தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நூடுல்ஸ் என்ன இருக்கிறது?

View previous topic View next topic Go down

நூடுல்ஸ் என்ன இருக்கிறது? Empty நூடுல்ஸ் என்ன இருக்கிறது?

Post by நாஞ்சில் குமார் Thu Oct 02, 2014 11:26 am

நூடுல்ஸ் என்ன இருக்கிறது? F0dh5u

வீடுகளில் சமைக்கும் உணவுகளில், மிகவும் சுலபமாக இரண்டே நிமிடங்களில் தயார் செய்யும் உணவுதான் நூடுல்ஸ். இதனை, வாரத்தில் ஒருநாள்   ஒருமுறையாவது சுவைக்க வேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் உள்ளது.

குழந்தைகள் விரும்பிக் கேட்டால் பெற்றோர்களுக்கு செய்து கொடுக்கவும் எளிதான உடனடி உணவாக நூடுல்ஸ் மாறிப்போய் விட்டது. இத்தனை  கவர்ச்சியான விளம்பரங்களில் வரும் நூடுல்ஸ் அதன் சுவைக்கு நிகரான அபாயங்களையும் கொண்டுள்ளதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிலவகை நூடுல்ஸ்களில் மெழுகு அல்லது லிக்விட் பாரஃபின் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்கு சேர்க்கப்படுகிறது. இப்படி சேர்ப்பது  உடல்நலத்துக்கு பெரும் தீங்கு இழைக்கக் கூடியது.

நம் உடலுக்கு வரும் வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவற்றை நூடுல்ஸில் சேர்க்கப்படும் மெழுகு உறிஞ்சி உடலில் தங்க விடாமல்   செய்துவிடுகிறது. இதில் மூளைச்செல்களை உருவாக்கும் முக்கிய வைட்டமின்களும் அடங்கும். இது தவிர ஹார்மோன்களை  சரியாக சுரக்கச்செய்து  அழகான சருமத்தையும் கேசத்தையும் பராமரிக்க  கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உதவுகின்றன.

இவையனைத்தும் மெழுகு சேர்க்கப்பட்ட நூடுல்ஸ்களை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்காமல் போகின்றன. நூடுல்ஸ் இதயம் சம்பந்தப்பட்ட  நோய்களையும் அதிக ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை, உடல் பருமன், இடுப்பிலும் வயிற் றிலும் தேவையற்ற சதைகளை உருவாக்குதல்  போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதனால், மூளைத்தாக்கு நோய் (ஸ்ட்ரோக்), நீரிழிவு போன்றவை எளிதாக வருகின்றன.

நூடுல்ஸில் உள்ள மைதா, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்து இரண்டாம் வகை நீரிழிவு நோய் வர காரணமாக அமைகிறது.  நூடுல்ஸில் வெள்ளை நிறத்துக்காக சேர்க்கப்படும் பிளீச்சிங் பொருளான அலோக்ஸான் (alloxan) கணைய சுரப்பிகளில் இன்சுலினை சுரக்கச்  செய்வதை பாதிப்படையச் செய்து நீரிழிவு நோய் வருவதற்கு வழிவகுக்கிறது. மக்களுக்கு அலோக்ஸான் பற்றிய விழிப்புணர்வு இல்லை.

தென்கொரிய ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு இந்தியாவில் பெண்களுக்கு நூடுல்ஸ் சாப்பிடுவதால் அதிக தீமைகள் வருவதைத்  தெரிவித்துள்ளது. நூடுல்ஸில் உள்ள ‘பிஸ்பினால் ஏ’ என்ற மூலக்கூறு பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை பாதிக்கிறது.  இதனால் பெண்களுக்கு ‘பாலிஸிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை வரும் அபாயம் உண்டாம்.

பெரும்பான்மையான மக்களுக்கு இயற்கை தானியங்களால் செய்யப்பட்ட ஆரோக்கியம் தரும் நூடுல்ஸ் கடைகளில் கிடைப்பது தெரிவதில்லை.  இயற்கை முறையில் வரகு அரிசி, சாமை அரிசி, தினை அரிசி, கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி அரிசி போன்றவற்றால் செய்யப்படுகிற நூடுல்ஸ்  இப்போது கிடைக்கின்றன. இவற்றில், உடலுக்குத் தேவையான சத்துக்களான கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி-6, நியாசின், மக்னீசியம்  போன்றவை உள்ளன.

இவை உடலில் தாறுமாறான இன்சுலின் அளவை தடை செய்து சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இரண்டே நிமிடங்களில் தயார்  செய்துவிடக் கூடிய இன்ஸ்டன்ட் உணவு உண்மையிலேயே அவசியமானதுதானா, ஆரோக்கிய மானதுதானா என்பதையும் இனி இரண்டு நிமிடங்கள்  யோசியுங்கள். நூடுல்ஸில் உள்ள‘பிஸ்பினால் ஏ’ என்ற மூலக்கூறு பெண்களுக்கு ‘பாலிஸிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி  பிரச்னை வரும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நூடுல்ஸ் என்ன இருக்கிறது? Empty Re: நூடுல்ஸ் என்ன இருக்கிறது?

Post by mohaideen Thu Oct 02, 2014 12:03 pm

நூடுல்ஸ் எனக்கு பிடிக்காது.

என் வீட்டாரையும் தடுத்துவிட்டேன்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum