தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தலைவலி மருந்துகள்

View previous topic View next topic Go down

தலைவலி மருந்துகள் Empty தலைவலி மருந்துகள்

Post by mohaideen Thu Jun 25, 2015 2:52 pm

ப்ரிஸ்க்ரிப்ஷன் டாக்டர் மு.அருணாச்சலம்
தலைவலி மருந்துகள் Ht3650
குழந்தைகள் உள்பட ஒவ்வொரு மனிதனும் உணர்ந்திருக்கிற ஓர் உபாதை தலைவலி. ‘தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்று இதையே காரணம் காட்டி, ‘வாழ்க்கையில் வரும் இன்பதுன்பங்களை அனுபவிப்பவர்களுக்கு மட்டும்தான் அதன் வலியும் வேதனையும் தெரியும்’ என வாழ்வியலை விளங்க வைப்பதுண்டு.

தலைவலி என்பது 5 சாதாரண காரணங்களால் வருகின்றன. இருப்பினும், மூளைக்கட்டி போன்ற மிக மோசமான நோய்களுக்கான ஆரம்ப அறிகுறியாகவும் அது இருக்கலாம். மருத்துவர்களும், மிக மோசமான தலைவலியாக இருந்தாலும், அது அன்றாட வாழ்க்கை நடவடிக்கையை பாதிப்பதாக இருந்தாலே தவிர, உயிர்க்கொல்லி நோயாக எடுத்துக் கொள்வதோ, நோயாளிகளை பயம் காட்டுவதோ இல்லை. மன அழுத்தம், மனப் பதற்றத்தினால் வரும் ஒற்றைத் தலைவலி மற்றும் அதிக மருந்துகள் எடுப்பதனால் வரும் தலைவலி போன்றவையே, இவற்றில் 90 சதவிகிதம். தலைவலி சாதாரணமாக பின்வரும் காரணங்களால் ஏற்படக்கூடும்.

1. தினம் 6லிருந்து 8 மணி நேரம் தூங்காததால் (Sleep deficit)...
2. தேவையான அளவு தண்ணீர் பருகாததால், உச்சி வெயிலில் அலைவதால் (Dehydration)...
3. வேளாவேளைக்கு உணவு அருந்தாமை யால் (Hypoglycemia)...
4. கண்ணுக்கு அதிகப்படியான வேலை கொடுப்பதால்... டி.வி., செல்போன், கம்ப்யூட்டர், வாசித்தல் என கண் களைப்படைவதால்...
5. கோபம், எரிச்சல், வருத்தம் போன்ற மன ஓட்டத்தினால்... 


இது மட்டுமல்ல... சில மருந்துகளோ, கிருமிகளால் வரும் காய்ச்சலோ, பல் கிருமிகளோ காரணமாகலாம். மூளையிலுள்ள ரத்தக்குழாய்களில் மாற்றம்  மற்றும் ரத்தக்கசிவு, மூளையில் கிருமிகளின் தாக்கத்தாலோ (Malaria, T.B., Cysticercosis), தலையில் ஏற்படும் காயங்கள் (மூளையின் சுவர்களில் அல்லது மூளையில் ஏற்படும் காயம், ரத்தக்கட்டியால் ஏற்படும் அழுத்தம்), மூளையில் வரும் சாதாரண வீக்கத்தை (Benign) ஏற்படுத்தும் பரவாத, பரவும் கட்டிகள் (Malignant) அல்லது மற்ற இடங்களில் ஏற்பட்ட கட்டிகளின் இரண்டாம்நிலை பரவுதல் (Secondaries) என பல காரணங்கள் இருக்கலாம்.

எந்த முக்கியமான காரணமும் இல்லாமல் 20-40 வயதுக்குள் வரும் தலைவலி 90 சதவிகிதம்... இது பிரச்னையில்லை. மீதி 10 சதவிகிதத்தில் வரும் தலைவலியை மருத்துவ பரிசோதனைகளால் வித்தியாசப்படுத்தி பார்ப்பது அவசியம். அதனால்தான் மீண்டும் மீண்டும் தலைவலியுடன் வரும் நோயாளி ஒரே குடும்பநல மருத்துவரிடம் பார்க்கும் போதோ, நரம்புமண்டல நிபுணர்களிடம் பார்க்கும் போதோ, மற்ற மருத்துவ பரிசோதனைகளுடன் மூளையில் கட்டி இருக்கிறதா என C.T. Scan, Brain M.R.I., மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா என M.R. Angio Test எடுத்துப் பார்க்க வேண்டும். தலையில் கட்டியோ, நோயோ இல்லாத ஆயிரம் பேர்களை விட்டுவிடலாம். மூளையில் புற்றுநோய் உள்ள ஒருவரைக் கூட ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்காமல் விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தினால்தான் செலவு மிகுந்த பரிசோதனைகளை எழுத வேண்டியுள்ளது.

மன அழுத்தத்தினால் வரும் தலைவலி (Cluster headache), நரம்பு அழுத்தத்தினால் முன் முகத்தில் ஆரம்பித்து வரும் தலைவலி (Trigeminal Neuralgia), ஒற்றைத் தலைவலி (Migraine), அதிக வேலைப்பளுவினால் வரும் தலைவலி (Primary Cough headache) போன்றவை மிக அபாயமான காரணங்கள் இல்லாதவை. அவ்வப்போது மிதமாகவோ, தீவிரமாகவோ வந்துபோகும். கழுத்திலோ, தலையிலோ ஏற்படும் காயங்களாலோ, கிருமியினாலோ (Meningitis) ரத்தக் கசிவினாலோ, கட்டிகள், கண்ணில் வரும் அழுத்தத்தினாலோ வரும் தலைவலிகளுக்கு, காரணங்களை சரி செய்தால் மட்டுமே தலைவலியும் சரியாகும்.

மூளையில் வலியை உணரும் தனியொரு அமைப்பு (Nociceptor) இல்லை. தலை, கழுத்துப் பகுதிகளில் மற்றும் தலைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில், மூளை நரம்புகளில் வலியை உணரும் சக்தி உண்டு. மூளையில் ரத்தக்குழாய்கள் விரிவது, சுருங்குவதைவிட, செரட்டோனின் போன்ற ெதாடு நரம்புகளை தூண்டும் வேதியியல் மாற்றங்களால் தலைவலி உணரப்படுகிறது. ஒருவருக்கு ஏற்கனவே தலைவலி இருக்கிறதா அல்லது புதிதாக உணரப்படுகிறதா? தலைவலி மட்டும் தனியாக இருக்கிறதா? அல்லது வேறு நோய் அறிகுறிகளும் வேதனையும் இருக்கிறதா? இதைப் பொறுத்தே நோய்க்கான காரணமும் தீர்வும் அமையும்.

பொதுவாக தலைவலி என்று வரும்போது மூளையில் உணரப்படுவது, மூளையின் ரத்தக்குழாய் விரிவதாலோ, சுருங்குவதாலோ, மூளையின் உறுப்புகள் அழுத்துவதாலோ, மூளையின் உறைகள் அழுத்துவதாலோ ஏற்படும் உணர்வே. இதில் வாந்தி, மயக்கம், தலைச்சுற்று, வலிப்பு, பேச்சு குளறுதல், பார்வை மங்குதல், கால், கை இயக்கங்களில் மாற்றம் போன்றவற்றுடன் வரும் தலைவலியே மருத்துவருக்கு பரிசோதனைகளை செய்ய சொல்லும் அறிகுறிகளாகும். அல்லது நரம்பு சிறப்பு மருத்துவர்களை பார்க்க அறிவுறுத்தும் அறிகுறிகளாகும். 

எந்த நோய் அறிகுறிகளும் இல்லாமல் இயல்பாகவே இருக்கும் பட்சத்தில், அது ஒற்றைத் தலைவலியா, மன அழுத்தத்தினால் வரும் தலைவலியா, பார்வை மாற்றங்களால் வரும் தலைவலியா, ஜுரத்தினால் வரும் தலைவலியா என மருத்துவர் நோயாளியிடம் கேட்டறிந்து அறிகுறிகளைப் பொறுத்து அறிவுரைகளுடன் மருந்துகளையும் பரிந்துரைப்பார். எல்லா தலைவலிகளுக்கும் E.C.G., C.T. Scan போன்றவை தேவையில்லை. ஆனால், அடிக்கடி நோய் வரும்போது, நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும்போது பரிசோதனைகள் அவசியம். நோயாளியின் பயத்துக்காக மட்டுமல்ல... நுகர்வோர் நீதிமன்றங்களில் மருத்துவர்களை பாதுகாப்பதும் பரிசோதனைகளே.

பரிசோதனைகளின் முடிவில் நோய்க்கான காரணங்கள் அறியப்பட்டால் அதற்கான சிகிச்சை தரப்படும். அதே வேளையில் பொதுவான மூன்று காரணங்களால் வரப்படும் தலைவலி 1. மனஅழுத்தத்தால் (Cluster/Tension), 2. ஒற்றைத் தலைவலி (Migraine) மற்றும் 3. 

ஏற்கனவே கூறிய 5 காரணங்களால் வரும் தலைவலிகள். பொதுவாக மேலே கூறிய காரணங்களால் வரும் தலைவலிக்கு சிலருக்கு தைலங்கள் தேய்த்தால் சரியாகலாம். சிலருக்கு சாதாரண பாராசிட்டமால் மாத்திரைகளிலேயே குணப்படுத்தலாம். சிலருக்கு நல்ல தூக்கம், சிலருக்கு பானங்கள் என அவரவர் அறிந்துகொண்ட சாதாரண செயல்முறைகளில் வலி குறையுமானால், அதுவே போதுமானது. மன அழுத்தத்தினால் வரும் தலைவலிக்கு மருத்துவரிடம் கலந்து பேசி தனியான மருந்துகள் தேவைப்படும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தலைவலி மருந்துகள் Empty Re: தலைவலி மருந்துகள்

Post by mohaideen Thu Jun 25, 2015 2:53 pm

மைக்ரேன் என்கிற ஒற்றைத் தலை

வலியே உலக அளவில் மனிதர்களை முடக்கிப் போடும்  20வது முக்கியமான நோய். ஆசியாவில் 8 முதல் 12% பேருக்கு ஒற்றைத் தலைவலி இருப்பதாக அறியப்படுகிறது. தலைவலியுடன் வாந்தியும் இருக்கும். வெளிச்சம், இரைச்சல், தலைவலியை அதிகப்படுத்தும் தலைவலி வருவதற்கான அறிகுறிகள் (Aura) காணப்படும். இதற்காக வாந்தியைக் குறைக்கும் மருந்துகள், தலைவலியைக் குறைக்கும் மருந்துகள், மன பயத்தை போக்கும் மருந்துகள் ஆகியவற்றுடன் மைக்ரேன் வராமல் தடுக்கும் மருந்துகளும் உள்ளன.

தலைவலியைக் குறைக்கும் மருந்துகள்


Paracetamol Brufen, Ergot, Tramadol, Aspirin, Mefenamic acid... இவை வயிற்றுவலி, நெஞ்செரிச்சல் தரவல்லவை. சிறுநீரகம், ஈரல் பாதிப்புள்ளவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆரம்பத்தில் Ergot மருந்துகள் Caffieine மருந்துகளுடன் வலியைக் குறைக்க உதவும். வாந்தியைக் குறைக்கும் மருந்துகள் Prochlorperazine, Emeset மன பயத்தை போக்கும் மருந்துகள் Amitriptyline, Zolpidem, Alprazolam... இவை தூக்கம் தரவல்லவை. அடிமையாகும் வாய்ப்புண்டு.

மைக்ரேன் தலைவலியை தடுக்கும் மருந்துகள்: Flunarizine-ca... செல்லுக்குள் செல்வதை தடுக்கும் மருந்து. இம்மருந்துக்கு தூக்கம் வரலாம். வாய் உளறல் போன்றவை காணப்படும். வாரம் 5 நாட்கள் வீதம் 3 மாதங்கள் வரை தரலாம். Propranolol, Cyproheptadine போன்ற மருந்துகளும் தரலாம் என்றாலும், ரத்தக்கொதிப்பு மற்றும் ஆஸ்துமா நோயாளிக்கு முன்னெச்சரிக்கையுடன் தரலாம். வேளாவேளைக்கு உணவு, 6 முதல் 8 மணி நேர உறக்கம், மனதுக்குப் பிடித்த வேலை, போதுமென்ற மனம், ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை, பேராசை இல்லாத மனம் என வாழ்ந்தால் தலைவலி மட்டுமல்ல... ஏராளமான நோய்களை விரட்டி விடலாம்!


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3660
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தலைவலி மருந்துகள் Empty Re: தலைவலி மருந்துகள்

Post by முரளிராஜா Sun Jun 28, 2015 10:31 am

பயனுள்ள மருத்துவ குறிப்புகளுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலைவலி மருந்துகள் Empty Re: தலைவலி மருந்துகள்

Post by kanmani singh Tue Jun 30, 2015 1:08 pm

விரிவான தெளிவான கட்டுரைக்கு நன்றி!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

தலைவலி மருந்துகள் Empty Re: தலைவலி மருந்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum