தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாசித்ததில் நேசித்தது

View previous topic View next topic Go down

வாசித்ததில் நேசித்தது  Empty வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Sun May 15, 2016 2:31 pm

பெற்றோர்களே!
உங்கள்குழந்தைகளை தட்டிக்கொடுங்கள்!

பத்துவயதுவரை
துயிலும்போதும்

இருபதுவயதுவரை
பயிலும்போதும்

முப்பதுவயதுவரை
முயலும்போதும்...!



வாசித்ததில் நேசித்தது  1919668_803801749670156_6760268011500873459_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Sun May 15, 2016 2:33 pm

வாசித்ததில் நேசித்தது  1488263_804745839575747_2487102474004329133_n
மதிப்புக்குரிய முதலாளிக்கு வணக்கம்.

என் பக்கத்து வீட்டுக்காரர்கள், எதிர் வீட்டுக்காரர்கள் பைக், ஸ்கூட்டரில்தான் ஆபீஸ் போகிறார்கள். இன்னும் நான் சைக்கிளில்தான். இது எனக்கு உறுத்தவில்லை. 

அதனால் உங்களிடம் நான் சம்பள உயர்வு கேட்கவில்லை.

என் அருகாமை வீட்டுப் பெண்களில் பலர், விசேஷ நாட்களில் பட்டுப்புடவைதான் கட்டுகிறார்கள். என் மனைவியோ நூல் சேலையில்தான். அவள் புலம்பவில்லை. 

அதனால் உங்களிடம் நான் சம்பள உயர்வு கேட்கவில்லை.

இப்போது கேட்கிறேன் - எனக்குச் சம்பள உயர்வு வேண்டுமென்று. ஏன் தெரியுமா? 

அக்கம் பக்கத்து வீட்டுக குழந்தைகள் மூன்று வேளையும் சாப்பிடுவதை என் குழந்தைகள் கண்டு பிடித்து விட்டன. 


தங்கள் கீழ்ப்படிந்துள்ள,
கோவிந்தசாமி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Sun May 15, 2016 2:35 pm

உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும்.

ஆனால்,

நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம் என்று சொல்வார்கள்.

தடைகளை வெல்வது எப்படி?

இதை எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன.

எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் ஒருவர் எறும்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

ஓர் எறும்பு தன் வாயில் நீளமான உணவுப் பொருளைச் சுமந்து கொண்டு சென்றது.

தரை வழியே சென்று கொண்டிருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்துவிட்டு திடீரென்று நின்றுவிட்டது.

மேலே செல்ல முடியாமல் தவித்தது.

சிறிது நேரம் கழித்து, தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல் வைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது.

பின்பு அந்த இரையைக் கவ்விக் கொண்டு சென்றது.

எறும்பின் அறிவு வியப்பை அளிப்பதாக உள்ளது என எழுதியிருக்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.

துன்பம் ஏற்பட்டால், அத்துன்பத்தையே பாலமாக வைத்து முன்னேற வேண் டும் என்பதை நாம் எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு மிகச் சிறிய உயிரியான எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் கூடப் போதும் எந்தத் தடையையும் வெல்ல முடியும்.

கவலையும் காணாமல் போய்விடும்..

வாசித்ததில் நேசித்தது  10474199_805737859476545_835051230584732091_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Sun May 15, 2016 2:37 pm

அந்த ஒரு நிமிடம்....

ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

ஒரு கனவான் அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார்.

அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது.

எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, "அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன்.

என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா?", என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்கைக்குத் திரும்பினார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த கனவான் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார்.

அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்னாலே இரயில்நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும் டை சகிதமான உடையில் கனகச்சிதமான கணவானாக விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான்.

அவன் இந்தக் கணவானை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான்.

அன்பரே...

நீங்கள் என்னை மறந்தேகூடப் போகியிருக்கலாம்.

ஆனால் நான் உங்களால்தான் இப்படி நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன்.

நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம். அந்த கோட் சூட் வாலிபன் - கணவானிடம் பழைய ப்லாஸ் பேக்கை நினைவூட்டினான்.

கணவான் சொன்னார்:- "எனக்கு நினைவுவந்துவிட்டது.

இப்போது என்ன செய்கிறாய்.

உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது... என்னப்பா?".

கோட் சூட் வாலிபன் சொன்னான் -

"நீங்கள்தான் என்னுடைய மாற்றத்துக்கும்
வளர்ச்சிக்கும் காரணம். 

என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்கமுடியாது.

என் வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள் தான். 5 ரூபாயை எனது திருவோட்டில் இட்டபின் சிறிது நேரத்திற்குப் பிறகு வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச் சென்றீர்கள்".

"எனக்குள் ஒளிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான்.

அதுவரையில் பிச்சையெடுத்துத் திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன்".

"அந்த ஒரு நிமிடத்துக்கு""

முன்னர்வரையில் சோம்பேறியாக அழுக்காக புகைவண்டி நிலையத்தின் பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக யாராலும் மதிக்கப்படாத - உருப்படாதவனாக - இருந்த நான் உங்கள் நடவடிக்கையால் திருந்தினேன்.

என்னுள்ளே சாக்ரடீஸின் கொள்கைகளைத் தூண்டிவிட்டவர் நீங்கள்தான்.

பிறகுதான் சிந்திக்க ஆரம்பித்தேன்.

"நான் யார்?

எனது கொள்கை என்ன?

எதற்காகவோ பிறந்துவிட்டேன். ஒக்கே.

ஆனால்,

சாகும்போதாவது எதையாவது சாதித்துவிட்டு சாகலாமே. என முடிவெடுத்தேன்.

பிச்சையெடுப்பதை நிறுத்தி எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன்.

நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

நன்றிகள் பலகோடி அய்யா", என்றான்.

வாசித்ததில் நேசித்தது  10644831_806534626063535_3238397974400061334_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Sun May 15, 2016 2:39 pm

* ஒரு சினிமா தியேட்டர்ல மூன்று மணி நேரம் உட்கார்ந்திருக்கும் நம்மளால, ஒரு உறவினர் அல்லது நண்பரின் வீட்டு துக்க காரியத்தில் அரை மணி நேரம் உட்கார்ந்திருக்க முடியல.

சாவுன்னா பயம் ல?

* ஹோட்டல்ல ஆர்டர் பண்ணின சாப்பாட்டு அயிட்டம் வரும் வரை பொறுமையா அடுத்தவன் தட்டை வேடிக்கை பார்க்கும் நம்மளால, ரோட்டுல நடந்த சின்ன ஆக்சிடென்ட்டுக்கு வண்டிய விட்டு கீழ இறங்கி உதவத் தோணல.

அவ்ளோ தைரியசாலி ல ?

* யாரோ கல்யாணம் செஞ்சு நமக்கு புண்ணியம் தரப் போற இந்நாள் காதலி கூட காபி ஷாப்ல ரெண்டு மணி நேரம் பேசுனதையே திரும்பத் திரும்பப் பேச முடியற நம்மளால, ஹாஸ்பிட்டல்ல ஒருத்தர் கூட பத்து நிமிஷம் பொறுமையாவும் அன்பாவும் பேச முடியல.

எப்பவும் ஜாலியா தான் இருக்கணும் ல?

* ஒரு பெரிய சாமியாருக்காக மணிக்கணக்குல காத்திருந்து தவம் செஞ்சு பார்க்கத் துடிக்கும் நம்மளால, நம்ம குழந்தைங்க கூட கொஞ்ச நேரம் கூட விளையாட முடியல... அவங்கள கொஞ்ச முடியல.

அவங்க கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது ல?

* மொபைல் ஸ்கிரீன், கம்ப்யூட்டர் ஸ்கிரீன், சினிமா ஸ்கிரீன், டி.வி ஸ்கிரீன்னு பார்க்கும் நம்மள்ல எத்தனை பேரு, சக மனிதனின் முக ஸ்கிரீனைப் பார்த்து புன்னகையும், பதிலும் சொல்லுறோம்?

புன்னகை செய்யறது அவ்ளோ கஷ்டம் ல ?

* காலையில் எந்திருச்சு வாக்கிங் போகணும்னு அக்கறை காட்டுற நம்மில் எத்தனை பேரு வீட்டுல அம்மா / அப்பா / மனைவிகிட்ட டாக்கிங் செய்யணும்னும் நினைக்கிறோம்?

நிறைய உண்மைகள் பேசவேணும் ல?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Sun May 15, 2016 2:41 pm

எத்தனை பேருக்கு தெரியும்??

வேலைக்கு செல்லும் ஆண்கள் மட்டும் அவதி அவதியாய் உணவை உட்கொண்டுவிட்டு செல்லவில்லை, அவர்களை வேலைக்கு கிளப்பிவிடும் தாயோ அல்லது மனைவியோ அதே போல் தான் உணவு உட்கொள்கிறார்கள் அடுக்களையில் நின்றுகொண்டே என்பது எத்தனை ஆண்களுக்கு தெரியும்... ?

என் ஆசை எதையுமே என் தந்தை உடனடியாக நிறைவேற்றுவதில்லை, காலம் தாழ்த்தியே நிறைவேற்றி வைக்கிறார் என்று சொல்லும் எத்தனை பிள்ளைகளுக்கு தெரியும், தன் தந்தை தன்னுடையை ஆசைகளை புதைத்து விட்டுத்தான் நம் ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறார் என்று...?

அசைவ வாடையே ஆகாது இருந்தும் மகனின் ஆசைக்காக அசைவம் எடுத்து சமைத்து தருகிறாள் தன் தாய் என்று எத்தனை பிள்ளைகளுக்கு தெரியும்...?

பிடிக்காத உணவை தந்தை ஊட்டிவிட, தந்தை ஊட்டிவிட்ட ஒரே காரணத்திற்காக அந்த உணவை உண்கிறோம் என்று எத்தனை தந்தைமார்களுக்கு தெரியும்...?

சகோதரரின் கனவு நிறைவேற வேண்டும் என்று தன் கனவை தனக்குள் போட்டு புதைத்துக்கொள்ளும் சகோதரிகளின் கனவு எத்தனை சகோதரர்களுக்குத் தெரியும்...?

தங்கையின் திருமனத்திற்காக பணம் சம்பாரிக்க வேண்டும் என்று தன் உறக்கத்தையும்,உணவையும் மறந்து உழைக்கிறார் என்பது எத்தனை தங்கைகளுக்கு தெரியும்...?

தாத்தா பாட்டியிடம் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்து தெரியாது போல் நடிப்பது நாம் அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதை கண்டு ரசிக்கத்தான் என்பது எத்தனை பேரப்பிள்ளைகளுக்கு தெரியும்...?

இவை அனைத்தும் தெரியாமல் இருக்கும் வரைதான் வாழ்க்கை இன்மைபாக இருக்கிறது. அனைத்தும் அனைவருக்கும் தெரிந்துவிட்டால் நமக்காக மற்றவர்கள் இழந்ததை எண்ணி வாழ்நாள் முழுக்க வருந்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.



வாசித்ததில் நேசித்தது  10703505_821052044611793_8775836833966966900_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by முழுமுதலோன் Sun May 15, 2016 2:43 pm

பால்யம் (குழந்தை பருவம்) தொலைந்தது எப்போது ..?

1. குட் மார்னிங் டீச்சர் என்பதை குட் மார்னிங் மேம் எனும் போதே தொலைகிறது குழந்தை பருவம் .

2. பாட்டில் மூடியை வாயில் கடித்து திறக்கும்போதே தொலைகிறது நம் பால்யம்... (நான் கூல்டிரிங்ஸ் பாட்டில சொன்னேன்)

3.ரயிலுக்கு டாட்டா காமிப்பதை நிறுத்திய போது தொலைந்து போயிருந்தது பால்யம்.

4.எப்ப நான் சினிமாவுல ஹீரோவ கவனிக்காம ஹீரோயின கவனிக்க ஆரம்பிச்சனோ அப்பயே தொலைந்து போயிருந்தது பால்யம்.

5.எக்ஸாமுக்கு, என்னைக்கு படிச்சிட்டு போறத நிப்பாடினேனோ அன்னைக்கே எனது பால்யம் முடிவுக்கு வந்துவிட்டது..

6. ரயிலின் பெட்டிகளை எண்ணுவதை நிறுத்தியலிருந்து நின்றுபோனது எனது பால்யம்

7."இங்கிலாந்து லெட்டர்" இன்லேன்ட் லெட்டர் ஆன போது என் தொலைந்தது பால்யம்

8.சட்டை நிறத்தை கூட கவனிக்காமல் விலையை முதலில் தேட ஆரம்பித்த வயதில் தொலைந்து போயிருந்தது என் பால்யம்

9.முழுக்கை சட்டை வாங்கி அதை மெனக்கெட்டு மடிச்சிவிட்டுட்டு அரைக்கையோடு திரியும் போது தொலைந்தது என் பால்யம்

10.அப்பா கைஎழுத்தை ப்ராக்ரஸ் ரிப்போர்டில் போட்டு கொள்ளும் போதே முடிந்து விடுகிறது பால்யம்

11.என்னைக்கு டீயுசன்ல கேர்ள்ஸ் தனியா பாய்ஸ் தனியா உட்கார வெச்சாங்களோ அன்னைக்கே பால்டாயில் குடித்து மரித்து போனது என் பால்யம்

12. கோபால் பல்பொடியிலிருந்து க்ளோசப் பேஸ்ட்டுக்கு மாறும் பொழுது பால்யம் தொலைகிறது

13.இரும்புக்கை மாயாவியும் அதனுள் வைத்திருந்த,
கூடியவிரைவில் குட்டிபோட ஏதுவாயிருந்த மயிலிறகும்
வீடு மாறும்பொழுது தொலைந்து போனது அன்னைக்கே மரித்து போனது என் பால்யம்

14.தேசிய கீதப் பாடலை பாடாமல் முணுமுணுக்கும் போது முடிந்துவிடுகிறது

15.பெண் வலிய வந்து என் கன்னத்தை கிள்ளி சிரிப்பதை நிறுத்திய போது என் பால்யம் முடிந்திருந்தது.

என்றேனும் ஓர் நாள் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு தொலைத்த என் பால்யம் நோக்கி திரும்பி செல்லவே ஆசை 

வாசித்ததில் நேசித்தது  10371359_828410983875899_4845887517785449171_n

https://www.facebook.com/Relaxplzz
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by செந்தில் Mon May 16, 2016 4:06 pm

கைதட்டல் அருமை,அருமை அண்ணா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வாசித்ததில் நேசித்தது  Empty Re: வாசித்ததில் நேசித்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum