தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாத்தூர் தொட்டிப் பாலம்

View previous topic View next topic Go down

மாத்தூர் தொட்டிப் பாலம் Empty மாத்தூர் தொட்டிப் பாலம்

Post by பூ.சசிகுமார் Mon Nov 05, 2012 6:20 pm

மாத்தூர் தொட்டிப் பாலம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும். இது மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது.

மாத்தூர் என்னும் கிராமம் திருவட்டாற்றிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலையிலும், இந்தியாவின் தென்முனையாகிய [[கன்னியாகுமரி|கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலையிலும் உள்ளது.

இவ்வூர் குழித்துறை இரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலையிலும், திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்திலிருந்து 70 கி.மீ. தொலையிலும் அமைந்திருக்கிறது.


பாலத்தின் சிறப்பியல்புகள்:

இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள் உள்ளன. பெரிய பெரிய தொட்டிகளாக தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமாகவும், ஏழு அடி உயரமும் உயரமாகவும் காணப்படுகிறது.


பெயர் காரணம்:

தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று கீழே பார்த்தால் ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கிறது. அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது.
மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது.


அமைவிடம்:

1962 ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த காமராஜரால் தொடங்கப்பட்ட இப்பாலம் 1969ல் முழுமையாக கட்டப்பட்டு நிறைவுபெற்றது இந்தப்பாலம் நாகர்கோவிலில் இருந்து 45 கட்டை (கி.மீ.) தூரத்திலும் திருவட்டாறிலிருந்து 3 கட்டை தூரத்திலும் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் இங்கு செல்லலாம்.

நன்றி: விக்கிபீடியா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மாத்தூர் தொட்டிப் பாலம் Empty Re: மாத்தூர் தொட்டிப் பாலம்

Post by mohaideen Mon Nov 05, 2012 6:23 pm

கண்ணாடிப் பாலமும் தொட்டிப் பாலமும்


[You must be registered and logged in to see this image.]



உலகின் மிக பெரிய கண்ணாடிப் பாலம் கிராண்ட் கனியன் Colorado நதிக்கு மேலே 4,000 அடி உயர மலையின் விளிம்பில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த பாலம் 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த
கண்ணாடி பாலத்தின் இறுதி சோதனையின் போது, இதில் உள்ள கண்ணாடிகள் போயிங் வகையான 747 போன்ற விமானங்களின் எடையை தாங்கும் என்று உறுதி செய்யப்பட்டது.


[You must be registered and logged in to see this image.]

இதற்குக் குறையாத நுணுக்கம் கொண்டது நம் நாட்டின் இருக்கும் பாலம்தான்....ஆசியாவிலே மிகவும் உயரம் ஆனதும் நீளமானதுமான மாத்தூர் தொட்டிப்பாலம், கண்ணாடிப் பாலத்திற்குச் சற்றும் குறையாத ஆச்சரியம் கொடுத்தது.
[You must be registered and logged in to see this image.]

பார்க்குமிடங்களெல்லாம்
நெருக்கமாகக் காணப்படும் தென்னை மரங்கள்.... கோடைக் காலத்திலும் வற்றாத ஆறுகளென, கேரளத்தின் சாயலோடு காணப்படும் மலைப் பாங்கான பிரதேசம் மாத்தூராகும். தென் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலுக்கு அருகில் மாத்தூர் அமைந்திருக்கிறது.



கன்னியாகுமரியிலிருந்தும் கேரளத்தின் தலைநகரான திருவனந்த புரத்திலிருந்தும் சம தூரத்தில் அமைந்திருக்கும் மாத்தூரில் ஆசியாவிலேயே மிகவும் நீளமானதும் உயரமானதுமான தொட்டிப் பாலம் அமைந்திருக்கிறது.



தொட்டிப் பாலமெனப்படுவது இரண்டு உயரமான இடங்களுக்கிடையிலே காணப்படும் பள்ளத்தாக்கை ஒட்டி அமைக்கப்பட்ட வாய்க்காலுடனான பாலமாகும். நீரைக் கொண்டு செல்லும் நோக்குடன் அமைக்கப்பட்ட பாலத்தையே தொட்டிப் பாலம் என அழைப்பர். சில வேளைகளில் கப்பல் போக்குவரத்துக்காகவும் தொண்டிப் பாலம் அமைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் மலைப்பாங்கான காடுகளாகவிருந்த கணியான் பாறையென்ற மலையையும் கூட்டு வாயுப் பாறையென்ற மலையையும் இணைத்து, பறளியாற்று நீரைக் கொண்டு செல்வதற்காக அவ்விரு மலைகளுக்கும் நடுவே இப்பாலம் அமைந்துள்ளது.



தரைமட்டத்திலிருந்து ஏறத்தாழ 115 அடி உயரத்திலே நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலத்தின் நீளம் 1240 அடி( 1 கி.மீ) நீளமுடையது. 40 அடி இடைத்தூரத்தில் அமைக்கப்பட்ட 28 இராட்சதத்
தூண்கள் இந்தப் பாலத்தைத் தாங்குகின்றன.


[You must be registered and logged in to see this image.]

பறளியாற்றின் நீரானது 7 அடி உயரமும் 7 அடி அகலமுமுடைய பெரிய தொட்டிகளாகக் தொடுக்கப்பட்ட பகுதியால் கொண்டு செல்லப்படுகிறது. இரு மலைகளுக்கு நடுவில் தொட்டில் போன்ற
அமைப்புடன் காணப்படுவதால் தொட்டில் பாலமெனவும் இப்பாலம் அழைக்கப்படுகிறது.


சக்கர நாற்காலியொன்று செல்லக்கூடிய அகலத்தை மட்டுமேயுடைய ஒடுங்கிய மேற்பகுதியினூடாக பாலத்தின் ஒரு முனையிலிருந்து மறு பகுதிக்குச் செல்லமுடிந்தது. இரு மலைகளுக்குமிடையே அடர்ந்து காணப்படும் தென்னை, ரப்பர் மரங்கள், நீல வானம், சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆறு என இயற்கை அன்னையின் அருட்கொடைகள் யாவும் ஒருங்கே
தெரியும் காட்சியை விவரிக்க எவரிடமும் வார்த்தைகளிருக்காது தான்.


[You must be registered and logged in to see this image.]



பாலத்தின் மேற்பகுதியில் நடப்போரின் பாதுகாப்புக் கருதி, நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டாலும் நில மட்டத்திலிருந்து நாம் நிற்கும் உயரத்தைக் கற்பனை செய்தால், நமது கட்டுப்பாடின்றியே கால்கள் உதறத் தொடங்குவதைத் தடுக்க முடியாமல் போவதையும்
கையிலிருக்கும் பொருட்கள் விழுந்துவிடுமோ என கை தன்பாட்டிலேயே அவற்றை இறுகப் பற்றிப் பிடிப்பதையும் உணரலாம். அனுபவித்த எவரும் அதை மறுக்கமாட்டார்கள்.



வெளியான இடமொன்றில் 115 அடி உயரத்திலிருந்து இயற்கையை ரசிப்பது கூட ஒரு சுகமான வித்தியாசமான அனுபவம் தான்.



இயற்கையின் அருள் மழையில் நனைந்தபடியே பாலத்தின் மறு முனை அடைந்தால் பார்க்குமிடங்களில் எல்லாம் ரப்பர் தோட்டங்கள் மட்டுமே தெரியும். தோட்டங்களில் உள்ள ரப்பர் மரங்களினிடையே சிறிய பெட்டிகள் காணப்பட்டன. ரப்பர்த் தோட்டங்களிலேயே சிறு
கைத்தொழில் முயற்சியாக, தேனீ வளர்ப்பும் இடம்பெறுவது தெரிந்தது. ரப்பர் மரங்களின் பூக்கும் காலத்தை ஆதாரமாகக் கொண்டே இந்தக் கைத்தொழில் முயற்சி நடைபெறுகிறது. வீட்டுக்கு வீடு சுற்று சுவர் போன்று அன்னாச்சி பழம் செடி உள்ளது.போகும் வழியாவும் செடி கொடிகளால் கேரளாவின் தனி அழகில் நாஞ்சில் நாடு காட்சி தருகின்றது.


[You must be registered and logged in to see this image.]



ஆரம்பித்த இடத்துக்கு மீண்டும் வர இரு வழிகள் இருக்கின்றன. வந்த பாதையினாலே அதாவது தொட்டிப் பாலத்தின் மேற் பகுதியாலேயே திரும்பி வரலாம். அல்லது, பாலத்தின் அருகிலேயுள்ள படிக்கட்டுக்களால் திரும்பி வரலாம். பாலம் முடிவடையுமிடத்திலே தொடங்கும் படிக்கட்டுக்களின் வழியே குறிப்பிட்ட ஆழம் வரை இயங்கிப் பின் அங்கே அமைக்கப்பட்டுள்ள சுழல் படிக்கட்டுக்களின் வழியே ஆரம்பித்த இடத்தைச் சென்றடையலாம்.



பாலத்தில் இருந்து கீழ் பக்கம் இருக்கும் நதியின் கரையில் இறங்கி செல்ல படிகளிலான பாதை உண்டு. அங்கு குழந்தைகளுக்கு விளையாட என ஒரு சிறிய பூங்காவும் பாதுகாக்கின்றனர் . சில தமிழ் படங்கள் இப்பாலத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமான
நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு நடந்து செல்கின்றனர். வெயில் காலமான பிப்ரவரியிலிருந்து மே மாதம் வரை இங்கு தண்ணீர் இல்லாதிருப்பதால் செல்லும் போது தண்ணீர் இல்லாததும் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதையும் காண முடிந்தது. மேற்க்கு தொடர்ச்சி மலையின் பகுதியான மகேந்திர மலையில் இருந்து உருவாகும் தண்ணீர் ஆகும் இது என்பதும் விவசாயத்திற்க்காக இத் தண்ணீரை பயன்படுத்துகின்றனர் என்பதும் இதன் சிறப்பு!


[You must be registered and logged in to see this image.]



சூழலின் வழி நெடுகிலும் பூந்தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பாலத்தைப் பார்வையிட, கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.பயணிகளுக்கு என நல்ல வசதி செய்து
கொடுக்கப்படுவதும் கவனிக்கப் படவேண்டியதே.





இந்தப் பாலம் 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு காலத்திலே கன்னியாகுமாரி மாவட்டத்தின் விளவன்கோடு, கல்குளம் ஆகிய பகுதிகள் மிகவும் வறண்ட பிரதேசங்களாக மாறியிருந்தன.



அப்பகுதிகளுக்கான நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தினால் விவசாயம் செழித்து வளங்கொழிக்கும் பிரதேசங்களாக அப்பிரதேசங்கள் மாறுமென எண்ணிய பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் உருவானதே இந்த மாத்தூர் தொட்டிப் பாலமாகும். அவரது பதவிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் அக்காலம் முடிவடைந்த பின்னரும் தொடரப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்..



படிக்காத மேதை எனப் போற்றப்படும் காமராஜர் போன்ற நாட்டு நலனில் அக்கறையுள்ள பெருந் தலைவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருந்தால், உலக நாடுகள் யாவும் இன்று ஒரே நிலையில் இருந்திருக்கும்.



மாத்தூர் தொட்டிப் பாலத்தின் பயனாக பல ஹெக்டர் விவசாய நிலங்கள் பயன் பெறத் தொடங்கின. தரிசு நிலங்கள் பல விவசாய நிலங்களாகின. கன்னியாகுமரி மாவட்டம் விவசாயத்தில் தன்னிறைவு கண்டது.



மாத்தூரில் உள்ள பாலம் மட்டும்தான் தொட்டிப் பாலமல்ல. உலகின் பல நாடுகளிலும் வெவ்வேறுபட்ட தொட்டிப் பாலங்கள் காணப்படுகின்றன.



தொட்டிப் பாலத்திற்குப் பின்னால் இருக்கும் தத்துவம் மிகவும் புராதனமானது. வரலாற்றிலே விவசாயத்தைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பயிர்களுக்கு நீரைப் பாய்ச்சுவதற்குத் தொட்டிப் பாலங்களைப் பயன்படுத்தினர். ரோம சாம்ராஜ்யத்தின் போது கட்டப்பட்ட தொட்டிப் பாலங்களுள் சில இன்னும் உபயோகத்தில் இருக்கின்றன. பயிர்களுக்கு நீரைபாய்ச்சுவதற்கு மட்டுமன்றி பெரிய நகர்களுக்கு குடிநீரை வழங்குவதற்கும் இந்த ரோம தொட்டிப் பாலங்கள் பயன்பட்டிருக்கின்றன. இன்னும் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.



தொட்டிப் பாலங்கள் ரோம சாம்ராஜ்யத்துடன் தொடர்புடையவை என வரலாறு குறிப்பிட்டாலும் அவற்றின் அடிப்படைத் தத்துவத்தின் பின்னணியில் சிறந்த நீர்ப்பாசன முறைமைகளைப் பயன்படுத்திய எகிப்திய, ஹரப்பா நாகரிக மக்களும் காணப்படுகின்றனர்.
பிரான்சில் அமைந்துள்ள பண்டைய ரோம தொட்டிப்பாலம்
[You must be registered and logged in to see this image.]



ரோம சாம்ராஜ்யம் பரவியிருந்த
இன்றைய ஜேர்மனி முதல் ஆபிரிக்கா வரையான பல நாடுகளிலும் குறிப்பாக ரோம்
நகரிலும் பல தொட்டிப் பாலங்கள் காணப்படுகின்றன.


இந்தியத் துணை கண்டத்திலும் பல புராதன தொட்டிப் பாலங்கள் காணப்படுகின்றன. துங்க பத்ரா நதிக் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த தொட்டிப்பாலம் 24 கி.மீ. நீளமாக இருந்ததாகக்
குறிப்பிடப்படுகிறது.


புராதன பாரசீகத்திப் தொட்டிப் பாலத்தின் தத்துவத்தையொட்டிய அமைப்பு நிலத்துக்குக் கீழ் அமைக்கப்பட்டது. கோடைக்காலங்களில் நீரைப் பாய்ச்சுவதற்கு இந்த முறைமை செயல்திறன் மிக்கதாகவிருந்தது. நிலத்திற்குக் கீழாக நீரைக்கொண்டு செல்வதால், வெப்பம் காரணமாக இழக்கப்படும் நீர் வெகுவாகக் குறைக்கப்பட்டது.


தென்னமெரிக்காவின் பெரு நாட்டிலே இன்றும் உயோகத்தில் இருக்கும் தொட்டிப் பாலங்கள் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.



புராதன இலங்கையிலும் கூட தொட்டிப் பாலங்கள் காணப்பட்டதாக வரலாறு கூறுகிறது.



இன்றைய நவீன யுகத்திலும், ஐக்கிய அமெரிக்கா தனது நகரங்களுக்கு நீரைக்கொண்டு செல்வதற்காக பெரிய தொட்டிப் பாலங்களைப் பயன்படுத்துகிறது. அவை ஒவ்வொன்றும் பலநூறு கிலோ மீட்டர்கள்
நீளமானவை. தொட்டிப் பாலத்தின் புதிய பரிமாணமாகவே குழாய் வழிப் பாலங்கள் காணப்படுகின்றன.



கைத்தொழில் புரட்சியுடன் உருவாகிய கால்வாய்கள் தொட்டிப் பாலங்களின் ஒரு பகுதியாகவே அமைக்கப்பட்டன.
[You must be registered and logged in to see this image.]
The canal on the bridge carries water for irrigation from one side of a hill to the
other side of a hill. The trough has a height of seven feet with a width of seven feet six inches.

பாலங்கள் நீரைக் கொண்டுசெல்லமுடியுமென்பது பலரும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்.. ஆனால் தொட்டிப் பாலங்களின் பின்னணியிலிருக்கும் வரலாற்றை ஆழ நோக்குகையில் நாம் எந்தக் காலத்தில் இருக்கிறோம் என்பதும் புரிய வேண்டும். 2000 வருடங்களுக்கு முன்னரே இந்தத் தொழில்நுட்பங்கள் இருந்திருக்கின்றன. அத்தகையதோர் சமூகத்தில் வழித்தோன்றிய நாம் அதே வழியில் புதியதோர் உலகொன்றை உருவாக்க முயல வேண்டும்.

[You must be registered and logged in to see this link.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாத்தூர் தொட்டிப் பாலம் Empty Re: மாத்தூர் தொட்டிப் பாலம்

Post by பூ.சசிகுமார் Mon Nov 05, 2012 7:59 pm

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மாத்தூர் தொட்டிப் பாலம் Empty Re: மாத்தூர் தொட்டிப் பாலம்

Post by முரளிராஜா Tue Nov 06, 2012 7:19 am

ஒரு முறை சென்று பார்த்துவிட வேண்டியதுதான்
தெரியபடுத்தியமைக்கு நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மாத்தூர் தொட்டிப் பாலம் Empty Re: மாத்தூர் தொட்டிப் பாலம்

Post by mohaideen Tue Nov 06, 2012 11:12 am

நான் ஊர்ல இருக்கும்போது குடும்பத்தோடு வாங்க முரளி.

நல்லா சுத்திக் காட்டுகிறேன்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாத்தூர் தொட்டிப் பாலம் Empty Re: மாத்தூர் தொட்டிப் பாலம்

Post by முரளிராஜா Tue Nov 06, 2012 4:39 pm

mohaideen wrote:நான் ஊர்ல இருக்கும்போது குடும்பத்தோடு வாங்க முரளி.

நல்லா சுத்திக் காட்டுகிறேன்.
தங்கள் அன்பான அழைப்புக்கு மிகுந்த நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மாத்தூர் தொட்டிப் பாலம் Empty மாத்தூர் தொட்டில்பாலம்

Post by சிவா Mon Nov 26, 2012 10:11 pm

நாகர்கோவிலில் இருந்து மேற்கே திருவனந்தபுரம் செல்லும் பாதையில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்கள்

சிதறால்

கன்னியாகுமரியில் இருந்து 45 கி.மீட்டர் தூரத்தில் சிதறால் மலைக்கோயில் அமைந்துள்ளது. சமணத்துறவிகள் இங்கு வாழ்ந்ததற்கான அடையாளமாக இந்த சமணக்கோவில் அமைந்துள்ளது. சமணத் தீர்த்தங்கரர்களின் நினைவாக இந்தியாவில் உள்ள சமணக்கோவில்களில் முக்கியமானது இது. மலைமேல் 3 கி.மீ.நடந்து சென்றால் வேலைப்பாடுகள் மிகுந்த சமணச்சிற்பங்களை காணலாம்.

மலைமேல் இருந்து சுற்றிலும் இயற்கைக் காட்சிகளை கண்டுகளிக்கலாம். கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக பேருந்து மூலமோ, கார் மூலமோ சிதறாலை அடையலாம். நாகர்கோவிலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.

கேரளபுரம்

நாகர்கோவிலில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் தக்கலை அருகே அமைந்துள்ளது கேரளபுரம் அதிசய விநாயகர் ஆலயம். இங்குள்ள விநாயகர் கோவில் பிரசித்தி பெற்றது. வருடத்திற்கு ஆறு மாதங்கள் கறுப்பு நிறத்திலும், ஆறு மாதங்கள் வெள்ளை நிறத்திலும் விநாயகர் இருப்பது இக்கோயிலின் சிறப்பு. கோவிலின் கிணறும் அதே நிறங்களை பிரதிபலிப்பது கூடுதல் சிறப்பு.

மாத்தூர் தொட்டில்பாலம்

மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது இந்தப் பாலம். இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இப்படி மொத்தம் 28 தூண்கள் உள்ளன. பெரிய பெரிய தொட்டிகளாக தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமாகவும், ஏழு அடி உயரமும் உயரமாகவும் காணப்படுகிறது.

தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று கீழே பார்த்தால் ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கிறது. அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது.

1971 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பாலமாகும். இந்தப்பாலம் நாகர்கோவிலில் இருந்து 45 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் இங்கு செல்லலாம்.

புனித தோமையர்

இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் அப்போஸ்தலர் என்னும் புனித தோமா. இயேசுவின் காலத்திற்கு பிறகு கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக தோமா இந்தியா வந்ததாக கூறப்படுகிறது. 52-23 ம் நூற்றாண்டுகளில் பஞ்சாப் வழியாக கேரளா வந்த அவர் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் மாதா ஆலயத்தை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலயம் தான் தமிழ்நாட்டின் முதல் கிறிஸ்தவ தேவாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலயம் எழுப்பப்படும் காலங்களில் அவர் திருவிதாங்கோடு செல்லும் வழியில் உள்ள கஞ்சிக்குழி என்னும் இடத்தில் மலைக்குகையில் தங்கியிருந்துள்ளார். அதற்கு ஆதாரமாக மாதாமலை என்று அழைக்கப்படும் இந்த மலையின் அடிவாரத்தில் பெரிய குகை ஒன்று இன்றும் காணப்படுகிறது. இந்த மலையின் மேலே பாறையில் காணப்படும் காலடித்தடம் தோமாவுடையது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

நாகர்கோவில் இருந்து கருங்கல் சென்று அங்கிருந்து பேருந்து அல்லது ஆட்டோ மூலம் தோமையர் மலையை அடையலாம்.


மகாதேவர் கோவில்

குமரி மாவட்டத்தின் தென்கோடியில் வைக்கல்லூர் எனும் ஊரில் காணப்பட்ட மணல் மேடுகளின் உட்பகுதியில் புதையுண்டு கிடந்து எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த நூற்றாண்டுகளைக் கடந்த ஆலயம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாண்டிய மன்னர்களால் இவ்வாலயம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடற்கரை அருகில் இருப்பதால் கடல் கொந்தளிப்பால் மணலால் மூடப்பட்டு பின்னர் 1922-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கருங்கற்களினால் கட்டப்பட்ட இக்கோவிலின் உட்பகுதியில் அழகிய கலைவேலைப்பாடுகள் நிறைந்த நந்தி ஒன்று காணப்படுகிறது. சுற்றியுள்ள பலப் பகுதிகளில் இருந்து ஏராளமான பல பக்தர்கள் தற்போது இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் இக்கோயிலை அடையலாம்.

பேச்சிப்பாறை அணை

குமரி மாவட்ட விவசாயம் இந்த அணையை நம்பித்தான் உள்ளது. நாகர்கோவிலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த அணை அமைந்துள்ளது. எந்தப் பருவ நிலையிலும் வற்றாதது இந்த அணை. குழந்தைகளோடு சென்றுவர மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகவும் இது விளங்குகிறது. சமீபத்தில் இங்கு படகுப்போக்குவரத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவி

கன்னியாகுமரியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் நாகர்கோவிலில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும் திற்பரப்பு அருவி அமைந்துள்ளது. எல்லாக் காலநிலையிலும் இந்த அருவியில் தண்ணீர் இருப்பது இதன் சிறப்பு. இந்தப் பகுதி முழுவதும் பச்சைப்பசேலென்று கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் திற்பரப்பு செல்லலாம். நாகர்கோவிலில் இருந்து திருவட்டார் அல்லது குலசேகரம் சென்று அங்கிருந்து பேருந்து மூலமும் திற்பரப்பு அருவியை அடையலாம்.

திருவட்டார்

கன்னியாகுமரியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் ஆயிரம் தூண்களும் ஏராளமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 63 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றது இந்தக் கோயில். கோயிலின் உட்புறத்தில் சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பச்சிலையை கொண்டு வரையப்பட்டவை. பல நூறு வருடங்களைக் கடந்தும் இந்த ஓவியங்கள் புதிதாக காட்சியளிப்பது இன்னும் சிறப்பு.

வெள்ளிமலை

நாகர்கோவிலில் இருந்து தக்கலை செல்லும் சாலையில் அமைந்துள்ளது வெள்ளிமலை முருகன் கோவில். குன்றின் மேல் அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு செல்ல மலைமீது 300 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள குகையில் தான் வள்ளியை முருகன் மணம் செய்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. நாகர்கோவிலில் இருந்து தொடர்ச்சியாக தக்கலைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

நன்றி:http://www.keetru.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

மாத்தூர் தொட்டிப் பாலம் Empty Re: மாத்தூர் தொட்டிப் பாலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum