தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள்!

View previous topic View next topic Go down

புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள்! Empty புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள்!

Post by முழுமுதலோன் Tue Mar 01, 2016 3:13 pm

புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள்!

மஞ்சள்:-
இதில் உள்ள 'குர்குமின்’ (Curcumin) என்ற வேதிப் பொருள் புற்று செல்லை தடுக்கும் தன்மைகொண்டது. செல்களில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படாமல் தடுக்கும் (Anti inflammatory effect) ஆற்றலும் மஞ்சளுக்கு உண்டு. தொடர்ந்து மஞ்சளைப் பயன்படுத்தும்போது புற்று செல் உருவாகும் தன்மையைக் குறைக்கும். புற்றுநோய் வளர்ச்சி மேலும் தூண்டப்படுவதைத் தடுக்கும். காயங்களை ஆற்றவும், அனைத்து விதமான தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படும். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.

குங்குமப்பூ:-
குங்குமப்பூ தொண்டை நோய்களுக்குச் சிறந்த மருந்து. முக்கியமாக இதுவும் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. 'கீமோதெரப்பி’ (Chemo Therapy), ரேடியேஷன் தெரப்பி (Radiation therapy) எடுத்தவர்களுக்கு அதன் பக்க விளைவுகளைத் தடுப்பதற்குக் குங்குமப்பூ பக்கபலமாக இருக்கிறது. இந்திய, அரேபிய, சீனக் கலாசாரங்களில் இது உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இஞ்சி:-
இஞ்சி இல்லாத சமையலே இல்லை. இஞ்சியை வெறும் சுவை, மணத்துக்காக மட்டும் சேர்ப்பது இல்லை. ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே, முந்தைய நாள் செய்த கத்தரிக்காய் குழம்பு முதல் சாம்பார் வரை கெட்டுப்போகாமல் இருப்பதற்குக் காரணமே, இஞ்சி சேர்ப்பதுதான். இஞ்சி ஓர் இயற்கையான பதப்படுத்தும் (preservative) பொருள். பசியைத் தூண்டும். கபத்தைத் தணிக்கக்கூடியது என்பதால்தான் சளி, இருமல் போன்றவற்றுக்கு இஞ்சிக் கஷாயம் தரப்படுகிறது. இஞ்சியை ஆயுர்வேதத்தில் 'ஆர்த்ரகம்’ என்று சொல்வார்கள். 7-ஆம் நூற்றாண்டிலேயே புற்றுநோய்க்கு 'ஆர்த்ரக ரசாயனம்’ என்ற முறை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குடல், ஆசனவாய், சினைப்பை புற்றுநோய்க்கு இது மருந்தாகப் பயன்படும். குறிப்பாகச் சினைப்பை புற்றுநோய்க்கு மிகவும் சிறந்தது.

சீரகம்:-
உடலைச் சீராக வைக்கக்கூடிய ஆற்றல் உள்ளதால்தான், இதை சீரகம் என்கிறார்கள். செரிமான சக்தியை அதிகரிப்பது, வாத நோய்களைக் கட்டுப்படுத்துவது, குன்மம் என்ற கட்டிகளைக் குணப்படுத்துவது போன்ற மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள 'தைமோக்யூனைன்’ (Thymoquinone) என்ற வேதிப் பொருள், புற்று நோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியது. புற்றுநோய் உருவாகக் காரணமாய் இருக்கும் திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாகச் சிறுநீரகப் புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க, இதன் செயல்பாடு குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபட்டுவருகின்றன. கணையத்தில் உள்ள 'பீட்டா’ (Beta) செல்களைப் பாதுகாக்கிறது. வெறும் சீரகத் தண்ணீரை தினமும் குடித்தால்கூடப் போதும். உடலுக்கும் தொண்டைக்கும் நல்லது.

பூண்டு:-
உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு. இதய நோய்க்குச் சிறந்தது. குறிப்பாக, இது மார்பகப் புற்றுநோயைத் தடுக்கிறது. கட்டிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. புற்றுச் செல்களை அழிக்கிறது. வயிற்றில் புற்றுநோய் வரக் காரணமாக இருக்கும் 'ஹெலிகோபேக்டர் பைலோரி’ என்ற பாக்டீரியாவை அழிக்கும் ஆற்றல் பூண்டில் உள்ளது. மேலும், லுகேமியா என்னும் ரத்தப் புற்றுச் செல்களை அழிக்கிறது. பூண்டை, தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்

Sakthivel Balasubramanian
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள்! Empty Re: புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள்!

Post by முரளிராஜா Sun Mar 06, 2016 11:22 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum