சருமத்தில் சுருக்கம் தெரிகிறதா எனப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். நரைத்த முடி, முதிய தோற்றத்தைத் தருமோ என்று அதனைக் கறுப்பாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கிவிடுவர். அதை, இயற்கை வழியிலேயே செய்துகொள்வதன் மூலம் பக்கவிளைவுகளையும் பின்விளைவுகளையும் தடுக்கலாம்' என்கின்றனர் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மணவாளன் மற்றும் உதவி விரிவுரையாளர் டாக்டர் கனிமொழி. செயற்கைச் சாயங்களால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இயற்கைச் சாய முறைகள் பற்றி விரிவாக விளக்குகின்றனர்.
' 'மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை 'டிரையோஸின்’ என்ற என்ஸைம் கட்டுப்படுத்தித் தடைசெய்கிறது. இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு இளமையிலே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும்தான். கண்டதைச் சாப்பிடுவது, சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்குக் காரணம். அதிக வெயிலில் வெளியில் அலைந்தால், புற ஊதாக் கதிர்கள், முடியின் ஈரத்தன்மையை உறிஞ்சி, முடியை வறண்டுபோகச்செய்யும். இதனாலும் முடி நரைக்கலாம். மேலும், தலைக்கு உபயோகிக்கும் ஷாம்பூ, கண்டீஷனர் போன்ற பொருட்களில் கலக்கப்படும் ரசாயனப் பொருட்களும் நரை ஏற்படக் காரணம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by mohaideen Tue Aug 12, 2014 11:05 am

ஹேர் டையில் உள்ள வேதிப்பொருட்கள் - பக்க விளைவுகள்
செயற்கைச் சாயங்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. முக்கியமாக, அம்மோனியா, சோடியம் பைகார்பனேட், லெட் அசிட்டேட், ஹைட்ரஜன் பெராக்ஸைடு இவற்றுடன், 'டைஅமினோட்டோலீன்’ மற்றும் 'டைஅமினோபென்ஸின்’ என்ற இரண்டு ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இதில் இருக்கும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய 'கார்சினோஜென்’ என்ற பொருளால் பாதிப்பு அதிகம். தொடர்ந்து ரசாயனம் கலந்த ஹேர்டையைப் பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம். சருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்துபோதல், அரிப்பு ஆகியவை ஏற்படும்.  மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், சருமத்தில் புற்றுநோய், ஹைப்பர் சென்சிட்விட்டி போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.    
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! P18a
இயற்கை ஹேர் டை
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) அவுரித் தூளைக் குழைத்து, சிறு வில்லைகளாகத் தட்டிக் காயவைத்து, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை உபயோகிக்கலாம்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) பீட்ரூட் சாறு, கறிவேப்பிலைச் சாறு... இரண்டையுமே தலையில் தடவினாலும் உணவாக எடுத்துக்கொண்டாலும் நல்ல பலன் தரும்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) வெற்றிலை, பாக்கு, வெட்டிவேர், மருதாணி - இவை நான்கையும் அரைத்துத் தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவைத்து அலசவேண்டும்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) மருதாணித் தூள், டீ டிகாக்ஷன் இரண்டையும் கலந்து, தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து நீரில் அலசலாம்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) சோற்றுக் கற்றாழை ஜெல், ஹென்னா தூள், டீ டிகாஷன் - இவை மூன்றையும் கலந்து தலையில் தடவி, ஊறவைத்து  நீரில் அலசலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by mohaideen Tue Aug 12, 2014 11:06 am

இளநரையைத் தவிர்க்க...
சரிவிகித உணவு உண்ண வேண்டியது அவசியம். எல்லா வகையான நட்ஸ் வகைகளையும், இரவே ஊறவைத்து, மறுநாள் சாப்பிடவேண்டும். அவற்றில் வைட்டமின் இ இருப்பதால், சருமத்துக்கும் முடிக்கும் மிகவும் நல்லது. தண்ணீர் நிறையக் குடிக்கவேண்டும். முளைக்கட்டிய பயறு, பேரீச்சம்பழம் போன்ற உலர் பழங்கள், காய்கறிகள், பழங்கள் அதிகமாகச் சாப்பிடவேண்டும்.
ஹெட் மசாஜ்
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை இளஞ்சூடாகக் காய்ச்சி, இரு கைவிரல்களாலும் எண்ணெயைத் தொட்டு, முடியின் வேர்க்கால்களில் படுவது போலச் சிறுசிறு வட்டங்களாகத் தேய்க்கவும். விரல்களால் தலையின் எல்லாப் பகுதிகளையும் லேசாக அழுத்திவிடவும். இதனால், தலையின் எல்லாப் பகுதிக்கும் ரத்த ஓட்டம் பாய்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும். முடி நன்றாக வளர்வதுடன் நரைப்பதும் தள்ளிப் போகும்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! P18b
சோற்றுக் கற்றாழை
சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தனியே எடுத்துக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.  இதனுடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடவும். அல்லது, கற்றாழை ஜெல்லை தலையில் தடவி, சிறிது நேரம் ஊறியதும் சீயக்காய்த்தூள் போட்டு அலசவும்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! P18v
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by mohaideen Tue Aug 12, 2014 11:06 am

செய்யவேண்டியவை
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) 'ஹேர் டை’ உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், டை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். உடனடியாக, பயன்படுத்திய ஹேர் டை பாக்கெட்டுடன் டாக்டரைச் சந்திக்கவேண்டியது அவசியம்.  
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) உடனடியாக நிறம் மாற்றும் 'இன்ஸ்டன்ட் டை’ வகைகளைப் பயன்படுத்தாதீர்கள்.  
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) 'பக்கத்து வீட்டில் சொன்னாங்க, ஃப்ரெண்ட் யூஸ் பண்ணினாங்க’ என்றெல்லாம் தாமாகப் போய் ஹேர் டை வாங்கி உபயோகிக்கவே கூடாது. ஒருவருக்கு ஏற்றுக்கொள்ளும் பிராண்டு, மற்றவருக்கு ஏற்காமல் போகலாம்.  
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) உபயோகிக்காமல் இருக்கும் 'ஹேர் டை’யை, 'வீணாகப் போகுதே’ என்று எடுத்துத் தலையில் தடவிக்கொள்வதும் ஆபத்தானது. அதனால் மோசமான பின்விளைவுகள் உண்டாகலாம்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) தலையில் பூஞ்சைத் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) எப்போதுமே தலைக்குச் சாதாரணத் தண்ணீரையே ஊற்றலாம். வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) முடிந்தவரை ஷாம்பூ வகைகளைத் தவிர்த்து, சீயக்காய், அரப்புத்தூள் போட்டுக் குளிக்கவும்.
- மித்ரா

விகடன்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by முரளிராஜா Tue Aug 12, 2014 11:20 am

அனுபவஸ்தர் நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் முஹைதீன்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by mohaideen Tue Aug 12, 2014 11:26 am

இல்ல தல இந்த விஷயத்தில நான் இதுவரை முயற்சிக்கல.

இன்னும் அஜீத் ஸ்டைல்தான்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ஸ்ரீராம் Tue Aug 12, 2014 11:45 am

சால்ட் பெப்பர் ஸ்டைலா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by முரளிராஜா Tue Aug 12, 2014 11:45 am

mohaideen wrote:இல்ல தல இந்த விஷயத்தில நான் இதுவரை முயற்சிக்கல.

இன்னும் அஜீத் ஸ்டைல்தான்.
முழுசா எல்லாம் நரைச்ச பிறகு எதுக்கு டை என்று விட்டு இருப்பீங்க
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by mohaideen Tue Aug 12, 2014 11:52 am

சால்ட் பெப்பர் ஸ்டைலா?

அதேதான்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by mohaideen Tue Aug 12, 2014 11:58 am

முழுசா எல்லாம் நரைச்ச பிறகு எதுக்கு டை என்று விட்டு இருப்பீங்க

இன்னும் முழுசா நரைக்கல. இன்னும் சில வருடங்களில் அதுவும் நடந்திரும்னு நினைக்கிறேன்.

அப்ப திருப்தியா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by முரளிராஜா Tue Aug 12, 2014 12:02 pm

mohaideen wrote:
முழுசா எல்லாம் நரைச்ச பிறகு எதுக்கு டை என்று விட்டு இருப்பீங்க

இன்னும் முழுசா நரைக்கல. இன்னும் சில வருடங்களில் அதுவும் நடந்திரும்னு நினைக்கிறேன்.

அப்ப திருப்தியா
சீக்கிரம் நடக்கட்டும் அப்பத்தான் பார்க்க நம்ம ஸ்ரீ ராம் மாதிரி இருப்பீங்க புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ஸ்ரீராம் Tue Aug 12, 2014 12:04 pm

என்னது என்னை மாதிரியா?  கோபம் 

என் தலை சும்மா கரு கருவென இருக்கு தெரியுமா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by mohaideen Tue Aug 12, 2014 12:06 pm

இதில ஒரு சந்தோஷமா?

உங்களுக்கு நல்ல மனசு தல
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by முரளிராஜா Tue Aug 12, 2014 12:08 pm

ஸ்ரீராம் wrote:என்னது என்னை மாதிரியா?  கோபம் 

என் தலை சும்மா கரு கருவென இருக்கு தெரியுமா?

யோவ் இருபது வருஷம் முன்னாடி எடுத்த போட்டோவை பார்க்காம காண்ணாடிய பாரும் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ஸ்ரீராம் Tue Aug 12, 2014 12:13 pm

என்னது 20 வருடம் முன்பு எனக்கு பத்து வயசுகூட ஆகலை.

நான் சமீபத்தில் எடுத்து அனுப்பிய போட்டோவை பார்த்து நீங்க "உங்கள் இளமையின் ரகசியம் என்ன ராம்னு" கேட்டீங்களே தல.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by mohaideen Tue Aug 12, 2014 12:14 pm

அவருக்கு ஞாபகமறதி அதிகம்.

அதிகம் வல்லாரை சாப்பிடுங்க தல
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by முழுமுதலோன் Tue Aug 12, 2014 12:18 pm

மக்களே உங்களுக்கு ஒரு நல்ல சிறப்பு தகவல் 


தினமும் சம அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் +விளகெண்ணை எடுத்துக்கொண்டு தலையில் தடவி வாருங்கள் டை அடித்தால் கூட அந்த அளவுக்கு கருமை நிறம் வராது  இது உடலுக்கும் மிகவும் நல்லது 


என்னுடன் பணிபுரிந்த நண்பர் ஒருவர் கும்பகோணத்தில் தற்போது உள்ளார் அவர் கடந்த 40 வருடங்களாக இந்த முறையை பின்பற்றி வருகிறார் அவரது முடியின் நிறம் கருமையிலும் கருமை அவரை பார்த்து நானும் கடந்த 25 வருடங்களாக இந்த முறையை பின்பற்றி வருகிறேன் என்னுடைய உறவினர்கள் எல்லாம் அடிக்கடி கேட்கின்ற கேள்வி என்னப்பா இன்னுமா நரைக்கவில்லை என்று ...


இது ஒரு சிதம்பர ரகசியம் போன்றது  


டை பக்கமே போகாதிங்க தலையை கெடுத் துக்காதிங்க ...


கொஞ்சம் முயற்சியுங்களேன் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ஸ்ரீராம் Tue Aug 12, 2014 12:19 pm

mohaideen wrote:அவருக்கு ஞாபகமறதி அதிகம்.

அதிகம் வல்லாரை சாப்பிடுங்க தல

நீங்க சொல்றது ரொம்ப சரிதான்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by முரளிராஜா Tue Aug 12, 2014 12:44 pm

ஸ்ரீராம் wrote:என்னது 20 வருடம் முன்பு எனக்கு பத்து வயசுகூட ஆகலை.

நான் சமீபத்தில் எடுத்து அனுப்பிய போட்டோவை பார்த்து நீங்க "உங்கள் இளமையின் ரகசியம் என்ன ராம்னு" கேட்டீங்களே தல.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Ze4D5Db3RIKrFdG32Czv+10487492_716802175060262_5184361592001340445_n
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by செந்தில் Tue Aug 12, 2014 1:15 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ரானுஜா Tue Aug 12, 2014 5:56 pm

முழுமுதலோன் wrote:மக்களே உங்களுக்கு ஒரு நல்ல சிறப்பு தகவல் 


தினமும் சம அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் +விளகெண்ணை எடுத்துக்கொண்டு தலையில் தடவி வாருங்கள் டை அடித்தால் கூட அந்த அளவுக்கு கருமை நிறம் வராது  இது உடலுக்கும் மிகவும் நல்லது 


என்னுடன் பணிபுரிந்த நண்பர் ஒருவர் கும்பகோணத்தில் தற்போது உள்ளார் அவர் கடந்த 40 வருடங்களாக இந்த முறையை பின்பற்றி வருகிறார் அவரது முடியின் நிறம் கருமையிலும் கருமை அவரை பார்த்து நானும் கடந்த 25 வருடங்களாக இந்த முறையை பின்பற்றி வருகிறேன் என்னுடைய உறவினர்கள் எல்லாம் அடிக்கடி கேட்கின்ற கேள்வி என்னப்பா இன்னுமா நரைக்கவில்லை என்று ...


இது ஒரு சிதம்பர ரகசியம் போன்றது  


டை பக்கமே போகாதிங்க தலையை கெடுத் துக்காதிங்க ...


கொஞ்சம் முயற்சியுங்களேன் 

சூப்பர் அண்ணா நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by mohaideen Tue Aug 12, 2014 5:58 pm

முயற்சித்து பார்ப்போம்


நன்றி அண்ணா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum