தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம்.

View previous topic View next topic Go down

தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம். Empty தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம்.

Post by முழுமுதலோன் Fri Mar 22, 2013 7:18 pm

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

இன்று தமிழ்...தமிழ் என்று பலர் (நம்மையும் சேர்த்து) முழக்கமிடுவதைக் காண்கிறோம். தமிழ் மொழி என்பது தெய்வமொழி. மற்ற எந்த ஒரு மொழிக்கும் இந்த அடைமொழி கிடையாது. சாத்தூர் சேகரன் என்ற மொழியியல் அறிஞர் கூற்றுப்படி உலகில் இரண்டே மொழிகள்தான். ஒன்று தமிழ். மற்றொன்று திரிந்த தமிழ்.

தனி ஒரு மனிதன் மாறும் போது சமுதாயமும் மாறுகிறது. பெரும் பான்மையான தனி மனிதர்களின் எண்ணமே நம் எதிரே சமுதாயத்தில் பிரதிபலிக்கிறது. நாம் சமுதாயம் மோசமாகிவிட்டது என்று சொல்கிறோம். உண்மையில் நாம்தான் மோசமாகி விட்டோம்.

தமிழ் வாழ்க என்று சொல்லும் தலைவர்கள், கவிஞர்கள், ஆர்வலர்கள்... உண்மையில் தமிழை வாழ வைக்கிறார்களா? அல்லது தமிழால் அவர்கள் வாழ்கிறார்களா?....தேவையில்லை இந்த வாதம் நமக்கு.

மொழி என்ன செய்தது நமக்கு என்பதை விட நாம் என்ன செய்தோம் நம் மொழிக்கு என்று பார்க்கலாம். இதற்காக மாநாடு, போராட்டம், பந்தா... இவையெல்லாம் செய்யவேண்டியதில்லை. சிறிய உத்திகளைக் கையாண்டாலே போதும். உறவுகளும் தங்களுக்குத் தெரிந்த உத்திகளைச் சொல்லுங்கள். தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம்.

1. கையொப்பம் தமிழில் இடுங்கள். ஆங்கிலத்தில் இட்டு பழகி விட்டது என்று சொல்லாதீர்கள். மாற்றிக் கொள்ளுங்கள்! நமது மொழியை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் இடுவது அவமானம் என்று உணருங்கள்.

ஏற்கனவே ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதால் சட்டப்பூர்வமாக செல்லாது என்பவர்களுக்கு:- நீங்கள் இன்றிலிருந்து கூட மாற்றலாம். உங்களது வங்கிக்கு ஒரு கடிதம் கொடுங்கள். பின்னர் எல்லா இடங்களிலும் உங்களது தன்மானமுள்ள தமிழ் கையொப்பத்தை இடுங்கள். சட்டப்பூர்வமாக செல்லும்.

உங்களது குழந்தைகளை இப்போதிலிருந்தே தமிழில் கையொப்பமிடுவதை கற்றுக்கொடுங்கள்.

2. உறவுகளை அழைக்கும்போது MUMMY, DADDY, UNCLE, AUNTY … என்பதை விடுத்து தமிழில் நமது முன்னோர்கள் சொல்லிய உறவுப்பெயர்களை வைத்து அழையுங்கள். நமது குழந்தைகளையும் அவ்வாறே பழக்கப்படுத்துங்கள்.
3. எதிராளி தமிழ் தெரிந்தவர் என்றால் தமிழில் மட்டுமே பேசுங்கள். அது நண்பராயிருந்தாலும்...உறவாயிருந்தாலும்...தொழில் ரீதியாக இருந்தாலும்.

4. உங்களது VISITING CARD களை தமிழில் அச்சிடுங்கள். தேவைப்படின் பின்பகுதியில் ஆங்கிலத்தில் அச்சிடுங்கள். VISITING CARD ஐ எதிராளியிடம் அளிக்கும் போது தமிழ் அச்சிட்டிருக்கும் பக்கம் பார்க்குமாறு கொடுங்கள்; அவர் தமிழே தெரியாதவராக இருந்தாலும். அவருக்கு தேவைப்படின் அவர் திருப்பிப் பார்த்துக் கொள்ளட்டும்.

5. உங்கள் LETTER HEAD போன்றவற்றில் நிறுவனம் மற்றும் முகவரிகளை தமிழிலும் அடுத்த மொழியிலும் அச்சிடுங்கள். தமிழை மேலேயும் அடுத்த மொழியை கீழேயும் அச்சிடுங்கள்.

6. நிறுவனத்தின் பெயர்பலகையை தமிழ் மற்றும் வேற்று மொழிகளில் எழுதுங்கள். முதலில் தமிழிலும் அடுத்த மொழியை தமிழ் FONT ல் பாதி அளவாகவும் எழுதுங்கள். இது தமிழ்நாட்டுச் சட்டமும் கூட (TAMILNADU SHOPS AND ESTABLISHMENTS ACT 1948 ). முகவரியையும் தமிழில் எழுதுங்கள்.
7. வங்கிச் சேவைகளில் தமிழ் மட்டுமே பயன்படுத்தவும்.
(எ.கா) ATM சேவையில் தமிழ் இருந்தால் தமிழைப் பயன்படுத்தவும். நீங்கள் பயன்படுத்தும் காசோலைகளில் தமிழில் மட்டுமே எழுதவும். படிவங்களில் தமிழில் எழுதவும்.

8. மற்ற அலுவலகங்களுக்குச் செல்லும்போது உள்ளே செல்லும்போது வருகையாளர் பதிவேடு (VISITOR’S LOGBOOK) வைத்திருப்பார்கள். அதில் தமிழில் எழுதுங்கள். எடுத்துக்காட்டு: பெயர், உங்களது நிறுவனம், பார்க்கவேண்டிய நபர், நோக்கம், கையெழுத்து.. இன்னும் பிற.

9. சொந்த வீட்டின் வெளியே உங்கள் பெயரை கல்லால் செதுக்கும்போது முகவரியையும் சேர்த்து தமிழில் எழுதுங்கள்.

10. வெளியூருக்குச் (தமிழ்நாட்டுக்குள்) சென்று விடுதிகளில் (LODGE) தங்கும்போது, பதிவேடு (GUEST REGISTER) வைத்திருப்பார்கள். அதில் தமிழில் எழுதுங்கள். எடுத்துக்காட்டு: பெயர், முகவரி, வந்த நோக்கம், கையெழுத்து.. இன்னும் பிற.

11. செல்பேசி (அ) தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் போது தமிழில் சொல்லுங்கள். அதாவது உங்கள் எண் 94440 94440 என்று இருந்தால் தொண்ணூற்று நான்கு...நானூற்று நாற்பது... தொண்ணூற்று நான்கு...நானூற்று நாற்பது...என்று தமிழில் சொல்லுங்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். பிறகு பழகிவிடும்.

12. MARIO PUZO, SIDNEY SHELDON….போன்றவர்களின் புத்தகத்தை விடுத்து கையில் எப்போதும் நல்ல தமிழ்ப்புத்தகம் ஏதாவது ஒன்று வைத்திருங்கள். முக்கியமாக அட்டை போட்டு மறைத்துவிடாமல் மற்றவர்களுக்கு தெரிவது போல் எடுத்துச்செல்லுங்கள்.

13. கோயிலுக்குச் செல்லும்போது தேங்காய் பழத்தோடு அவரவர் சமய தமிழ்ப்புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள். (எ.கா.) தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவை.

14. வீடுகளில் மாட்டும் நாட்காட்டி மற்றும் சுயமுன்னேற்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தமிழில் இருந்தால் மட்டும் மாட்டுங்கள். இல்லாவிட்டால் சுவர் சும்மாவாவது இருக்கட்டும்.

15. குழந்தைகள் பெரியவர்கள் போடும் பனியன்களில் தமிழ் வாசகங்கள் இருந்தால் மட்டும் அணிவியுங்கள்...அணியுங்கள்.(ஆங்கிலத்தில் எழுதியுள்ள வாசகங்களை அணிந்துள்ளவர்களிடம் அதை தமிழில் சொல்லுங்கள் என்று கேளுங்கள். அந்த வாசகங்கள் எவ்வளவு ஆபாசமானது.. அர்த்தமற்றது என்பதை அவர்கள் உணர்வார்கள். ஓர் இளம்பெண் அணிந்திருந்த T SHIRTல் எழுதியிருந்த வாசகம்: THIS MUCH I EAT ....!).
முதலில் குழந்தைகளை தமிழ் வழி பள்ளியில் படிக்க வையுங்கள் போதும்.

இரு நாட்களுக்கு முன்பு நமது ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் "தமிழை யாரும் வளர்க்கவில்லை. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தான் வளர்த்து வருகின்றனர் " என்று கூரியது நினைவிருக்கும்.

நல்ல படிப்பு என்றால் இங்கிலீஷ் மீடியத்தில் படிப்பது தான் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். படிப்பு முடித்து வேலை தேடும் போது வேலை கொடுக்கும் நிறுவனங்கள் யாரும் நீ எந்த மீடியத்தில் படித்தாய் என்று கேட்பதில்லை, உனக்கு என்ன திறமை இருக்கு என்று தான் கேட்பார்கள்.

அகவே குழந்தைகள் தங்கள் திறமை வளர்த்துக்கொள்ள உதவிடுங்கள்.

ஆங்கிலமும் அவசியம் அதற்கு அவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெரும் வண்ணம் சிறப்பு பயிற்சி கொடுங்கள்.


தகவல் தமிழ் (Wonder Tamil)

[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம். Empty Re: தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம்.

Post by ஸ்ரீராம் Fri Mar 22, 2013 7:20 pm

பகிர்வும் தமிழ் அகராதியும் அருமை
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம். Empty Re: தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம்.

Post by Kingstar Sat Mar 23, 2013 10:55 am

நிச்சயம் தமிழ் வளர நாம் அனைவருமே இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம். Empty Re: தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம்.

Post by முரளிராஜா Sat Mar 23, 2013 4:37 pm

தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம். சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம். Empty Re: தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம்.

Post by ragu Sat Mar 23, 2013 8:52 pm

கைதட்டல் சூப்பர்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம். Empty Re: தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம்.

Post by பூ.சசிகுமார் Sun Mar 24, 2013 9:21 am

கைதட்டல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம். Empty Re: தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum