தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

View previous topic View next topic Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by முரளிராஜா Sun Dec 02, 2012 5:31 pm

கேசத்தின் அடிப்படை

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Hair_follicle

கேசம் ஏன் உதிருகிறது என்பதை தெரிந்து கொள்ள கேசம் குறித்த சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். நமது கேசம் இறந்த திசுக்களால் ஆன மெல்லிய ஆனால் உறுதியான ஒரு பாகம். இவை கெராட்டின் என்ற ஒரு வகை புரதத்தால் உருவானவை.

உள்ளமைப்பு

கேசத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்

1. தோலுக்கு வெளியே
2. தோலுக்கு உள்ளே


தோலுக்கு வெளியே இருக்கும் பகுதியின் பெயர் கேசத் தண்டு (Hair Shaft) , தோலுக்கு உள்ளே இருக்கும் பகுதியின் பெயர் கேச வேர் (Hair Root). கேசத் தண்டில் மெடுலா (Medula)எனும் உட்பகுதி, கார்டெக்ஸ் (Cortex) எனும் வெளிப்பகுதி உள்ளது. கேச வேர்களில் அடிப்பகுதி பெரிதா இருக்கும் அதை கேசக் குமிழ் (Hair Bulb) என்கிறோம், அது பாலிக்கிள் (Hair Follicle) என்ற பகுதியோடு இணைந்திருக்கும். பாலிக்கிள் பகுதியில் உள்ள ரத்த குழாய்கள் வழியாக வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை பெற்றுக்கொள்கிறது.

கேசவேரோடு எண்ணெய் சுரப்பிகள் உள்ளன, (Sebaceous Glands) இந்த எண்னெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் திரவம் கேசத்திற்கு மினுமினுப்பை தருகிறது, சுரப்பிகள் சரியாக இயங்காவிடில் எண்ணெய் பசையின்றி வறண்டு போய் விடும். அதிகமாக இயங்கினால் எண்னெய் பிசுக்குடன் இருக்கும்.

கேசத்தின் நிறம் அதிலுள்ள மெலனின் என்ற வேதிப் பொருள் அளவை பொறுத்து மாறுபடும். வயதாகும் போது இது குறைவதால் நரை ஏற்படுகிறது. கேசத்தின் வளர்ச்சியில் மூன்று நிலைகள் உள்ளன அவை வளரும் பருவம், இடைப்பருவம், ஓய்வுப் பருவம் ஆகும். வளரும் பருவத்தில் புதிய கேசம் உருவாகி வளர்ந்து வரும், அடுத்த பருவத்தில் வளரும் வேகம் குறையும். மூன்றாம் பருவத்தில் வளர்ச்சி நின்று உதிர்ந்து விடும். சில மாதங்கள் கழித்து மீண்டும் புதிய கேசம் வளரும்.


ஒரு கேசத்தின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அது உதிர்ந்து விடும், அடுத்து பிற வேர்களிலிருந்து புதிய கேசம் வளரும். இவ்வாறு பழைய கேசம் உதிர்வதும் வளர்வதும் அன்றாடம் நடக்கும். உதிரும் அளவும் வளரும் அளவும் ஒன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை. மாறாக உதிர்வது அதிகாமாக இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

இயல்பாகவே 70 முதல் 100 கேசங்கள் வரை உதிர்ந்து விடும். பெண்கள் தலை வாரும் போது 10-20 கேசங்கள் வருவது இயல்பான ஒன்று. கொத்துக் கொத்தாக உதிர்வது இயல்பை மீறிய ஒன்று, அதன் காரணங்களை ஆராய்ந்து சரி செய்ய வேண்டும்.

காரணங்கள்


கேசம் அதிகமாக உதிர சில முக்கிய காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன,

சரியான பராமரிப்பின்மை
மருந்துகள்
போதைப் பொருட்கள்
இயக்கநீர் மாற்றங்கள்
ஊட்டச்சத்து குறைபாடுகள்
உடலை தாக்கும் நோய்கள்
தலையின் தோலை தாக்கும் நோய்கள்
மரபு வழிக் காரணம்
மன அழுத்தம்
வயது
கதிர்வீச்சுகள்
வேதியியல் பொருட்கள்


ஒருவருக்கு அதிகமாக முடி உதிர்வது மேற்கண்ட ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணமாக கூட இருக்கலாம், சரியான காரணத்தை தெரிந்து கொள்ளுதல் சரி செய்ய உதவும்.

1 சரியான பராமரிப்பின்மை

மிக முக்கியமான காரணம் இதுவே ஆகும்.
தலையில் எண்ணெய் பிசுக்குடன், தூசி ஆகியவற்றை சுத்தம் செய்யாதிருத்தல்.
குளித்தபின் ஈரத்தலையை வாருதல்.
தலையை சுத்தம் செய்ய வீரியம் மிகுந்த தரக் குறைவான ஷாம்பூகளை உபயோகித்தல்.
ப்ளீச்சிங்க், பெர்மிங்க், கர்லிங் ஆகியவற்றை அடிக்கடி செய்தல்.
அடிக்கடி கேசச் சாயம் பூசுதல், தரமில்லாத சாயம் உபயோகித்தல்.
தரமற்ற சீப்புகளை பயன்படுத்துதல், அவற்றை சுத்தமில்லமல் உபயோகித்தல்.
ஹேர் டிரையரை சரியான முறையில் உபயோகிக்காமல் இருப்பது.
கேசத்தை இருக்கமாக கட்டுதல்.

2. மருந்துகள்

வீரியம் மிகுந்த மாத்திரை மருந்துஅள் தொடர்ந்து உண்பது.
புற்று நோயை குணப்படுத்தும் மருந்துகள்.
இரத்த உறைவை தடுக்கும் மருந்துகள்.
ஸ்டெராய்ட் வகை மருந்துகள்.
சில நோய்க் கொல்லி மருந்துகள்.

3. போதைப் பொருட்கள்


புகையிலை அதிகாமாக உபயோகப்படுத்துதல், புகையிலையில் உள்ள நிகோட்டின் முடியின் வேரை சுற்றியுள்ள இரத்தக் குழாய்களை சுருங்கச் செய்துவிடும், இதனால் இரத்த ஓட்டம் குறையும். தேவையான ஊட்டச்சத்துக்கள் முடிக்கு கிடைகாமல் போய்விடும்.

4. இயக்க நீர் மாற்றங்கள்

உடலில் ஏற்படும் பலவகை மாற்றங்கள் முடி வள்ர்ச்சியிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும், இரண்டிற்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கே இந்த மாற்றங்கள் அதிகமாக இருக்கிறது.

பருவம் அடையும் வயதில்
மாதவிடாய் காலத்தில்
கருவுறும் போது
பிரசவத்திற்கு பின்
மாதவிடாய் நின்றபின்

ஒவ்வொரு நிலையிலும் பலவித இயக்கநீர் மாற்றங்கள் தொடர்ந்து பெண்களுக்கு ஏற்படுவதால், கேச வளர்ச்சி பாதிப்பு , உதிர்தல் ஏற்படுகிறது. பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற இயக்க நீர் கேச வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 15 - 30 வயதில் இந்த இயக்க நீர் அதிகமாக இருக்கும், அப்பருவத்தில் கேசம் அதிகமாக வளரும். மாதவிடாய் நின்ற பின்னர் இந்த ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் கேச உதிர்வு அதிகமாக இருக்கும்.

5. ஊட்டச்சத்துக் குறைபாடுகள்


கேசம் நன்கு வளரவும், வேர்கள் உறுதியாக இருக்கவும் உடலில் தேவையான அளவில் கீழ்காணும் சத்துகள் இருப்பது அவசியம்
புரதம்
பி. காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள்
இரும்புச் சத்து
தாமிரம்
துத்தநாகம்
அயோடின்
வைட்டமின் சி

இதில் ஏதேனும் ஒன்று குறைவாக இருந்தாலும் கேசம் அதிகமாக உதிரும்.

6. உடலை தாக்கும் நோய்கள்


டைபாய்டு, மஞ்சள் காமாலை, அம்மை, புற்றுநோய், காசநோய் போன்ற நாள்பட்ட நோய்களால் உடல் பாதிப்பதோடு மட்டுமில்லாமல் கேசம் அதிகமாக உதிரும்.

நோயின் கடுமையால் சரியான் உணவு உண்ணமுடியாத நிலையில் முடி வலுவிழந்து விடுகின்றன.
தொடர்ந்து மருந்துகள் சாப்பிடுவதாலும் கேசம் உதிரும்.
அதிக நாட்கள் காய்ச்சலினாலும் உடல் சூட்டினால் கேசம் அதிகமாக உதிரும்.

முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty Re: தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by முரளிராஜா Sun Dec 02, 2012 5:32 pm

7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள்

தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உதிரும்.
தலையின் சருமத்தில் வரும் படைகள், கட்டிகள், புண்கள், தோலைத் தாக்கும் பிற நோய்களும் கேசம் உதிரக் காரணமாக அமையலாம்.

8. மரபு வழிக் காரணங்கள்

சிலருக்குப் பரம்பரையாகக் கேசம் உதிருதல், வழுக்கை விழுதல் போன்றவை ஏற்படலாம் பெண்களை விட ஆண்களுக்கு இவ்வாறு மரபு வழிக் காரணங்களால் கேசம் அதிகாமாக உதிர்கிறது.

9. மன அழுத்தம்

மன அழுத்தம், மன இறுக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கும் கேசம் அதிகமாக உதிரலாம். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

மன அழுத்தம் அதிகமாக இருந்தால் தைமஸ் எனும் நாளமில்லாச் சுரப்பியிலிருந்து சுரக்கும் தைமொலின் என்ற இயக்க நீரின் அளவு வெகுவாக குறைந்து விடும் எனவே கேசம் அதிகமாக உதிரலாம்.

மன அழுத்தத்தோடு அல்லது இறுக்கத்தோடு இருக்கும்போது நமது முகம், தாடைப்பகுதி, நெற்றி மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள தசைகள் மிகவும் இருக்கமாகிறது.

இந்த இருக்கத்தால் தலையின் தோலுக்குச் செல்லும் இரத்தக் குழாய்கள் அழுத்தப்பட்டு அவற்றில் இரத்த ஒட்டம் குறைபடுகிறது, இதனால் கேசவேர்கள் ஊட்டச்சத்து கிடைக்காமல் வலுவிழக்கின்றன.

10. வயது

40 வயதுக்கு மேல் கேசம் உதிவது சற்று அதிகரிக்கலாம், அது இய்ற்கையான ஒன்று.
அந்த வயதிலிருந்து உடலின் அனைத்து இயக்கங்களிலும் சிறிய மந்தத் தன்மை ஏற்படும். புதிய கேசம் வளரும் வேகமும் குறையும்.

பெரும்பாலானோருக்கு, கேசம் அதிகப்படியாக உதிராவிட்டாலும், 40 வயதிற்கு மேல் கேசத்தின் பருமன் குறையத் தொடங்கும்.

இவ்வாறு கேசம் மெலிவதால், அடர்த்தி குறைந்தது போன்ற தோற்றம் ஏற்படும்.

11. கதிர் வீச்சுகள்

எக்ஸ் கதிகள், காமாக் கதிர்கள், மின் காந்த அலைகள் போன்ற பலவகையான கதிர்வீச்சுகளின் பாதிப்புகளினாலும் கூட கேசம் அதிகாமாக உதிரும்.

எக்ஸ்ரே லேப், மின் அணு நிகையங்கள், புற்று நோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை தரும் மையங்களில் வேலை செய்யும் கவனமுடன் இருக்க வேண்டும். வெளியில் அதிகம் சுற்றுபவர்கள் புற ஊதாக் கதிர்களினால் பாதிக்கப்பட்டு கேசம் உதிரலாம்.

12. வேதிப்பொருட்கள் (கெமிக்கல்ஸ்)

பல வகையான வேதிப்பொருட்கள் கேசம் உதிரக் காரணமாகலாம், பெயிண்டிங், நகைகளுக்கு மெருகேற்றுதல், கவரிங் பூசுதல், சோப்பு தொழிற்சாலைகளில், பிற வேதிப் பொருட்கள் தயார் செய்யும் இடங்களில் பணிபுரிபவர்களுக்கு சிறிது சிறிதாக உடலில் வேதிப்பொருள் சேரும் வாய்ப்பு உள்ளது. இதனால் கேசம் அதிகமாக உதிர வாய்ப்புள்ளது.

நன்றி tamiltidings.blogspot.in
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty Re: தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by ஜேக் Sun Dec 02, 2012 8:25 pm

இது பற்றி தங்களுக்கு தெரியாத சங்கதியா என்ன? நக்கல்

நல்ல தகவலுக்கு நன்றி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty Re: தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by Kingstar Mon Dec 03, 2012 8:17 am

பயனுள்ள தகவல்
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty Re: தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by தமிழ்நிலா Mon Dec 03, 2012 9:23 am

நன்றி
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty Re: தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by mohaideen Mon Dec 03, 2012 12:23 pm

பயனுள்ள தகவல்கள்.

தனக்கு முடி இல்லாவிட்டாலும் அடுத்தவர்களுக்கு பயன்படட்டும் என்று தகவல்கள் தந்த நண்பருக்கு நன்றி.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty Re: தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 12:27 pm

mohaideen wrote:பயனுள்ள தகவல்கள்.

தனக்கு முடி இல்லாவிட்டாலும் அடுத்தவர்களுக்கு பயன்படட்டும் என்று தகவல்கள் தந்த நண்பருக்கு நன்றி.
கோபம் கோபம் கோபம் கோபம் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty Re: தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by ரானுஜா Mon Dec 03, 2012 1:24 pm

நினைச்சேன் இந்தப் பதிவை நீங்க தான் போட்டிருப்பிங்கனு தகவலுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty Re: தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by mohaideen Mon Dec 03, 2012 1:44 pm

உண்மைய சொன்னா கோவம் வரக்கூடாது.

தம்பி பிரபு கோவப்படவா செய்றாரு.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty Re: தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by ஜேக் Mon Dec 03, 2012 1:45 pm

mohaideen wrote:உண்மைய சொன்னா கோவம் வரக்கூடாது.

தம்பி பிரபு கோவப்படவா செய்றாரு.

அதானே... தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 1319426555 தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 615537757
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty Re: தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 4:28 pm

ரானுஜா wrote:நினைச்சேன் இந்தப் பதிவை நீங்க தான் போட்டிருப்பிங்கனு தகவலுக்கு நன்றி
கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty Re: தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by ரானுஜா Mon Dec 03, 2012 4:30 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:நினைச்சேன் இந்தப் பதிவை நீங்க தான் போட்டிருப்பிங்கனு தகவலுக்கு நன்றி
கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி

இப்போதான் மகாபிரபு கிட்ட சொன்னேன் வெங்காயம் வீட்ல உரிங்கனு இப்போ நீங்க ஆரம்பிச்சிட்டிங்களா தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 427302201
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty Re: தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by செந்தில் Mon Dec 03, 2012 4:31 pm

mohaideen wrote:பயனுள்ள தகவல்கள்.

தனக்கு முடி இல்லாவிட்டாலும் அடுத்தவர்களுக்கு பயன்படட்டும் என்று தகவல்கள் தந்த நண்பருக்கு நன்றி.
கைதட்டல்


முரளி அண்ணா, இப்ப என்ன பண்ணுவீங்க? இப்ப என்ன பண்ணுவீங்க? ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty Re: தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 4:33 pm

வெங்காயத்தை உரிக்கலைனா என் தோலை உரிசிடுவாளே பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty Re: தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by ரானுஜா Mon Dec 03, 2012 4:35 pm

முரளிராஜா wrote:வெங்காயத்தை உரிக்கலைனா என் தோலை உரிசிடுவாளே தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 919379873

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 615537757 தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 615537757 தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 615537757 தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 615537757 தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 615537757
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty Re: தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 4:38 pm

செந்தில் wrote:

முரளி அண்ணா, இப்ப என்ன பண்ணுவீங்க? இப்ப என்ன பண்ணுவீங்க? ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
போங்க தம்பி போயி கண்ணாடியில உங்க தலைய பாருங்க அப்படியே கன்ன பறிக்கும் நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty Re: தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by ரானுஜா Mon Dec 03, 2012 4:40 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:

முரளி அண்ணா, இப்ப என்ன பண்ணுவீங்க? இப்ப என்ன பண்ணுவீங்க? தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 1053699444 தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 1053699444 தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 1053699444 தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 1053699444 தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 1053699444
போங்க தம்பி போயி கண்ணாடியில உங்க தலைய பாருங்க அப்படியே கன்ன பறிக்கும் நக்கல் நக்கல் நக்கல்

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 3202108815 தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 3202108815 தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 3202108815 தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் 3202108815
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள் Empty Re: தலை முடி உதிர்வதர்க்கான காரணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum