தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நூடுல்ஸுக்கு நோ சொல்வோம்!

View previous topic View next topic Go down

நூடுல்ஸுக்கு நோ சொல்வோம்! Empty நூடுல்ஸுக்கு நோ சொல்வோம்!

Post by mohaideen Tue Jul 07, 2015 3:32 pm

நூடுல்ஸுக்கு நோ சொல்வோம்! Ht3695எதற்காகவும் காத்திருக்கும் பொறுமை இந்தத் தலைமுறைக்கு இல்லை. எல்லாமே உடனுக்குடன் கிடைத்து விட வேண்டும்  என்கிற எண்ணம்தான் எல்லோரது மனதிலும் வேரூன்றி நிற்கிறது. இந்தப் பரவலான எண்ணத்தை அடிப்படையாக வைத்து  இன்ஸ்டன்ட் கலாசாரத்தை தொழில் நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. ‘இரண்டு நிமிடங்களில் தயார்’ எனும் வார்த்தையை  தாரக மந்திரமாகக் கொண்டு காபி, நூடுல்ஸ் என பலவற்றிலும் இன்ஸ்டன்ட் வேகம்! இப்படியொரு அவசர மோகம்தான்  இந்தியாவையே கொதித்தெழச் செய்திருக்கிறது.

கொதிக்கிற நீரில் போட்டால் இரண்டே நிமிடத்தில் மசாலா மணம் கமழும் நூடுல்ஸ் தயார் என்கிற கவர்ச்சி விளம்பரங்கள்  மூலம் குழந்தைகள் தொடங்கி பெரியவர் வரை பலரையும் தன் வசப்படுத்தியிருக்கிறது நூடுல்ஸ். சமீபத்தில் காரீய  நச்சுத்தன்மை காரணமாக இந்தியா முழுவதும் மேகி நூடுல்ஸை தடை செய்திருப்பது மக்கள் மத்தியில் பெருத்த அதிர்வையும்  கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. மேகி நூடுல்ஸ் மட்டுமே கெடுதல் அல்ல... அது மட்டும்தான் இப்போது தடை  செய்யப்பட்டிருக்கிறது. இச்சூழலில் உணவுப் பொருட்களின் சந்தையையும் விற்பனையைக் கூட்ட மேற்கொள்ளப்படும் கைங்கரியங்கள் பற்றியும் பேசுவது அவசியமாகிறது.

ரகசிய வார்த்தைகள் ஏன்?


மேகி நூடுல்ஸில் கலக்கப்பட்டுள்ள வேதிப்பொருட்கள் குறித்துக் கூறுகிறார் வேதியியல் பேராசிரியர் வெங்கிடுசாமி நாராயணன்...

‘‘உலக சுகாதார நிறுவனம் அனுமதிக்கிற அளவைவிட பல மடங்கு அதிகமாகத்தான் பெரும்பாலான உணவுப் பொருட்களில்  வேதிப்பொருட்கள் கலந்து விற்பனையாகி வருகின்றன.  மேகி மட்டுமே இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஒரு  நிறுவனம் தயாரிக்கிற பொருளின் தரம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், கேரளாவில் ஒரு  அளவும் உத்தரப்பிரதேசத்தில் சோதிக்கப்பட்ட மேகியில் வேறு அளவும் என மாறுபட்ட சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.  இதுவே ஒரு மோசடிதான்!

அலுமினிய பாத்திரத்தில் சமைக்கும் போது 150 டிகிரிக்கும் மேல் பாத்திரம் சூடாகும்போது அலுமினியம் ஹைட்ராக்ஸைடு  வெளியாவதால், அலுமினியம் கரைந்து உணவுப்பொருளுடன் கலந்துவிடுகிறது. இதனால்தான் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்  பாத்திரங்களிலும் மண்பாண்டங்களிலும் சமைக்கச் சொல்கிறார்கள். தொழிற்சாலைகளின் கழிவு, கார் பேட்டரி, பெயின்ட், டீசல்  புகை போன்றவற்றில் இருக்கும் காரீயம் நாம் சாப்பிடும் உணவில் கலந்தால் சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம் சார்ந்த  நோய்கள், மூளை வளர்ச்சியின்மை போன்றவை ஏற்படலாம்.  

பொதுவாக காரீயம், குரோமியம், மெர்க்குரி போன்ற ரசாயனங்கள் சுத்திகரிக்கப்படாத தண்ணீரிலிருந்தே உணவுப் பொருளில்  கலக்கிறது. உணவுப்பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், சரியாக சுத்திகரிக்கப்படாத தண்ணீர் பயன்படுத்தப்படும்போது  இந்த ரசாயனங்கள் கலந்துவிடலாம். மோனோ சோடியம் க்ளூட்டோமேட், நிறத்துக்காக சேர்க்கப்படும் சாயங்கள் எல்லாமே  புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை. ஆபத்தான ரசாயனங்களை நாம் புரிந்துகொள்ள முடியாத வகையில் குறிப்பிட்டிருப்பார்கள்.  
உதாரணத்துக்கு மோனோ சோடியம் க்ளூட்டோமேட்டை E 621 என்று குறிப்பிட்டிருந்தால் மக்களுக்கு ரகசிய வார்த்தைகள் புரிய  வாய்ப்பில்லை. ‘It contains no fruit’ என்று குளிர்பானங்களில் குறிப்பிடும்போது, ‘இது செயற்கை பானம்’ என்று புரியும். அது போல எல்லோருக்கும் புரிகிற வகையில் வேதிப்பொருட்களின் பெயரை குறிப்பிட வேண்டும்  என அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்!’’ - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3705#sthash.YfR6Lgnc.dpuf
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நூடுல்ஸுக்கு நோ சொல்வோம்! Empty Re: நூடுல்ஸுக்கு நோ சொல்வோம்!

Post by mohaideen Tue Jul 07, 2015 3:33 pm

தொடர் கண்காணிப்பு அவசியம்!

தரமான பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்பது தொழில் நிறுவனங்களின் கடமை மட்டுமல்ல... நுகர்வோரது உரிமையும்  கூட. மேகி நூடுல்ஸுக்கு எதிரான இந்த நடவடிக்கை போல இன்னும் பல உணவுப்பொருட்கள் மீதும் அதிரடி நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார் நுகர்வோர் காவலர் தேசிகன்...

‘‘மோனோ சோடியம் க்ளூட்டோமேட் பற்றி உறுதியான தகவல்கள் இதுவரை எனக்கு வரவில்லை. ஆனால், உறையில்  எம்.எஸ்.ஜி. இல்லை என்று சொல்லிவிட்டு, உள்ளே கலந்திருந்தால் அது நிச்சயம் மோசடிதான். அனுமதிக்கப்பட்ட அளவுக்கும்  அதிகமாக  இருந்தால் அது மிகப்பெரிய மோசடி. மோனோ சோடியம் க்ளூட்டோமேட் என்கிற எம்.எஸ்.ஜி. இயற்கையாகவே  காய்கறிகளிலும் பழங்களிலும் கலந்திருக்கும் ஒரு புரதம். இதை செயற்கையாக வேதிப்பொருட்களைக் கொண்டு தயார் செய்கிறார்கள். செயற்கையாக தயாரிக்கப்படும் வேதிப்பொருள் அனுமதிக்கப் பட்ட அளவைவிட அதிகமாக சேர்க்கப்படும்  போதுதான் பாதிப்பு  ஏற்படுகிறது. 

மேகியில் எம்.எஸ்.ஜி.யைவிட காரீயம்தான் அதிகமாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈயத்துக்கு 2.5 பி.பி.எம். அளவு  அனுமதி அளித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், மேகியில் 5 பி.பி.எம். அளவு காரீயம் இருந்தது  உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது.  இந்த காரீயம் ஒரு முறை உடலுக்குள் சென்றுவிட்டால் வெளியேறுவதில்லை என்கிறார்கள்  மருத்துவர்கள். நெஸ்லே நிறுவனம் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு தரமான நூடுல்ஸை தயாரிக்கிறது. 

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலோ தரம் குறைந்த நூடுல்ஸை தயாரிப்பதிலேயே, அதன் அரசியலைப் புரிந்து  கொள்ள முடியும். மேகி நூடுல்ஸை மட்டுமே கவனிக்காமல், நம் தினசரி வாழ்க்கையில் கலந்திருக்கும் எல்லா உணவுப்  பொருட்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். ஒரு உணவுப் பொருளுக்கு அனுமதி கொடுக்கும்போது மட்டும்  பரிசோதித்தால் போதாது. தொடர் கண்காணிப்பு அவசியம் என்பது மேகி நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் இன்னொரு  முக்கியமான பாடம்!’’

உயிரோடு விளையாட உதவலாமா?


மேகி நூடுல்ஸை தடை செய்ததுமே அதன் விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. ‘விளம்பரப்படுத்தும்  பொருட்களின் தரத்துக்கு நடிகர்கள் எப்படி பொறுப்பாக முடியும்’ என்று கொந்தளிக்கின்றனர் திரைத்துறையினர். விளம்பரங்களில்  நடிக்கும் பிரபலங்களுக்கு பொருளின் தரம் குறித்து தெளிவும் பொறுப்புணர்வும் அவசியமா? மருத்துவர் ரவீந்திர நாத்திடம் கேட்டோம்.

‘‘சட்டரீதியில் பிரபலங்களுக்கும் அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் தரத்துக்கும் தொடர்பில்லை என்றாலும், மனித  நெறிமுறைகளின்படி பார்த்தால் நிச்சயம் பொறுப்பு இருக்கிறது. விளம்பரங்களில் நடிப்பது தவறல்ல. தான் விளம்பரப்படுத்தும்  பொருள் எப்படிப்பட்ட பொருள் என்பதை அறிந்து கொள்வதுதான் அவசியம். குளிர்பான விளம்பரங்களில் இந்தியாவின் மிக முக்கிய நட்சத்திரங்களும் விளையாட்டு வீரர்களும் நடிக்கிறார்கள். 

அவற்றுள் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டறியப்பட்டது. பிறகு ஒரு நடிகை அந்த ஆலையை சுற்றிப்பார்த்தது போலவும்  இதன் தயாரிப்பில் எந்தப் பிரச்னையும் கிடையாது எனவும் கூறும் விளம்பரத்தை வெளியிட்டார்கள். அந்த குளிர்பானங்கள்  இன்றளவிலும் உடல்நலத்துக்கு உகந்ததல்ல என்பதுதான் உண்மை. மேகி நூடுல்ஸ் நிறுவனம் விளம்பரத்துக்கென இந்த  ஆண்டில் 445 கோடி ரூபாயை செலவிட்டிருக்கிறது. 

தரக்கட்டுப்பாட்டுக்கென 19 கோடி ரூபாயை மட்டுமே செலவழித்திருக்கிறது. தரத்துக்கான செலவை விட பன்மடங்கு அதிகமாக  விளம்பரங்களுக்குச் செலவிடும் நிறுவனத்திடமிருந்து எப்படி தரத்தை எதிர்பார்க்க முடியும்?  நகை விளம்பரமாகவோ, கார் 
விளம்பரமாகவோ இருந்தால் கூட அது தரமற்று இருந்தால் ஒரு நுகர்வோர் பொருளாதார ரீதியில் மட்டும்தான் பாதிக்கப்படுவார்.  உணவுப் பொருள் என்று வரும்போது அது உயிர் சம்பந்தப்பட்டது அல்லவா? உணவுப் பொருட்களில் கலப்படத்தை கண்டறிந்து  தடுப்பதற்காக உணவுக்கலப்படத் தடுப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு இருக்கிறது. அவற்றை இன்னும் ஊக்குவித்து  நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மாவட்டம் தோறும் உணவுப் பொருட்களுக்கான பரிசோதனை மையத்தை தொடங்க  வேண்டும்... தரமான உணவைப் பெறுவது நம் எல்லோரது உரிமை என்பதை மனதில் கொள்வோம்!’’ 


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3705#sthash.YfR6Lgnc.dpuf
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நூடுல்ஸுக்கு நோ சொல்வோம்! Empty Re: நூடுல்ஸுக்கு நோ சொல்வோம்!

Post by செந்தில் Wed Jul 08, 2015 3:59 pm

விழிப்புணர்வு தரும் பகிர்வுக்கு நன்றி நண்பா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நூடுல்ஸுக்கு நோ சொல்வோம்! Empty Re: நூடுல்ஸுக்கு நோ சொல்வோம்!

Post by ஸ்ரீராம் Sun Jul 12, 2015 9:56 am

விழிப்புணர்வு பதிவு
சிறப்பான தகவலுக்கு மிக்க நன்றி மொஹைதீன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நூடுல்ஸுக்கு நோ சொல்வோம்! Empty Re: நூடுல்ஸுக்கு நோ சொல்வோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum