தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வீட்டுக்கு ஒருவர் முதலுதவி பயிற்சியை மேற்கொள்வோம்!

View previous topic View next topic Go down

வீட்டுக்கு ஒருவர் முதலுதவி பயிற்சியை மேற்கொள்வோம்! Empty வீட்டுக்கு ஒருவர் முதலுதவி பயிற்சியை மேற்கொள்வோம்!

Post by நாஞ்சில் குமார் Fri Dec 05, 2014 9:45 pm

வீட்டுக்கு ஒருவர் முதலுதவி பயிற்சியை மேற்கொள்வோம்! 2z3sb3a

“வீட்டுக்கு ஒருவர் முதலுதவி பயிற்சியை மேற்கொண்டா சாலை விபத்தால ஏற்படுகிற உயிரிழப்பை தடுக்க முடியும்’’

‘‘ஒரு நிமிஷத்துல பதினேழு பேர் சாலை விபத்தால பாதிக்கப்படறதா புள்ளி விவரம் சொல்லுது. இதுல 80 சதவிகித பேர் இறக்கறாங்க. காரணம் விபத்து ஏற்பட்ட ஒரு மணி நேரத்துக்குள்ள முதலுதவி செய்யாததுதான்னு ஆய்வு சொல்லுது. சாலை விபத்தை தடுக்க எவ்வளவோ முயற்சி நடக்குது. ஆனா, சாலை விபத்துல ஏற்படற உயிரிழப்பை மட்டும் யாராலயும் தடுக்க முடியலை. இதுக்கு ஒரே தீர்வு வீட்டுக்கு ஒருத்தருக்கு முதலுதவி பயிற்சி அளிக்கறதுதான். அதைதான் நாங்க செய்துட்டு வர்றோம்...’’ என்கிறார் கடந்த எட்டு ஆண்டுகளாக ‘அலர்ட்’ அறக்கட்டளை வழியாக முதலுதவி பயிற்சிகளை அளித்து வரும் கலா பாலசுந்தரம்.

‘‘பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைலதான். எம்பிஏ படிச்சுட்டு 20 வருடங்களா சாஃப்ட்வேர் துறைல வேலை பார்த்துட்டு வர்றேன். கணவர் சொந்தமா துணி பிசினஸ் செய்துட்டு வர்றார். அப்பாவும் பிசினஸ்மேன்தான். அம்மாவுக்கு ஆரம்பத்துலேந்தே சேவை மனப்பான்மை உண்டு. முதியோர் இல்லங்களுக்கு போவார். தன்னால் முடிந்ததை செய்வார். மருத்துவமனைல தீக்காயங்களால பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி செய்வார். இதையெல்லாம் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ, எனக்கும் உதவி செய்யற மனப்பான்மை சின்ன வயசுலயே வந்துடுச்சு...’’ என்று சொல்லும் கலா, ‘அலர்ட்’ அறக்கட்டளையை ஆரம்பிக்க இதுவும் ஒரு காரணம் என்றாலும் அடிக்கடி, தான் பார்க்க நேர்ந்த சாலை விபத்துகளே இதை தொடங்க வித்திட்டது என்கிறார்.

‘‘இப்பத்தான் ஓ.எம்.ஆர் என்கிற பழைய மகாபலிபுரம் சாலை பிரமாண்டமா இருக்கு. ஆனா, பத்து வருடங்களுக்கு முன்னாடி அது பொட்டல் காடு. தார் ரோடு எல்லாம் கிடையாது. எல்லாமே மண் தரை. ஆடு, மாடுகள் சர்வசாதாரணமா ரோட்டை க்ராஸ் செய்யும். இப்படிப்பட்ட சாலைலதான் என் அலுவலகத்துக்கு போவேன். ஏறக்குறைய தினமும் ஒரு சாலை விபத்தை பார்ப்பேன். எங்க ஆபீஸ் பஸ் அந்த ரோட்டுல மெதுவா போனாலே ஏதோ விபத்து நடந்திருக்குன்னு புரிஞ்சுப்போம். ‘என்னடா இப்படி ஆகிடுச்சே’ன்னு வருத்தப்படுவேன். ஏதாவது செய்யணும்னு தோணும். ஆனா, என்ன செய்யறதுன்னு தெரியாது. ஒவ்வொரு முறையும் ரத்த வெள்ளத்துல ஒவ்வொருவரை பார்க்கிறப்பவும் மனசு கடந்து அடிச்சுக்கும். வேடிக்கை பார்ப்பதை தவிர வேற எதுவும் செய்ய முடியாதான்னு யோசிப்பேன்.

ஒருமுறை ‘லைஃப் லைன்’ டாக்டர் ராஜ்குமார் கிட்ட இது தொடர்பா பேசினேன். என் வருத்தங்களை பகிர்ந்துகிட்டேன். இது தொடர்பா நீங்க என்ன செய்தாலும் நான் உதவறேன்னு சொன்னார்...’’என்றாலும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல்தான் பல நாட்கள் விழித்திருக்கிறார். இந்நிலையில் ஒரு முறை கலாவே விபத்தை சந்தித்திருக்கிறார். அப்போதுதான் ‘அலர்ட்’டுக்கான விதை விழுந்திருக்கிறது.‘‘ஒருநாள் ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு கார்ல வந்துட்டு இருந்தேன். ஸ்ட்ரீட் லைட் இல்லை. மிதமான வேகத்துலதான் வந்தேன். அப்படியும், ரோட்ல படுத்துட்டு இருந்த கன்னுக்குட்டி கண்ணுக்கு தெரியலை. பக்கத்துல வந்ததும்தான் கவனிச்சேன். உடனே அது மேல மோதாம இருக்க ஸ்டியரிங்கை திருப்பினேன். ஒரு கம்பத்துல மோதினேன்.

நல்லவேளையா சின்ன காயம்தான். ஆனா, உடம்பெல்லாம் பதறிடுச்சு. ஒருவேளை பெருசா காயம் ஏற்பட்டிருந்தா... சுயநினைவை நான் இழந்திருந்தா... இந்தப் பக்கமா வர்றவங்க என்னைப் பார்த்து என்ன செய்யறது... ஏது செய்யறதுன்னு தெரியாம குழம்பியிருப்பாங்க. அதாவது ஒவ்வொரு சாலை விபத்தை பார்க்கறப்பவும் நான் எப்படி கையறு நிலைல இருந்தேனோ அப்படி இருந்திருப்பாங்க...இந்த எண்ணம் சுண்டி விட்டா மாதிரி அதிர வைச்சது. அப்பதான் முதலுதவி கான்செப்டும் விஸ்வரூபம் எடுத்தது. முன்னாடியே சொன்னா மாதிரி டாக்டர் ராஜ்குமார் முழு ஒத்துழைப்பு கொடுக்க 2006ம் ஆண்டு ‘அலர்ட்’ அறக்கட்டளையை ஆரம்பிச்சோம். இதுவரைக்கும் முப்பதாயிரம் பேருக்கு முதலுதவி பயிற்சியை கொடுத்திருக்கோம்...’’என்று நிறுத்தியவர், இந்த எண்ணிக்கை குறைவுதான் என்பதை ஒப்புக் கொள்கிறார்.

ஏனெனில் இப்போதும் சாலை விபத்துகளை வேடிக்கைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்கிறார். ‘‘குறிப்பா படிச்சவங்கதான் என்ன செய்யறதுன்னு தெரியாம வேடிக்கை பார்க்கறாங்க. படிப்பறிவு இல்லாதவங்க அப்படியில்லை. உதாரணமா ஆட்டோ டிரைவர்களையே எடுத்துக்குங்க. சாலைல அடிபட்டு கிடப்பவர்களை பார்த்ததுமே துரிதமா செயல்படறாங்க. பக்கத்துல இருக்கிற மருத்துவ மனைக்கு தகவல் சொல்றாங்க... 108க்கு போன் செய்யறாங்க... இல்லைனா தங்களோட ஆட்டோவுல ஏத்திகிட்டு போறாங்க. படிச்சவங்க மட்டும் ஏன் இப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு சர்வே எடுத்தோம். மூன்று விஷயங்கள் தெரிய வந்தது. முதல்ல, என்ன முதலுதவி செய்யறதுன்னு அவங்களுக்கு தெரியலை.

இரண்டாவது போலீஸ் கேஸ் ஆகி கோர்ட்டுக்கு அலையணுமோன்னு பயம். அதனாலயே ‘குடிச்சுட்டு வண்டி ஓட்டியிருப்பான்...’ இல்லைனா ‘ரேஷ் டிரைவிங்’னு அவங்களாவே ஒரு முடிவுக்கு வந்து தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக்கறாங்க. குற்ற உணர்வுலேந்து தப்பிக்கறாங்க. இது, மூன்றாவது விஷயம்.மொத்தத்துல சாதாரண ஐபோனுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை கூட மனித உயிர்களுக்கு அவங்க கொடுக்கறதில்லை.ஆனா, இப்படி தயங்க வேண்டிய அவசியமே இல்லை. ஏன்னா, சாட்சியாக போக விருப்பமில்லைனா அதை தைரியமா போலீஸ்கிட்ட சொல்லலாம். யாராலயும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படியே கம்பல் செய்தாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்தான் எழுதித் தரணும்னு இல்லை. இருந்த இடத்துலேந்தே சாட்சி கையெழுத்து போடலாம்.

அதே போல விபத்துல அடிபட்டவங்களை தனியார் மருத்துவமனைல அனுமதிக்க மாட்டாங்க. மறுப்பாங்க. இந்த சூழல்ல எதிர்த்து கேட்கலாம். கேட்கணும். ஏன்னா, அடிபட்டவங்களுக்கு தேவையான முதலுதவி செய்யத்தான் மருத்துவமனை. உயிருக்கு போராடறவங்களுக்கு சிகிச்சை அளிக்க மாட்டேன்னு யார் சொன்னாலும் அவங்க மேல கேஸ் போடலாம். நம்ம நாட்டு சட்டங்கள் அதுக்கு உதவுது.ஆனா, இந்த விழிப்புணர்வு எல்லாம் படிச்சவங்ககிட்ட இல்லை. ஸோ, பயிற்சிக்கு வர்றவங்களுக்கு முதல்ல இந்த விழிப்புணர்வுகளைத்தான் ஏற்படுத்தறோம். அதுக்கு பிறகுதான் முதலுதவி பயிற்சியே...’’என்று சொல்லும் கலா, முதலுதவி என்றாலே அடிபட்ட காயங்களுக்கு மருந்திடுவதுதான் என்று அர்த்தமில்லை. நாய் கடிக்கு, வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்படும் மின்சார விபத்து, வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கு திடீரென ஏற்படும் மாரடைப்பு போன்றவற்றுக்கும் முதலுதவி இருக்கின்றன. அவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

‘‘மொத்தத்துல விபத்து எப்படி வேண்டுமானாலும் ஏற்படலாம். அதனாலதான் அனைத்துக்கும் பயிற்சி அளிக்கிறோம். இந்த பயிற்சிகள் குறித்து மாசாமாசம் கல்லூரி, தனியார் அலுவலகங்கள், பள்ளி மாணவர்களுக்கு செமினார்ஸ் நடத்தறோம். தவிர இரண்டு நாட்கள் கட்டண பயிற்சியும் உண்டு. இந்த செமினார்ஸ் முற்றிலும் இலவசம். அதனால யார் வேண்டுமானாலும் கலந்துக்கலாம். குறிப்பா வீட்ல இருக்கிற பெண்கள் இதுல பங்கேற்கணும்னு கூடுதல் கவனம் செலுத்தறோம்...’’என்றவர் முதலுதவி குறித்த சில டிப்ஸும் வழங்கினார். ‘‘முதல்ல சாலைல அடிபட்டவங்களை பார்த்ததும் பதட்டமடையக் கூடாது. காலம் கடத்தாம ஆம்புலன்சுக்கு போன் செய்யணும்.

அவங்க வருவதற்குள் அடிபட்டவர்களுக்கு மூச்சு இருக்கான்னு பார்க்கணும். இல்லைனா ரெக்கவரி நிலைல - அதாவது வலப்பக்கமாவோ இடப்பக்கமாவோ - படுக்க வைக்கணும். அப்பதான் ரத்தம் மூளைக்கு போகும். இப்படி செய்யறதுனால மயக்கம் நீங்க வாய்ப்பிருக்கு. அதே போல் நாடித் துடிப்பு இல்லாம இருந்தா, நெஞ்சை அழுத்தி செயல்பட செய்யலாம். மயக்க நிலைல இருக்கிறப்ப பாதிக்கப்பட்டவங்களுக்கு வாய் வழியா தண்ணீரோ சோடாவோ தரக் கூடாது. ஏன்னா, மயக்க நிலைல உணவுக்குழாய் மூடப்பட்டிருக்கும். மூச்சுக் குழாய் மட்டும்தான் இயங்கும். இதனால நாம வாய் வழியா கொடுக்கிற நீரோ சோடாவோ மூச்சுக் குழாய் வழியா நுரையீரலை தாக்க வாய்ப்பிருக்கு.

ஸோ, மயக்கத்துல இருக்கிறவங்களோட முகத்துலதான் தண்ணீரை தெளிக்கணும். அவங்க கண் விழிச்ச பிறகு குடிக்க நீர் கொடுக்கலாம்.இன்னொரு விஷயம். மயக்கமானவங்களோட கன்னங்களை தட்டாம தோள்களை தட்டி எழுப்பணும். கழுத்தெலும்பு முதுகுத்தண்டோட இணைந்தது. ஏற்கனவே விபத்துல வேற அடிபட்டிருக்காங்க. இந்த சூழல்ல கன்னத்தை தட்டி எழுப்பினா அது கழுத்தெலும்பு வழியா முதுகுத்தண்டை பாதிக்கும் அபாயம் இருக்கு.அடிபட்டவங்களை தூக்கும்போதும் கவனமா இருக்கணும். எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கு என்பதால் சரியான முறைலதான் தூக்கணும். இல்லைனா படுத்த நிலைலயே தூக்கலாம்.

மழை நீர்ல சறுக்கி விழுந்தவங்களா இருந்தால் தேங்கி நிற்கும் நீர்ல மின் கசிவு இருக்கான்னு செக் பண்ணணும். ரத்த வெள்ளத்துல இருக்கிறவங்களுக்கு உதவறப்ப நம்ம கைல துணியை சுத்திக்கணும். அப்பதான் இன்ஃபெக்ஷன் ஆகாம இருக்கும். நெருப்புல சிக்கிகிட்டவங்களை காப்பாற்றும்போது அவங்களுக்கு முன் பக்கமா போகக் கூடாது. ஏற்கனவே பயத்துல இருக்கிறவங்க நேருக்கு நேரா நம்மை பார்த்ததும் ஓடி வந்து கட்டிப் பிடிச்சுப்பாங்க. அது பாதிக்கப்பட்டவங்களுக்கும், காப்பாற்ற போனவங்களுக்கும் ஆபத்து. ஸோ, பாதிக்கப்பட்டவங்களோட பின் பக்கமா போய்தான் அவங்களை வெளில கூட்டிட்டு வரணும். எல்லாத்தையும் விட முதலுதவி செய்யறப்ப பக்கத்துல இருக்கறவங்களோட உதவியை நாடணும். குறிப்பா தலைமைப் பொறுப்பை ஏற்கணும். ஏன்னா உதவி செய்ய போறப்ப ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஆலோசனையை சொல்வாங்க.

கேள்வி மேல கேள்வி கேட்பாங்க. கசமுசா கசமுசான்னு கூச்சல் எழும்பும். இதை தவிர்க்கணும்னா ஆளுமைப் பண்போட செயல்படணும்...’’ என்று சொல்லும் கலா, பொதுமக்களும் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்.‘‘சிக்னல்ல ஆரஞ்ச் விழுந்ததுமே நின்னுடுங்க. ஆம்புலன்ஸ் வர்ற சத்தம் கேட்டா வழியை விடுங்க. மிதமான வேகத்துல வண்டி ஓட்டுங்க. திடீர்னு வலப்பக்கமோ இடப்பக்கமோ திரும்பறா மாதிரி இருந்தா பின்னாடி வர்றவங்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தாம திரும்புங்க. அந்த சமயத்துல ஹாரன் அடிக்க மறக்காதீங்க. சாலை விதிகளை கடைபிடிங்க. எல்லாவற்றையும் விட முக்கியமானது ஒவ்வொருவரும் முதலுதவி பயிற்சிகளை கற்பது...’’ என்கிறார்.
சரிதானே? கற்கலாமா?

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

வீட்டுக்கு ஒருவர் முதலுதவி பயிற்சியை மேற்கொள்வோம்! Empty Re: வீட்டுக்கு ஒருவர் முதலுதவி பயிற்சியை மேற்கொள்வோம்!

Post by kanmani singh Mon Dec 08, 2014 1:25 pm

நான் எப்படியாவது முதலுதவி பயிற்சி எடுத்துக் கொள்வதென்ற முடிவுக்கு வந்துவிட்டேன் நண்பா! பதிவுக்கு மிக்க நன்றி!!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

வீட்டுக்கு ஒருவர் முதலுதவி பயிற்சியை மேற்கொள்வோம்! Empty Re: வீட்டுக்கு ஒருவர் முதலுதவி பயிற்சியை மேற்கொள்வோம்!

Post by செந்தில் Mon Dec 08, 2014 7:18 pm

விழிப்புணர்வு தரும் பகிர்வு.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வீட்டுக்கு ஒருவர் முதலுதவி பயிற்சியை மேற்கொள்வோம்! Empty Re: வீட்டுக்கு ஒருவர் முதலுதவி பயிற்சியை மேற்கொள்வோம்!

Post by முரளிராஜா Tue Dec 09, 2014 3:43 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வீட்டுக்கு ஒருவர் முதலுதவி பயிற்சியை மேற்கொள்வோம்! Empty Re: வீட்டுக்கு ஒருவர் முதலுதவி பயிற்சியை மேற்கொள்வோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum