தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மூழ்கடிக்கும் சிந்தனை

View previous topic View next topic Go down

மூழ்கடிக்கும் சிந்தனை Empty மூழ்கடிக்கும் சிந்தனை

Post by நாஞ்சில் குமார் Tue Sep 23, 2014 4:47 pm

மூழ்கடிக்கும் சிந்தனை S6ufzr

மனம் மயங்குதே... டாக்டர் சுபா சார்லஸ்

எந்த ஒரு விஷயம்
உடன்பாடில்லாமல்
எந்தப் பலனையும் தராமல் ஆனாலும்,  அதிலேயே
உங்களை
மூழ்கடிக்கச்
செய்வதாக நினைத்தால்,
உடனடியாக
அதிலிருந்து
மீண்டு
எழுந்திருப்பதுதான்
புத்திசாலித்தனம்!

100 கோடி முதலீட்டில் ஒரு பிசினஸ் தொடங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். நூற்றுக்கணக்கான ஆட்களை வேலைக்கு வைக்கிறோம். ஒரு பொருளை
உருவாக்கி, மார்க்கெட் செய்கிறோம். வேலையாட்கள் சம்பளம், மூலப்பொருட்கள் என ஒவ்வொரு மாதமும் சுமார் 10 கோடி செலவு. உருவாக்கிய பொருளை சந்தைப்படுத்தியதில் 11 கோடியாவது வருமானம் வர வேண்டும். ஆனால், 8 கோடிதான் வருகிறது.

1 மாதம் சமாளிக்கலாம்... 2 மாதங்கள்... 3 மாதங்கள் வரை பார்க்கலாம். ஒரு வருடம், 2 வருடங்கள், 3 வருடங்கள் வரை காத்திருக்கலாம். 3 வது வருட முடிவில் மாதந்தோறும் சந்திக்கிற 2 கோடி ரூபாய் பற்றாக்குறையானது, மிகப்பெரிய கடனாக மாறி பயமுறுத்தும். 100 கோடியில் பிரமாண்டமாகத் தொடங்கப்பட்ட பிசினஸ், மெல்ல மெல்ல வலுவிழந்து, பொலிவிழந்து, ஆட்டம் காண ஆரம்பிக்கும்.

வாழ்க்கையிலும் இப்படி பணம், நேரம், முயற்சி, உழைப்பு என ஏதோ ஒன்றை, யாரோ ஒரு நபரின் மேலோ, உறவின் மேலோ செலுத்துகிறோம். சில நாட்கள் கழித்துப் பார்த்தால் அவை அத்தனையும் வீண் எனத் தெரிய வரும்போது வெறுமையும் விரக்தியும் தலைதூக்கலாம். அப்போது என்ன செய்ய வேண்டும் என்கிற சிந்தனையில் தெளிவு வேண்டும். அந்தத் தெளிவு இல்லாமல்தான் பலரும் பல சிக்கல்களில், குழப்பங்களில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்.

2 குழந்தைகளின் அம்மா எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என்னைச் சந்திக்க வந்தார் யமுனா. நிறைய படித்தவர். திருமணத்துக்குப் பிறகு கணவர், குழந்தைகள் என வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போயிருக்கிறார். பணக்கார மாமியாரின் அளவுக்கு அதிகக் கட்டுப்பாடு, கணவரின் அடக்குமுறை என அவரால் அந்தக் குடும்பத்தில் காலந்தள்ள முடியாமல், ஒரு கட்டத்தில் குழந்தைகளுடன் வெளியே வந்திருக்கிறார். தனியே ஒரு பிசினஸ் தொடங்கியவர், குறுகிய காலத்தில் அதில் முன்னணிக்கு வந்திருக்கிறார்.

தொழில் ரீதியாக அவருக்கு அறிமுகமானார் ஜேம்ஸ். அவரும் விவாகரத்தானவர். இருவருக்கிடையிலும் நல்ல நட்பு இருந்தது. கிட்டத்தட்ட 7 வருடங்கள் நண்பர்களாகவே பழகினார்கள்.  தன் பிள்ளைகளை போர்டிங் பள்ளியில் சேர்த்துவிட்ட யமுனா, கடந்த 3 வருடங்களாக ஜேம்ஸுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்வதாகச் சொன்னார். சிறு குழந்தைகளுடன், கணவரை விட்டுப் பிரிந்த நிலையில் ஜேம்ஸின் அருகாமை, மனத்தெம்பையும் ஆறுதலையும் அளித்ததாகவும் தன் பிசினஸுக்கு உதவியாக இருந்ததாகவும் சொன்னார் யமுனா.

தனது பிள்ளைகள் தன்னைப் புரிந்து கொண்டதுடன், ஜேம்ஸையும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்ட நிலையில், தனக்கு அந்த உறவில் திடீர் சலிப்பு உண்டானதையும் சொன்னார்.‘‘3 வருஷமா சேர்ந்து வாழறோம். ஆனா, இது சரியா வராதுனு சமீப காலமா மனசு சொல்லுது. அவரை விட்டு ஒரேயடியா பிரியவும் மனசு வரலை. அதுக்கப்புறம் நான் துணையில்லாத தனியாளா ஆயிடுவேனோனு சில நேரங்கள்ல பயமா இருக்கு. பிசினஸ் சம்பந்தமா நான் எங்கே போனாலும் என்கூட அவரும் துணைக்கு வந்திருக்கார்.

அவருக்கு கம்பெனி கொடுக்கணுங்கிறதுக்காகவே என்னோட பிசினஸ் பொழுது களை தியாகம் பண்ணியிருக்கேன். இப்ப அவருக்கும் என்மேல ஈர்ப்பு குறைஞ்சிட்டே வருதோனு ஒரு ஃபீலிங்.  ஒருவேளை தலைவிதியேனு என்கூட இருக்காரோனு கூட தோணுது. இத்தனைக்கும் பிறகு அவரோட துணை வேணுமானு யோசிக்கிறேன். தேவையில்லாத ஒரு சுமை மாதிரி ஃபீல் பண்றேன்.

ஒருவேளை அவர் என்கூட இல்லைன்னா, என்னோட பிசினஸை இன்னும் பெரிய அளவுக்கு டெவலப் பண்ணலாமோனு கூட தோணுது. பிள்ளைங்களுக்கு அவரோட உறவு பிடிச்சிருக்கு. எனக்கு சலிப்பு தட்டுது. நான் என்ன செய்யட்டும் மேடம்?’ எனக் கேட்டார்.‘‘நடுத்தர வயதைத் தாண்டிய நிலையில் இருக்கும் உங்களுக்கு உறவில் உண்டான சலிப்பு இயற்கையானதே. இந்த வயதில் இனி நாம் தனியே நின்று சாதித்து விட முடியும் என நினைக்கலாம்.

சமுதாயத்துக்கு நல்லது செய்கிற, பெரிய அந்தஸ்தில் இருக்கிற பல பெண்கள் இவ்வாறு நினைக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் ஆதரவுக்கு ஒரு துணை வேண்டுமா, வேண்டாமா என்பதை நீங்கள் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.‘நம்மை நேசிக்க ஒருவர்... நாம் நேசிக்க ஒருவர்...’ என 7 வருட வாழ்க்கையை நீங்கள் கடத்தி விட்டீர்கள்.

தனியே வாழ்ந்து விட முடியும் என நீங்கள் நினைத்தால் தைரியமாக வாழலாம். கணவரைப் பிரிந்து தனியே வந்த போது, உங்களுக்கு ஆறுதலும் ஆதரவும் தர ஒரு துணை தேவைப்பட்டது. இப்போது மனதளவில் நீங்கள் வலிமை பெற்று விட்டீர்கள். அவரைப் பிரிந்து வாழ நினைப்பதில் உங்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் தேவையில்லை. அவருடனான உறவு பாரமாகத் தெரிகிற போது, அதிலிருந்து விலகி நிற்பதில் தவறில்லை.

அதே நேரம் உங்கள் பிள்ளைகளுக்கும் அவருக்குமான உறவில் நீங்கள் குறுக்கிட வேண்டாம். அந்த உறவு அப்படியே தொடரட்டும். அவரிடம் அன்பாக இருங்கள், அவருக்கு மதிப்பு கொடுங்கள். ஆனால், அது பழைய உறவின் சாயலில் இல்லாமல் முதிர்ந்த மனப்பக்குவத்துடன் இருக்கட்டும்’’ என யமுனாவுக்கு அட்வைஸ் செய்தேன்.

சங்க்கன் காஸ்ட் (sunken cost) என்று சொல்வார்கள். ஒரு வியாபாரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிற ஒரு பிசினஸில், மேலும் மேலும் பணத்தைப் போடுவது எப்படி முட்டாள்தனமானதோ, அதே போன்றதுதான் வாழ்க்கையும். எந்த ஒரு விஷயம் உடன்பாடில்லாமல் எந்தப் பலனையும் தராமல் - ஆனாலும், அதிலேயே  உங்களை மூழ்கடிக்கச் செய்வதாக நினைத்தால், உடனடியாக அதிலிருந்து மீண்டு எழுந்திருப்பதுதான் புத்திசாலித்தனம். எல்லையற்று ஒரு விஷயத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தால், நஷ்டத்தை சந்தித்து, ஆட்டம் கண்டு போய் நிற்கிற தொழில் மாதிரி நிலைகுலைந்து போகலாம் உங்கள் வாழ்க்கையும்.

இரண்டு நண்பர்கள் தியேட்டருக்கு படம் பார்க்கப் போகிறார்கள். இருவரில் ஒருவருக்குப் படம் பிடிக்கவில்லை. பாதியிலேயே கிளம்பி விடலாம் என்கிறார். காசு கொடுத்து டிக்கெட் வாங்கியாயிற்று... வீணாக்க முடியாது... பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை என மீதிப் படத்தையும் பார்க்க வேண்டும் என்கிறார் இன்னொருவர்.

பணம் வீணாகக் கூடாது என்பதற்காக பிடிக்காத படத்தைப் பார்ப்பதில் 3 மணி நேரத்தை வீணடிக்கப் போகிறோமா? அல்லது அரை மணியிலேயே வெளியேறி, மீதமுள்ள இரண்டரை மணி நேரத்தை சேமிக்கப் போகிறோமா என்கிற இவர்களது முடிவில் யார் சொல்வது சரி?பிடிக்கவில்லை எனத் தெரிந்தும் உடனே வெளியேறுவதுதான் சரியான முடிவு.  வாழ்க்கைக்கும் இதுவே பொருந்தும்.

பிசினஸ் தோல்வி, கசந்து போன காதல், ஆட்டம் காண்கிற திருமண உறவு... அடுத்து என்ன என முடிவெடுக்கும் போது, கடந்த காலத்தில் நாம் வாரி இரைத்த பணம், நேரம், அன்பு இவை மட்டுமே முதலில் நம் மனத்தில் ஃபிளாஷ் அடிக்கும். அவற்றை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால், சுய பச்சாதாபமும் கழிவிரக்கமும் மேலிடும். நாம் எடுக்கப் போகிற முடிவுகள் தவறாகலாம்.

ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கிற போது, கடந்த காலத்தில் அது தொடர்பான நமது ஆசைகள், உணர்ச்சிகள் போன்றவற்றைப் பற்றி யோசித்து, அதற்காகவாவது அதைத் தொடர நினைப்பது மூடத்தனம். கடந்த காலத்தைப் பற்றிய யோசனை அனாவசியமானது. எதிர்காலம் என்பது எல்லைகளற்றது என்பதால் அதை நினைத்தும் கவலை கொள்ள வேண்டாம். ஆனால், உறுதியான திட்டமிடல் வேண்டும். நிகழ்காலம்தான் நிச்சயமானது. எனவே, நிகழ்காலத்தில் உங்களுக்கு நிம்மதியைத் தருகிற, உங்களைக் குழப்பாத, மன உளைச்சலைத் தராத விஷயங்களைப் பற்றி யோசிப்பதும் செய்வதும்தான் சரியாக இருக்கும்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

மூழ்கடிக்கும் சிந்தனை Empty Re: மூழ்கடிக்கும் சிந்தனை

Post by செந்தில் Tue Sep 23, 2014 4:54 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மூழ்கடிக்கும் சிந்தனை Empty Re: மூழ்கடிக்கும் சிந்தனை

Post by ஸ்ரீராம் Wed Sep 24, 2014 10:20 am

நல்லதொரு கட்டுரை.
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மூழ்கடிக்கும் சிந்தனை Empty Re: மூழ்கடிக்கும் சிந்தனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum