தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முழு மனதோடு உழைத்தால் ஜெயிப்பது நிச்சயம்!

View previous topic View next topic Go down

முழு மனதோடு உழைத்தால் ஜெயிப்பது நிச்சயம்! Empty முழு மனதோடு உழைத்தால் ஜெயிப்பது நிச்சயம்!

Post by ஸ்ரீராம் Fri Mar 18, 2016 12:33 pm

முழு மனதோடு உழைத்தால் ஜெயிப்பது நிச்சயம்! Ld4104-350x250

இரும்பு சாம்ராஜ்யத்தையே கட்டி மேய்க்கிற ஒரு பெண் எப்படி இருப்பார்?

கரடு முரடான தோற்றத்துடன், கடுமையான பார்வையுடன், கடினமான வார்த்தைகளுடன்…இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு போனால், வரவேற்பிலேயே வித்தியாசப்படுத்துகிறார் ‘மெட்டல் கிராஃப்ட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் கலா பண்டாரி.

நிர்வகிப்பது இரும்பும் உலோகமும் சம்பந்தப்பட்ட பிசினஸ் என்றாலும் சுபாவத்தில் 24 கேரட் தங்கம் போல அத்தனை மென்மை கலா. தனி அறைக்குள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல், ஊழியர்களுக்கு நடுவில் அவர்களுக்கு சமமாக எந்த படாடோபமும் இல்லாமல் அமர்ந்திருப்பதில் ஆரம்பிக்கிறது அவரது எளிமை.

நான் இந்த பிசினஸை எடுத்து நடத்துவேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. பி.எஸ்சி. மேத்ஸ் படிச்சேன். அப்புறம் ஒரு ஆர்வத்தின் பேர்ல இன்டீரியர் டிசைனிங் படிச்சேன். என்னோட மூணு வயசுலேருந்து பாட்டு கத்துக்கறேன். நிறைய சிடி ரிலீஸ் பண்ணியிருக்கேன். `சரிகம’ ஷோவுல கலந்துக்கிட்டிருக்கேன். இன்னொரு பக்கம் ஸ்குவாஷ், டென்னிஸ்னு ஸ்போர்ட்ஸ்லயும் ஆர்வமா இருந்தேன். ஒரு பிசினஸ்மேனா அப்பாவை சின்னவயசுலேருந்து பக்கத்துல இருந்து பார்த்து பிரமிச்சிருக்கேன்.

ஒருநாள் அப்பா திடீர்னு என்கிட்ட பிசினஸை ஒப்படைச்சபோது எனக்கு ஒண்ணும் புரியலை. என்னால எப்படிப்பா முடியும்’னு திகைச்சுப் போய் நின்னபோது, `உன்னால நிச்சயம் முடியும். ஹார்டு ஒர்க் பண்ணு… முழு மனசோட பண்ணு… யாரையும் ஏமாத்தணும்னு நினைக்காதே… மத்ததை கடவுள் பார்த்துப்பார்… நீ நிச்சயம் ஜெயிப்பே’னு சொன்னார். அது மந்திரம் போல என் மனசுக்குள்ள பதிஞ்சு போச்சு.

அப்பா ஏற்கனவே ஆரம்பிச்சு வச்சிருந்த பிரமாண்ட சாம்ராஜ்யத்துக்குள்ள நான் ஓர் இளவரசியா உள்ளே நுழைஞ்சேன். முழுக்க முழுக்க மொத்த பிசினஸையும் என் பொறுப்புல விட்டுட்டார் அப்பா. கொஞ்சம் இடறினாலும் ஆபத்து. அப்பா சம்பாதிச்சு வச்ச பேரை நான் கெடுத்துடக்கூடாது… அது மட்டுமில்லாம என்னை நம்பி அவர் ஒப்படைச்ச பொறுப்பு… அவரோட நம்பிக்கையை நான் ஏமாத்திடக்கூடாதுங்கிற பயத்தோட ஒவ்வொரு அடியையும் ரொம்ப ஜாக்கிரதையா எடுத்து வச்சேன்.

நிறைய புதுமைகளைக் கொண்டு வந்தேன். ‘மெட்டல் பிசினஸ்… அதுவும் இரும்பு கேட்டுலயும் கிரில் கம்பிகள்லயும் என்ன புதுமையைப் பண்ணிடப் போறாங்க’னு பலரும் பேசின நேரத்துல நான் மாத்தி யோசிச்சேன். வெண்கலக் கதவுகளுக்கு இடையில மர வேலைப்பாடு செய்தேன். ரிமோட் கன்ட்ரோல்ல திறந்து, மூடற கேட்டுகளை முதன் முதல்ல நம்மூருக்கு அறிமுகப்படுத்தினேன். அடிப்பாகமே தெரியாத கேன்ட்டிலிவர் கேட்டுகள், கேட்டுகள்லயும் பால்கனியிலயும் கோல்டு பிளேட் வேலைப்பாடுகள், பிடிமானமே தேவைப்படாத செல்ஃப் சப்போர்ட்டிங் மாடிப்படிகள் நம்மூர் மக்களுக்கு அதுவரை தெரியாத டிசைன்களை அறிமுகப்படுத்தினேன். பிசினஸுக்குள்ள வந்த கொஞ்ச நாள்லயே அப்பா பேரைக் காப்பாத்தினேன்.

தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க எல்லாம் என்னை அவங்க வீட்டுப் பிள்ளைங்களுக்கு உதாரணமா காட்டிப் பெருமையா பேசற அளவுக்கு டெவலப் பண்ணினேன்…’’ – என்கிற கலா பண்டாரியின் வாடிக்கையாளர்கள் பட்டியலில் நடிகைகள் த்ரிஷா, ஹேமமாலினி, ஸ்ரீதேவி, பூர்ணிமா பாக்யராஜ், நடிகர் விஜய் எனப் பலரும் உண்டு. அது மட்டுமா? ஹுண்டாய், டிசிஎஸ், அஷோக் லேலண்ட், துறைமுகம், பிரெஸ்டீஜ், சின்மயா மிஷன், அக்‌ஷயா ஹோம்ஸ், டி.எல்.எஃப்., வேல் டெக், தாஜ், பார்க் ஷெரட்டன் என பெரிய பெரிய நிறுவனங்களுக்கும் பிரமாண்ட கேட்டுகள் மற்றும் உலோக வேலைப்பாடுகளை செய்து கொடுத்த பெருமை கலாவுக்கு உண்டு.

கலா பண்டாரியின் அலுவலகத்தின் பின் பகுதியிலேயே தொழிற்சாலையும் இயங்குகிறது. வெல்டிங், பெயின்ட்டிங், பாலிஷிங் என எல்லா வேலைகளிலும் பெண்களைப் பார்க்க முடிகிறது. ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலைகள் என நமது கற்பனையில் பதிந்திருந்த காட்சிகளை மாற்றி, பெண்களின் அந்தப் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது.எங்க யூனிட்ல 40 சதவிகிதம் பேர் பெண்கள். அதுவும் அப்பாவோட விருப்பம்தான். பெண்களோட சக்தி மகத்தானதுங்கிறதுல அப்பாவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

இங்கே என்கிட்ட வேலை பார்க்கிற எல்லாரும் 20 வருஷங்களா என் கூடவே இருக்கிறவங்க. இது ஆண் வேலை, இது பெண் வேலைனு பிரிச்சு வைக்கிறதுல எனக்கு உடன்பாடில்லை. எல்லா வேலைகளுக்கும் எல்லாரும் செய்யத் தகுதியானவங்கதான். அதனால பெண்களை வேலைக்கு எடுத்து முதல்ல அவங்களுக்குப் பயிற்சி கள் கொடுத்துத் தயார்படுத்துவேன்…’’ என்கிறவர், தன்னையும் அவ்வப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ளத் தவறுவதில்லை.

