தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை}

View previous topic View next topic Go down

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} Empty படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை}

Post by முழுமுதலோன் Thu Feb 07, 2013 1:50 pm

சர்தார் 1: டேய்.. எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க?

சர்தார் 2: கரண்ட் இல்லடா..

சர்தார் 1: சரி சரி, பேனையாவது போடு..

சர்தார் 2: லூசாடா நீ.. மெழுகுவத்தி அணைஞ்சிடாது?
@@@@@@

ஹோட்டல் ஓனர்:: சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?

சர்தார்::மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு.. அதுதான்.. !!!
@@@@@@

சர்தார்ஜியின் மகன்:- கடவுளே, எப்படியாவது நியூயார்க்கை பஞ்சாபின் தலைநகரமா மாத்திரு...

அப்பா சர்தார்ஜி:- ஏண்டா அப்படி வேண்டுறே?

சர்தார்ஜியின் மகன்:- ஏன்னா நான் அப்படித்தான் பரிட்சையில எழுதியிருக்கேன்.
@@@@@@

சர்தார்ஜி: ஒரு கண்ணாடி குடுங்க...
கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது..
சர்தார்ஜி: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க.
@@@@@@
நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், “வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்.....” என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார், “சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?”
நம் சர்தார்ஜி சொன்னார், “ மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்” @@@@@@

வாழ்த்துக்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} Empty படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை}

Post by முழுமுதலோன் Thu Feb 07, 2013 1:51 pm

சர்தார்ஜி ஒருவர் ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொண்டிருந்தார். வரிசையில் பின்னால் நின்று கொண்டிருந்தவர் சர்தார்ஜியிடம்
“நான் உங்களது பாஸ்வேர்டைப் பார்த்துவிட்டேன். அது ****.” என்றார்.
சர்தார்ஜி உடனே
“ஐயோ அது தப்பு. 1375 தான் எனது பாஸ்வேர்ட்” என்றாரே பார்க்கலாம்.
@@@@@@

இண்டர்வியூ எடுப்பவர்: வேலைக்கு சேரும்போது மாசம் 5000 ரூபாய் சம்பளம். ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.

சர்தார்ஜி: அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்.
@@@@@@

நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார். நண்பர் கேட்டார்.

“25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?”

“என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்”

“வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?”

“அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்”
@@@@@@

“ஏன் சர்தார்ஜிகளால் ‘911’ எண்ணை டயல் செய்ய முடியாது?”

“அவர்கள் டெலிபோனில் 11 எண்ணைத் தேடிக் கொண்டிருப்பார்கள்”
@@@@@@

நண்பர்: ஏன் சம்பந்தமில்லாம, மெடிக்கல் புக் எடுத்து blood பத்தி எல்லாம் படிச்சுக்கிட்டு இருக்கீங்க?

சர்தார்ஜி: தொந்தரவு பண்ணாதீங்க, நாளைக்கு blood test னு டாக்டர் சொல்லியிருக்கார்.
@@@@@@




மீண்டும் சந்திப்போம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} Empty படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை}

Post by முழுமுதலோன் Thu Feb 07, 2013 1:52 pm

ஜன்னல் சீட்டில் சர்தார்ஜி

புனேவிலிருந்து சண்டிகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல சர்தார்ஜி ஒருவர் டிக்கட் வாங்கியிருந்தார். விமானத்தில் மூன்று சீட்டுகள் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் உள்ள சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. விமானத்தில் நுழைந்தவுடன் நடு சீட்டில் உட்காராமல் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டார். ஜன்னல் சீட் ஒதுக்கப்பட்டிருந்த பெண், "அது என்னுடைய சீட் தயவு செய்து எழுந்திருங்கள்" என்று கூறினார். சர்தார்ஜியோ, "முடியாது" என்று சொல்லிவிட்டார்.
அந்த பெண் வேறு வழியில்லாமல் பணிப்பெண்ணிடம் புகார் கூறினார். விமானப் பணிப்பெண் வந்து சொல்லிப்பார்த்தார். ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பயணம் செய்ய ஆசைப்படுவதால் சீட்டை தர முடியாது என்று சர்தார்ஜி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். உதவி கேப்டன் சொல்லிப் பார்த்தார். சர்தார்ஜி அசையவில்லை.
விஷயத்தை கேள்விப்பட்ட விமானத்தின் கேப்டன் சர்தார்ஜியின் அருகில் வந்து காதோரமாக ஏதோ சொன்ன வினாடியே சர்தார் அவசர அவசரமாக நடு சீட்டுக்கு மாறிவிட்டார்.
விமானி சொன்னது இதுதான்:
“நடுவிலுள்ள சீட்கள் மட்டும்தான் சண்டிகருக்குப் போகிறது. மற்ற சீட்கள் எல்லாம் ஜலந்தருக்கு செல்கின்றன.”
@@@@@@

சர்தார்ஜி ஒரு பிஸா கடைக்குப் போய் பிஸா ஆர்டர் செய்தார்.

கடைக்காரர்: 6 துண்டுகளாக வெட்டித் தரவா அல்லது 12 துண்டுகளாக வெட்டித் தரவா?

சர்தார்ஜி: 6 துண்டுகளாகவே வெட்டுங்க. என்னால 12 துண்டுகள் எல்லாம் சாப்பிட முடியாது.
@@@@@@

ஆசிரியர்: காந்திஜி, ஏசு கிருஸ்து, கிருஷ்ணர் இவர்கள் மூன்று பேருக்குமுள்ள ஒற்றுமை என்ன?

சர்தார்ஜி: அவங்க மூணு பேருமே, கவர்மென்ட் லீவ் நாள்-ல பிறந்தவங்க சார்.
@@@@@@





பயந்து ஓடு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} Empty Re: படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை}

Post by முரளிராஜா Thu Feb 07, 2013 1:53 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} Empty படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை}

Post by முழுமுதலோன் Thu Feb 07, 2013 1:53 pm

சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், “நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்”.

யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், “பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை.”
@@@@@@

சர்தார்ஜியிடம் ஒரு பெண்...

“நான் உன்னைக் காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்”

“அது முடியாது. எங்க வீட்டுலே எல்லோரும் சொந்தத்துலேதான் கல்யாணம் பண்ணிக்குவாங்க. எங்க தாத்தா, எங்க பாட்டியைத்தான் கல்யாணம் பண்ணினார்; எங்க மாமா எங்க அத்தையைத்தான் கல்யாணம் பண்ணினார்; எங்க அப்பா எங்க அம்மாவைத்தான் கல்யாணம் பண்ணினார். அதனாலே உன்னை என்னால கல்யாணம் பண்ண முடியாது. மன்னிச்சுடு...”
@@@@@@

சர்தார்ஜி ஒருவர் எலக்ட்ரீசியனாக இருந்தார். அவரிடம் பெண்மணி ஒருவர் வந்து, தனது வீட்டில் அழைப்பு மணி வேலை செய்யவில்லை என்று கூறி, அதை சரி செய்ய அழைத்தார்.

சர்தார்ஜி, “நாளை வருகிறேன்” என்றார்.

ஆனால் நாலைந்து நாட்கள் ஆகியும் அவர் வரவில்லை. அந்தப் பெண்மணி மறுபடியும் கடைக்கு வந்தார்.

“ஏன் வரவில்லை..?”

“ஐயோ! உங்கள் வீட்டுக்கு நாலு முறை வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் நான் அழைப்பு மணி அழுத்தினேன். யாரும் வந்து கதவைத் திறக்கவில்லை”
@@@@@@


நண்பேன்டா
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} Empty படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை}

Post by முழுமுதலோன் Thu Feb 07, 2013 1:54 pm

நேர்முகத் தேர்வில் சர்தார்ஜியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்...
“எலெக்ட்ரிகல் மோட்டார் எப்படி ஓடும்?”

“ட்ட்ர்ர்ர்ட்ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...”

(கோபமாக) “ஸ்டாப் இட் ஐ ஸே!”

“ட்ப்...ட்ப்..ட்ப்...”
@@@@@@

சர்தார்ஜி அடிக்கடி சமையலறைக்குள் நுழைவதும், சர்க்கரைப் பாட்டிலை எடுத்துப் பார்ப்பதுமாக இருந்தார். இதைக் கவனித்த அவரது மனைவி கேட்டார், “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”

“டாக்டர் அடிக்கடி சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்.”
@@@@@@

ஒரு பெண்மணியின் கார் தொலைந்து விட்டது. புகார் கொடுக்க சர்தார்ஜி போலிசிடம் வந்தார். சர்தார்ஜி கேட்டார்,

“உங்க கார் பேர் என்ன?”
“பேர் மறந்துவிட்டது. ‘T’லே ஸ்டார்ட் ஆகும்”

“ஓ, வித்தியாசமான காரா இருக்கே! 'டீ'யிலே ஸ்டார்ட் ஆகுது. எனக்கு பெட்ரோல்ல ஸ்டார்ட் ஆகுற கார்தான் தெரியும்
@@@@@@
ஒரு முறை சர்தார் தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்தார், அப்போது அவருடையை நண்பர் ஒருவர் சந்தைக்குப் போய்விட்டு கையில் ஒரு பையுடன் அவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தார்.

சர்தார்: "மூட்டையில என்ன அண்ணே இருக்கிறது?"

நன்பர்: "வேறொன்றுமில்லை கோழிதான்.."

சர்தார்: "அண்ணே பையில் எத்தனை கோழிகள் இருக்கிறது என்று நான் சரியாக சொன்னால், எனக்கு ஒரு கோழி தருகிறீர்களா ?

நண்பர்: "ஒன்னு என்ன இந்த இரண்டையுமே நீ எடுத்துக் கொள்"

சர்தார்: "அஞ்சு கோழி , சரியா?.."
@@@@@@
ரொம்ப ஜாலி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} Empty படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை}

Post by முழுமுதலோன் Thu Feb 07, 2013 1:55 pm

அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.

சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'
@@@@@@

இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர். மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றி ருந் தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்
@@@@@@






மண்டையில் அடி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} Empty படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை}

Post by முழுமுதலோன் Thu Feb 07, 2013 1:56 pm

தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.

சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?
@@@@@@

சர்தாரும் அவர் மணைவியும் விவாகரத்துக்கு மணு கொடுத்தனர்.

நீதிபதி: உங்களிட்ம் மூனு குழந்தைகள் உள்ளனர். இப்போ பிரிஞ்சீங்கன்னா? சிக்கல் வரும்.

சர்தார்: சரி. அப்ப நாங்க அடுத்த வருசம் வர்ரோம் ஐயா.
@@@@@@

நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. அப்படியே அவன் மீது ரயிலை ஏற்றிவிட்டு சென்றிருக்கலாமே என்று நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி ஓட ஆரப்பித்தான் என்றார்.
@@@@@@

சர்தார் இருபது ரூபாய் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். பரிசு ஒரு கோடி விழுந்தது. கடைக்காரர் வரி பிடித்தம் போக 55 இலட்ச ரூபாய் கொடுத்தார். சர்தார் கோபமாக "யாரை ஏமாத்தப் பார்க்கறே?. ஒரு கோடி முழு பரிசையும் தா. இல்லேன்னா என் இருபது ரூபாய மரியாதையா திருப்பிக் கொடு என்றார்.
@@@@@@

சர்தார்: (பணியாளிடம்) போயி செடிக்கு தண்ணீர் ஊத்து.

பணியாள்: நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளி ஜி.

சர்தார்: அதனாலென்ன? குடையை எடுத்துக் கொண்டு போ.
@@@@@@
கைதட்டல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} Empty படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை}

Post by முழுமுதலோன் Thu Feb 07, 2013 1:57 pm

டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.
@@@@@@

சோகமே உருவாக உட்கார்ந்திருந்த பந்தா சிங்கிடம் அவருடைய நன்பர் அருகில் வந்தமர்ந்து, ஏன் சோகமாக இருக்கிறாய் என கேட்டார். அதற்க்கு பந்தா சிங், தான் பந்தயத்தில் ரூ.800 தோற்று விட்டதாக சொன்னார். நன்பர் எப்படி 800 ரூபாயை தொலைத்தாய் என்றதற்க்கு சர்தார் பந்தா சிங் சொன்னார்,

"நேற்று நடந்த இந்திய-இலங்கை கிரிகெட் மேட்ச்சில் இந்தியா ஜெயிக்கும் என ரூபாய் 400 பந்தயம் கட்டினேன், ஆனால் இந்தியா தோற்று போய் விட்டது.." என்றார்.

நன்பர், "சரி மீதி ரூ.400 எப்படி தொலைந்தது?" என்றதற்க்கு பந்தா சிங் சொன்னார், "அன்றிரவு பார்த்த ஹை-லைட்ட்¢லும் பந்தயம் கட்டினேனே.." என்றார்.
@@@@@@
முதன் முறையாக ஸ்கூலுக்கு சென்று விட்டு திரும்பிய பந்தாசிங் தன் தந்தையிடம் வந்து அன்று ஸ்கூலில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான். "அப்பா இன்றைக்கு ஸ்கூலில் ஸ்பெல்லிங் பற்றி கிளாஸ் எடுத்தார்கள், அதில் நான் மட்டும்தான் எல்லா எழுத்தையும் சரியாக சொன்னேன். மற்ற பசங்கள் யாருமே சரியா சொல்லவில்லை. அது ஏன்பா, நான் சர்தார் என்பதாலா?." அதற்க்கு அப்பா சொன்னார்,

"இல்லை மகனே, நீ ஒரு இன்டலிஜென்ட் பாய் அதனால்தான் சரியாக சொல்லி இருக்கிறாய். (அறிவு கொழுந்துங்கிறார்)..""அப்பா, பிறகு கணக்கு கிளாஸ் நடந்தது. அதில் எல்லோரையும் 1-லிருந்து 20-வரைக்கும் சொல்ல சொன்னார்கள். ஆனால் எல்லோரும் 1 லிருந்து 10 வரைக்கும்தான் சொன்னார்கள், நான் மட்டும்தான் ஒழுங்கா 20 வரைக்கும் சொன்னேன், அது ஏம்பா நான் சர்தார் என்பதாலா?". அப்பா, "நோ.. நோ.. மகனே, நீ ஒரு அறிவு கொழுந்துடா, அதனாலதான்..""அப்பா, இன்று மெடிக்கல் செக்-அப் கூட நடந்தது.. அங்க வந்த எல்லா பசங்களும் என்னைவிட ரொம்ப குட்டையா இருந்தாங்க, ஆனா நான் மட்டும் அவங்களைவிட இரண்டு மடங்கு உயரமாக இருந்தேன், அது ஏம்பா நான் சர்தார் என்பதாலா?".

அப்பா சொன்னார், "இல்லை மகனே, உனக்கு வயசு 31 ஆகிறது இல்லையா? அதனாலதான்..". @@@@@@
அரைதல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} Empty படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை}

Post by முழுமுதலோன் Thu Feb 07, 2013 1:57 pm

ஒரு இந்து, ஒரு சர்தார், ஒரு அமெரிக்கர், விமானத்தில் பயனம் செய்துக் கொண்டிருந்தனர். திடிரென்று விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அது தாருமாறாக பறக்க ஆரம்பித்தது. பாராசூட் இல்லாததால் விமானத்தில் இருந்த மூவரும் உயிரை பனையம் வைத்து அதிலிருந்து கீழே குதிக்க முடிவு செய்தனர்.

முதலில் சர்தார் குதித்து விட்டார். தன்னுடைய டர்பனை பாராசூட் போன்று பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார். அடுத்து, ஹிந்து குதித்தார். அவர் தன்னுடைய வேட்டியை அவிழ்த்து அதை பாராசூட் போல பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்க ஆரம்பித்தார். கடைசியாக அமெரிக்கர் தன் சட்டையை கழட்டி அதை பாராசூட் போல் பிடித்துக்கொண்டு குதித்தார், ஆனால் அவருடைய சட்டை, மற்றவர்களுடைய டர்பன் அல்லது வேட்டியைப் போல் மெதுவாக இறங்குவதற்கு உதவவில்லை. அதனால் அமெரிக்கர் வேகமாக கீழ் நோக்கி விழ ஆரம்பித்தார். விழும்போது முதலில் ஹிந்துவை தாண்டி கீழே சென்றார். அப்போது ஹிந்து, "உங்களை அந்த பகவான்தான் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். அடுத்து சர்தாரை தாண்டி சென்றார். அதைப் பார்த்த சர்தார், "என்கிட்டயா போட்டி போடுகிறாய், இப்பபார் யார் வேகமா போறான்னு பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு, தான் பிடித்திருந்து டர்பனை விட்டு விட்டார்...
@@@@@@
சர்தார்களை அநியாயத்துக்கு ஓட்டுறோம். ஆனா உண்மையிலேயே அவங்க ரொம்ப புத்திச்சாலிங்க, திறமைசாலிங்க. ஒரு சர்தார் பிச்சைக்காரனைக் கூட யாரும் பார்க்க முடியாது.
இப்படித்தான்......,
டெல்லியிலே ஒரு டாக்சிகுள்ளே சர்தார் ஜோக்ஸ் சொல்லி சிரித்துகொண்டிருந்தர்கள்.
இறங்குமிடம் வந்தவுடன் டாக்சி டிரைவருக்கு பணம் கொடுத்தனர். டாக்சி டிரைவர் (ஒரு சர்தார்), இவர்களுக்கு ஒரு ருபாய் திருப்பி கொடுத்தான்.
இவர்கள், இந்த பணம் எதுக்கு என்று கேட்டார்கள்.
டிரைவர் சொன்னான் " இந்த ஒரு ரூபாயை எதாவது ஒரு சர்தார் பிச்சைகாரனுக்கு போட்டு விடுங்கள்".
இவர்களும் அந்த ஒரு ரூபாயை வைத்துக்கொண்டு தேடுகிறார்கள் தேடுகிறார்கள் தேடிக்கொண்டே இருக்கிறர்கள் ஒரு சர்தார் பிச்சைகாரனை ...
பயந்து ஓடு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} Empty Re: படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை}

Post by mohaideen Thu Feb 07, 2013 2:11 pm

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} 3202108815படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} 3202108815படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} 3202108815படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} 3202108815படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} 3202108815
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} Empty Re: படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை}

Post by முரளிராஜா Thu Feb 07, 2013 2:11 pm

நீங்க படித்து ரசித்த பெரும்பாலான நகைச்சுவைகள் நம் அமர்க்கல த்திலேயே
உள்ளது நண்பரே

http://www.amarkkalam.net/f52-forum
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} Empty Re: படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை}

Post by முழுமுதலோன் Thu Feb 07, 2013 2:22 pm

நன்றி ஜயா புதிய நகைசுவையோடு பதிப்பிட மீண்டும் வ௫வோம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} Empty Re: படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை}

Post by செந்தில் Thu Feb 07, 2013 3:48 pm

laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} Empty Re: படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை}

Post by ராகவா Thu Feb 07, 2013 4:16 pm

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} 3202108815 படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} 42599183
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை} Empty Re: படித்ததில் சுவைத்தது {நகைச்சுவை}

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum