தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

View previous topic View next topic Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by mohaideen Tue Feb 12, 2013 1:47 pm

அனைவருக்குமே கூந்தல் நன்கு அடர்த்தியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே அதற்காக எத்தனையோ சிகிச்சைகள், செயல்கள் என்று பலவற்றை செய்வார்கள். ஆனால் அனைவருக்குமே இத்தகைய அதிர்ஷ்டம் இருக்காது. தற்போது நிறைய பேர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கூந்தல் உதிர்தல் அதிகமானதால், சிலருக்கு வலுக்கை தலை கூட வந்துவிட்டது. அதுவும் இத்தகைய வலுக்கை பிரச்சனை இளமையிலேயே வந்திருப்பது தான் மிகவும் கொடுமையானது. எனவே கூந்தல் உதிர்தல் பிரச்சனை ஆரம்பித்துவிட்டால், உடனே அதற்கான தீர்வை பெறுவதற்கு முயல்வது மிகவும் அவசியமாகிறது.

இத்தகைய கூந்தல் உதிர்தல் பிரச்சனை வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவை முதுமை வயது, சில மருந்துகளின் பக்கவிளைவுகள், கர்ப்பம் மற்றும் மாதவிடாயின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதிகமான மாசுக்கள், அதிகப்படியான கெமிக்கல்களைப் பயன்படுத்துவது என்று பல. ஆனால் இத்தகைய காரணங்களால் ஏற்படும் பிரச்சனையை கட்டுப்படுத்தவோ அல்லது உதிர்தலின் அளவை குறைக்கவோ முடியும். இதற்கு இயற்கை முறைகள் தான் சிறந்தது. அதிலும் ஒருசில ஆயுர்வேதத்தில் பயன்படுத்தும் மூலிகைப் பொருட்கள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும்.

இப்போது கூந்தல் உதிர்தலைத் தடுக்கும், அத்தகைய முத்தான பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை முறையாகப் பின்பற்றி, கூந்தல் உதிர்தலைத் தடுத்து, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெற முடியும். சரி, அதனைப் பார்ப்போமா!!!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by mohaideen Tue Feb 12, 2013 1:47 pm

நெல்லிக்காய்


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! 12-1360654674-amla-600


ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் அதிகம் பயன்படுகிறது. ஏனெனில் இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. எனவே கூந்தல் உதிர்தல் பிரச்சனை உள்ளவர்கள், நெல்லிக்காயை அரைத்து, அதன் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம். அதிலும் இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம். மேலும் தினமும் நெல்லிக்காயை கொதிக்கும் நீரில் நறுக்கிப் போட்டு, 30 நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்டி, தினமும் தலைக்கு ஊற்றி குளித்து வந்தால், கூந்தல் உதிர்தல் நின்று, கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி, தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு மிகவும் நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by mohaideen Tue Feb 12, 2013 1:48 pm

வெங்காயம்


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! 12-1360654694-onion


பச்சை வெங்காயம் கூந்தலுக்கு மிகவும் சிறந்த ஒரு பொருள். அதற்கு தினமும் வெங்காயத்தை அரைத்து, அதன் சாற்றை, தலையில் தடவி, மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, குளித்தால், தலையில் உள்ள பொடுகு நீங்கி, கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by mohaideen Tue Feb 12, 2013 1:48 pm

இஞ்சி


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! 12-1360654708-ginger


இஞ்சி பலனுக்கு அளவே இல்லை. இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, கூந்தலுக்கும் ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது. எனவே இஞ்சியின் சாற்றை எடுத்து, தினமும் ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து வந்தால், தடைபட்டிருந்த கூந்தல் வளர்ச்சி மீண்டும் நன்கு ஆரோக்கியத்துடன் வளரும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by mohaideen Tue Feb 12, 2013 1:49 pm

செம்பருத்தி


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! 12-1360654724-hibiscus

கூந்தலை ஆரோக்கியத்துடன் வைப்பதிலும், கூந்தல் உதிர்தலைத் தடுப்பதிலும் செம்பருத்தி முக்கியப் பங்கினை வகிக்கிறது. அதிலும் செம்பருத்தியின் இலை மற்றும் பூ இரண்டுமே சிறந்தது. அதற்கு செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். மேலும் இதனை தொடர்ந்து செய்து வருவதால், கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, நரை முடி வருவதையும் தடுக்கும். அதிலும் செம்பருத்தியின் பூ மற்றும் இலைகளை அரைத்து பேஸ்ட் செய்ததை, காய வைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து, தினமும் தலைக்கு தடவி வந்தால், கூந்தல் நன்கு அடர்த்தியாக வளரும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by mohaideen Tue Feb 12, 2013 1:50 pm

கறிவேப்பிலை


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! 12-1360654740-curryleaves


கூந்தல் உதிர்தலைத் தடுப்பதில் கறிவேப்பிலையும் மிகவும் சிறந்த பொருள். ஆகவே கறிவேப்பிலையை அரைத்து, அதனை கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், அதில் உள்ள ஆன்டி-செப்டிக் பொருள், தலையில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகளை அழித்து, கூந்தல் வளர்ச்சி அதிகரித்து, பொடுகுத் தொல்லையையும் நீக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by mohaideen Tue Feb 12, 2013 1:50 pm

பாதாம்


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! 12-1360654752-almond


பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே இரவில் படுக்கும் போது பாதாமை நீரில் ஊற வைத்து, காலையில் அந்த பாதாமை அரைத்து, பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, சாதாரண நீரில் அலச வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதோடு, கூந்தலும் அடர்த்தியாக வளரும். வேண்டுமெனில் பாதாம் எண்ணெயை தினமும் கூந்தலில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தல் உதிர்தல் நின்று, நன்கு வளரும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by mohaideen Tue Feb 12, 2013 1:51 pm

கொத்தமல்லி இலை


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! 12-1360654770-corianderleaves


ஆயுர்வேதத்தில் கூந்தல் உதிர்தலைத் தடுக்க கொத்தமல்லியை பயன்படுத்துவார்கள். அதிலும் கொத்தமல்லியை அரைத்து, அதில் சிறிது பாதாம் எண்ணெய் மற்றும் செம்பருத்திப்பூ பேஸ்ட் கலந்து, கூந்தலுக்கு தடவினால், கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். இந்த முறையை வாரத்திற்கு 1-2 முறை செய்ய வேண்டும். வேண்டுமென்றால், கொத்தமல்லி சாற்றை தலைக்கு குளிக்கும் முன் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்தும் குளிக்கலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by mohaideen Tue Feb 12, 2013 1:51 pm

லாவண்டர் எண்ணெய்


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! 12-1360654788-lavenderoil


ஆய்வுகளில் பலவற்றில் லாவண்டர் எண்ணெயில் கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் சக்தி அதிகம் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே லாவண்டர் எண்ணெயை வைத்து, தினமும் ஸ்கால்ப்பில் தடவி, மசாஜ் செய்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தல் உதிர்தல் நின்றுவிடும். அதுமட்டுமின்றி, இவ்வாறு தினமும் செய்வதால், கூந்தல் உதிர்தலுக்கு காரணமான மனஅழுத்தமும் குறையும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by mohaideen Tue Feb 12, 2013 1:52 pm

வேப்பிலை


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! 12-1360654804-neemleaves


வேப்பிலையின் நன்மைகளை சொல்லவா வேண்டும். அதிலும் கூந்தல் உதிர்தலில் இதன் நன்மைக்கு அளவே இல்லை. எனவே கூந்தல் உதிர்தல் இருப்பவர்கள், வேப்பிலையை கொதிக்கும் நீரில் போட்டு, பின் அந்த இலைகளை எடுத்து அரைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்து. 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில், ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் உள்ள பாக்டீரியா நீங்கி, கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by mohaideen Tue Feb 12, 2013 1:52 pm

ரோஸ்மேரி


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! 12-1360654822-rosemary


மூலிகைகளில் ரோஸ்மேரி ஒரு சிறந்த மூலிகைச் செடி. அதிலும் ரோஸ்மேரியின் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பயாடிக் போன்றவை அதிகம் இருப்பதால், அவை மயிர் கால்களை வலுவாக்கி, கூந்தல் உதிர்தலை தடுக்கும். ஆகவே ரோஸ்மேரியின் எண்ணெயை வைத்து, தினமும் மசாஜ் செய்தால், நிச்சயம் கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by mohaideen Tue Feb 12, 2013 1:53 pm

அவகேடோ மற்றும் தேங்காய் எண்ணெய்


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! 12-1360654841-avocadoandcoconutoil


இந்த இரண்டும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. இவற்றை தலைக்கு பயன்படுத்தினால், விரைவில் கூந்தல் உதிர்தல் நின்றுவிடும். அதற்கு அவகேடோவை அரைத்து காய வைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு, தினமும் அதனை தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by mohaideen Tue Feb 12, 2013 1:53 pm

ஆலிவ்


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! 12-1360654876-oliveoil


ஆலிவ் மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டுமே கூந்தல் உதிர்தலை நிறுத்தி, அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். ஆகவே ஆலிவை வெட்டி, கொதிக்கும் நீரில் போட்டு, மென்மையாக வேக வைத்து, பின் அதனை எடுத்து, அரைத்து, அந்த பேஸ்ட்டை கூந்தலுக்கு தடவினால், நல்ல பலனை பெறலாம். இல்லையெனில் ஆலிவ் ஆயிலை தலைக்கு தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால், சில நாட்களில் கூந்தல் உதிர்தலில் உள்ள மாற்றத்தை நன்கு அறியலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by mohaideen Tue Feb 12, 2013 1:54 pm

கேரட் ஜூஸ்


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! 12-1360654890-carrotjuice


கூந்தல் உதிர்தலைத் தடுக்க, நிறைய தண்ணீர் மற்றும் காய்கறி அல்லது பழச்சாற்றை குடிக்க வேண்டும். குறிப்பாக, கேரட் ஜூஸ் குடிப்பதால், அதில் உள்ள கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்திற்கும், கூந்தலுக்கும் நிறைய நன்மைகளைத் தருகிறது. எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by mohaideen Tue Feb 12, 2013 1:55 pm

அதிமதுர இலை


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! 12-1360654976-licoriceleaves-600


அதிமதுரத்தின் இலை மற்றும் வேர் இரண்டுமே கூந்தலுக்கு நன்மையை தருவது. ஆகவே வாரத்தில் இரண்டு முறை, அதிமதுரத்தின் இலை அல்லது வேரை அரைத்து, சாறு எடுத்து, ஸ்கால்ப்பில் தடவி வந்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.

http://tamil.boldsky.com/beauty/hair-care/2013/herbal-remedy-hair-loss-002692.html#slide74916
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by ragu Tue Feb 12, 2013 2:49 pm

பயனுள்ள குறிப்புகள் கைதட்டல்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by ரானுஜா Tue Feb 12, 2013 4:33 pm

ஆக எல்லாத்திலயும் ட்ரை பண்ணச் சொல்றிங்க கைதட்டல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by பூ.சசிகுமார் Tue Feb 12, 2013 5:15 pm

ரானுஜா wrote:ஆக எல்லாத்திலயும் ட்ரை பண்ணச் சொல்றிங்க கைதட்டல்


உங்கள சொல்லவில்லை அக்கா கூந்தல் உள்ளவர்கள் முயற்சி செய்து பாக்கலாம் தப்பா புரிந்து கொண்டீர்களே நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by செந்தில் Tue Feb 12, 2013 5:16 pm

பூ.சசிகுமார் wrote:
ரானுஜா wrote:ஆக எல்லாத்திலயும் ட்ரை பண்ணச் சொல்றிங்க கைதட்டல்


உங்கள சொல்லவில்லை அக்கா கூந்தல் உள்ளவர்கள் முயற்சி செய்து பாக்கலாம் தப்பா புரிந்து கொண்டீர்களே நக்கல்
laugh laugh laugh பயந்து ஓடு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by ரானுஜா Tue Feb 12, 2013 5:41 pm

பூ.சசிகுமார் wrote:
ரானுஜா wrote:ஆக எல்லாத்திலயும் ட்ரை பண்ணச் சொல்றிங்க கைதட்டல்


உங்கள சொல்லவில்லை அக்கா கூந்தல் உள்ளவர்கள் முயற்சி செய்து பாக்கலாம் தப்பா புரிந்து கொண்டீர்களே நக்கல்

மொட்டைத் தலையோடவே இருக்கிங்களே நீங்க ட்ரை பண்ணிப் பாருங்களேன் laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by ஜேக் Tue Feb 12, 2013 8:25 pm

இப்பகுதியில் முரளி பின்னூட்டமிடாததன் ரகசியம் நானறிவேன் கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! 1319426555
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by பூ.சசிகுமார் Thu Feb 14, 2013 10:20 am

ஜேக் wrote:இப்பகுதியில் முரளி பின்னூட்டமிடாததன் ரகசியம் நானறிவேன் கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! 1319426555


நானும் ரொம்ப ஜாலி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by பூ.சசிகுமார் Thu Feb 14, 2013 10:23 am

ரானுஜா wrote:
பூ.சசிகுமார் wrote:
ரானுஜா wrote:ஆக எல்லாத்திலயும் ட்ரை பண்ணச் சொல்றிங்க கைதட்டல்


உங்கள சொல்லவில்லை அக்கா கூந்தல் உள்ளவர்கள் முயற்சி செய்து பாக்கலாம் தப்பா புரிந்து கொண்டீர்களே நக்கல்

மொட்டைத் தலையோடவே இருக்கிங்களே நீங்க ட்ரை பண்ணிப் பாருங்களேன் laugh


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Sasiss

ரொம்ப ஜாலி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum