தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆட்டக்கலையாக மாறிய போர்க்கலை!

View previous topic View next topic Go down

ஆட்டக்கலையாக மாறிய போர்க்கலை! Empty ஆட்டக்கலையாக மாறிய போர்க்கலை!

Post by நாஞ்சில் குமார் Fri Oct 31, 2014 3:35 pm



“சிலம்பத்தால் ஒருத்தரை தாக்கினோம்னா அது சிலம்புச் சண்டை... தொட்டு விளையாடினா அது சிலம்பு விளையாட்டு... அதையே அலங்கார பாவனைகளோட ஆடினோம்னா அது சிலம்பாட்டம். சிலம்பத்துடைய சுத்து முறைகளை நாம விலங்குகள்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டோம். மாட்டுடைய வால் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டதுதான் சிலம்பத்தின் சுத்து முறை. யானையுடைய தும்பிக்கை அசைவுதான் சிலம்பத்தின் அடிமுறை...” - மாணவர்களுக்கு வகுப்பெடுத்துவிட்டு சிலம்பத்தை கையில் ஏந்துகிறார் ரேவதி. தான் விளக்கிய சுற்று முறைகளையும் அடி முறைகளையும் செயல்முறையாக செய்து காட்டுகிறார்.

ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில் இயங்கி வருகிறது ‘கலைத்தாய் சிலம்பப் பயிற்சிப் பள்ளி’. அதில் சிலம்பம் மற்றும் நாட்டுப்புறக்கலைகளின் ஆசிரியை ரேவதி... கருங்கல்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவி! பள்ளிகளுக்கிடையே நடைபெறும் மாவட்டம் மற்றும் மண்டல அளவிலான சிலம்பப் போட்டிகளில் கலந்து கொண்டதிலெல்லாம் முதல் பரிசு... மாநில அளவிலான 11 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றவர். மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள். ஆனால், ஏழ்மைப் பின்னணி அவரின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லை. சிலம்பம், நாட்டுப்புறக்கலைகள், படிப்பில் ரேவதி கில்லி!

“சிலம்பம்கிறது என் ஜீன்லயே இருக்கு. தாத்தாவும் அப்பாவும் சிலம்பம் விளையாடுவாங்க. சின்ன வயசுல இருந்தே அதைப் பார்த்து வளர்ந்த எனக்கு சிலம்பத்தோட ஒவ்வொரு சுத்தும் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு. வண்டி வீரான் கோயில் திருவிழாவுல என்னோட அண்ணன் சிலம்பம் சுத்தி பரிசு வாங்கினாரு. அதைப் பார்த்ததிலிருந்து அந்தப் பாராட்டை நாமும் வாங்கணும்கிற ஆசை வந்துச்சு. ‘கலைத்தாய் சிலம்ப பயிற்சிப்பள்ளி’யில மாஸ்டர் மாதேஸ்வரன் மாணவர்களுக்கு இலவசமா சிலம்பம் கத்துக் கொடுத்தார். அஞ்சு வயசுல அவர்கிட்ட மாணவியா சேர்ந்தேன். அங்கே பசங்க மட்டும்தான் சிலம்பம் கத்துக்கிட்டிருந்தாங்க. நான்தான் அங்கே முதல் மாணவி.

சிலம்பம் கத்துக்கிறதால மத்தவங்களை விட என்னால வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட முடிஞ்சுது. காலை நாலு மணிக்கே சிலம்பப் பயிற்சியை ஆரம்பிச்சிடுவோம். காலைல ரெண்டு மணி நேரம், சாயங்காலம் ரெண்டு மணி நேரம் பயிற்சி. ஒரு முறை கத்துக்கிட்டதும் போதும்னு விட்டுடக் கூடாது. தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கிட்டே இருக்கணும்... அப்பதான் சிலம்பத்தின் நெளிவு சுளிவுகள் நமக்குப் புரியும். சிலம்பம் சுத்திக்கிட்டே இருந்தா ஒரு கட்டத்துக்கு மேல நமக்குள்ள ஒரு நளினம் வந்துடும். நளினத்தோட சுத்தும்போது அது கலையா வடிவம் பெறும்.

இது ஒரு போர்க்கலை. நெடுங்கம்பு சண்டை, இரட்டைக்கம்பு சண்டை, குறுங்கொம்பு சண்டைன்னு கம்பின் அளவுகளை அடிப்படையாகக் கொண்டு இதுல மூன்று விதமான சண்டைகள் இருக்கு. எந்த ஆயுதத்தால் தாக்கினாலும் வெட்டுப்படாத அளவு திடகாத்திரமானதுங்கிறதால மான் கொம்பை ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்காங்க. எதிரிகளிடமிருந்து ஆயுதங்களை பறிக்கிறதுக்கும், அதிரடியாக தாக்குவதற்கும் சுருள் வாளை பயன்படுத்தியிருக்காங்க. இரவு நேரத்துல போர் புரியும்போது வெளிச்சம் வேணும்கிறதுக்காக ஆயுதங்கள்லயே தீப்பந்தத்தை இணைச்சு போரிட்டிருக்காங்க. நாளடைவில் போருக்கான அவசியம் இல்லாம போனப்பதான் போர்க்கலையாக இருந்த சிலம்பம், ஆட்டக்கலையாக மாறிச்சு. ஆட்டக்கலைங்கிறதையும் தாண்டி நல்ல உடற்பயிற்சியும் கூட.

பெண்கள் சிலம்பம் சுற்றினால் மாதவிடாய் ரத்தப்போக்கு சீராக இருக்கும்” என்று சிலம்பத்தின் சிறப்புகளைப் பட்டியலிடுகிற ரேவதி, சிலம்பம் கற்றபோதும், போட்டிகளில் கலந்து கொண்ட போதும் எதிர்கொண்ட சவால்களை குறிப்பிடுகிறார்... “இரண்டு கையிலயும் சிலம்பத்தைப் பிடிச்சுக்கிட்டு குதிச்சு அதைத் தாண்டுறதுக்கு பெயர் வெட்டுப்பாடமுறை. இதை செஞ்சாத்தான் ஒருத்தருக்கு சிலம்பம் ஆடுறதுக்கான தகுதி இருக்குன்னு அர்த்தம். ஒரு தடவை வெட்டுப்பாடமுறை செய்யறதுக்காக குதிக்கும்போது தடுக்கி விழுந்துட்டேன். வாய்லருந்து ரத்தம் கொட்டிச்சு. ஆனா, அது எனக்கு பயத்தை உண்டாக்கலை. இன்னும் நல்லா வெளையாடணும்கிற வெறியை ஏற்படுத்திச்சு. ஏழாம் வகுப்பு படிச்சிக்கிட்டிருந்தேன்.

அப்போ ராமநாதபுரத்தில் தமிழ்நாடு சிலம்ப சங்கம் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடத்திச்சு. அதுல கலந்துக்கிட்டப்ப எதிர்த்து ஆடின பொண்ணு அடிச்சதுல என் இடது கண்ணுல இருந்து ரத்தம் வந்துடுச்சு. பயங்கரமான வலி. இருந்தாலும் பொறுத்துக்கிட்டு ஆடி ஜெயிச்சேன். கஷ்டங்களையும் வலிகளையும் தாண்டி கிடைக்கும் வெற்றி கொடுக்கும் சந்தோஷத்தை வார்த்தையால புரிய வைக்க முடியாது...” - ரேவதியின் கண்களில் பெருமிதம் பொங்குகிறது. ரேவதி, ஒயிலாட்டம், கரகாட்டம், கோலாட்டம், தப்பாட்டத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பவர் என்பது ஆச்சரியத் தகவல்.

“உழைப்பின் வெளிப்பாடுதான் கலை. அதற்கு உதாரணமா ஒயிலாட்டம், கும்மியாட்டம், கோலாட்டத்தைச் சொல்லலாம். ஒயில்னா ‘அழகு’ன்னு அர்த்தம். நாத்து நடுறதுல தொடங்கி, பயிர் வளர்ந்து அறுவடை செய்யும் வரை களத்துல என்னென்ன வேலைகள் செய்வாங்களோ அத்தனையிலும் நளினத்தைக் கூட்டினா அதுதான் அறுவடை ஒயில். நடவு நடுற செயல்முறையை அடிப்படையாகக் கொண்டது கும்மியாட்டம். கும்மியின் அடுத்த கட்ட வடிவம் கோலாட்டம். கரகாட்டம்கிறது இசைக்கேற்றபடி ஆடணும்... தலையில் இருக்கும் கரகமும் விழுந்துடக் கூடாது. மனதை ஒரு நிலைப்படுத்த முடிந்தால்தான் கரகாட்டம் ஆட முடியும். விலங்கு களை விரட்டுறதுக்காக கண்டுபிடிக்கப்பட்ட பறை, நாளடைவில் தமிழ் மக்களின் வாழ்வியலோடு கலந்துடுச்சு. மருத்துவமனை இல்லாத காலத்துல ஒருத்தர் இறந்துவிட்டதை உறுதி செய்துகொள்ள பறையை அடிப்பாங்க.

அந்த சத்தத்துக்கும் எழுந்திரிக்கலைன்னா அவர் இறந்துட்டதா முடிவு பண்ணிடுவாங்க. இப்படி நம் தமிழ் பாரம்பரிய கலைகள் எல்லாத்துக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் இருக்கு. வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த சாமுவேல் இந்தப் பயிற்சிகளைக் கொடுத்தார். நாங்கள் குழுவாக இந்தக் கலைகளையெல்லாம் பல மேடைகளில் நிகழ்த்தியிருக்கோம்.” ரேவதி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு சிலம்பம், நாட்டுப்புறக்கலைகளை கற்றுக் கொடுத்திருக்கிறார். இப்போது ஐம்பது மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார். “கத்துக்கணும், கத்துக் கொடுக்கணும்கிறதுதான் எங்க கலைத்தாய் சிலம்பப் பயிற்சிப்பள்ளியோட விதிமுறையே. நான் 12 வருஷம் கத்துக்கிட்டேன் அதை இப்ப கத்துக் கொடுத்துக்கிட்டிருக்கேன்.

என்கிட்ட கத்துக்கிட்டவங்க, பலநூறு பேருக்கு கத்துக் கொடுப்பாங்க. இப்படி இந்தக் கலைகள் பரவும்” என்கிற ரேவதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் 463. “நல்லாப் படிக்கிறேன்னா அதுக்குக் காரணமும் கத்துக்கிட்ட இந்த ஆட்டக்கலைகள்தான். உடலுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி கிடைக்குது. இதனால ஞாபகசக்தி அதிகரிக்கிறதோட எதையும் உள்வாங்கும் திறமையும் அதிகரிக்குது. எந்தப் பாடத்தையும் உள்வாங்கிப் படிக்கிறதால குறைஞ்ச நேரம் படிச்சாலும் நிறைய படிப்பேன். இந்த வருஷம் ஜனவரி மாசம், சைலாத் சிலம்ப சங்கம் நடத்தின மாநில அளவிலான சிலம்பப் போட்டியில பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்கினதுக்காக ‘கலைக் கல்வி’ விருது கொடுத்தாங்க. எனக்கு ஆட்டக் கலைகள் எவ்வளவு முக்கியமோ படிப்பும் அவ்வளவு முக்கியம்...” - ரேவதிக்கு ஐ.ஏ.எஸ். படிப்பதோடு, நாட்டுப்புறக்கலைகளுக்கான இலவசப் பள்ளி ஒன்றைத் தொடங்குவதும் எதிர்கால திட்டம். கனவு பலிக்கட்டும்!

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum