தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நகம் கடித்தால் புற்றுநோய் வரலாம்!

View previous topic View next topic Go down

நகம் கடித்தால் புற்றுநோய் வரலாம்! Empty நகம் கடித்தால் புற்றுநோய் வரலாம்!

Post by நாஞ்சில் குமார் Tue Sep 30, 2014 10:16 pm

நகம் கடித்தால் புற்றுநோய் வரலாம்! I2lems


‘விண்மீன் கொண்டு விரலில் நகம் சமைத்து’ என்று வர்ணித்துப் பாடுவது... மருதாணி வைத்து அழகு பார்ப்பது... நீளமாக வளர்ப்பது...  பாலீஷ்  போடுவது... எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நகம் கடிப்பது... நம்மில் பலருக்கு தவிர்க்க முடியாத ஓர் அன்றாடப் பழக்கம். இதற்கு என்ன காரணம்?  அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?

மனச்சோர்வும் குழந்தைப் பருவத்தில் இருந்தே இது பழக்கமாகிவிடுவதும் முக்கியக் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். ‘உலக அளவில் 30%  குழந்தைகள், 45% பதின்ம வயதினர், 25% முதியவர்கள் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்’ என்கிறது ஓர் ஆய்வு. ஸ்டைலுக்காக  செய்பவர்கள்தான் அதிகம். மகிழ்ச்சியில், தனிமையில், விரும்பத்தகாத செயல்களை செய்கிற போது நகம் கடிப்பவர்கள் ஏராளமானோர்.

* விளைவுகள்

நகம், பாக்டீரியா வளரும் இடம். சல்மனெல்லா (Salmonella), இ.கோலி (E.Coli) பாக்டீரியாக்கள் நகம், விரல் நுனிகளில் இருக்கும் அழுக்குகளில்  இருக்கின்றன. நகங்களைக் கடிக்கும் போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும். இதனால் எளிதில் நோய்த் தொற்று ஏற்படும்.

உடல் எதிர்ப்புச் சக்தி பாதிப்படைந்து நோய்களுக்கு வழிவிட காரணமாகும். பாரனைஷியா (Paronychia) என்கிற தோல் வியாதி ஏற்படவும்  வாய்ப்பிருக்கிறது. நகங்களில் இருக்கும் பாக்டீரியா, ஈஸ்ட், நுண்ணுயிரிகள் ஒன்று சேர்ந்து நகங்களின் மேல் தோலை சிவப்பாக்கி, தடித்து வீங்க  வைத்துவிடும். காலப்போக்கில்   சீழ் கட்டவும் வாய்ப்பிருக்கிறது. அதை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே சரி செய்ய முடியும்.

நகம் கடிப்பவர்களின் விரல் நுனிகளில் கிருமிகள் சேர்ந்து ஹியூமன் பாப்பில்லோமா வைரஸ் (human papilloma virus) தாக்குதல் ஏற்படும் அபாயம்  இருக்கிறது. இது அதிகமாகும்போது   புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் உண்டு. நகம் கடிப்பதால் பற்களில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள்  ஊடுருவி மேல் தாடையையும் கீழ் தாடையையும் முழுதாக மூட
முடியாத நிலை கூட ஏற்படும்.

* மனநிலை மாறுபாடுகள்

அமெரிக்கன் மனநல   ஆய்வகம், நகம் கடித்தலை எண்ண சுழற்சி நோயின் (Obsessive Compulsive Disorder) அறிகுறி என்கிறது. பிடிக்காத  செயலை செய்யும்போதும் சோர்வு தரும் சூழ்நிலைகளிலும் நகம் கடிக்கும் பழக்கம் ஆரம்பிக்கிறதாம். சிறியவர்கள் நகம் கடிப்பதால் செரிமானமாகாத  உணவுத் துணுக்குகள் குடல் வால் பகுதியில் சேகரமாகும். அதனால், ‘அப்பன்டிசைடிஸ்’ எனப்படும் குடல் வால் வருவதற்கும் வாய்ப்புண்டு. இதை  அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். நகம் கடிப்பதை சிறு வயதில் ஆரம்பித்து, பதின்ம வயதில் அதிகமாக்கி, இளம் வயதில்  பெரும்பான்மையானோர் நிறுத்திவிடுவார்கள். எனவே, ஆரம்பக்கட்டத்தில், சிறு வயதிலேயே இதைத் தடுப்பது நல்லது.

* குழந்தைகளின் நகம் கடிக்கும் பழக்கத்தை நிறுத்த சில எளிய வழிகள்

* எப்போதும் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருத்தல். முனைகளை இப்படி வழுவழுப்பாக்கிவிட்டால் கடிக்கும் ஆர்வம் குறைந்து விடும்.

* நகங்களைச் சுற்றி பேண்ட் எய்டுகள், டேப்புகளை சுற்றி வைக்கலாம்.

* ஸ்வெட்டர் பின்னுதல், கைவினைப் பொருட்கள் செய்தல் என கைகளுக்கும் விரல்களுக்கும் அதிக வேலைகள் கொடுக்கலாம்.

* விரல் நுனிகளில் புளிப்பான சாஸ்கள், பிடிக்காத சுவை கொண்ட க்ரீம்களை தடவலாம். நகம் கடிக்கும்போது சலிப்பு வந்து கடிப்பது குறைய  வாய்ப்பிருக்கிறது.

* நகம் கடிப்பதால் வரும் கேடுகளை எளிய முறையில் எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம்.

* பெரியவர்களின் நகம் கடிக்கும் பழக்கத்தை நிறுத்த சில எளிய வழிகள்

* பல ஆண்டுகளாக நகம் கடிக்கும் பழக்கத்தை விட முடியாதவர்கள் மனநல நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம். மனநலப் பயிற்சிகளை  மேற்கொண்டு பயன் பெறலாம்.

* வாழ்க்கை முறைகளை எளிய முறையில், அதிக மனவருத்தம் தராத வகையில் அமைத்துக் கொண்டால், பிரச்னைகளை பெரிதாக்காமல்  அமைதியான வாழ்க்கையைத் தொடர்ந்தால் நகம் கடிக்கும் பழக்கம் தொடராது.

* அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ‘ஈ.எஃப்.டி’ எனப்படும் ‘உணர்வுகளை சுதந்திரமாக அமைத்துக்கொள்ளுதல்’ என்னும் சிகிச்சை, முறையான  நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. இதன் மூலம் நகம் கடித்தலை மட்டுமல்ல... வேறு சில பிரச்னைகளையும் தீர்க்கலாம்.

* ‘பாசிடிவ் திங்கிங்’ அணுகுமுறையை பின்பற்றலாம். ஒன்றை அழுத்தமாக நினைவில் கொள்வது நல்லது. நகம் கடிப்பது ஆரோக்கியக் கேடு. அதைத்  தவிர்ப்பது நல்லது.      

நகம் கடிப்பவர்களின் விரல் நுனிகளில் கிருமிகள் சேர்ந்து ஹியூமன் பாப்பில்லோமா வைரஸ் தாக்குதல் ஏற்படலாம். இது அதிகமாகும்போது  புற்றுநோய்வருவதற்கான வாய்ப்பும் உண்டு.  

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நகம் கடித்தால் புற்றுநோய் வரலாம்! Empty Re: நகம் கடித்தால் புற்றுநோய் வரலாம்!

Post by mohaideen Wed Oct 01, 2014 11:00 am

பயமாத்தான் இருக்கு

என் மகன் என்ன சொன்னாலும் நிப்பாட்டறதில்ல
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum