தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்,

View previous topic View next topic Go down

பெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம், Empty பெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்,

Post by ஜேக் Sun Dec 02, 2012 4:16 am

ஆயிரத்து
எண்ணூறு வரை பெரியம்மை நோய் ஒரு கொடிய உயிர் கொல்லி நோயாகவும்,
விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருந்து வந்தது. முகம், கை,
கால்களில் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அருவருப்பான தழும்புகளைப்
பெற்றிருந்தனர். கண்களில் இந்நோய் வந்தால் பார்வை பறி போய்விடும் நிலையும்
இருந்தது.
எட்வர்டு ஜென்னர் கி.பி. 1800 இறுதியில் பெரியம்மை
நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பெரும்பான்மை மக்கள்
இந்நோய்க்கு ஆளாகி வந்தனர்.
எட்வர்டு ஜென்னர் 1749 – ஆம் ஆண்டு
இங்கிலாந்திலுள்ள பெர்க்கிலி என்ற நகரில் பிறந்தார். மருத்துவப் பயிற்சி
முடித்த இவர் தனது ஊரிலேயே தொழில் செய்து வந்தார்.
பெரியம்மை நோயைக்
குணப்படுத்த ஜென்னர் இருபது ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதன்
மூலம் ஏற்கனவே இந்நோய் ஏற்பட்டு பிழைத்தவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு
சக்தி உருவாகி இருப்பதையும், மீண்டும் இந்நோய் அவர்களைத் தாக்குவது இல்லை
என்பதையும் கண்டறிந்தார்.
1796 – ஆம் ஆண்டு மே மாதத்தில்
ஒரு நாள் ஜென்னர் அவர்களின் வீட்டிற்குப் பால் கொண்டு வரும் சாரா நீல்ஸ்
என்கிற பெண்மணி தனது கையில் மாடுகளுக்கு ஏற்படும் அம்மை நோய் லேசாகத்
தாக்கியிருப்பதைக் காட்டி இனி தனக்கு பெரியம்மை ஏற்படாது என்று
திட்டவட்டமாகக் கூறினார். இது, அக்கால மக்கள் அனுபவப்பூர்வமாகக் கண்டறிந்த
உண்மை.
இக்கூற்று ஜென்னரை சிந்திக்க வைத்தது. எனவே
மாடுகளுக்கு ஏற்பட்டிருந்த அம்மை நோய் கட்டியிலிருந்து அந்நோய் திரவத்தைப்
பிரித்தெடுத்த அவர் அதனை ஜேம்ஸ் பிலிப்ஸ் என்கிற 8 வயது சிறுவனின் கையில்
லேசான சிராய்ப்பு ஏற்படுத்தி அதன் வழி உள்ளே செலுத்தினார். அவனுக்கு
கோவசூரி என்னும் அம்மை நோய் ஏற்பட்டது. ஆனால், விரைவில் குணமடைந்தான்.
தொடர்ந்து அவனது உடலில் பெரியம்மை நோய் திரவத்தைச் செலுத்தினார். அவர்
எதிர்பார்த்தது போலவே அவனுக்கு பெரியம்மை நோய் எதிர்ப்புச் சக்தி
ஏற்பட்டிருந்தது. இதுவே அம்மை குத்துதலாக உருவானது. இவர் தான் கண்டுபிடித்த
அம்மை குத்துதலை எவ்வித பயனையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு இலவசமாகவே
செய்து வந்தார்.
இவரது சேவையை பாராட்டிய பிரிட்டிஷ் அரசாங்கம் 1802 –
ஆம் ஆண்டு 10,000 டாலர் பரிசும், மீண்டும் இரண்டு ஆண்டு கழித்து 20,000
டாலர் பரிசும் வழங்கி கௌரவித்தது.
பெரியம்மை நோய்க்கு தடுப்பு
மருந்து கண்டுபிடித்ததன் வாயிலாக மக்களுக்கு அளப்பரிய தொண்டு புரிந்த
எட்வர்டு ஜென்னர் 1823 – ஆம் ஆண்டு ஜனவரி 26 – ஆம் தேதி தான் பிறந்த ஊரான
பெரிகிலியில் தனது 73 – வது வயதில் மரணமடைந்தார்.
அவரது சிறுவயதில் நடந்த சம்பவங்கள்:
ஒரு
பள்ளி விடுதியில் சில நாட்களாக மிகவும் துர்நாற்றம் வீசியது. எங்கிருந்து
இந்த நாற்றம் வருகிறது என்று கண்டுபிடிப்பதற்காக வார்டன் தன்
உதவியாளர்களுடன், ஒவ்வொரு அறையாகச் சென்று சோதனை நடத்தினார்.
பல
அறைகளை நன்றாக ஆராய்ந்த பின்பும் அவரால் நாற்றத்திற்கான காரணத்தைக்
கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் எட்வர்ட் என்னும் மாணவனின் அறையை
அடைந்தனர்.
“ஓ!… இந்த அறையிலிருந்துதான் கெட்ட நாற்றம் வீசுகிறது!”
என்று சொல்லிக்கொண்டே வார்டன் அங்கிருந்த கட்டிலிலிருந்து படுக்கையை
விலக்கினார். அப்போது அவர் அந்தப் படுக்கைக்குக் கீழே கண்டது என்ன
தெரியுமா?
பலவிதமான முட்டைகள், வைக்கோல், இறந்த தவளையின் உடல்,
எலும்புத் துண்டுகள்… இப்படிப் பல பொருட்கள் அங்கு இருந்தன. அவற்றில் பல
பொருட்கள் அழுகி நாறின.
வார்டன் மிகவும் கோபம் கொண்டார். அந்த
அறையில் தங்கியிருந்த மாணவன் எட்வர்ட் பயந்து நடுங்கி நின்றான்.“என்னடா
இதெல்லாம்?” வார்டன் அதட்டினார்.
தயங்கித் தயங்கி எட்வர்ட் சொன்னான்:
“இயற்கைக் கண்காட்சி ஒன்றை உருவாக்குவதற்கான பொருட்கள் சார்…
வார்டன் தன் பணியாளரிடம், “இதையெல்லாம் அள்ளி உடனே வெளியே போடு!” என்று உத்தரவிட்டார்.
அப்போதுதான் தலைமை ஆசிரியர் அங்கே வந்தார்.
அவர் எட்வர்டின் அருகே சென்று அன்புடன் அவன் முதுகில் தட்டிக்கொடுத்தார். பிறகு வார்டனிடம் சொன்னார்:
“இப்பொருட்களையெல்லாம்
வெளியே போட்டுவிடாதீர்கள். இதுபோன்ற இன்னும் பல பொருட்களை எட்வர்ட்
சேகரிக்கட்டும். அதையெல்லாம் வைத்து நாம் பள்ளியில் இயற்கை அறிவியல்
தொடர்பான கண்காட்சி நடத்தலாம்!’
தலைமை ஆசிரியரின் வார்த்தைகளைக்
கேட்டபோது நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தான் எட்வர்ட். சில
தினங்களுக்குள் அவன் இன்னும் நிறையப் பொருட்களைச் சேகரித்து பள்ளியில் ஒரு
பெரிய கண்காட்சி நடத்தினான்.
குழந்தைப் பருவத்தில் இயற்கையை ஆராய்வதில் பெரிதும் ஆர்வம் காட்டிய அந்த மாணவன் பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானியாக மாறினான்

[You must be registered and logged in to see this image.]

CHT163338

CHT163338 Portrait of Edward Jenner (1749-1823) (oil on canvas) by Meynier, Charles (1768-1832)
oil on canvas
Musee Pasteur, Institut Pasteur, Paris, France
Archives Charmet
French, out of copyright Copyright (C) Bridgeman Art Library
நன்றி: இன்று முதல் தகவல் - முகநூல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம், Empty Re: பெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்,

Post by mohaideen Sun Dec 02, 2012 10:35 am

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum