சினத்தினால்  உயிராற்றல்  விரயமாகும்   என்றும், நோய்கள்  பலவும்  வரும்  என்றும்  முன்னர்  பார்த்தோமல்லவா? அவ்வகையில்  இந்தக்  கவலையும்  சினத்திற்கு  இளைத்ததன்று.கவலையினால்  உயிராற்றல்  வேகமான  எண்ண   அலைகளாக   அழிந்து   விரயமாகிறது. கவலையினால்   இரத்த  அழுத்தம்  மற்றும்  அசீரணம், குடல்புண், தலைவலி, சுவாச  நோய்கள்  போன்றவை   வருகின்றன; மிகுகின்றன. இந்தக் கவலை தேவைதானா?

'கவலை' என்ற  சொல்லுக்கு  'ஏற்றம்' (தண்ணீர்  இறைக்கும்  சாதனம்) என்று ஒரு   பொருளும்  உண்டு. எனவே நாம்  இப்போது  ஆராயும்  கவலையானது உவமை   ஆகு  பெயர்   எனலாம். மற்றவகை  ஏற்றத்தைவிடக்  கவலை  விரைவாகத்   தண்ணீரைக்   கிணற்றிலிருந்து  வெளியேற்றிவிடும். அதே  போல் இந்த மனக்கவலையும் வெகு வேகத்தில்  உயிராற்றலை   உடலிலிருந்து     வெளியேற்றி   விடும்.

கருத்தொடராக வரும்   தீவினைகளான பாவப்பதிவுகள் கூட்டுவிக்கும்   சிக்கல்களாயினும்,தன்னை உணர்ந்த தெளிவினால் நீங்கிவிடும்   ஞானியர்க்கு    முன்வினைப்   பயமுமில்லை, தவறிழைத்துச்  சிக்கல்களை   உருவாக்கிக் கொள்ளும் பின்வினை பயமும் இல்லை.இதைத் தான்  திருமூலர்,
        ''தன்னை  அறிந்த  தத்துவ     ஞானிகள்
          முன்னை   வினையின்   முடிச்சை   அவிழ்ப்பர்
            பின்னை  வினையைப்   பிடித்துப்   பிசைவர்
             சென்னியில்  வைத்த   சிவனருளாலே''

என்றார்.இனி,தன்னாலோ,பிறராலோ விளையும் சிக்கலை என்ன    செய்வதன்று, எப்படி எதிர்கொள்வதென்று  ஆராய்வோம். சிக்கல்களைக்  கொண்டு மிரள்வது கூடாது.கவலைப்படுவதாலும்  ஆவதொன்றில்லை.கவலையினால்   எல்லா  வகையிலும்   இன்னல்தான். இதை  முதலில்   தெரிந்து   கொள்கிறோம்.

இப்போது கவலையாக  உருக்கொண்டிருக்கும்   இந்தச்    சிக்கல்   ஏன்   வந்த்து?யார்   காரணம்? இந்தச்  சிக்கலின்   தன்மை  என்ன?  இந்தச் சிக்கலினால் நமக்கு  என்ன  துன்பம்  வர   இருக்கிறது ?  என்பதை   ஆராயந்தாக   வேண்டும்.
எனவே, கவலை கொண்டு நம் உடல் நலனை கெடுத்துக்கொள்வதை விட, அதை எளிதில் கையாளுவதில் தான் நம் திறன் மறைந்து கிடக்கிறது...
பிரச்சனைகளை கண்டு பயந்து கொள்வதை விட, அதை தீர்க்க முற்படுவதே நம் மனத்திற்கும், உடல் நலத்திற்கும் நல்லது...