எந்தத் துறையிலயும் போட்டிகளுக்குப் பஞ்சமில்லை. அதே போலத்தான் இதுவும். ஆனாலும், நான் யாரையும் போட்டியா நினைக்கிறதில்லை. அடுத்தவங்க வாய்ப்புகள் எனக்கே வரணும்னு ஆசைப்படறதில்லை. என்னோட லிமிட் எனக்குத் தெரியும். அந்தளவுக்குத்தான் வேலைகளை கமிட் பண்ணிப்பேன். அளவுக்கு அதிகமா ஆசைப்படறபோதுதான் அனாவசிய ஏமாற்றங்களையும் தோல்விகளையும் சந்திக்கணும். நான் என்னிக்குமே அதைப் பண்றதில்லை. நான் படிச்ச இன்டீரியர் டிசைனிங் இந்தத் துறைக்கு ரொம்பவே உதவியா இருக்கு.

அது தவிர, உலகம் முழுக்க எங்கே மெட்டல் ஒர்க் சம்பந்தமான கண்காட்சிகள் நடந்தாலும் மிஸ் பண்ணாமப் போயிடுவேன். என்னை அப்டேட் பண்ணிக்கிட்டே இருப்பேன். என்னோட சிந்தனை எப்போதும் என் வேலை சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். எந்த ஒரு காட்சியைப் பார்த்தாலும், அதை என் வேலையில புகுத்த முடியுமானு யோசிப்பேன். ஒரு வித்தியாசமான வால் ஹேங்கிங்கை பார்த்தாகூட, அந்த டிசைனை எப்படி கேட்ல கொண்டு வர முடியும்னு முயற்சி பண்ணுவேன். இவ்வளவு மெனக்கெட்டாலுமே ஒவ்வொரு டிசைனையும் முடிச்ச பிறகு இதைவிட பெட்டரா பண்ணியிருக்கலாமோங்கிற எண்ணம் வர்றதைத் தவிர்க்க முடியலை…’’ என்கிறவரின் எதிர்கால லட்சியமே அதற்கு உதாரணம்.

இப்ப என் பிசினஸ்ல நம்பர் ஒன்னா இருக்கேன். அந்த இடத்தைத் தக்க வச்சுக்கணும். அதுக்காக கட்டாயம் ஹார்டு ஒர்க் பண்ணிட்டே இருப்பேன்…’’ – உறுதியாகச் சொல்கிறவர், புதிதாக பிசினஸில் கால் பதிக்க விரும்புவோருக்கு கொஞ்சம் டிப்ஸும் தருகிறார்.எங்கப்பா எனக்கு சொன்ன அதே அட்வைஸைதான் நான் அடுத்தவங்களுக்கும் சொல்லிக்க ஆசைப்படறேன். மனசையும் ஆன்மாவையும் போட்டு ஆரம்பிக்கிற, உழைப்பு இருக்கிற எந்த பிசினஸும் சோடை போகாது. ஆரம்பத்துல கஸ்டமர்ஸ்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா நடந்துக்கணும். ஆர்டர் எடுக்கும்போதே 50 சதவிகித பணத்தை அட்வான்ஸா வாங்கிடணும். டெலிவரி பண்றதுக்கு முன்னாடி மீதி பணத்தை வாங்கிடணும்.

எந்த ஒரு பிசினஸுக்கும் வேலையாட்களோட சப்போர்ட் ரொம்ப முக்கியம். வாரம் ஒருமுறையாவது உங்கக்கிட்ட வேலை பார்க்கிறவங்களோட மீட்டிங் நடத்துங்க. அவங்களோட தேவைகளை நேரடியா கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. ஒரு டீயோ, ஒரு வாழைப்பழமோ அதிகமா வேணும்கிற அவங்களோட கோரிக்கை ரொம்பச் சின்னதா இருக்கும். முகம் சுளிக்காம அதை நீங்க நிறைவேத்தினா, அதோட பலன் ரொம்பப் பெரிசா இருக்கும். அவங்களோட சின்னச் சின்ன சந்தோஷங்கள் உங்க பிசினஸ்ல பிரதிபலிக்கிறதை கண்கூடா உணர்வீங்க… இதுதான் பிசினஸ்ல ஜெயிக்கிறதுக்கான ரகசிய மந்திரம்…’’ – மென்சிரிப்புடன் வழியனுப்புகிறார் இரும்பு மனுஷி!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum