தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனிது இனிது வாழ்தல் இனிது!

View previous topic View next topic Go down

இனிது இனிது வாழ்தல் இனிது! Empty இனிது இனிது வாழ்தல் இனிது!

Post by நாஞ்சில் குமார் Fri Sep 19, 2014 11:27 pm



உறவுகள்

‘பேசாத வார்த்தைகளுக்கு நீ எஜமான்’ என ஒரு பிரபல வாசகமுண்டு. வார்த்தைகள் நம் கட்டுக்குள் இருக்கும் வரைதான் அவை நமக்கு அடிமை. வெளியே கொட்டித் தீர்த்துவிட்டால், அந்த வார்த்தைகளுக்கு நாம் அடிமை.இப்படித்தான் நம்மில் பலரும் வார்த்தைகளுக்கு எஜமானர்களாக இரு ப்பதைவிட, அடிமைகளாக இருக்கிறோம்.காரணம், கோபம்!

நேர்மையில்லாத விஷயம் நடக்கும் போதும் நினைத்தது நினைத்தபடி நடக்காத போதும் மற்றவர்கள் தவறு செய்கிற போதும் கோபப்படுகிறோம். கோபம் என்பது பல நேரங்களில் பிரச்னைகளுக்கு மருந்தாவது உண்மைதான். ஆனால், எல்லை மீறும் போது, ஒருவரது அகந்தைக்குத் தீனியாக வெளிப்படும் போது, அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்காமல் வெடிக்கிற போது அதே கோபம் நோயாகிறது. அதற்கு சிகிச்சை அவசியம்.

வேறு எந்த இடத்தையும்விட கோபத்தின் வெளிப்பாடும் அதன் பிரதிபலிப்பும் கணவன் - மனைவிக்குள் அதிகமாகவே இருப்பதைப் பார்க்கலாம். அதிலும் பெரும்பாலான குடும்பங்களில் கணவரே கோபத்துக்கான ஏகோபித்த அதிகாரத்தைக் கையில் எடுத்தவராக இருக்கிறார். ஆணின் வளர்ப்புமுறையே அவனுக்குக் கோபத்தை ஒரு ஆயுதமாகக் கையாளக் கற்றுக் கொடுக்கிறது. கோபப்படுகிற அப்பாக்களைப் பார்த்து வளரும் ஆண் குழந்தைகளும் அதை அப்படியே கற்றுக் கொண்டு பிரதிபலிக்கிறார்கள். வீட்டிலும் வேலையிடத்திலும் நேரடியாகவும் ஆக்ரோஷமாகவும் அதிகார தொனியிலும் கோபப்படுவதன் மூலம் தன்னை ஒரு ஸ்ட்ராங்கான நபராகக் காட்டிக் கொள்ளவே ஆண் விரும்புகிறான்.

கோபம் என்கிற அந்தக் குணம் தனக்கு போராளி என்கிற இமேஜை கொடுக்கும் என்று அவன் தவறாக நினைத்துக் கொள்கிறான். கோபமே படாத ஆண்களை இந்தச் சமுதாயம் பலவீனமானவராகப் பார்ப்பதும் இதற்கு ஒரு காரணம். மனைவியிடம் எதற்கெடுத்தாலும் பொங்கி எழுகிற கோபத்தை வெளிப்படுத்துகிற கணவன், தன்னுடைய அந்தக் குணம் தன் திருமண வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்துவதை அறியாதவன். அர்த்தமற்ற கோபம், மனைவியின் காதலை, நெருக்கத்தைக் காணாமல் போகச் செய்யும். சில ஆண்கள் இன்னும் சில படிகள் முன்னேறி, கோபத்தின் உச்சக்கட்டமாக அடி, உதை, தகாத வார்த்தைகளில் திட்டுவது என வன்முறையில் இறங்குவதுண்டு.

எந்நேரமும் கோபம் சூழ்ந்திருக்கிற தம்பதியின் வாழ்க்கை புயலடித்த மாதிரி, அமைதியற்றுதான் இருக்கும். ஆதிக்க மனநிலை கொண்ட கோபக்கார ஆண்கள், மனைவி யிடம் மட்டுமின்றி, குழந்தைகளிடமும் இதே கோபத்தைக் கக்குவார்கள். எப்போதும் மனைவி மற்றும் குழந்தைகளின் தவறுகளைக் கண்டுபிடித்து, அவற்றை சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பார்கள். தான் மட்டுமே பெஸ்ட் என்கிற மனநிலை ஓங்கியிருக்கும். இவர்களது இந்தப் போக்கினால் பாதிக்கப்படுவதென்னவோ மனைவி மற்றும் பிள்ளைகள்தான். கணவரின் கோபத்துக்கு ஆளாகும் மனைவி, இரண்டு வகைகளில் தன் வெறுப்பை வெளிப்படுத்தலாம்.

நேரடியாக தன் கோபத்தைத் திருப்பிக் காட்டாமல் மறைமுகமாக வெளிப்படுத்துகிறவர்கள் ஒரு வகை. அதாவது, குடும்பத்துக்கென உள்ள சில விதிமுறைகளை மீறி நடப்பது, செய்ய வேண்டிய விஷயங்களை வேண்டுமென்றே மறப்பது, முகத்துக்குப் பின்னால் கணவரை கடுமையாக விமர்சிப்பது போன்ற வழிகளில் தன் கோபத்தைக் காட்டலாம். இன்னொரு வகையான பெண்கள், மனதளவில் கணவரிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்வார்கள். அவரிடம் அன்பாக இருப்பதையும் மனம் விட்டுப் பேசுவதையும் நிறுத்திக் கொள்வார்கள். தனக்கான குறைந்த பட்ச வேலைகளை மட்டும் செய்து கொண்டு, எந்தப் பிடிப்பும் இன்றி இருப்பார்கள். ‘நீ எக்கேடும் கெட்டுப் போ... எனக்கென்ன? ‘என்கிற மாதிரி அவர்களது போக்கில் ஒரு அலட்சியம் தென்படும். ஃபைட் அண்ட் ஃபிளைட் (fight and flight) என ஒரு குணம் உண்டு.

பொதுவாக மிரு கங்களிடம் காணப்படுகிற இந்தக் குணம் மனிதர்களுக்கும் கொஞ்சம் உண்டு. எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுப் பழகிய மிருகங்கள் எல்லா நேரங்களிலும் அதற்குத் தயாராக இருக்கும். தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கிற மிருகங்கள் தப்பித்து ஓடி, ஒளிந்து கொள்ளும். இந்த இரண்டு குணங்களையுமே மனிதர்களிடமும் பார்க்கலாம். மனிதர்களிடம் காணப்படுகிற இந்தக் குணத்தின் பின்னணியில் ஒரு ஹார்மோனின் வேலை இருந்தாலும், இந்த மனநிலை தம்பதியின் வாழ்க்கையை அமைதியற்ற பாதையை நோக்கிச் செலுத்தும் போதுதான் பிரச்னைகள் வெடிக்கின்றன.

உச்சக்கட்ட கோபத்தின் வெளிப்பாடாக சில கணவர்கள் மனைவியை கொலை செய்கிற வரை எல்லை மீறுகிற செய்திகளையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். இத்தகைய மனநிலையை கோபக்கார குணம் என எடுத்துக் கொள்ள முடியாது. இது முழுக்க முழுக்க ஒருவித குணநலக் குறைபாடு. அவசர, அவசிய சிகிச்சை தேவைப்படுகிற ஒன்று. கோபத்தைக் கையாள்வதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று மற்றவர் கோபத்தை எப்படி எதிர்கொள்வது, இன்னொன்று நமது கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது...

மற்றவர் கோபத்தைக் கையாள...

கோபப்படுகிற நபருக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவரது கோபம் எல்லை மீறிப் போவதாகவும் ஆபத்தானதாகவும் தெரிந்தால் அவருக்கு உடனடியாக மனநல மருத்துவம் தர ஏற்பாடு செய்வதோடு, அந்த நபருடன் பழகுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் .எதற்கெடுத்தாலும் கோபப்படுகிற நபரிடம் தேவையற்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம். துணையின் கோபத்தை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்.

உங்கள் துணை, தன் கோபத்தின் வெளிப்பாடாக ஒரு பிரச்னை அல்லது சிக்கலில் மாட்டிக் கொள்கிறாரா? அந்த விஷயத்தில் அவருக்கு உதவி செய்யாதீர்கள். கோபத்துக்கான தண்டனையை அவர் அனுபவிக்கட்டும். அப்போதுதான் அவரது தவறை அவர் உணர்ந்து, அடுத்த முறை கோபப்படும் முன்பு யோசிப்பார்.

சரி... நமக்கே கோபம் தலைக்கேறும்போது என்ன செய்யலாம்?

ஆங்கிலத்தில் ‘ஆங்கர் ஹுக்ஸ்’ என்போம். அதாவது, கோபத்துக்கான தூண்டில்கள். மீனானது தூண்டிலில் இருக்கும் புழுவுக்கு ஆசைப்பட்டு, அதைக் கடித்து மாட்டிக் கொள்ளும். அதே போல நமது கோபத்தைத் தட்டி எழுப்புகிற, தூண்டி விடுகிற விஷயங்கள் எனத் தெரிகிறவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டியது மிக முக்கியம். எவையெல்லாம் நம்மை கோபத்தில் சிக்க வைக்கிற தூண்டில்கள் என அடையாளம் கண்டு கொண்டு அவற்றைக் கடித்து மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். உங்களது தேவைகளில் எவையெல்லாம் நிறைவேற்றப்படவில்லை எனப் பாருங்கள். ஒன்று அவற்றை நீங்களே நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கலாம் அல்லது நிறைவேறாது என்கிற மன நிலைக்கு உங்களைத் தயார்படுத்திக்
கொள்ளலாம்.

பரஸ்பர மரியாதையும் ஒருவரது எல்லையில் அடுத்தவர் தலையிடாததும் தம்பதியருக்கிடையிலான கோபத்தைத் தடுக்கும். துணைக்கு ஒரு பிரச்னை எனத் தெரிந்தால், அதன் காரணம் கண்டறிந்து, தீர்த்து வைக்க முயற்சி செய்யுங்கள். அதே நேரம், தன்னுடைய ஏரியாவில் துணை கால் வைக்கிறார் என உணர்ந்து, அதன் விளைவாக கோபப்பட்டுக் கொதித்தெழாமல் ஜாக்கிரதையாகவும் இதைக் கையாளுங்கள்.

கோபத்தைக் கையாள இன்னும் கொஞ்சம் டிப்ஸ்...

கோபமாக இருக்கும் போது தோன்றுவதை எல்லாம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். துணை கோபப்படும் போது, பதிலுக்குப் பதில் கோபப்படுவது, திட்டுவது, அடிப்பது ஒரு வகை. அந்தச் சூழலின் தன்மை அறிந்து, அதை எப்படிக் கையாள்வது, என்ன முடிவெடுப்பது என யோசித்து நடந்து கொள்வது இன்னொரு வகை. இதில் நீங்கள் எப்போதும் இரண்டாவது வகையைப் பின்பற்றுங்கள்.

பிரபல நடிகை மனிஷா கொய்ராலா, தன் கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக, அவரைப் பிரியப் போவதாக ட்விட்டரில் அவசரமாக அறிவித்ததும், அடுத்த சில மணி நேரத்திலேயே அதை வாபஸ் வாங்கியதும் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். கோபத்தில் அப்படி அவசர நடவடிக்கைகளில் இறங்காமல் இருப்பது மிகப் பெரிய பிரச்னைகளைத் தவிர்க்கும்.

பயிற்சி

கோபத்தை மனதுக்குள்ளேயே வைத்திருக்கக் கூடாது. அதை வெளிப்படுத்திவிட வேண்டும் எனச் சிலர் சொல்வதுண்டு. அப்படியில்லை. மற்றவர்களை மன்னித்து விடுவது மிகப் பெரிய மனித மாண்பு. எப்போதோ கேவலமாகத் திட்டியதை மனதுக்குள் பூட்டி வைத்துக் கொண்டு, சந் தர்ப்பம் கிடைக்கிற போது பழிவாங்கத் துடிக்கிற எத்தனையோ கணவன், மனைவியை சந்திக்கிறேன். வன்மத்தையும் வஞ்சத்தையும் மனதுக்கு ள்ளேயே வைத்திருந்து, பழிவாங்க சரியான சந்தர்ப்பத்துக்குக் காத்திருப்பதுதான் மோசமான மனநிலை.

கோபத்தைக் கட்டுப்படுத்தச் சொல்வது சுலபம். ஆனால், அதை செயல்படுத்துவது சிரமம். பொறுமை இருந்தால் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வருகிற அந்தச் சவாலில் ஜெயிக்கலாம். கோபத்தில் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் கண்டதும் வெளியில் வரும். அப்படி வீசப்படுகிற வார்த்தைகளைத் திரும்பப் பெற முடியாது. தம்பதியருக்கிடையிலான சண்டைகளின் போது பெரும்பாலும் இப்படித்தான் நடக்கும். இருவருமே பிரச்னைக்கான வேர் என்ன, அதைத் தீர்க்கும் வழிகள் என்னென்ன என்பதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து, ஒருவர் மீது மற்றவர் சேற்றை வாரித் தெளிப்பதில்தான் கவனமாக இருப்பார்கள். அது இருவரது கோபத்தையும் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர, தணிக்காது.

யார் வேண்டுமானாலும் சுலபமாக கோபப் படலாம். அதற்கென பிரத்யேகத் தகுதி எதுவும் தேவையில்லை. கோபத்தை வெளிப்படுத்தாமலிருக்கத் தான் மிகப்பெரிய மன தைரியமும் பக்குவமும் வேண்டும். கோபத்தை வெளிப்படுத்தாதவர்களை பலவீனமானவர்களாக, கோழைகளாகப் பார்த்தே பழகியவர்கள் நாம். உண்மையில் கோபத்தைக் கட்டுப்படுத்தும் வித்தை தெரிந்தவர்கள்தான் இந்த உலகிலேயே மிகவும் பலமானவர்கள். நீங்கள் பலசாலிகளா... பலவீனமானவர்களா?

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இனிது இனிது வாழ்தல் இனிது! Empty Re: இனிது இனிது வாழ்தல் இனிது!

Post by ஸ்ரீராம் Sat Sep 20, 2014 9:50 am

நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இனிது இனிது வாழ்தல் இனிது! Empty Re: இனிது இனிது வாழ்தல் இனிது!

Post by mohaideen Sat Sep 20, 2014 12:26 pm

மிகச்சிறந்த தகவல்கள்

நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இனிது இனிது வாழ்தல் இனிது! Empty Re: இனிது இனிது வாழ்தல் இனிது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum