தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிக்கனமே செல்வம்

View previous topic View next topic Go down

சிக்கனமே செல்வம் Empty சிக்கனமே செல்வம்

Post by முழுமுதலோன் Fri Nov 07, 2014 4:22 pm

சிக்கனமே செல்வம் 3சிக்கனமே செல்வம் 9சிக்கனமே செல்வம் 0சிக்கனமே செல்வம் 0சிக்கனமே செல்வம் 0
-ம் பதிவு 


‘குடும்பம்’ என்பது வருவாய்க்குத் தகுந்தவாறு செலவு செய்வது. குறைந்த வருவாய் இருந்தால் அதற்கேற்ப பண்டிகைகள் கொண்டாடுவது குறைக்க லாம். வீணான வீட்டு விழாக்களை, அதாவது ஆடம்பரமான. காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா, வளைகாப்பு விழா போன்றவற்றுக்கெல்லாம் அழைப்பிதழ் அச்சடித்து ஊரில் அறிமுகமானவர்கள் எல்லோரையும் அழைக்காமல் தவிர்த்து குடும்பத்தினரோடு மட்டும் அவற்றை முடித்துக் கொள்வது பயன்தரும். இப்படி வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மட்டுமே நாம் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்த வழி வகுக்கும்.


‘அரசாங்கம்’ என்பது இந்த ஆண்டு என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்த விருக்கிறோம், எத்தனை மருத்துவமனைகள் கட்ட வேண்டும்? எத்தனை பள்ளிக் கூடங்கள் கட்ட வேண்டும்? இன்னும் என்னென்ன தேவைகள் உண்டோ அவற்றையெல்லாம் சேர்த்துப் போட்டு அவற்றுக்கு வருவாய் என்னென்ன வகைகளில் சேர்க்கலாம் என்று அதிகாரிகளைக் கலந்தாலோசித்து திரைப் படங்களுக்கு அதிக வரிப் போடலாமா? மதுபானக் கடைகளுக்கு அதிக வரி போடலாமா? என்றெல்லாம் முடிவு செய்து வருவாயைப் பெருக்குவார்கள்.
நடுத்தர வகுப்பிலே பலபேர்கள் குடும்பம் நடத்துவதற்குப் பதிலாக ‘அரசாங்கம்’ தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலேயும் அரசு ஊழியராக இருந்தால் அவர் படும் அவலம் சொல்லி முடியாது! அடுத்தவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று ‘வரட்டு கவுரவம்’ பார்த்து வாழ்வின் மகிழ்ச்சியைப் பறிகொடுப்பவர்கள்தான் இப்போதும் ஏராளம்.


நேரத்தை நினைத்துப் பார்த்து சிக்கனப்படுத்தி தேவைக்கு மட்டுமே செலவு செய்து, எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க நேரம் சேமித்து வைத்து அதை சிந்திக்கச் செலவு செய்து அதன்படி நடந்தவர்களே வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறார்கள். “காலத்தைத் தேர்வு செய்தல், காலத்தைச் சேமிப்பதாகும்”. கவிஞர் பேகன் சொன்னது எப்போதும் கவனத்தில் இருக்க வேண்டும்.
நடுத்தர குடும்பங்களிலே – திருமணத்துக்குப் பட்டுப்புடவை ரூ.20 ஆயிரம் செலவிட்டு எடுப்பார்கள்.
ஆண்டுக்கு இரண்டு முறைகூடக் கட்டி அணிந்து கொள்ளாதவாறு – வீணாகப் பெட்டியில் கிடப்பதற்கு எதற்காக இத்தனை ஆயிரம் செலவு செய்ய வேண்டும்? இரண்டாயிரத்துக்குப் பட்டுப்புடவை எடுத்து விட்டு மீதித் தொகையைக் கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தால் அந்தத் தொகை ஊருக்குப் பயன்படுமே. எதிர்காலத்தில் நமக்கும் பாதுகாப்பாக இருக்க பயன்படும் அல்லவா? என்று பெண்களை சிந்திக்கச் செய்யத் தவறுகிறார்கள்.



மற்றொன்று ஊர் பகட்டுக்காகக் கார்களை வைத்துக் கொள்வது – கடன்காரர்களாகி கலங்குவது போன்ற தேவையில்லாத தொல்லைகள் நாமே உருவாக்கிக் கொள்வதுதான்.
இந்தத் துன்பத்திலிருந்து மனிதன் தன்னை மீட்டுக் கொள்ள வேண்டுமாயின் முதல்படியாக ஒரு ஒழுங்கைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க உறுதி கொள்ள வேண்டும்.


வருவாயின் முதல் செலவு தான் சேமிப்பு என்று ஒருவர் வரையறை செய்து கொண்டால் அவரை ஒரு போதும் வறுமை வாட்டாது. சேமித்த எவருமே ஏழைகள் ஆனதில்லை. சேமிக்காத யாரும் ஒழுங்கான பணக்காரர் ஆனதில்லை.
ஒரு விவசாயிக்கு வயலில் இந்த ஆண்டு 10 மூட்டை நெல் விளைகிறது என்று வைத்துக் கொண்டால் அதிலே ஒரு மூட்டையை எடுத்து விதை நெல் என்று ஒதுக்கி வைத்துவிடுவது போல வருவாயிலே 10 விழுக்காடு எதிர்கால முதலீட்டுக்கு என்று தனியே சேமிக்க வேண்டும். விதை நெல்லை அவித்துத் தின்பவர் ஒருக்காலும் வேதனையிலிருந்து விடுபட முடியாது.


ஆயிரம் ரூபாய் வருவாய் வந்தால் அதிலே 10 விழுக்காடு சேமிப்புக்கு ஒதுக்கிவிட்டு மீதி 90 விழுக்காடு மட்டுமே வருவாய் என்று நமது செலவுகளைக் குறுக்கிக் கொள்ள வேண்டும். இன்று நூறு ரூபாய்தான் வருவாய் என்றால் அதிலே பத்து ரூபாயை எதிர்கால செலவுக்கென எடுத்து வைத்துப் பழகிடல், பழக்கப்படுத்துதல் வேண்டும். வருமானமே ஒன்பது ரூபாய்தான் என்று எண்ணிச் செயல்படல் பாதுகாப்பான வெற்றியாகும்.



  • தேவைக்கு மேல் செலவு செய்வது ஊதாரித்தனம்
  • தேவைக்கே செலவு செய்யாதது தான் கருமித்தனம்
  • தேவைக்குச் செலவு செய்வது தான் சிக்கனம் என்பது!



சிக்கனத்தை, கருமித்தனம் என்று ஒருபோதும் தவறாகக் கருதிவிடக் கூடாது. மற்றவர் நம்மைக் கருமி என்று நினைப்பார்களோ என்று கருதித் தேவையில்லாமல் செலவு செய்வது நம்முடைய பலவீனத்தின் வெளிப்பாடு ஆகும்.
‘கடன்காரர் ஆவதை விடக் கருமித்தனம் மேல்’ என்றஎச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்க வேண்டும். கடன் வாங்கி வயிறு புடைக்கத் தின்று தூங்குவதை விட பட்டினியாகவே படுக்கைக்குச் செல்வது என்ற எண்ணம் நிலைப்பட வேண்டும். கடன் என்பது ஒரு அடிமைத்தனம்.
கிரேக்கத் தத்துவஞானி சாக்ரடீஸ் ஒரு நாள் ஏதன்ஸ் நகர சந்தைக்குச் சென்று எல்லாக் கடைகளையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தார். அவருடைய நண்பர் கேட்டார், “என்ன சாக்ரடீஸ்! காலையி லிருந்து கடைத்தெருவை சுற்றிக் கொண்டே இருக்கின்றீர்கள், ஒரு பொருளும் வாங்கவில்லையே?” என்று, அதற்கு அந்தத் தத்துவஞானி பதில் சொன்னார், “தமக்குத் தேவையே இல்லாத எத்தனை பொருள் களை இந்த ஜனங்கள் காசு கொடுத்து வாங்கி துன்பத்தைச் சுமந்து செல்கிறார்களே என்று அவர்களைப் பார்த்து பரிதாபப் பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று! மனிதனின் தேவை எங்கே முடிகிறதோ அங்கேதான் நிம்மதி ஆரம்பம் ஆகிறது. சிக்கனம் சேமிக்கும் செல்வம்.


ஒரு காலத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு மைல் தொலைவு காட்டுவழி நடந்த மனிதன் இன்றைக்கு ஒரு மணி நேரத்தில் ஆயிரம் மைல் பறக்கிறான். நேரம் செலவழிப்பில் சிக்கனம், வேளாண்மையில் நீர் செலவழிப்பில் சிக்கனம்.


நம்முடைய தமிழ்நாட்டில் ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு நாம் செலவு செய்யும் தண்ணீரில் நம்மையடுத்த கர்னாடகத்தில் நான்கு ஏக்கர் விவசாயம் செய்து விடுவார்கள். எரிபொருள் சிக்கனம் நாட்டுக்கு நலம் பயக்கும் என்பது இன்றைக்கு எழுந்துள்ள புதுமுழக்கம். அதுபோல நிதிச் செலவுகளில் சிக்கனம் வாழ்வை உயர்த்தும். பணம் கிடைத்தவுடன் எப்படியாவது அதைச் செலவு செய்தாக வேண்டும் என்ற மன நிலையை மாற்றிக் கொண்டாக வேண்டும்.


“ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை; போகாறு அகலாக்கடை” (குறள்-478) என்றவாறு விரயம் தவிர்த்தலே வாழ்வில் பெரும்பயன் செய்யும்.


Last edited by முழுமுதலோன் on Fri Nov 07, 2014 4:59 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம்)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிக்கனமே செல்வம் Empty Re: சிக்கனமே செல்வம்

Post by முழுமுதலோன் Fri Nov 07, 2014 4:28 pm

அண்ணல் காந்தி தமக்கு வரும் கடிதங்களின் உறைகளைக் கிழித்து வைத்துக் கொண்டு அதைக் குறிப்புகள் எழுதப் பயன்படுத்தினார். ஒருவரது வாழ்வின் சிக்கனம் செல்வம் – அது குடிமக்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் இடம்பெற வேண்டும் என்பதால் தான் அவரது படம் எல்லா ரூபாய் நோட்டுகளிலும் இடம் பெற்றுள்ளது.


அதுபோல நீர் விரயம், நிதி விரயம், நேர விரயம் தவிர்த்து 
ஒவ்வொன்றிலும் சிக்கனம் ஒளிமயமான வாழ்வைத் தரும். நம் ஒவ்வொரு வருக்கும் இக்கணத் தேவை சிக்கனம் தான்!
நாம் வாழும் ஆடம்பரம் அற்ற எளிமையான வாழ்வு, (ஏழ்மை வேறு, எளிமை வேறு) – நாம் செய்யவிருக்கும்
செயல்பாடுகளை நிறைவேற்றும் வலிமையை நமக்கு வழங்குகிறது, எளிமையே வலிமை!

 
http://thannambikkai.org/


Last edited by முழுமுதலோன் on Fri Nov 07, 2014 5:02 pm; edited 1 time in total (Reason for editing : திருத்தம்)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிக்கனமே செல்வம் Empty Re: சிக்கனமே செல்வம்

Post by செந்தில் Sat Nov 08, 2014 2:28 pm

உண்மைதான் அண்ணா
எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிக்கனமே செல்வம் Empty Re: சிக்கனமே செல்வம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum