தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தூய வெளிச்சம்

View previous topic View next topic Go down

தூய வெளிச்சம் Empty தூய வெளிச்சம்

Post by முழுமுதலோன் Wed Jul 13, 2016 3:56 pm

தூய வெளிச்சம்

சிறுகதை

கோச்சடை சாலையில் நின்றபடியே வீடு இடிக்கபடுகின்றதை பார்த்துக் கொண்டிருந்தான், இடிபட மறுத்த உறுதியான சுவர்களை டங்டங் என கடப்பாரைகள் ஒங்கியோங்கி குத்தி உடைத்துக் கொண்டிருந்த ஒசை அவனை என்னவோ செய்தது, பழமையான அந்த வீடு அவன் ஏறிக் குதித்து திருடிய வீடுகளில் ஒன்று,

இரண்டுநாட்களாகவே அந்த வீட்டை இடித்துக் கொண்டிருக்கிறார்கள், பல்பொருள் அங்காடி ஒன்று வரப்போவதாக சொல்லிக் கொண்டார்கள், அந்த வீடு சைகோன் குமாரசாமி பிள்ளையுடையது, கப்பல் ஏறி போய் வணிகம் செய்து பிழைத்த குடும்பமது, எண்பது வருஷத்திற்கும் மேலாக மூன்று தலைமுறையினர் வாழ்ந்தவீடு கண்முன்னே இடிபட்டுக் கொண்டிருந்தது,

அந்த வீட்டை பத்து வருஷமாக கோர்ட் கேஸ் ஒன்றின் காரணமாக மூடிப்போட்டிருந்தார்கள், இப்போது சென்னையில் உள்ள குமாரசாமி மகன் பக்கம் கேஸ் ஜெயித்துவிட்டதாகவும் அவன் உடனே கைமாற்றி விற்றுவிட்டதாகவும் பேசிக் கொண்டார்கள்

வீட்டிற்குள் போய் பார்க்கலாமா என்ற யோசனையுடன் கோச்சடை சாலையிலே நின்று கொண்டிருந்தான், அந்த வீட்டிற்குள் அவன் ஒரேயொரு முறை இரவில் திருடுவதற்காக போயிருக்கிறான், வீட்டிற்குள் அவன் வந்து போனது வீட்டுஆட்கள் எவருக்கும் தெரியாது, திருடியதை கூட யாரும் கண்டுபிடிக்கவேயில்லை, ஆனால் கோச்சடைக்கு நன்றாக நினைவிருந்தது

அன்று மழை நாள், அந்த வீட்டிற்குள் நீலநிற விடிவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது, அந்த வெளிச்சத்தில் சுவரில் இருந்த புகைப்படங்கள், காலண்டர் மற்றும் மரமேஜை யாவும் விசித்திரமாக தெரிந்தது, ஹாலில் பெரிய ஊஞ்சல் போட்டிருந்தார்கள், அந்த ஊஞ்சலை தாண்டியதும் சாப்பிடும் மேஜை கிடந்தது, சாப்பிடும் நாற்காலியில் அழுக்கு துணியொன்று தொங்கிக் கொண்டிருந்த்து, கழுவப்படாத குழந்தைக்கான ரப்பர் பாட்டில், திறந்து கிடக்கும் பால்பவுடர் டின், காபி டம்ளர்கள், பாதி சாப்பிட்டு மிச்சம் வைத்த பருப்புசாதமுள்ள கிண்ணம் யாவும் தென்பட்டன, வெளியே கம்பீரமாக தெரியும் வீடு உள்ளே அலங்கோலமாக கவனிப்பாரற்று கிடந்தது

மழையின் காரணமாக எல்லா ஜன்னல்களும் மூடப்பட்டிருந்த காரணத்தால் வீடு வெம்மையாக இருந்தது, மயக்கமூட்டிய அந்த வெளிச்சமும் வெளியே கொட்டிய மழையும், ஒத்தடம் கொடுப்பது போன்ற வெம்மையும் அவன் நினைவில் அப்படியே இருந்தன

இடிபடும் வீட்டிலிருந்து ஒரு ஆள் வெளியே வந்து ஒரு பழைய காலண்டர் ஒன்றினை வீசி எறிந்தான், சரஸ்வதி படம் போட்ட காலண்டர், கோச்சடை குனிந்து அதை எடுத்துப்பார்த்தான், காலண்டரில் யாரோ ஒரு பெண் பால் கணக்கு எழுதி வைத்திருந்தாள், வீடு ஒங்கிஒங்கி இடிபட உதிரும் கற்களுடன் பலத்த புழுதி கிளம்பியது, ஒரு கல்தெறித்து சாலை வரை வந்து விழுந்தது, காலம் எவ்வளவோ வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது,

அவன் சிறுவனாக இருந்த காலத்தில் சென்டரல் தியேட்டருக்கு போகின்ற வழியில் குமாரசாமியின் வீடு மட்டுமே இருந்தது, வீட்டின் முகப்பில் இரண்டு பக்கமும் இரண்டு யானைகள் துதிக்கையை வளைத்து நிற்பது போன்ற ஆர்ச் அமைக்கபட்டிருக்கும், அதன் ஆர்ச்சின் மீது விளக்கு ஒன்றைப் பொருந்தியிருந்தார்கள், அதன் தூய வெளிச்சம் தெருவிளக்கு போல இரவெல்லாம் ஒளிர்ந்து கொண்டிருக்கும்,

குறிப்பாக இரவு செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டு திரும்புகின்றவர்கள் அந்த வெளிச்சத்தை அதிகம் அனுபவித்திருக்கிறார்கள், பள்ளிவயதில் கோச்சடையே பலநாட்கள் அந்த வெளிச்சத்தில் பாதுகாப்பாக தெருவை கடந்து போயிருக்கிறான், வெளிச்சம் ஒரு துணை, ஆள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஆறுதல் என்று தோன்றும், ஆனால் களவிற்குப் போன பிறகு வெளிச்சம் பிடிக்காமல் போய்விட்டது, கண்கள் இருட்டிற்கு பழகிப்போய்விட்டன

இளைஞனாக இருந்த போது குமாரசாமி வீட்டினை கடந்து போகையில் ஒவ்வொரு முறையும் இப்படி அழகாக வீடு கட்டி குடியிருக்க எத்தனை பேருக்கு அதிர்ஷடமிருக்கிறது என்று நினைத்துக் கொள்வான், சில சமயம் அந்த வீட்டின் பின்பக்கச்சுவர் அருகே ஒட்டி நின்று கொண்டு வீட்டின் உள்ளிருந்து ரிக்கார்ட் பிளேயரில் ஒலிக்கும் கனவு கண்ட காதல் கதையாகி போச்சே பாடலை கேட்டிருக்கிறான், அந்தப் பாடலை அவனுக்கு பிடிக்கும், அவன் யாரையும் காதலித்து கிடையாது, ஆனாலும் சோகத்தில் பாடுகின்ற பாடல்களை கேட்கின்ற நேரத்தில் அது மனதில் வலியை உண்டாக்கிவிடுகிறது

யார் அந்த பாடலை இப்படி அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கோச்சடைக்கு தெரியாது, அந்த வீட்டுப் பெண்களை வெளியே காண்பது அபூர்வம், எப்போதாவது குமாரசாமியின் மனைவி கெடிலாக் காரில் கோயிலுக்கு போய்வருவதை பார்த்திருக்கிறான், அந்த கார் அழகானது, சென்ட்ரல் தியேட்டரை கடந்து போகையில் டிக்கெட் எடுக்க நிற்கின்ற பலரும் அந்த காரை திரும்பி பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.

ஒரு முறை குமாரசாமியின் வீட்டிற்கு ஜெமினி கணேசனும் சாவித்திரியும் விருந்தினர்களாக வந்திருந்தார்கள் என்று அவர்களை பார்ப்பதற்காக ஊரே கூடியிருந்தது, வீட்டின் மாடியில் நின்றபடியே ஜெமினியும் சாவித்திரியும் கை அசைத்ததை கோச்சடையின் மனைவி மீனா சிறுமியாக பார்த்திருக்கிறாள்,

ஜெமினியும் சாவித்திரியும் அந்த வீட்டில் எந்த அறையில் உறங்கியிருப்பார்கள், எந்த தட்டில் சாப்பிட்டு இருப்பார்கள், எந்த டம்ளரில் பால் குடித்திருப்பார்கள், அதை எல்லாம் ஒரு முறை தொட்டுபார்க்க வேண்டும் போலிருக்கும்,

கோச்சடை சிலசமயம் பின்னிரவில் சைக்கிளில் வரும்போது அந்த வீட்டின் முன்பு வேண்டுமென்றே சைக்கிளை நிறுத்தி ஏறிட்டு பார்ப்பான், யானை படுத்திருப்பது போல பிரம்மாண்டமாக தோன்றும், அதன் கழுத்துமணி போல அந்த குண்டுபல்ப்பின் வெளிச்சம் ஒளிர்ந்து கொண்டிருக்கும், அந்த காட்சி இன்றும் அவன் மனதில் அப்படியே உறைந்து போயிருந்தது

இன்று அந்த வீட்டினை ஒரு நாளைக்குள் பாதிக்கும் மேலாக உடைத்து போட்டுவிட்டார்கள், வீட்டை கட்டுவதற்கு தான் மாசக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது, இடிப்பதற்கு அதிக நாட்களாவதில்லை, மனிதர்களின் அழுகையும் சிரிப்பும் வலியும் கவலையும் அறிந்த வீடு மரம் முறிந்து கிடப்பது போல மௌனமாக இடிந்து கிடந்தது

குமாரசாமி பிள்ளையின் வீட்டிற்கு கோச்சடை திருடச் சென்ற போது அவன் மனைவி மீனா மூன்றாவது பிள்ளை உண்டாகி கர்ப்பிணியாக இருந்தாள், ரத்தசோகை கண்டிருக்கிறது அவளை பொது மருத்துவமனையில் சேர்த்து ஒரு வாரம் பெட்டில் வைத்திருந்தார்கள், அவளுக்காக பழங்களும், சத்து டானிக்குகளும் வாங்க வேண்டும் என்று நினைத்து தான் கோச்சடை களவிற்கு கிளம்பியிருந்தான்

திருடுவதற்காக இல்லாவிட்டாலும் அந்த வீட்டின் உட்புறங்களை பார்க்க வேண்டும், ஜெமினி படுத்த தலையணையில் தலைவைத்து உறங்க வேண்டும் என்பதற்காகவாவது அந்த வீட்டிற்குள் ஏறிக்குதிக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் இருந்தது. இப்படியான சில கிறுக்குதனங்களில் அவன் விரும்பியே ஈடுபடுவான்,

முன்பு ஒரு முறை தம்பானூர் முதலாளி வீட்டிலிருந்த கறுப்பு நிற குதிரை ஒன்றினை பார்ப்பதற்காக பதினாறு அடி உயர இரும்பு கேட்டை தாண்டி குதித்திருக்கிறான், கறுப்பு நிற அரபுக்குதிரையை பார்ப்பது அபூர்வம், தம்பானூர் முதலாளி மைசூர் ராஜாவிடமிருந்து அந்த கறுப்பு குதிரையை வாங்கி ஆசையாக வளர்த்துக் கொண்டிருந்தார், அக்குதிரையை பார்க்கும் போதெல்லாம் ஒருமுறையாவது அதில் ஏறிபார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும்,

அதற்காகவே கோச்சடை அவ்வீட்டினை பல நாட்கள் நோட்டம் பார்த்து பின்பனிக்காலத்தில் ஒருநாளிரவு யாருமறியாமல் வீட்டிற்குள் நுழைந்து லாயத்தில் கட்டியிருந்த குதிரையின் மேலே ஏறினான், கால்களை அகட்டி உட்கார முடியாமல் கஷ்டமாக இருந்த்து, ஆனாலும் குதிரையின் மேலே உட்கார்ந்து இருப்பது சிரிப்பாக வந்தது, கண்ணை மூடிக் கொண்டு ராஜா போல தன்னை நினைத்துக் கொண்டு ஹேஹே என்று கையை அசைத்தான், குதிரை தலையை அசைத்து அவனை முதுகில் இருந்து கிழே தள்ளியது, ஆள் அரவம் கேட்டு வீட்டிற்குள்ளிருந்து யாரோ வருவது தெரிந்த்துவுடன் அவன் குதிரையின் காதை தடவி கொஞ்சிவிட்டு தப்பியோடிவிட்டான், அதெல்லாம் ரத்தவேகம் கூடிய இளவட்டமாக இருந்த போது நடந்தது,

கோச்சடை குமாரசாமியோடு பேசியதில்லை, ஆனால் பார்த்திருக்கிறான், ஆள் குள்ளமான உருவம், நெற்றியில் திருநிறுபூசி கழுத்தில் ருத்ராட்சமாலை போட்டிருப்பார், தூய வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை, கையில் எப்போதும் ஒரு குடை வைத்திருப்பார், வீட்டில் கார் இருந்தாலும் அவர் பஜாரில் இருந்த பாத்திரக்கடைக்கு நடந்து போய்வருவதை பார்த்திருக்கிறான், நாள் தவறாமல் மாலைநேரத்தில் அவர் கோவில் தெப்பக்குளத்தின் படியில் உட்கார்ந்து கொண்டு மீனிற்கு பொறி போடுவார், இப்போது கோவில் குளம் பாசியேறி தூர்ந்துகிடக்கிறது, பொறி விற்பவனையும் கண்ணில் காண முடியவேயில்லை,

ஆனால் அவனது பால்ய வயதில் கடைமுதலாளிகள் பலரையும் தெப்பக்குளத்தில் வைத்து பார்க்கலாம், அது தான் கடன் கேட்கிற இடம், யாருக்காவது ஏதாவது உதவி தேவை என்றால் அங்கே வைத்து தான் கேட்பார்கள், கோவிலில் கேட்டால் மறுக்கமாட்டார்கள் என்பது நம்பிக்கை, கோச்சடை ஒரேயொரு முறை வக்கீல்பிள்ளையை பார்ப்பதற்காக அங்கே போயிருக்கிறான், மற்றபடி அவனுக்கு கோவிலுக்கு போவது பிடிக்காது

மீனாவை ஆஸ்பத்திரியில் சேர்த்த இரண்டாம் நாள் சோமுவை பார்த்து கடன்கேட்டுவிட்டு கோச்சடை திரும்பி வந்து கொண்டிருந்தான், தம்பா பிள்ளை தெருவை தாண்டும் போது அடர்ந்த இருட்டாக இருந்தது, சட்டென மண்டையில் உறைத்தது, குமாரசாமிபிள்ளை வீட்டில் லைட் எரியவில்லை, ஏன் அணைத்து விட்டிருக்கிறார்கள், ஒரு வேளை பல்ப் ப்யூஸாகி இருக்குமோ,

இருட்டிற்குள்ளாகவே நடந்து வீட்டின் முன்பாக நின்று பார்த்தான், எப்போதும் ஒளிரும் அந்த மஞ்சள் வெளிச்சமும் அதைச் சுற்றிபறக்கும் ஈசல்களின் பறத்தலும் நினைவில் வந்து போனது, மௌனமாக அந்த வீட்டினையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் எதற்கென தெரியாமல் உள்ளுக்குள் ஆத்திரமாக வந்தது,

மறுநாள் கைவண்டி இழுக்கும் மாரியப்பனிடம் இதைபற்றி பேசியபோது, காலம் காலமாக எரிந்து கொண்டிருந்த விளக்கை, வெட்டித்தெண்டமாக எரிகிறது என்று குமாரசாமியின் மருமகள் பேச்சியம்மாள் அணைத்துவிட சொல்லி தகராறு செய்து விட்டாள், இனிமேல் அந்த வீட்டில் முகப்புவிளக்கு எரியாது என தெரிந்து கொண்டன், அன்றைக்கு தான் கோச்சடை அந்த வீட்டில் திருடுவது என்று முடிவு செய்தான்

அவன் திருடுவதற்கு துணையாக அன்று மழை சேர்ந்து கொண்டது, மழை பெய்யும் நாட்களில் மனிதர்களை பீடிக்கும் தூக்கம் விசித்திரமான ஒன்று, அது எவரையும் எளிதில் எழும்ப விடாது, மழைநாளில் வரும் கனவுகள் அபூர்வமானவை, அன்றும் கனவில் ஊறிக்கிடப்பவர்களை போல தான் குமாரசாமியின் வீட்டில் ஆழ்ந்து உறங்கிக் கிடந்தார்கள்,

மழைக்குள்ளாக நனைந்தபடியே பின்பக்கச்சுவரில் இருந்த தூம்புவாய் வழியே ஏறி அவன் அடுப்பங்கரை இருந்த பின்கட்டிற்கு வந்தான், எல்லா வீடுகளும் முகப்பில் தான் அலங்காரமாக இருக்கின்றன, அடுப்படி கருமைபடிந்து அலங்கோலமாக தானிருக்கிறது, குமாரசாமிபிள்ளை வீட்டிற்குள் அவன் குதித்த போது வெளியே மழை சீராக பெய்து கொண்டிருந்தது, அவன் பூனையை போல நடந்து சென்று குமாரசாமியின் படுக்கை இருந்த அறையைத் தேடினான், வீட்டினுள் நான்கு அறைகள் தெரிந்தன, இடது பக்கமிருந்த ஒரு அறைக்கதவு லேசாக திறந்து வைக்கபட்டிருந்தது, அப்படியானால் அந்த அறையில் முதியவர்கள் உறங்குகிறார்கள் என்று அர்த்தம்,

வயதானவர்கள் கதவை மூடிக்கொண்டு உறங்குவதில்லை, குமாரசாமி பிள்ளைக்கும் அப்போது அறுபது வயதை தாண்டியிருந்தது, அதுவும் மனைவி இறந்து போன மனிதர் என்பதால் எதற்காக கதவை மூடிக் கொள்ளப்போகிறார் என்று கோச்சடைக்கு தோன்றியது

அவரது இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி அதே வீட்டில் தான் வசித்தார்கள், ஒருச்சாத்திய கதவை ஒசைப்படாமல் தள்ளி உள்ளே சென்ற போது குமாரசாமி ஒரு சிறுவனை போல சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்தார், அறையின் மூலையில் பெரிய இரும்புப் பெட்டியிருந்தது.

திண்டுக்கல் கோபாலகிருஷ்ணா கம்பெனி தயாரிப்பு அது , அந்த வகை இரும்புப்பெட்டிக்கு இரண்டு பூட்டுகளிருக்கும், மறைவாக உள்ள விசையை அழுத்திக் கொண்டு திறக்காவிட்டால் பூட்டை திறக்கமுடியாது, இது போன்ற சூட்சுமங்கள் அத்தனையும் அவனுக்குத் தெரியும், இரும்பு பெட்டியைத் திறந்து உள்ளே பார்த்த போது உள்ளே ஒரு பட்டுச்சேலை, இரண்டு வெள்ளி டம்ளர்கள், ஒரு வெள்ளிதட்டு, குழந்தைகளின் மோதிரம் ஒன்று இவை மட்டுமேயிருந்த்து, ரொக்கம் கூட நூறு ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தது,

கோச்சடைக்கு ஆச்சரியமாக இருந்தது, இவ்வளவு பெரிய வீடுள்ள மனிதன் வீட்டில் கையிருப்பும் இல்லை, நகையும் இல்லை, குடும்பம் கடனில் ததளித்துக் கொண்டிருக்கிறது போலும், வெளியே சொல்லாமலே நிலைமையை சமாளித்து வருகிறார்கள் என்று தோன்றியது

பட்டுபுடவையை தொட்டு பார்த்தான், நிறைய ஜரிகை வைத்திருப்பது தெரிந்தது, மீனா இதுவரை பட்டுபுடவையே கட்டிக் கொண்டதில்லை, ஆனால் யாரோ ஒருத்தி கட்டிய புடவையை அவளுக்கு திருடிக் கொண்டு போய் கொடுக்ககூடாது, மதுரைக்கு அழைத்துப் போய் பெரிய ஜவுளி கடையில் அவளுக்கு நீலநிற பட்டுபுடவை வாங்கி தர வேண்டும என்று நினைத்துக் கொண்டு இரும்பு பெட்டியில் இருந்து ஒரு வெள்ளி டம்ளரையும் ஐம்பது ரூபா பணத்தையும் குழந்தையின் மோதிரம் ஒன்றையும் மட்டுமே திருடி எடுத்துக் கொண்டான்,

அவன் அந்த வீட்டிற்குள் திருட வந்ததையோ, பொருட்கள் காணாமல் போனதையோ மறுநாள் அவர்கள் கண்டுபிடிக்கவேயில்லை, ஆனால் கோச்சடை உணர்ந்ததைப் போல அந்த குடும்பம் கொஞ்சநாளில் கடன்சிக்கலில் மாட்டிக் கொண்டது, பனிரெண்டு லட்சம் கடன் என்றார்கள், அவரது மூத்தமகன் தேவையில்லாமல் பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்திருக்கிறான் என்று குமாரசாமி வேதனைபட்டுக் கொண்டார்

அதனால் உருவான சண்டையில் மூத்தவன் தன் மனைவி பிள்ளைகளை மதுரையில் தனியே வீடு பார்த்து கூட்டிக் கொண்டு போனதோடு அப்பாவிடம் தனக்குரிய சொத்தை கேட்டு தகராறு செய்ய ஆரம்பித்தான், தான் செத்துப்போனபிறகு தான் பிள்ளைகளுக்கு சொத்து என்பதில் குமாரசாமி உறுதியாக இருந்தார்

அப்படியானால் நீ செத்து போ, நீ உசிரோட இருந்து இந்த மசிருக்கு கூட பிரயோசனமில்லை என்று அப்பாவை இதே வீட்டு வாசலில் வைத்து திட்டினான் மூத்தமகன் நெட்டிலிங்கம்,

அந்த வருத்தத்தில் குமாரசாமி பிள்ளை தாடி வளர்க்க ஆரம்பித்து கொஞ்ச நாளில் அவரது நரைத்த தாடி மார்பில் புரளும்படியானது, அவரது கண்களில் சொல்லமுடியாத வருத்தமும், நடையில் தளர்ச்சியும் இருப்பதை கோச்சடை கண்டிருக்கிறான், இரவு கோவில் நடைசாத்தும்வரை கோவில் குளத்திலே அவர் உட்கார்ந்திருப்பதையும் பலநேரம் தனக்கு தானே பேசியபடியே வீட்டை நோக்கி நடந்து வருவதையும் கூட பார்த்திருக்கிறான்,

அப்போதெல்லாம் அந்த குடும்பத்திற்கும் தனக்கும் ஏதோவொரு ஒட்டுதல் இருப்பது போலவே தோன்றும், தான் அந்த வீட்டிற்குள் போகிறோம், அவ்ரது இரும்பு பெட்டியை திறந்து பணம் எடுத்திருக்கிறோம், அவர்கள் அறியாவிட்டால் என்ன, அந்த வீட்டில் திருடிய மோதிரத்தை தானே மூன்றாவது மகன் பிறந்த போது கையில் போட்டிருந்தோம், இதை என்னவிதமான உறவென்று சொல்வது என்று கோச்சடைக்கு புரியாது

ஆனால் அதன்பிந்திய நாட்களில் குமாரசாமிபிள்ளை வீட்டினை கடந்து போகையில் விளக்கு அணைக்கபட்டிருப்பதை காணும்போது தாங்கமுடியாத வருத்தமாக இருக்கும்.

கோச்சடையின் கண்முன்னே அவ்வீடு கொஞ்சம் கொஞ்சமாக சிதைவுறத் துவங்கியது, குமாரசாமியின் சாவுக்கு பிறகு அந்த வீட்டில் எவரும் குடியிருக்கவேயில்லை, மூத்தவன் ஊரைவிட்டுப் போய்விட்டான், இளையவன் குடித்து கடன்வாங்கி மனைவியின் ஊரான தென்காசிக்கு போய் வேன் ஒட்டுகிறான் என்றார்கள்,

கோச்சடை குமாரசாமியின் சாவுக்கு போயிருந்தான், வீட்டின் உள்ளே போய் துக்கம் கேட்க கூச்சமாக இருந்தது, வாசலை ஒட்டி போடப்பட்டிருந்த பந்தலில் நின்று கொண்டிருந்தான், பிணம் சுடுகாடு போகையில் கூடவே நடந்து போய் வந்தான், சுடுகாட்டில் இருந்து வீடு திரும்பி வரும்போது சாலையில் கிடந்த உதிர்ந்த ரோஜா இதழ்களை கண்டதும் தாங்கமுடியாத வருத்தம் பீறிட்டது

அதன்பிறகு கோச்சடை தாரமங்கலத்தில் களவு செய்யப்போன போது பிடிபட்டு நாலுவருசம் சிறையில் இருந்தான், அவன் ரிலீஸ் ஆகி வெளியே வந்த போது அந்த வீடு சிமெண்ட் குடோனாக மாறியிருந்தது, இரவும் பகலும் சிமெண்ட் மூடைகள் வந்து இறங்கும் போவதுமாக இருந்தன, அப்போதும் கூட ஒரேயொரு தடவை பகலில் அந்த வீட்டிற்குள் போய் பார்த்துவர வேண்டும் என்று தோன்றும், ஏதோவொரு தயக்கத்தில் போகாமல் வாசலில் நின்றே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு திரும்பிவிடுவான்

அதன்பிறகு அந்த வீடு கைவிடப்பட்டு பல ஆண்டுகள் பூட்டியே கிடந்த்து, ஆர்ச்சில் இருந்த யானைகளின் தும்பிக்கைகள் உடைக்கபட்டிருந்தன, தூசியும் குப்பையும் அடைந்து போய் சாலையில் அடிபட்டு செத்துப்போன பறவை ஒன்றை போலவே அந்த வீடு மாறியிருந்தது, பல நேரம் அவ்வீட்டினைக் கடந்து போகும்போது திரும்பிக் கூட பார்க்க வேணாம் என்று தோன்றும், ஆனாலும் அவனால் பார்க்காமல் இருக்க முடியாது

கைவிடப்பட்ட வீட்டைக் காண்கையில் இவ்வளவு தான் வாழ்க்கையா என் வருத்தம் கவ்வும், கண்முன்னே ஊரில் அவன் பார்த்த மனிதர்கள் மறைந்து கொண்டேவருகிறார்கள், அவன் கூடவே வாழ்ந்த மீனா இப்போதில்லை, குமாரசாமி வீட்டில் திருடி மோதிரம் போட்டு பார்த்த மூன்றாவது மகனும் இப்போது உயிரோடில்லை, பதினெட்டுவயதில் களவு செய்ய துவங்கி நாற்பத்தைந்து வயதில் எல்லாம் ஒடுங்கிப்போக மிஞ்சிய வாழ்க்கையை ஒட்டுவதற்காக வாழைக்காய் மண்டியில் வேலைக்கு சேர்ந்து இன்று கோச்சடை செயிண்ட் ஆண்ட்ருஸ் பள்ளியின் வாட்ச்மேனாக இருந்தான்,

பல நாட்கள் மூடப்பட்ட பள்ளியின் வாசலில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஆள்இல்லாத வீதியை பார்த்துக் கொண்டேயிருப்பான், இவ்வளவு தானா வாழ்க்கை என்று தோன்றும், கூடவே குமாரசாமிபிள்ளை வீட்டின் மஞ்சள் வெளிச்சம் நினைவில் வந்து போகும்

இன்றைக்கும் கூட அந்த வீட்டினை இடிப்பதற்குள் அதற்குள் ஒருமுறை போய்விட்டுவர வேண்டும் என்பதற்காகவே அவசரமாக அங்கு வந்திருந்தான், ஆனால் வாசலில் வந்து நின்றபோது வீட்டிற்குள் போவதற்கான தகுதி தனக்கு இல்லை என்று தோன்றியது, வெளியிலே நின்று கொண்டேயிருந்தான், இடிபட்ட கற்கள் தெறித்துவிழுந்து கொண்டிருந்தன, அதை பார்க்க பார்க்க இறந்த குழந்தையை குழிக்குள் தள்ளி மண்ணை போட்டு மூடுவதை விடவும் அது சோகமானதாக தோன்றியது

கோச்சடை தலைகவிழ்ந்தபடியே மௌனமாக நின்று கொண்டேயிருந்தான், அப்போது சாலையில் ஒரு டாக்சி வந்து நிற்கும் சப்தம் கேட்டது, வெளிர்நீல சட்டைஇ வேஷ்டி அணிந்த ஒருஆள் கிழே இறங்கி போன்பேசியபடியே நடந்தவர் கோச்சடை பக்கம் திரும்பி என்ன வேணும் என்று கேட்டார்,

ஒண்ணுமில்லை அண்ணாச்சி சும்மா பாக்கேன் என்றான் கோச்சடை,

அந்த ஆள் உள்ளே நடந்தபடியே கத்தினார்

டேய் வேலு, என்னடா செய்றீங்க, களவாணிப்பயக உடைஞ்சி கிடக்கிற மரச்சாமானை தூக்கிட்டு போயிறப் போறாங்கடா , வெளியே ஒருத்தன் நிக்கான் அவன் முகரையே சரியில்லை, அடிச்சிபத்தி விடுங்கடா

யாரோ ஒருவன் உள்ளேயிருந்து கையில் ஒரு இரும்பு ராடுடன் வாசலை நோக்கி ஆவேசமாக வருவது தெரிந்தது

இடிந்து கிடந்த வீட்டில் இருந்து தெறித்து விழுந்த ஒரு சிறுகல்லை எடுத்து சட்டை பையில் போட்டு கொண்டு கோச்சடை மெதுவாக வீட்டை நோக்கி நடந்து போக ஆரம்பித்தான், சுவர் விழுந்து எழுந்த புழுதி காற்றில் கரைந்து கொண்டிருந்தது

ராமகிருஷ்ணன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum