Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான டிப்ஸ்
Page 1 of 1 • Share
காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான டிப்ஸ்
பெட்ரோல் விலை தாறுமாறாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எகிறி வரும் பெட்ரோல்
விலையால், குதிரை வாங்கியும், சாட்டை வாங்க முடியாத குறையாக பெட்ரோல் காரை
வாங்கிய பலர் வீட்டில் அழகு பொருளாக நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு
காலத்தில் ஆடம்பர பொருளாக கருதப்பட்ட கார்கள் இன்றைக்கு அத்தியாவசிய
தேவையாக மாறியுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு அதிகரித்தாலும், அலுவலகம், வர்த்தக தேவைகள்,
சுற்றுலாக்களுக்கு காரை பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. எனவே,
காரில் செல்லும்போது சில எளிய நடைமுறைகளை கடைபிடித்தால், எரிபொருள்
சிக்கனத்தை பெற முடியும்.
கடந்த ஆண்டு எரிபொருள் சிக்கனத்திற்கான டிப்ஸ் செய்தியை
வழங்கியிருந்தோம். பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவுமுதல் ஒரேடியாக
உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த செய்தியை மீண்டும் வழங்கினால் புதிய
வாசகர்களுக்கு பயன்படும் என்ற நம்பிக்கையில் சில கூடுதல் தகவல்களுடன்
தந்திருக்கிறோம்.
எரிபொருள் சிக்கனத்திற்கான சில டிரைவிங் டிப்ஸ்
1. குறைந்த தூரம் செல்வதற்கு காரை பயன்படுத்துவதை தவிருங்கள். அடுத்த
தெருவிற்கு செல்வதற்கும், தேவையில்லாமலும் காரை எடுப்பதை தவிர்ந்துக்
கொள்ளுங்கள். நடந்தோ அல்லது சைக்கிளில் செல்ல பழகிக் கொள்ளுங்கள்.
கொஞ்சம் அதிகம் தூரம் என்றால் மோட்டார்சைக்கிளை பயன்படுத்துங்கள்.
2. சாலையில் உள்ள போக்குவரத்துக்கு தக்கவாறு வேகத்தை கட்டுப்படுத்தி
ஓட்டப் பழகுங்கள். அடிக்கடி கியரை மாற்றும்போதும் கூடுதல் எரிபொருள்
செலவாகும். கிளட்சையும் தேவையில்லாமல் மிதிப்பதாலும் கூடுதல் எரிபொருள்
செலவாகும் என்பதை நினைவில் கொண்டு டிரைவிங் செய்யவும்.
3. நிறுவனங்கள் கூறியுள்ளபடி, வேகத்திற்கு தக்கவாறு சரியான கியரில் காரை
இயக்க பழகிக்கொள்ள வேண்டும். சிலர் கார் ஓட்டுவதில் நான் சூரப்புலி
என்பதை காட்டுவதற்காக வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் உடனுக்குடன் கியரை
மாற்றி வேகமெடுத்து திறமையை பறைசாற்றுவர். இது தவறான டிரைவிங் என்பது
மட்டுமல்ல, எரிபொருள் செலவு கூடுதல் ஆவதற்கு முக்கிய காரணமே இதுவாகத்தான்
இருக்கும்.
4.நகரங்களில் டிரைவிங் செய்பவர்கள் சிக்னல்களில் நிறுத்தும் சூழ்நிலை
ஏற்படுகையில், 25 வினாடிகளுக்கு மேல் தாமதம் ஏற்படும் என்றால் மட்டுமே
எஞ்சினை ஆப் செய்யவும். 25வினாடிகளுக்குள் எஞ்சினை ஆப் செய்து, திரும்ப
ஸ்டார்ட் செய்யும்போது எரிபொருளை மிச்சப்படுத்த முடியாது.
5.புதிய காராக இருந்தால்,தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரைத்த கால
அளவிலும், பழைய காராக இருந்தால் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது சர்வீஸ்
செய்து விடுவது புத்திசாலித்தனம். இதேபோன்று, அடிக்கடி எஞ்சின் செக்கப்
செய்வதும் 50 சதவீதம் எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்யும்.
6.காரை எடுப்பதற்கு முன் டயர்களில் காற்றின் அழுத்தம் சரியான அளவில்
இருக்கிறதா என்பதை உறுதி செய்து கிளம்புங்கள். மாதத்திற்கு ஒரு முறையாவது,
டயர்களில் சரியான அளவில் காற்று பிடிப்பது நல்லது. டயர்களில் காற்றின்
அழுத்தம் குறைந்தால், எஞ்சினுக்கு கூடுதல் பளு ஏற்பட்டு 5 சதவீதம்
எரிபொருள் கூடுதல் செலவாகும்.
7.சுற்றுலா அல்லது வெளியூர் பயணங்கள் செல்லும்போது, தேவையில்லாத
பொருட்களை கேரியர் தலையில் ஏற்றாதீர். கேரியரில் ஏற்றப்படும் பொருட்களின்
எடை காரணமாக எஞ்சின் கூடுதல் சிரமத்தை ஏற்பதால் அதிக எரிபொருள்
செலவாகும்.
8.நெடுஞ்சாலை பயணங்களின்போது, 60 கி.மீ., வேகத்தில் சென்றால் அதிக
எரிபொருள் சிக்கனம் கிடைக்கும். அதற்கு மேல் செல்லும்போது 5 முதல் 10
சதவீதத்திற்கும் கூடுதலான எரிபொருளை எஞ்சின் விழுங்கும்.
9.தேவையில்லாமல் அடிக்கடி பிரேக் பிடிப்பது, காரை நிறுத்துவது
போன்றவற்றை தவிர்ப்பதாலும், எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். தவிர,
அடிக்கடி பிரேக் பிடிப்பதை தவிர்ப்பதால், டயர்கள் மற்றும் பிரேக்குளின்
ஆயுட்காலமும் நீடிக்கும்.
10.குறைந்த வேகத்தில் செல்லும்போது ஏசியை ஆப் செய்துவிட்டு செல்லுங்கள்.
குறைந்த வேகத்தில் செல்லும்போது ஏசி ஆன் செய்திருந்தால் எஞ்சின் கூடுதல்
எரிபொருளை எடுத்துக்கொள்ளும்.
11. காரின் வேகத்தில்தான் எரிபொருள் சிக்கனத்திற்கான சூட்சுமம்
அடங்கியுள்ளது. எனவே, சரியான வேகத்தில் காரை இயக்க பழகிக்கொண்டாலே போதும்.
அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறமுடியும்.
மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை நினைவில்கொண்டு டிரைவிங் செய்தால், அடிக்கடி பெட்ரோல் பங்க் கியூவில் நிற்பதை நிச்சயம் தவிர்க்கலாம்.
நன்றி:http://www.tamilclone.com

Re: காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான டிப்ஸ்
எப்பொழுதும் காரிலேயே பயணம் மேற்கொள்ளும் தொழிலதிபர் மகா பிரபுவுக்கு பயன்படும்
Re: காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான டிப்ஸ்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சிவா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான டிப்ஸ்
கார் வாங்கி இருக்கீங்களா சொல்லவே இல்லசெந்தில் wrote:பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சிவா
Re: காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான டிப்ஸ்
ஆமா. எங்க ஊர்ல பஸ்ஸை கார்னு தான் சொல்வோம்..முரளிராஜா wrote:எப்பொழுதும் காரிலேயே பயணம் மேற்கொள்ளும் தொழிலதிபர் மகா பிரபுவுக்கு பயன்படும்
Re: காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான டிப்ஸ்
அருமையான பதிவு .....கார் வாங்கிய பிறகு ஒருமுறை படித்துக்கொள்கிறேன்
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான டிப்ஸ்
ஜோர்பா wrote:அருமையான பதிவு .....கார் வாங்கிய பிறகு ஒருமுறை படித்துக்கொள்கிறேன்
Re: காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான டிப்ஸ்
நல்ல தொகுப்புதான் தம்பி முதல்ல ஒரு காரை வாங்கி கொடுங்க மேற்கண்டவற்றை பின்பற்றுகிறேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான டிப்ஸ்
ஏற்க்கனவே நான் வாங்கி கொடுத்த கார் என்னாச்சு ராம் :bom: :bom: :bom:ஸ்ரீராம் wrote:நல்ல தொகுப்புதான் தம்பி முதல்ல ஒரு காரை வாங்கி கொடுங்க மேற்கண்டவற்றை பின்பற்றுகிறேன்
Similar topics
» ஃபிட்டான வயிற்றைப் பெறுவதற்கான சில டயட் டிப்ஸ்...
» பொலிவான சருமத்தை எளிதில் பெறுவதற்கான சில சூப்பர் டிப்ஸ்...
» கணினி முன்பு அதிக நேரம் வேலை செய்பவரா? உங்களுக்கான சில டிப்ஸ்
» அடை மழையால் அதிக சேதம் மட்டக்களப்பிற்கு, அதிக மரணம் மாத்தளைக்கு!
» சரும சுருக்கங்கள் நீங்க டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|