தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி?

View previous topic View next topic Go down

மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி? Empty மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி?

Post by mohaideen Wed Jan 21, 2015 1:22 pm

மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி? Hemorrhoids
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படும்­பாடு சொல்லில் அடங்­கா­து. உயிர் போகுமளவிற்கு வலியால் துடி­து­டித்து போவார்கள். இதற்கு அறுவைச் சிகிச்சை தீர்வு என்­றாலும், உண­வுப்­ப­ழக்கம் மூலமும் தீர்வு காணலாம் என்கிறார் தேசமானிய வைத்திய நிபுணர் கிர்ஷாந்த்.
மூல நோய் எவ்வாறு ஏற்படுகின்றது?
மூல நோயானது சிக்கல் கார­ண­மாக ஏற்­ப­டு­கின்­றது. அதா­வது நாம் உண்ணும் உணவு சரி­யான முறையில் ஜீரண­மாகா­மையால் மலச் சிக்கல் ஏற்­படுவதால் மூல நோய் ஏற்­ப­டு­கின்­றது.
இதற்கு மூலகாரணம் உரிய நேரத்தில் உணவு உண்­ணாமை. அதிக மாப்பொருள் அடங்­கிய உண­வு­களை உண்ணுதல், காபோ­வை­தரேட் அடங்­கிய உண­வு­களை உண்­ணுதல், தொடர்ந்து ஒரே வகை­யான உண­வு­களை உண்­ணுதல். நாம் உண்ணும் உணவில் பழங்கள், காபோ­வை­தரே­ட்டு உண­வுகள், கலோரின், புரோட்டின் அடங்­கிய உண­வு­களை உண்­ண­வேண்டும். ஒரு சிலர் தொடர்ந்து ஒரே வகை­யான உணவை உட்­கொள்­வதால் உதா­ர­ண­மாக மா உணவை அதிகம் உட்­கொள்வதால் மூல நோய் ஏற்­ப­டு­கின்­றது.
மூல நோய் எத்தனை வகையானது ? இந்நோயை இரண்டு மூன்று வகை­யாக பிரிக்­கலாம்?
உதா­ர­ண­மாக சொல்வதானால் பரம்­பரை நோயாக இருக்­கலாம். கர்ப்­பிணி தாய்­மார்­க­ள் குழந்­தையை பிர­சவித்த பின் தாய்க்கு கர்ப்பை பை கீழே இறங்­கு­வதால் சில­ருக்கு குதம் வெளியே தள்­ளப்­பட்டு ஏற்­படும் நோய் ஒன்­றாக காணலாம். பாஸ்பூட் அதா­வது இலகு உண­வு­களை உட்­கொள்­வதால் இந்த உண­வுகள் சமி­பா­டடை­யாமல் மலச்­சிக்­க­லினால் மூல நோய் ஏற்­ப­டலாம். சில­ருக்கு குருதி வெளி­யேறு­வதால் ஏற்­பட வாய்ப்­புள்­ளது. குதம் வெளி­யேறி பார­தூ­ர­மான ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கின்ற நோயாக சில­ருக்கு ஏற்­படும். ஒரு சில­ருக்கு மலம் கழிக்கும் போது வலி ஏற்­பட வாய்ப்­புள்­ளது.
இந்நோய்க்­கான அறி­கு­றிகள் என்ன?
ஆச­னவாய் பகு­தியில் இரத்­தக்­குழாய் தடிமன் ஆவ­தன் மூல­மாக உரு­வெ­டுக்­கி­றது. இதன் அறி­கு­றி­யாக முதலில் அரிப்பு ஏற்­படும். இயற்கை உபாதை கழிக்கும் போது மிகவும் சிர­மப்­பட வேண்­டி­யி­ருக்கும். வழக்­கத்­துக்கு மாறாக மலச்­சிக்கல் இருக்கும். சில நேரங்­களில் இரத்தம் வெளி­யேறும். அதன்­பி­றகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்­றவை இருக்கும். அழுத்தம் அதிகம் கொடுப்­பதால் ஆச­ன­வாயின் வெளிப்­ப­கு­தியில் சதை வளர்ச்சி ஏற்­படும். உள் பகுதி தடிமன் ஆவதை உள் மூலம் என்றும், சதை வெளித்­தள்ளும் போது வெளி­மூலம் என்றும் கூறு­கிறோம்.
இந்நோயை வருமுன் காக்­கலாம். உதா­ர­ண­மாக மூச்சு எடுப்­ப­தற்கு கடி­ன­மாக இருக்கும். வயிறு நிறைந்­தது போல் காணப்­படும். வாயுத் தன்மை நிறைந்­தது போல் காணப்­படும். பசி­த்தன்மை அதி­க­மாக இருக்­காது.
மலம் கழிக்கும் போது இலகு­வாக இருக்­காது. மிகவும் கடி­ன­மாக இருக்கும். குடல் காயும் ­தன்மை அதா­வது குடல் காய்­வுத்­தன்மை காணப்­ப­டு­வதால் மலம் கழிக்­கும்­போது கடி­னமாக காணப்­ப­டும்­போது எதிர்­கா­லத்தில் மூல நோய் வர­ வாய்ப்­புள்­ளது. இதனால் முறை­ப்படி உண­வு­களை எடுத்து மூல நோய் வராமல் பாது­காத்­துக்­கொள்­ள­வேண்டும்.
உணவு முறையை கடை­பி­டிப்­பது அவ­சி­ய­மா? இது பற்றி விளக்கம் தாருங்கள்?
ஒருவர் உணவில் கல்­சியம், புரதம், காபோ­வை­தரேட், கொழுப்பு ஆகிய உண­வுகள் கட்­டாயம் உண்­ண ­வேண்டும். உணவை உரிய நேரத்தில் எடுக்­க­வேண்டும். அதா­வது ஆறு மணித்­தி­யா­லத்­திற்கு ஒரு முறை உணவு உண்­ண­ வேண்டும். ஒரு சிலர் எட்டு, பத்து மணித்­தி­யா­ல­த்திற்கு பின் உணவு உண்­ணுதல், இன்னும் ஒரு சிலர் விரதம் இருப்­பதால் இந்த நோய் வரு­வ­தற்கு அதிக வாய்ப்­புகள் உண்டு. காலை முதல் மாலை­வரை உணவு உண்­ணாமல் இரவில் உணவு உண்­பதால் உணவு சமி­ப­பாடடை­யாமல் இந்நோய் வர ­வாய்­ப்புள்­ளது. உதா­ர­ண­மாக மூச்சு எடுப்­ப­தற்கு கடி­ன­மாக இருக்கும். வயிறு நிறைந்­தது போல் காணப்­படும்.
வாயுத் தன்மை நிறைந்­தது போல் காணப்­படும். பசித்­தன்மை அதி­க­மாக இருக்­காது. இந்த கு­ணாதி­சயங்கள் காணப்­பட்டால் கட்­டா­ய­மாக விரதம் இருப்­பதை தவிர்க்­க­வேண்டும். உதா­ர­ண­மாக அதிக மிளகாய் தூள் கலந்த உண­வுகள் உண்­பதை தவிர்த்­து­கொள்­ள­வேண்டும். மேலும் காயத்­தன்மை உள்ள உண­வுகள் உட்­கொள்­வதை தவிர்த்து கொள்­ள­வேண்டும்.
உட­ன­டி­யாக சமி­பாடடையக் கூடிய திர­வ­மான உண­வு­களை உட்­கொள்­வதால் யாரையும் மூல நோய் பாதிக்­காது. நாம் அருந்தும் நீரின் அளவு குறைந்தால் இது வர­ வாய்ப்­புள்­ளது. நீரை அதி­க­மாக அருந்து­ப­வர்­க­ளுக்கு இந்த நோய் பாதிக்­காது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி? Empty Re: மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி?

Post by mohaideen Wed Jan 21, 2015 1:23 pm

வயது அடிப்­ப­டையில் ஏற்­ப­டுமா?
பொது­வாக எல்லா வய­தி­ன­ருக்கும் இந்த நோய் வர வாய்ப்­புள்­ளது. உணவு பழக்­க­வ­ழக்­கங்கள், இலகு உண­வுகள் (பாஸ் பூட்) உதா­ர­ண­மாக சீஸ், கொத்து ரொட்டி போன்­ற­வற்றை உண்­பதால் வர அதிக வாய்­ப்புள்­ளது. பட்டர், மாப் பொருட்கள் போன்ற மேலைத் தேய பொருட்­களை உண்­பதால் இந்நோய் வர ­வாய்ப்­புள்­ளது. உட­ன­டி­யாக சமிபாடு அடையக் கூடிய பொருட்­களை உண்­ண­ வேண்டும். உதா­ர­ண­மாக சோறு உண்ணும் ஒருவர் மூன்று நேரமும் சோறு உண்டால் அது சமி­பாடு அடையக் கூடி­ய­தாக இருக்கும்.
உதா­ர­ண­மாக இரவு நேரத்தில் கோதுமை மாவால் தயா­ரிக்­கப்­பட்ட கொத்து ரொட்டி, ரொட்டி போன்ற­வற்றை உண்­பதால் இவர்­க­ளுக்கு மறு நாள் காலையில் காலை­க்க­டனை செய்­வ­தற்கு அசௌக­ரி­ய­மாக இருக்கும். அதா­வது பொது­வாக இலகு­வாக மலம் கழிப்­ப­தற்கு பதி­லாக மிக கஷ்­டப்­ப­டு­வார்கள்.
இதற்­காக பழங்­களை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்­ள­வேண்டும். சைவ உணவை எடுத்துக் கொண்டால், உணவின் பின் ரசம், பாயாசம் போன்றவை கடை­களில் வழங்­கப்­ப­டு­கின்றன. இவற்றை உண்­பதால் இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண முடியும். மேலும் உண­வுக்கு பின் டெசட் சாப்­பி­டு­கின்றோம். உணவு இலகுவில் சமிபா­டடைய சாப்­பி­டு­கின்றோம். பப்­பாளி, வாழைப்­பழம், யோகட் போன்­ற­வற்றை உட்­கொள்­வதால் இந்த பிரச்­சி­னை­யி­லி­ருந்து விடுப­டலாம்.
ஆதி­கா­லத்தை எடுத்து கொண்டால் அக்­கால மக்­க­ளி­டையே இந்த பிரச்­சினை காணப்­ப­ட­வில்லை. காரணம், இந்த கா­லத்தில் இலகு உண­வுகள், பிஸ்கட் போன்­ற­வற்றை உண்­பதால் சமி­பாடு அடை­வதில் பிரச்­சினை ஏற்­படும்.
உதார­ண­மாக இடியப்ப உரலில் இட்ட மாவு சரி­யான முறையில் பிணைந்­தி­ருந்தால் இலகு­வாக இடியப்பம் வெளியில் வரும். எதிர்­பாராத வித­மாக அந்த மாக் கல­வையில் ஏதா­வது சிக்கல் இருந்தால் மா வெளியில் வரு­வது கடி­ன­மாக இருக்கும். அந்த இடியப்ப உரலின் அடி தட்­டோடு கழன்று வரும். அதே போல் தான். மலம் சரி­யான முறையில் வெளி­வ­ரு­வதில் பிரச்­சினை இருந்தால் ஆசனப்­ப­குதி வெளி­யே வ­ர­வாய்ப்­புள்­ளது.
இந்த நோயை முற்­றாக கட்­டுப்­ப­டுத்­த­லாமா?
ஒரு­சிலர் அறு­வைச்­சி­கிச்சை செய்த பின்னர் உணவில் கட்­டு­ப்பாடு இன்மையால் மீண்டும் அவர்­க­ளுக்கு வர­ வா­ய்ப்­புள்­ளது.
இந்த நோய்க்­கா­க சிகிச்சை பெறு­வ­தற்கு சில வகை­யான ஒயின்மன்ட், கிரீம் வகை­களை நேர­டி­யாக பாவித்தல், மருந்­து­களை உட்கொண்டு சமிபாட்டுத் தொகு­தியை நல்ல முறையில் வைத்­துக்­கொள்­ள­வேண்டும்.
இந்நோய் உள்­ள­வர்கள் உணவு பழக்­க­வ­ழக்­கங்­களை கண்­டிப்­பாக கடைப்­பி­டிக்க வேண்டும். பழங்­களை அதி­க­மாக உண்­ண­வேண்டும், உட­ன­டி­யாக சமி­பாடு அடையக் கூடிய உண­வு­க­ளான பொங்கல், பாற்சோறு போன்­ற­வற்றை அதிக உண்­ண­வேண்டும்.
அதி­கா­லையில் எழுந்­த­வுடன் ஒரு போத்தல் தண்ணீர் அருந்த வேண்டும். குளி­ரான தண்­ணீரை குடித்தால் சமி­பாட்டு தொகு­தி­யி­லி­ருந்து வெளி­யே­று­வது கடி­ன­மாக இருக்கும். கொதித்து ஆறிய தண்­ணீரை குடித்தால் சமி­பாட்டு தொகு­தியில் சரி­யாக செயற்­பட்டு மலம் வெளி­யே­று­வது மிக இலகு­வாக இருக்கும். இவர்­க­ளுக்கு தொடர்ந்து உளுந்தங் கஞ்சி, தோசை போன்றவற்றை இரவில் உண்­பதால் மலம் கழிப்­பதில் பிரச்­சினை ஏற்­ப­டாது.
மூல நோய் உண்­டா­வ­தற்கு முக்­கிய கார­ணமே மலச்­சிக்கல் தான். பரம்­ப­ரை­யா­கவும் இந்நோய் வரலாம். உடல் எடை அதிகம் இருப்­ப­வர்கள், தொந்தி உள்­ள­வர்­க­ளுக்கு வயிறு அழுத்தம் அதி­க­ரித்து மூலநோய் உரு­வாக்­கு­கி­றது. பொது­வாக பெண்­க­ளுக்கு கர்ப்ப காலத்தில் இது ஏற்படலாம் என்கிறார் தேசமானிய வைத்திய நிபுணர் கிர்ஷாந்த்.
உடற் பயிற்சி அவ­சி­யமா?
காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்­வது நன்று.
நோய் உள்­ள­வர்கள் உணவு உண்­டபின் 15-–20 நிமிடம் நடப்­பது சிறந்தது. உடற்­ப­யிற்சி செய்வது நன்று. அப்­போது தான் உணவு சமி­பாடடையும் இந்த நோயை பொறுத்த­வ­ரையில் இவர்கள் கேட்­டுதான் வாங்­குகிறார்கள் என்று சொல்­லலாம். சரி­யான முறையில் உணவை எடுக்காமல் கழி­வ­றைக்கு சென்று சிரமப்பட்டு மலத்தை கழிக்க முயற்­சிப்­ப­தாலும் இந்நோய் வர­ வாய்ப்­புள்­ளது. நாம் உண்ணும் உணவு சமி­பாட்டு தொகு­தியில் சமிபாடடைந்து சிறுகு­ட­லி­லிருந்து பெருங்­கு­ட­லுக்கு தள்­ளப்­படும் போது நாம் கழி­வ­றைக்கு சென்று இலகு­வாக மலம் கழிப்­பதால் இந்த நோய் வர வாய்ப்பில்லை ஆனால், உணவை தவிர்த்தல், சிலர் அவ­சர பிர­யா­ணத்தை மேற்­கொள்­வதன் நிமித்­தம் வாக­னங்­களில் செல்­ல வேண்டியிருப்­பதால் கழி­வ­றைக்கு சென்று வற்­பு­றுத்­தி­யிருப்­பது போன்றவற்றால் மூல நோய் வர வாய்ப்புள்­ளது. தொடர்ந்து அமர்ந்து வேலை செய்­ப­வர்­க­ளுக்கு இந்நோய் வர வாய்ப்புள்­ளது. சார­திக்கு இந்நோய் வர வாய்ப்புள்­ளது. தொடர்ந்து எட்டு பத்து மணித்­தி­யாலங்கள் அமர்ந்து வேலை­செய்­வதால் இந்நோய் வர வாய்ப்புள்­ளது.
பெருங்­குடல், சிறு­கு­டலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா?
ஆம், பெருங்­குடல் சிறு­கு­டலில் பாதிப்பு ஏற்­படும். கோலிக், எப்­பன்­டையிஸ் போன்­றன வர­வாய்ப்­புள்­ளது. சரி­யாக சமி­பா­டடைந்து இந்த நோய் உள்­ள­வர்­க­ளுக்கு குருதி அதிகம் செல்­வதால் இவர்­க­ளுக்கு லோ பிரசர் வர­வாய்ப்­புள்­ளது. இவர்­கள் அன்­றாட வேலை­களை தாங்­க­ளாக செய்து கொள்­வதில் அசௌ­க­ரி­ய­மாக இருக்கும். நாற்­கா­லி­களில் அமர்­வது கடி­ன­மாக இருக்கும். கடி­ன­மான வேலை­ செய்­வதில், பாரங்­களை தூக்­குதல் போன்ற வேலை­களை செய்ய முடி­யாது. அதே நேரத்தில் செய்­யக்­கூ­டாது. குனிந்து வேலை செய்யக் கூடாது, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை­ செய்யக் கூடாது. சரி­யான உணவை சரி­யான நேரத்­தில் உட்­கொள்­ளா­மை­சரி­யான முறையில் தண்ணீர் உறிஞ்­சப்­ப­டாததாலும் சமிபாட்டில் பாதிப்பு ஏற்­பட்டு பெருங்குடல், சிறுகு­டலில் பாதிப்பு ஏற்­ப­ட­ வாய்ப்­புள்­ளது.
உடலில் மாற்றம் ஏற்­ப­டுமா?
ஆணாக இருந்­தாலும் சரி பெண்­ணாக இருந்­தாலும் சரி மூல நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் உணவு உட்­கொண்டவுடன் உட­ன­டி­யாக மலம் கழிக்க நேரி­டு­வதால் உடலின் நிறை குறைய வாய்ப்­புள்­ளது. குருதி அதிகம் வெளி­யே­று­வதால் லோ பிரசர் ஏற்­ப­டலாம். பார்வை குறைய வாய்ப்­புள்­ளது. இதனால் இடுப்பு வலி ஏற்­பட வாய்ப்­புள்­ளது. கழி­வ­றையைப் பொறுத்த மட்டில் மூல நோயா­ளர்­க­ளுக்கு கொமட்டை பாவிப்­பதால் இலகு­வாக இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி? Empty Re: மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி?

Post by mohaideen Wed Jan 21, 2015 1:23 pm

மூலநோயை தவிர்ப்பது குறித்து வைத்­தி­யர் என்ற வகையில் உங்­களின் கருத்தை தாருங்கள்?
நோயை வரும் முன் காப்போம் என்றால், உதா­ர­ண­மாக அதிகமாக விரதம் இருப்­பதை தவிர்த்­து­க்கொள்­ள­வேண்­டும். உண்மை­யாக விரதம் இருப்­பது நல்ல விடயம். ஆனால், எங்­களின் ஆராய்ச்­சியின் படி அதிக இளம் பெண்­க­ளுக்கு இந்த நோய­்வ­ரு­வ­தாக ஆராய்ச்­சி­யில் தெரி­ய­வந்­துள்­ளது. இதனால் உடலின் நிலை­மையை அறிந்து அதற்கேற்ப செயற்­ப­ட­ வேண்டும்.
கோழி இறைச்சி, முட்டை, பன்றி இறைச்சி போன்­ற­வற்றை அதி­க­மாக உண்­பதால் இலகுவில் சமி­பா­டடை­யா­ததால் இவற்றை குறைத்து கொள்­வது நல்­லது. தேவை­யற்ற நேரத்தில் அவ­ச­ரத்­திற்­காக கழிப்­பறையில் சென்று மலத்தை உந்தித் தள்­ளுதல் கூடாது உதா­ர­ண­மாக பழுக்­காத வாழைப்­பழத்தை அடிக்க வைத்து பழுக்­க­ வைக்க கூடாது. சூடு போட்டு பழுக்­க­வைத்தல், யூரியா போட்டு பழுக்­க­வைத்தல், நசுக்கி வைத்து உண்­பது கடினம்.
அதே போல் தான் எமக்கு மலம் கழிக்க வராத நேரத்தில் வற்­புறுத்தி மலம்­ க­ழிக்க முற்படக் கூடாது. எம்மில் சிலர் மலம் கழிக்க பயந்து காலை உணவை உண்­ணாமல் தவிர்ப்­பதை நாம் காணக்கூடிய­தாக இருக்­கி­றது. (பாஸ்பூட்) இலகு உண­வு­களை தவிர்த்து கொள்­ளுங்கள். காலையில் குளிர் பானங்­களை அருந்­து­வதால் சிறு­குடல், பெருங்­கு­டலை பாதிக்க வாய்ப்­புள்­ளது. மூன்று நேர உண­வு­களை சரி­யான நேரத்தில் உண்­ண­வேண்டும்.
ஒவ்­வொரு உண­வு­களை உண்ட பின்பும் ஏதா­வது பழங்கள், இரசம், பாயாசம், பான­வ­கைளை உட்கொள்வது நல்­லது. இது 30 – 40 வயது என்றில்லாமல் இளம் வய­தி­னரும் இதனை கடை­பி­டிக்­க­வேண்டும். தொடர்ந்து ஒரே உண­வு­களை உட்­கொள்ளக் கூடாது.
சிலர் மா என்றால் உட்­கொள்­வார்கள், சிலர் சோற்றை தொடர்ந்து மூன்று நேரம் உட்­கொள்­வார்கள். இதனால் பெரும் பாதிப்பு வராது. இருப்­பினும், புரதம், கல்­சியம் போன்­றவை குறை­வாக இருப்­பதால் 35 வய­துக்கு மேல் நீரி­ழி­வு போன்ற நோய்கள் வர­ வாய்ப்­புள்­ளது. கடி­ன­மாக வேலை செய்­ப­வர்கள் மூன்று நேரம் சோறு உண்­ணலாம். ஆனால், வயது செல்ல செல்ல சோறு உண்ணும் அளவை குறைத்­து­கொள்­வது நல்­லது. இரண்டு நேரம் அல்­லது ஒரு நேரம் என குறைப்­பது நல்­லது. உரிய நேரத்தில் உணவை உண்ணுதல் வேண்டும்.
இந்த நோய் வந்து விட்டால் எண்ணெய், கொழுப்பு சத்து நிறைந்த உண­வுகள் உட்­கொள்­வதை தவிர்த்துக் கொள்ள­வேண்டும். கோழி இறைச்சி, ஏனைய இறைச்சி வகை­களை குறைத்து கொள்­வது அவ­சியம். பாயாசம், கஞ்சி போன்­ற­வற்றை உண்­பது சிறந்­தது. மேலும் நோயால் பாதிக்கப்பட்டு அறு­வைச்­சி­கிச்சை செய்­த­வர்கள் கடின வேலை­களை செய்யக்கூடாது. அவ்­வாறு செய்­வதால் குருதி வெளி­யேறி உயிராபத்து எற்பட வாய்ப்­புள்­ளது. இதனால் மூல நோயா­ளர்கள் உட­ன­டி­யாக வைத்­தி­யரை நாடி வைத்­தி­ய ­ஆ­லோ­சனை படி செயற்­ப­டு­வது நல்­லது.
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படும்­பாடு சொல்லில் அடங்­கா­து. உயிர் போகும் வலியால் துடி­து­டித்து போவார்கள். இதற்கு அறுவை சிகிச்சை தீர்வு என்­றாலும், உண­வுப்­ப­ழக்கம், உடற்­ப­யிற்சி மூலமும் தீர்வு காணலாம். மூல நோயை கண்­டு­கொள்­ளாமல் விடு­வதால் புற்றுநோயாக மாறலாம் எச்­ச­ரிக்­கிறார்.
மூல நோய் உண்­டா­வ­தற்கு முக்­கிய கார­ணமே மலச்­சிக்கல் தான். பரம்­ப­ரை­யா­கவும் இந்நோய் வரலாம். உடல் எடை அதிகம் இருப்­ப­வர்கள், தொந்தி உள்­ள­வர்­க­ளுக்கு வயிறு அழுத்தம் அதி­க­ரித்து மூலநோய் உரு­வாக்­கு­கி­றது. பொது­வாக பெண்­க­ளுக்கு கர்ப்ப காலத்தில் இது ஏற்படலாம். ஆரம்­பக்­கட்­டத்­தி­லேயே உடலில் ஜீரணம் மற்றும் வெளி­யேற்றம் ஆகிய சுழற்­சியில் பிரச்­சினை உள்­ளதா என்­பதை அறிந்து கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்­சினை பெரி­தாகி விடும். முதலில் உணவில் கவனம் செலுத்­து­வது அவ­சியம். மலச்­சிக்­கலைப் போக்கும் உணவு முறை­களை பின்­பற்­ற­வேண்டும்.
போது­மான உடற்­ப­யிற்சி செய்ய வேண்டும். இதற்­கென பிரத்­தியேக யோகா பயிற்­சி­களும் உள்­ளன. சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்­கின்­றனர். ஆனால் அறுவை சிகிச்­சைக்கு பின்னர் உண­வுக் ­கட்­டுப்­பாடு மிகவும் அவ­சியம். இல்லையென்றால் மீண்டும் வளர வாய்ப்­புள்­ளது.
முறை­யான சிகிச்சை எடுக்­காத பட்­சத்தில் ஆசன வாய்ப்­ப­கு­தியில் வெடிப்பு போன்று புண் ஏற்­பட்டு ஆறாது. இதிலிருந்து இரத்தம் வெளி­யேறும். இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்­புள்­ளது.
இதில் ஏற்­படும் கொப்­புளங்கள் புரை­யோடி குடல் பகு­தியில் துளையை உரு­வாக்கும். எனவே மூலப் பிரச்­சினை உள்­ள­வர்கள் வைத்­தி­யரின் ஆலோ­ச­னைப்­படி ஆரம்­பத்­தி­லேயே சரி செய்து கொள்­வது அவ­சியம்.
நார்ச்­சத்துள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்­பி­டு­வதன் மூலம் இதை தவிர்க்­கலாம். மேலும் மூலப்­பி­ரச்­சினை உள்­ள­வர்கள் அசைவம் மற்றும் மிளகாய் உணவு வகை­களை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்­ள­வர்­களும், பரு­மனா­ன­வர்­களும் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும் உடற்­ப­யிற்­சியை வழக்­கப்­ப­டுத்தி கொள்­வது நல்­லது. குறைந்­த­ளவு தண்ணீர் குடிப்­ப­தாலும், இந்த பிரச்­சினை ஏற்­ப­டு­கி­றது. எனவே போதியளவு நீர் அருந்தவேண்டும்.

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி? Empty Re: மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum