தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

View previous topic View next topic Go down

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த  நிகழ்வுகள்  Empty அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Post by முழுமுதலோன் Fri Oct 31, 2014 11:28 am

தண்டனை!

தெருவிளக்கில் படித்து, தன்னுடைய திறமையால் படிப்படியாக முன்னேறி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உயர்ந்தவர் ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயர். அவர் எதற்கும் அஞ்சாத மன உறுதி படைத்தவர். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு -

ஒருசமயம், உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆங்கிலயேரின் வீட்டுத் தோட்டத்தில் நுழைந்ததற்காக ஒருவரைக் கடுமையாகத் தாக்கிவிட்டார் அந்த ஆங்கிலேய நீதிபதி. அடி வாங்கிய நபர், அந்த நீதிபதியின் மேல் வழக்குத் தொடுத்தார். அந்த வழந்கு ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரிடம் விசாரணைக்கு வந்தது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஐயரிடம் வந்து, ""குற்றம் சுமத்தப்பட்ட ஆங்கிலேயர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். நேரில் வந்து வழக்கில் ஆஜராகுமாறு வற்புறுத்த வேண்டாம்'' என்று கேட்டுக் கொண்டனர்.

ஆனாலும் முத்துசாமி ஐயர் அந்த ஆங்கிலேய நீதிபதியை, நீதிமன்றத்துக்கு வரவழைத்து, அவர் செய்தது குற்றம் என்று தீர்ப்பளித்து, மூன்று ரூபாய் அபராதம் விதித்தார்.

ஓர் இந்தியக் குடிமகனுக்காக ஆங்கிலேய ஆட்சியில் ஓர் ஆங்கிலேயரை, அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதியையே தண்டித்த ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரின் நேர்மையையும் துணிச்சலையும் அனைவரும் வியந்து பாராட்டினர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த  நிகழ்வுகள்  Empty Re: அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Post by முழுமுதலோன் Fri Oct 31, 2014 11:29 am

சந்தேகம்!

காமராஜரை, சென்னை, திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சந்திக்க வருபவர்களுக்கு ஒரு சந்தேகம் வரும்.

காமராஜர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வருகிறவர்களிடம் பேசுவாரே தவிர, அவர்களிடம் "சாப்பிடுகிறீர்களா?' என்று கேட்க மாட்டாராம் காமராஜர்.

இதற்கான காரணம், நீண்ட நாட்களுக்குப் பிறகே பலருக்கும் தெரிய வந்தது.

காமராஜர் சாப்பிடும் உணவில் போதுமான உப்போ, புளிப்போ, காரமோ இருக்காதாம். டாக்டர் ஆலோசனைப்படி, உடல்நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சமைக்கப்பட்ட உணவாக அது இருந்தது. அந்த உணவை மற்றவர்களுக்கும் கொடுத்து சங்கடப்படுத்த காமராஜர் விரும்பவில்லை. மேலும், பெரும்பாலும் கஞ்சி உணவையே அவர் சாப்பிடுவார். எனவேதான் யாரையும் சாப்பிடுங்கள் என்று சொன்னதில்லை.

ஆனால் வெளியூர்பயணம் என்றால், தனது சாப்பாடு முடிந்தால் சரி என்கிற நினைப்பு அவருக்கு எப்போதுமே இருந்தது கிடையாது. உடன் வந்த போலீஸ், பத்திரிகையாளர்கள், டிரைவர்கள் "எல்லோரும் சாப்பிட்டாயிற்றா' என்று கேட்டு, "ஆச்சு' என்று பதில் வந்தபின்புதான் பயணத்தைத் தொடருவார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த  நிகழ்வுகள்  Empty Re: அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Post by முழுமுதலோன் Fri Oct 31, 2014 11:29 am

புத்திசாத்தனம்!

சாக்ரடீஸின் சீடர் ஒருவர், ""ஐயனே, அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?'' என்று கேட்டார். உடனே அவர், ""அதோ இருக்கிறாரே ஒரு கிழவர், அவரிடம் சென்று இங்கிருந்து கிராமத்துக்குப் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும் என்று கேட்டு வா!'' என்றார்.

சீடரும் அந்தக் கிழவரிடம் சென்று அவ்வாறே கேட்டார். அவர் பதிலேதும் கூறவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டார். பலன் இல்லை. கிழவருக்குப் புத்திசுவாதீனம் இல்லையோ என்று நினைத்து, வந்த வழியே திரும்பிச் சில அடிகள் எடுத்து வைத்தார் அந்தச் சீடர். உடனே கிழவர் அவரை அழைத்து, ""நீ பத்து நிமிடங்களில் கிராமத்தை அடையலாம்!'' என்றார்.

""நீங்கள் ஏன் இந்தப் பதிலை நான் கேட்டவுடன் கூறவில்லை?'' என்று சந்தேகத்துடன் கேட்டார் சீடர்.
""நீ எவ்வளவு வேகமாக நடக்கிறாய் என்பதைப் பார்க்காமல் எப்படியப்பா, நீ கிராமத்தை எவ்வளவு நேரத்தில் அடைவாய் என்பதைக் கூற முடியும்?'' என்று திருப்பிக் கேட்டார் அந்தக் கிழவர்.

சீடர் வியப்பும் மரியாதையுமாக சாக்ரடீஸிடம் வந்து நடந்ததைக் கூறியதும் சாக்ரடீஸ், ""அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம்!'' என்றார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த  நிகழ்வுகள்  Empty Re: அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Post by முழுமுதலோன் Fri Oct 31, 2014 11:30 am

யாருக்காக?

அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்தில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. அண்ணா பேசிக் கொண்டிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் விநாயகம் ஒரு கேள்வி கேட்டார், ""பேருந்துகளில், யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்ற குறள் யாருக்காக எழுதப்பட்டுள்ளது? பேருந்து ஓட்டுநருக்கா அல்லது பேருந்து நடத்துநருக்கா?'' என்றார்.

அதற்கு அண்ணா சட்டென்று பதில் சொன்னார், ""நா உள்ள (நாக்கு உள்ள) ஒவ்வொருவருக்காகவும்.''
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த  நிகழ்வுகள்  Empty Re: அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Post by முழுமுதலோன் Fri Oct 31, 2014 11:30 am

தடை யாருக்கு?

புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு வர இருந்த ஜவாஹர்லால் நேருவை, "நேருவின் கார் புதுக்கோட்டை எல்லைக்குள் நுழையக்கூடாது' என்று தடை விதித்தது, பிரிட்டிஷ் அரசை ஆதரித்த வந்த புதுக்கோட்டை சமஸ்தானம்.

ஆனால் குறிப்பிட்ட நாளில் புதுக்கோட்டை எல்லையை நெருங்கிய நேருவின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது. தடை உத்தரவுக்கான கடிதம் நேருவிடம் காட்டப்பட்டது.

அந்த சமயத்தில் நேருவுடன் கூட இருந்த தீரர் சத்தியமூர்த்தி நேருவின் காதில் ஏதோ ரகசியமாகக் கூறினார்.

உடனே இருவரும் காரிலிருந்து இறங்கி ஊருக்குள் நடக்க ஆரம்பித்தனர். அதிகாரிகள் அவர்களை வழிமறித்தனர்.

உடனே சத்தியமூர்த்தி, ""நேருவின் கார் சமஸ்தானத்தின் எல்லைக்குள் வரக்கூடாது என்பதுதானே உங்கள் உத்தரவு? அதோ, கார் எல்லைக்கு வெளியே இருக்கிறது. தடை காருக்குத்தானே, நேருக்கு அல்லவே'' என்றார்.

அதிகாரிகள் பின்வாங்கினர். சத்தியமூர்த்தியின் சமயோசித அறிவைப் பாராட்டிய நேரு மக்களைச் சந்தித்துத் திரும்பினார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த  நிகழ்வுகள்  Empty Re: அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Post by முழுமுதலோன் Fri Oct 31, 2014 11:31 am

எளிமை!

மறைந்த மாமனிதர்களில் ஒருவரான லால் பகதூர் சாஸ்திரி, நேருவின் மந்திரிசபையில் இருந்தபோது, நேருவுக்குப் பதிலாக அண்டை நாடான நேபாளத்துக்கு ஒரு விழாவுக்குச் செல்ல வேண்டி வந்தது.

அப்போது நேபாளத்தில் கடுமையான குளிர் இருந்தது. அதனால் நேரு, குளிருக்கு இதமாக இருக்கும் என்று சொல்லி சாஸ்திரிக்கு தமது கோட்களில் ஒன்றைக் கொடுத்து அனுப்பினார்.
பல ஆண்டுகள் கழித்து நேரு இறந்தபிறகு சாஸ்திரி நாட்டின் பிரதமரானார்.

அப்போது காமன்வெல்த் பிரதம மந்திரிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள லண்டனுக்குச் செல்ல வேண்டி வந்தது.

சாஸ்திரியின் மனைவி, புதிதாக ஒரு கோட் தைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அதை அறிந்த சாஸ்திரி, நேரு கொடுத்த அந்தப் பழைய கோட்டை தையற்காரரிடம் கொடுத்து அவரது அளவுக்கு ஏற்ப மாற்றித் தைத்து, அதை அணிந்துகொண்டு காமன்வெல்த் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த  நிகழ்வுகள்  Empty Re: அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Post by முழுமுதலோன் Fri Oct 31, 2014 11:31 am

சந்தோஷம்!

தென்காசி திருவள்ளுவர் கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன், சென்னைக்குத் திரும்பும் நேரம் வந்தது.

கழகப் பொறுப்பாளர்களும் கி.வா.ஜ.வும் புகைவண்டி நிலையத்தில் ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். ரயிலில் முதல் வகுப்புப் பயணச்சீட்டு கிடைக்கவில்லை.. இரண்டாம் வகுப்பு சீட்டுத்தான் கிடைத்தது.

கழகச் செயலாளர் அதற்காகப் பெரிதும் வருத்தப்பட்டார், ""ஐயா, தங்களை இரண்டாம் வகுப்பில் அனுப்ப நேர்ந்துவிட்டது; பொறுத்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.

சிலேடைப் பேச்சில் வல்லவரான கி.வா.ஜ. சிரித்துக்கொண்டே சொன்னார், ""உங்கள் பையன் முதல் வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்புக்குப் போனால் மகிழ்ச்சிதானே அடைவீர்கள். நான் முதல் வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்புக்குப் போகிறேன். சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே!''
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த  நிகழ்வுகள்  Empty Re: அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Post by முழுமுதலோன் Fri Oct 31, 2014 11:32 am

கட்டுப்படி!

புகழ்பெற்ற பிரபல ஓவியர் பிக்காúஸô, தன் வீட்டில் தனது நண்பர்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தார். விருந்தெல்லாம் தடபுடலாக நடந்தது. எல்லோரும் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தார்கள்.

விருந்துக்குப் பிறகு அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த நண்பர்களில் ஒருவர், பிக்காúஸô வீட்டுச் சுவர்களைக் கவனித்துவிட்டு, ""உங்களுக்கு உங்கள் ஓவியங்கள் பிடிக்காதா? உங்கள் வீட்டில் உங்கள் ஓவியம் ஒன்றுகூட இல்லையே?'' என்று கேட்டார்.அதற்கு பிக்காúஸô, ""எனக்கும் ஆசைதான். ஆனால் அவ்வளவு விலை கொடுத்து வாங்கினால் எனக்குக் கட்டுப்படியாகாதே...'' என்றார் அமைதியாக.

நண்பர்களுக்கெல்லாம் வியப்பாகப் போய்விட்டது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த  நிகழ்வுகள்  Empty Re: அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Post by முழுமுதலோன் Fri Oct 31, 2014 11:33 am

தனிமை!

நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் இருந்தார். அவருடைய தேசத்தின் விடுதலைக்காக அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்.

சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தபோது அவரைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.

அதில் ஒருவர், ""27 ஆண்டுகள் எப்படி உங்களால் தனிமைச் சிறையில் இருக்க முடிந்தது. எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்? எப்படி தாக்குப் பிடித்தீர்கள்?'' என்றெல்லாம் கேட்டார்.

அதற்கு நெல்சன் மண்டேலா, ""27 ஆண்டுகளும் தினமும் மகாத்மா காந்தியினுடைய சத்திய சோதனை புத்தகத்தைத் தவறாமல் படித்து வந்தேன். அதுதான் எனக்கு மன அமைதியைத் தந்தது'' என்றார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த  நிகழ்வுகள்  Empty Re: அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Post by முழுமுதலோன் Fri Oct 31, 2014 11:33 am

காலம் தவறாமை!

அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த வாஷிங்டன் எப்போதும் காலம் கருதி செயல்படுபவர். நேரத்தை வீணாக்குவது அவருக்குப் பிடிக்காது. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே சென்றுவிடுவார்.

ஒருநாள் வழக்கம் போல நாடாளுமன்றத்துக்கு வந்தார். அவருடைய தனிச் செயலாளர் அப்போது வரவில்லை. அவர் வருவதற்குத் தாமதமாகிக் கொண்டேயிருந்தது. வாஷிங்டன் பொறுமையிழந்து கொண்டிருந்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு பரபரப்புடன் வந்த செயலாளர், ""ஐயா, என்னை மன்னிக்க வேண்டும். என்னுடைய கடிகாரம் மெதுவாக ஓடுவதால் வருவதற்குச் சிறிது தாமதமாகி விட்டது'' என்றார்.

வாஷிங்டன் அவரைப் பார்த்து, ""ஒன்று உங்கள் கடிகாரத்தை மாற்றிவிடுங்கள் அல்லது நான் உங்களை மாற்ற வேண்டியிருக்கும்'' என்றார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த  நிகழ்வுகள்  Empty Re: அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Post by முழுமுதலோன் Fri Oct 31, 2014 11:34 am

மனித நேயம்!

ஒரு சமயம் போர் முனையில் குண்டடிபட்டுக் கிடந்தார் லெனின். அவரது உயிரைக் காப்பாற்ற அரிய, விலையுயர்ந்த மருந்தினை அவருக்குக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. எந்த ஒரு எளிய மனிதனுக்கும் அந்த விலை உயர்ந்த மருந்து கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது லெனினுக்குத் தெரிய வந்தது.

அவர் அந்த மருந்தை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் அவருடைய மனைவி, அந்த மருந்தை உணவில் கலந்து அவருக்குத் தெரியாமல் கொடுத்துவிட்டார். உடல் நலம் தேறிய பிறகுதான் இந்த விவரம் லெனினுக்குத் தெரிய வந்தது!

ஒரு நாட்டின் தலைவரான தனது கட்டளையை மீறியதற்காகத் தன் மனைவிக்குத் தண்டனை கிடைக்க லெனின் ஏற்பாடு செய்தார்.

ஆனால் தண்டனை வழங்க வேண்டிய நீதிபதி, நாட்டின் தலைவரைக் காப்பாற்றியதற்காக அந்த அம்மையாரைப் பாராட்டி விடுதலை செய்தார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த  நிகழ்வுகள்  Empty Re: அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Post by முழுமுதலோன் Fri Oct 31, 2014 11:34 am

எங்கே செல்வது?

ஒருசமயம், டாக்டர் ராஜேந்திரபிரசாத் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தபோது அவருக்குக் கறுப்புக் கொடி காட்டி, ஒரு கூட்டம் அவரைப் பார்த்துத் திரும்பிப் போ என்று கோஷமிட்டது.

திருச்சியில் ஆர்ப்பாட்டம் அதிகரித்தது. கூட்டமும் அதிகமாகிவிட்டது. கறுப்புக் கொடி கோஷ்டி ரொம்பவும் ஆக்ரோஷமாகக் கூச்சலிட ஆரம்பித்தனர். இந்த எதிர்ப்பைக் கண்டு முதலில் கொஞ்சம் கலங்கித்தான் போனார், நமது முன்னாள் குடியரசுத் தலைவர்.

பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு, நிதானமாகத் தனது சக்தியையெல்லாம் திரட்டி, உரத்த குரலில், ""திரும்பிப் போ... திரும்பிப் போ... என்று நண்பர்கள் கோஷமிடுகிறார்கள். நான் எங்கே திரும்பிப் போவது? இந்த நாடு முழுவதும் என் தாய்த்திருநாடு ஆயிற்றே!'' என்று கேட்டார் ராஜேந்திர பிரசாத்.

இதைக் கேட்ட அனைவரின் முகமும் மலர்ந்தது. கூட்டத்தில் அமைதி திரும்பியது..
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த  நிகழ்வுகள்  Empty Re: அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Post by முழுமுதலோன் Fri Oct 31, 2014 11:35 am

திடீர் பிரசங்கி!

பக்திப் பிரசங்கத்திற்குச் செல்பவர் சபாபதி.

ஒருநாள் அவருக்கு உடல்நலம் குன்றிவிட்டது. அன்றைய தினம் அவர் சென்னை முத்தியால்பேட்டையில் பெரிய புராணச் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும். அவர் செல்ல இயலாத நிலை.

உடனே, சிறுவனான தனது தம்பியை அழைத்து, ""என்னால் இன்று பிரசங்கம் செய்ய இயலாது. நீ சென்று சில பக்திப் பாடல்களைப் பாடிவிட்டு வா'' என்று கூறி அனுப்பி வைத்தார்.

அங்கு சென்ற தம்பி, மேடையில் அமர்ந்து ஒரு பாடலைப் பாடியதும், அதைக் கேட்டு மகிழ்ந்த பக்தர்கள், ""நீரே பிரசங்கம் செய்யும்...'' என்று கேட்டுக் கொண்டனர்.

பெரிய புராணக் கதையை இனிய பாடல்களுடன் பிரசங்கம் செய்து கேட்போரை மெய்சிலிர்க்க வைத்து விட்டான் தம்பி! பண்டிதர்களே சிறுவனின் ஆற்றலை வாயாரப் புகழ்ந்தனர்.

அந்தத் திடீர்ப் பிரசங்கிதான் வடலூர் வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க சுவாமிகள்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த  நிகழ்வுகள்  Empty Re: அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Post by முழுமுதலோன் Fri Oct 31, 2014 11:36 am

தியாகம்!

ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலத்தில் வங்காள மாநிலத்தின் உதவி அக்கவுன்டன்ட் ஜெனரல் பதவியில் இருந்தார் சர்.சி.வி.இராமன். அது மாநிலத்திலேயே உயர்ந்த பதவியாகும். மேலும் பதவி உயர்வுகள் கிட்டுவதற்கான வாய்ப்புகளும் அவருக்கு இருந்தன.

அவருக்கு பௌதிகத்தின் மீதி இருந்த ஆர்வத்தினால், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடத்துக்குத் தினமும் அதிகாலையில் சென்று, ஆராய்ச்சிகளில் ஈடுபடுவார். பிறகு குறித்த நேரத்தில் தமது அலுவலகம் சென்று பணிகளில் ஈடுபடுவார். மாலையில் பணி முடிந்தவுடன், மீண்டும் ஆராய்ச்சிக் கூடத்துக்குச் சென்று ஆய்வுகளில் ஈடுபடுவார்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழகத் துணைவேந்தர், ஒருநாள் இராமனிடம், ""நீர் பணிபுரிந்து கொண்டிருக்கும் பதவிப் பொறுப்பை விட்டுவிலகி, முழு நேரமும் பௌதிக ஆராய்ச்சில் ஈடுபட்டால் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் நன்மையாக இருக்குமே!'' என்று கேட்டார்.

மிகவும் மகிழ்ச்சியடைந்த இராமன், அதிக வருமானமும் மிகுந்த கெüரவமும் தந்து கொண்டிருந்த அந்தப் பணியை விட்டு விலகினார். அந்த வருமானத்தில் கால் பகுதி கூட கிடைக்காத, எதிர்காலத்தைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் தர முடியாத விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடப் பணியை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்.

அவருடைய இந்தச் செயல், பெüதிகத் துறைக்குப் பெரும் அதிர்ஷ்டமாக அமைந்தது.

உலகம் போற்றும் பெüதிகப் பேராசிரியராகத் திகழ்ந்து, அரிய பல சாதனைகளைச் செய்து மனித குலத்துக்குப் பெரும் தொண்டாற்றி, பெüதிகத்துக்கான நோபல் பரிசையும் பெற்று, பாரதத்தின் புகழை உலகெங்கும் பரவச் செய்தார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த  நிகழ்வுகள்  Empty Re: அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Post by முழுமுதலோன் Fri Oct 31, 2014 11:37 am

எளிமை!

மதுரைக்குத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் ஒருவர். குறித்த நேரத்துக்கு முன்பே தொடர்வண்டி வந்துவிட்டதால், அவரை வரவேற்க ஒருவரும் அங்கு இல்லை. அவர் யாருக்காகவும் காத்திராமல், தான் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்குச் சென்று அறையின் திறவுகோலைக் கேட்டார். ஆனால் அங்கிருந்தவர்களோ, ""இந்த அறை தொடர்வண்டித்துறை அமைச்சர் ஒருவருக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்குத் தர முடியாது..'' என்று மறுத்தார்கள்.

""ஐயா, அந்த அமைச்சரே நான்தான்'' என்று கூறிய பிறகும்கூட அவர்கள், அதனை நம்ப மறுத்து அவரை உள்ளே விடவில்லை. அவரின் எளிமையான தோற்றமே அதற்குக் காரணம்!

அதற்குள் அமைச்சர் மதுரை வந்துவிட்டார் என்ற தகவலை அறிந்து அவரைப் பார்ப்பதற்காக தொண்டர்கள் வந்தனர். அவர்கள் வந்த பிறகுதான் அவர்தான் அந்த அமைச்சர் என்பது அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது.

அவர் யார் தெரியுமா? அவர்தான் லால் பகதூர் சாஸ்திரி. மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர். மிகப் பெரிய பதவியிலிருந்தும் எளிமையாக வாழ்ந்து காட்டினார்.


http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த  நிகழ்வுகள்  Empty Re: அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Post by செந்தில் Fri Oct 31, 2014 5:45 pm

ருசிகரமான வரலாற்று நிகழ்வுகள்.நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த  நிகழ்வுகள்  Empty Re: அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum