தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அழகையும் இளமையையும் தக்க வைக்க அதிகபட்ச அக்கறை!

View previous topic View next topic Go down

அழகையும் இளமையையும் தக்க வைக்க அதிகபட்ச அக்கறை! Empty அழகையும் இளமையையும் தக்க வைக்க அதிகபட்ச அக்கறை!

Post by நாஞ்சில் குமார் Fri Oct 17, 2014 3:58 pm

[You must be registered and logged in to see this image.]


சினிமா மேக்கப்

நடிக்க வந்தப்ப கருப்பா, சுமாரா இருந்தாங்க. ரெண்டு படம் பண்ணினதும் பளபளனு ஆயிட்டாங்க. மேக்கப் போட்டுப் போட்டு இவங்களுக்கெல்லாம்  கலரும் பளபளப்பும் வந்துடும் போல...’’ என்கிற எண்ணம் சாமானியர்களுக்கு நிச்சயம் இருக்கும். உண்மையில் சாதாரண மனிதர்களைவிட  நட்சத்திரங்கள் தங்கள் தோற்றத்தில் அதிகபட்ச அக்கறையைக் காட்டினால்தான் அழகையும் இளமையையும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.  உணவு, உபயோகிக்கிற அழகு சாதனங்கள், எடுத்துக் கொள்கிற அழகு சிகிச்சை, பராமரிப்பு என எல்லாவற்றையுமே பார்த்துப் பார்த்துச் செய்து  கொள்வார்கள். மேக்கப் விஷயத்திலும் அப்படியே. சாதாரண மேக்கப்புக்கும் சினிமா மேக்கப்புக்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு.

‘‘நட்சத்திரங்கள் உபயோகிக்கிற மேக்கப் சாதனங்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப தரமானவையா இருக்கும். தினசரி மேக்கப் போடும் போது அந்த  மேக்கப்பால அவங்க சருமமோ, கூந்தலோ கொஞ்சமும் பாதிக்கப்படாதபடியான அழகு சாதனங்களை மட்டும்தான் உபயோகிப்பாங்க. மேக்கப்  போடறதுக்கு மெனக்கெடற அளவுக்கு, அதை நீக்கவும் சருமத்தையும் கூந்தலையும் பராமரிக்கவும் மெனக்கெடுவாங்க... மேக்கப்புக்கு அடிப்படையா  அவங்க உபயோகிக்கிற டெர்மா ஸ்டிக்குக்கு இயல்புலயே சரும நிறத்தை அதிகரிக்கிற  தன்மை உண்டு. அதனாலதான் அறிமுகமாகிறப்ப மாநிறமா  வர்றவங்க கூட ரெண்டு, மூணு படங்கள்ல நடிச்சதும் பளபளனு மாறிடறாங்க...’’ சினிமா நட்சத்திரங்களின் அழகுத் தகவலுடன் ஆரம்பிக்கிறார்  ‘நேச்சுரல்ஸ்’ வீணா குமாரவேல்.

‘‘மேக்கப்ல பல வகை உண்டு. போட்டோ ஷூட்டுக்கு, வீடியோ ஷூட்டுக்கு, மாடலிங் பண்றதுக்கு, கல்யாணத்துக்கு, ரிசப்ஷனுக்கு,பார்ட்டிக்கு... இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். அதுல சினிமா மேக்கப் கொஞ்சம் ஸ்பெஷல்...’’ என்ற வீணா, அதை ஒரு நடிகைக்கு செய்து  காட்டி, விளக்கவும் தயாரானார். நடிகை சாரா தேவாவுக்கு மேக்கப் போட முடிவானது. மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஷிவா மேக்கப்பையும், ஹேர்  ஸ்டைலிஸ்ட் கலீம் கூந்தல் அலங்காரத்தையும் செய்து காட்டியபின், அழகு தேவதையாக மாறினார் சாரா.

எந்த வித மேக்கப் செய்யும் முன்பும் சருமத்தை கிளென்ஸ் மற்றும் டோன் செய்ய வேண்டும்.

நடிகைகளுக்கான மேக்கப் என்பது நீண்ட நேரம் அப்படியே இருக்க வேண்டும். எனவே, மேக்கப்பை தொடங்கும் முன்பாக ஐஸ் கட்டிகளால் முகம்,  கழுத்து உள்ளிட்ட பகுதிகளைத் தேய்க்க வேண்டும்.

அடுத்தது ஃபவுண்டேஷன். நடிகைகளுக்கு உபயோகிக்கிற ஃபவுண்டேஷன், அவர்களது சரும நிறத்தைவிட 2 ஷேடு லைட்டாக இருக்கும்படி தேர்வு  செய்யப்பட வேண்டும். அப்போதுதான் கேமரா லைட் வெளிச்சத்தில் அவர்களது சருமம் இயற்கையான பொலிவுடன் தெரியும். பளபளப்புக்கான  பொருட்கள் சேர்த்த ஃபவுண்டேஷனை இவர்களுக்கு உபயோகிப்பதில்லை. மேட் ஃபினிஷ் கொண்ட ஃபவுண்டேஷன் மட்டுமே இவர்களுக்கான சாய்ஸ்.

அடுத்தது கான்டரிங். எப்படிப்பட்ட அழகிய முகங்களுக்கும் கான்டரிங் அவசியம். அதாவது, கன்னங்கள், தாடைப் பகுதிகள், மூக்கு பகுதிகளை  விருப்பமான ஷேப்பில் கொண்டு வருவதே கான்டரிங். ஃபேஸ் கட், நோஸ் கட், ஜா லைன் கட் என்று சொல்வதும் இதுதான். இதற்கு 2 முதல் 3  ஷேடு டார்க் நிற ஃபவுண்டேஷனை உபயோகிப்போம்.

நடிகைகளின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் அவர்களது கண்களுக்கு பெரும்பங்கு உண்டு. புருவங்களை ஜெல் ஐ ப்ரோ ஃபில்லர் வைத்து நிரப்பி,  சரியான வடிவத்துக்குக் கொண்டு வருவோம். இந்த ஜெல் பிரவுன் மற்றும் டிரான்ஸ்பரன்ட் ஷேடுகளில் கிடைக்கிறது. இது புருவங்களுக்கு  இயற்கையான ஷேப்பை கொடுக்கும். ஃபால்ஸ் ஐலேஷ் எனப்படுகிற செயற்கையான இமைகள் இவர்களுக்கு மிகவும் முக்கியம். அதுவே பாடல்  காட்சிகளுக்கான மேக்கப்பில் இறகு வைத்த செயற்கை இமைகளைக்கூட உபயோகிப்போம்.

கண்களை சற்றே மேலே உயர்த்தியது போலக் காட்டும்படி ஐ ஷேடோ உபயோகிப்போம். அப்போதுதான் கண்களுக்கு பாதாம் வடிவம் கிடைக்கும்.  திரையில் பார்ப்பதற்கு கண்களை அழகாகத் தெரியச் செய்கிற டெக்னிக் இது. தவிர, கண்களுக்கு ஒருவித ஃப்ரெஷ் லுக்கையும் கொடுக்க முடியும்.  டார்க் பிரவுன், மெரூன் மற்றும் கருப்பு நிற ஐ ஷேடோ இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும். பாடல் காட்சிகளுக்கு ஃபேஷன் கலர்கள்  உபயோகிக்கலாம்.

காஜல் உபயோகிக்கும் போது, கண்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உபயோகிப்பது வழக்கம். ஆனால், நடிகைகளுக்கு காஜல் உபயோகிக்கிற போது  இமைகளின் வேர்ப்பகுதியில் தடவ வேண்டும். வாட்டர்ப்ரூஃப் காஜல்தான் சிறந்தது. கருப்பு அல்லது பிரவுன் ஷேடு பொருத்தமாக இருக்கும்.

கடைசியாக உதடுகள். முதலில் உதடுகளின் மேல் லிப் ஸ்டெயின் தடவப்படும். இதன் மூலம் உதடுகளின் வடிவத்தை நமக்குத் தேவையான மாதிரி  வரைந்து கொள்ளலாம். ஒருமுறை இதைத் தடவி விட்டால் போதும். பிறகு அவ்வப்போது தேவைக்கேற்ப லிப்ஸ்டிக்கை மட்டும் விருப்பமான  கலர்களில் மாற்றிக் கொள்ளலாம். லிப் ஸ்டெயின் உபயோகிக்கும் போது லிப் லைனர் கூட தேவையில்லை. உதடுகளுக்கு 3டி எஃபெக்ட் கொடுக்கவும்  எடுப்பாகக் காட்டவும் கடைசியாக லிப் கிளாஸ் உபயோகிக்க வேண்டும். அதையும் மொத்த உதடுகளுக்கும் தடவாமல், உதடுகளின் மையப் பகுதியில்  மட்டுமே தடவ வேண்டும்.

ஹேர் ஸ்டைல்

முதலில் நடிகைகளின் கூந்தலை கண்டிஷன் செய்து மிருதுவாக்குவோம். ஒரு படத்துக்கு சுமார் ஏழெட்டு விதமான ஹேர் ஸ்டைல் தேவைப்படும்.  அத்தனைக்கும் பொருந்துகிற அளவுக்கு அவர்களது கூந்தலை தயார்படுத்த வேண்டும். இன்று எப்படிப்பட்ட லுக் கொடுக்கவும் ஸ்டைலிங் பொருட்கள்  வந்துவிட்டன. சுருட்டை முடி வேண்டுமா, அலை அலையான கூந்தல் வேண்டுமா, ஸ்ட்ரெயிட்டனிங் செய்யப்பட்ட லுக்வேண்டுமா... இப்படி  எல்லாவற்றுக்கும் ஸ்பிரே வகைகள் இருக்கின்றன. பெரும்பாலான நடிகைகளின் கூந்தல் குட்டையாக, மெலிதாக இருப்பதால் அவர்கள் ஹேர்  எக்ஸ்டென்ஷன் எனப்படுகிற செயற்கை கூந்தல் அட்டாச்மென்ட்டுகளை உபயோகிக்கிறார்கள்.

ஒல்லியான கூந்தலை அடர்த்தியாகக் காட்டவும், முன் பக்கம் உயர்த்திக் காட்டவும் கூட இன்றைக்கு ஸ்பிரே வகைகள் வந்துவிட்டன. விருப்பமான  ஹேர் ஸ்டைலை செய்து முடித்ததும் கடைசியாக ஹோல்டிங் ஸ்பிரே உபயோகிப்போம். அது அந்த ஹேர் ஸ்டைலை பல மணி நேரம் அப்படியே  வைத்திருக்க உதவும். ஷூட்டிங் இல்லாத நாட்களில் டீப் கிளென்சிங் ஷாம்பு உபயோகித்து, கூந்தலில் படிந்த கெமிக்கல் பாதிப்புகளை அகற்றுவது,  மாயிச்சரைசர் அடங்கிய கண்டிஷனர் உபயோகிப்பது, லிப் இன் கண்டிஷனர் உபயோகிப்பது, கூந்தலைப் பாதுகாக்க சீரம் உபயோகிப்பது  போன்றவற்றையும் இவர்கள் தவறாமல் செய்ய வேண்டும்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

அழகையும் இளமையையும் தக்க வைக்க அதிகபட்ச அக்கறை! Empty Re: அழகையும் இளமையையும் தக்க வைக்க அதிகபட்ச அக்கறை!

Post by முரளிராஜா Fri Oct 17, 2014 7:28 pm

நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அழகையும் இளமையையும் தக்க வைக்க அதிகபட்ச அக்கறை! Empty Re: அழகையும் இளமையையும் தக்க வைக்க அதிகபட்ச அக்கறை!

Post by செந்தில் Fri Oct 17, 2014 8:25 pm

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அழகையும் இளமையையும் தக்க வைக்க அதிகபட்ச அக்கறை! Empty Re: அழகையும் இளமையையும் தக்க வைக்க அதிகபட்ச அக்கறை!

Post by mohaideen Sat Oct 18, 2014 12:13 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

அழகையும் இளமையையும் தக்க வைக்க அதிகபட்ச அக்கறை! Empty Re: அழகையும் இளமையையும் தக்க வைக்க அதிகபட்ச அக்கறை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum