தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"குட்டிச் சாத்தான்': இன்று உலக கொசு ஒழிப்பு தினம்

View previous topic View next topic Go down

"குட்டிச் சாத்தான்': இன்று உலக கொசு ஒழிப்பு தினம் Empty "குட்டிச் சாத்தான்': இன்று உலக கொசு ஒழிப்பு தினம்

Post by நாஞ்சில் குமார் Wed Aug 20, 2014 11:17 pm

"குட்டிச் சாத்தான்': இன்று உலக கொசு ஒழிப்பு தினம் 2lcxug9

உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசு, மனிதர்களுக்கு பல நோய்களை பரப்புவதில் முதல்வனாக இருக்கிறது. கொசுக்களில் 3000 வகை இருந்தாலும், மலேரியாவை உருவாக்கும் "அனாபெலஸ்', டெங்குவை உருவாக்கும் "ஏடிஸ்', யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சலை உருவாக்கும் "குளக்ஸ்' ஆகிய மூன்றும் தான் கொடியவை. இதன் பாதிப்புகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆக.,20ம் தேதி உலக கொசு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இங்கிலாந்து டாக்டர் ரொனால்டு ரோஸ் என்பவர், 1897ம் ஆண்டு, "அனாபெலஸ்' என்ற பெண் கொசுக்கள் தான், மனிதர்களுக்கு மலேரியாவை பரப்புகிறது என்ற உண்மையை கண்டுபிடித்தார். "பிளாஸ்மோடியம்' என்ற ஒட்டுண்ணி "அனோபிலிஸ்' எனும் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம், மலேரியா பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது. இது உடலில் கல்லீரலை தாக்குகிறது. பின் ரத்த சிவப்பு அணுக்களை தாக்கி அழிக்கிறது. மரணத்தை விளைவிக்கும் அளவு பயங்கரமானது. இவரது கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் விதமாக, ஆக. 20ம் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவரது கண்டுபிடிப்பிற்காக, 1902ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ரொனால்டு ரோஸ், 1857ல் பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஆங்கிலேய ராணுவ அதிகாரி. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை லண்டனில் நிறைவு செய்தார். படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பின், மலேரியாவை பற்றிய ஆராய்ச்சியில் 1882 முதல் 1899 வரை ஈடுபட்டார். பிரிட்டன் சார்பில் நோபல் பரிசு வென்ற முதல் நபர் என்ற பெருமை பெற்றார்.கொசுக்கள் நீர்நிலைகளில் தான் முட்டையிட்டு உருவாகின்றன. எனவே வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மலேரியாவை பற்றி...:


* ஆண்டுதோறும் 7,81,000 பேர் பலியாகின்றனர். இதில் 90 சதவீதம் ஆப்ரிக்க நாடுகளில் ஏற்படுகிறது.
* காய்ச்சல், தலைவலி, வாந்தி எடுத்தல் போன்றவை மலேரியா கொசு கடித்த 10 முதல் 15 நாட்களுக்குள் ஏற்பட்டால், மலேரியா நோய் தாக்கியுள்ளது என தெரிந்து கொள்ளலாம். ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை மேற்கொள்ளவில்லை எனில், நோய் முற்றி உடலுறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் தடைபட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.
* இதை முற்றிலுமாக தடுக்க முடியாவிட்டாலும், மலேரியாவின் வீரியத்தை குறைப்பதற்கு சில தடுப்பு மருந்துகள் உள்ளன.
* ஆப்பிரிக்காவில் 30 நாடுகள், ஆசியாவில் 5 நாடுகள் என 35 நாடுகளில் தான் 98 சதவீத மலேரியா உயிரிழப்பு ஏற்படுகிறது.
* உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மலேரியா 5வது இடத்தில் உள்ளது. அதே போல, ஆப்ரிக்காவில் எச்.ஐ.வி., / எய்ட்ஸ் நோய்க்கு அடுத்து 2வது இடத்தில் மலேரியா உள்ளது.

.கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்

மனிதர்களைக் கொல்லும் உயிரினப் பட்டியலில் கொசுக்களுக்கு சிறப்பிடம் தரலாம். கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய்களால் உயிரிழப்புகள் நிறைய ஏற்பட்டுள்ளன.

தட்ப வெப்ப சூழ்நிலை உள்ள ஆசிய நாடுகள் குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளில் கொசுக்கள் பரவலாக உள்ளன. உலக சுகாதார நிறுவனம் இதற்காக பிராந்திய அளவில், தென்கிழக்காசியத்திற்கான அலுவலகத்தை டில்லியில் அமைத்துள்ளது.இந்தியா முழுவதிலும் உள்ள கொசுக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக, தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவனம் 1985 மே 1ம் தேதி அமைக்கப்பட்டது. எந்தெந்த பகுதிகளில் கொசுக்களால் காய்ச்சல், உயிரிழப்பு ஏற்படுகிறதோ அந்த பகுதிகளுக்கு விஞ்ஞானிகள் நேரடியாக சென்று ஆய்வுகள் செய்து, இழப்புகள், கொசுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அரசுக்கு தெரிவிக்கின்றோம்.

பீகாரில் முஜபூர் நகர், மேற்குவங்கத்தில் ஜல்பகிரி, குஜ்பீகார், தக்ஷின் தினஜ்பூர், டார்ஜிலிங், உத்தரபிரதேசத்தில் கோரக்பூர், கேரளத்தில் குட்டநாடு, ஆந்திராவில் கர்னூல், தமிழகத்தில் கடலூரில் கொசுக்கள் குறித்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கொசுக்களின் மாதிரிகள், சேகரித்த ரத்த மாதிரிகள், அவற்றின் மூலக்கூறுகளை ஆய்வு செய்து கட்டுப்படுத்தும் நடைமுறைகள் அரசுக்கு அனுப்பப்படுகிறது.எத்தனை கொசுக்கள்: மதுரையில் உள்ள மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவன அருங்காட்சியகத்தில் 240 வகையான கொசுக்களின் மாதிரிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது புதிய கொசுக்கள் கண்டறியப்பட்டு, அவை குறித்த தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன. அவற்றின் இனப்பெருக்கம் குறித்த ஆராய்ச்சிகளும் நடந்துவருகின்றன.இறப்புப் பட்டியலில் மலேரியாவால் ஏற்பட்ட உயிரிழப்பு தான் அதிகம். 1920 மற்றும் 1930களில் இந்தியாவில் பல லட்சம் மக்களை தாக்கியது. இக்காய்ச்சலுக்கு பத்து லட்சம் மக்கள் இறந்தனர். தேசிய மலேரியா ஒழிப்பு திட்டம் 1958 ல் துவங்கப்பட்டது. தொடர் கண்காணிப்பு, மருத்துவ சிகிச்சையின் மூலம் மலேரியா கட்டுப்படுத்தபட்டது.அதன்பின் அவ்வப்போது மலேரியா காய்ச்சல் வந்தாலும், இறப்புகளின்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. மலேரியா கட்டுப்படுத்தப்பட்டாலும் இன்னமும் அதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.நன்னீர், தேங்கியுள்ள மழைநீரில் இனப்பெருக்கம் செய்யும். சிலநேரங்களில் ஆற்றின் கரையோரங்களிலும் இனப்பெருக்கம் செய்யும். அனாபிலிஸ் வகை கொசுக்கள் 58 இருந்தாலும் ஆறு வகைகள் மட்டுமே மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பைலேரியா: மருந்து கண்டுபிடிக்கவில்லை. கடற்கரை பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் குயிலெக்ஸ் கொசுக்களால், 'பைலேரியா' எனப்படும் யானைக்கால் நோய் உருவாகும். இக்கொசுக்கள் இரவில் கடிக்கும். இவை சாக்கடை, வயல்வெளி சகதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன.

டெங்கு: 'ஏடிஸ் எஜிப்டே' வகை கொசுக்களால் டெங்கு வைரஸ் மூலம் காய்ச்சல் பரவுகிறது. மழைக்காலத்தில் ரோட்டில் கிடக்கும் தேங்காய் சிரட்டை, இளநீர் மட்டை, பிளாஸ்டிக் டம்ளர், பாட்டில், ரப்பர் கழிவுகளில் தண்ணீர் தேங்கினால், கொசுக்கள் உற்பத்தியாகிறது. வீடுகளில் மூடப்படாத பாத்திரங்கள், திறந்தநிலை மேல்நிலைத் தொட்டிகளின் மூலம் வீடுகளைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகும். பகலில் கடிக்கும்.

சிக்குன் குனியா: 'ஏடிஸ் எஜிப்டே, ஏடிஸ் ஆல்போபிக்டஸ்' கொசுக்களால், 'ப்ளேவி' வைரஸ் மூலம் சிக்குன்குனியா காய்ச்சல் பரவுகிறது. இதுவும் நன்னீர், மழைநீரில் உற்பத்தியாகும்.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல்: குயிலெக்ஸ் வகையைச் சேர்ந்த 18 வகை கொசுக்களால் பரவுகிறது. இவை பன்றி மற்றும் எக்ரெட் பறவைகளில் காணப்படும் வைரஸ். இக்கொசுக்கள் விலங்குகளை தான் கடிக்கும். அதிக இனப்பெருக்கத்தால், சிலநேரங்களில் மனிதர்களை கடிக்கும் போது, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பரவுகிறது.

தமிழகத்தில் உள்ள மையங்கள்: தமிழகத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 1985களில் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. அதுகுறித்த ஆராய்ச்சிக்காக, மத்திய பூச்சியியல் நிறுவனம் சார்பில் கடலூர் விருத்தாச்சலத்தில் சிறப்பு ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. 1988 முதல் தற்போது வரையான ஆய்வுகள் அங்கு சேகரிக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம், திருக்கோயிலூரில் யானைக்கால் தடுப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கொசுக்களை ஆராய்ச்சி செய்வதோடு, அதன் டி.என்.ஏ., மாதிரியை சேகரிக்கும் வகையில், கோவையில் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அழிப்பது எப்படி?: கொசுக்களை கட்டுப்படுத்துவது ஒன்றே மிகச்சிறந்த வழி. அவற்றின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்கு வீடுகளில் தண்ணீர் தேங்கக்கூடாது. ஜன்னல்களில் கொசுவலை, படுக்கையில் கொசுவலை அவசியம். சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும். உற்பத்தித் தளங்களை கட்டுப்படுத்தினாலே, கொசுக்களால் பரவும் நோய்களை எளிதில் தடுக்கலாம், என்றார்.

-விஞ்ஞானி பி.கே. தியாகி,
இயக்குனர், மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை.
இமெயில்:crmeicmr@icmr.org.இன்

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum