தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர்

View previous topic View next topic Go down

சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர் Empty சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர்

Post by மகா பிரபு Fri Apr 05, 2013 5:35 pm

[You must be registered and logged in to see this image.]

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஒரு நாடா? ஒரு சிறு நகரமா அல்லது ஒரு நகர நாடா? இப்படி தெற்கிலிருந்து வடக்கே 30 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து விட முடியும் என்ற சாத்தியங்கள் இருக்கும் ஒரு சிறிய நகரம் ஒரு தனி நாடாக வளர்ந்து இன்று வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாக, உலகில் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக, மக்கள் வசதியாக வாழக் கூடிய நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இங்கு குடியேறிய புதிதில் பல ஆச்சரியங்களைக் கொடுத்தது இந்நகர வாழ்க்கை. அந்த ஆச்சரியங்கள் சலிப்புத் தட்டத் தொடங்கும் போது இன்னும் அதிக உத்வேகத்தோடு புதிய மாற்றங்களைத் தந்தது.

அடிக்கடி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன் முகத்தை அழகு படுத்திக் கொள்ளும் பணக்கார வீட்டு வாலிபன் போல் ஒரு முறை காட்டிய முகத்தை மாற்றிக் கொண்டு வெவ்வேறு முகங்களைக் காட்டியது. இன்றையிலிருந்து இரு நூறு வருடங்களுக்கு முன்னால், இன்னும் சற்று துல்லியமாகச் சொன்னால் 193 வருடங்களுக்கு முன்னால் ஃபிப்ரவரி மாதம் சிங்கப்பூர் என்ற சிறு தீவு மீண்டும் உயிர் பெற்றது. அந்த வரலாறு பற்றி நகரத்தின் கதையில்!!!!!!!

இந்த தொடர் உயிர்மை.காம் இல் வெளியானது.


Last edited by மகா பிரபு on Sat Apr 06, 2013 7:01 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர் Empty Re: சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர்

Post by மகா பிரபு Fri Apr 05, 2013 5:36 pm

பிப்ரவரி 6, 1819 (6-2-1819) ஜோகூர் சுல்தானிடமிருந்து 5,000 ஸ்பானிஷ் டாலருக்கு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிழக்கிந்தியக் கம்பெனியால் குத்தகைக்கு எடுக்கப்பட்டது சிங்கப்பூர். மேலும் ஆங்கிலேய அரசு ஜோகூர் சுல்தானுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தது. ஆளரவமற்ற சிங்கப்பூரின் தெற்குக் கடற்கரையில் யூனியன் ஜாக் என்று அழைக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டுக் கொடி பறக்கவிடப்பட்டது.

ஜனவரி 28 ஆம் நாள் மாலை சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் இருக்கும் செயிண்ட் ஜான் தீவில் பென்கூலன் லெஃப்டினெண்ட் கவர்னர் ராபிள்ஸ் இறங்கினார். ராணுவத் தளபதி வில்லியம் ஃபர்குவாரின் உதவியுடன் உள்ளூர் தலைவன் தெமெங்கெங் அப்துல் ரஹ்மானைச் சந்தித்தார். சிங்கப்பூரில் ஒரு தொழிற்சாலை கட்டுவதற்கு சம்மதம் கேட்டார். அவர் சம்மதத்துடன் ஜனவர் 29ஆம் தேதி தற்காலிகமாக சிங்கப்பூரில் இங்கிலாந்து நாட்டுக் கொடி பறக்கவிடப்பட்டது. பின்னர் முறைப்படி ஜோகூர் சுல்தானைச் சந்தித்து ஆவணங்கள் எழுதப்பட்டு அதிகாரப்பூர்வமாக சிங்கப்பூர் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமானது. கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தகத்திற்கு மலேயாவில் ஏற்கனவே பினாங்குத் துறைமுகம், சுமத்ராவில் பென்கூலன் போன்ற இடங்கள் இருந்தன. இருந்தாலும் அவர்கள் வர்த்தகத்திற்கு மற்றுமொரு துறைமுகம் இன்னும் சற்று வசதியான இடத்தில் தேவைப்பட்டது. ஜனவரி 19ஆம் தேதி 1819ஆம் ஆண்டு ‘தி இந்தியானா அண்ட் எண்டர்பிரைஸ்’ என்ற கப்பலில் மலாக்காவிற்குத் தெற்கே ஒரு துறைமுகத்தைத் தேடிப் புறப்பட்டது.அதில் கேப்டன் ஜேம்ஸ் பேர்லின் ஆணைப்படி ராஃபிள்ஸும், ஃபர்குவாரும் ஆங்கில அரசுக்கு ஒரு புதிய குடியேற்றத்தைத் தேடிப் புறப்பட்டனர். ஜனவரி 27ஆம் தேதி கரிமூன் தீவைத் தேர்ந்தெடுக்கலாமா என்று வில்லியம் ஃபர்குவாரின் யோசனை நிராகரிக்கப்பட்டது. மறு நாள் 28ஆம் தேதி மாலை சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் இருக்கும் செயிண்ட் ஜான் தீவில் கப்பல் நிறுத்தப்பட்டது. இந்தக் கணத்திலிருந்து நவீன சிங்கப்பூரின் வளர்ச்சி தொடங்குகிறது. சிங்கப்பூரைத் திட்டமிட்ட ஒரு அழகிய துறைமுக நகரமாக்க ராபிள்ஸ் கண்ட கனவின் கதை இது.

தாமஸ் ஸ்டாம்ஃபொர்ட் ராஃபிள்ஸ் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாதாரண எழுத்தராக தன் பதினான்காம் வயதில் கிழக்கிந்தியக் கம்பெனியில் சேர்ந்தார். தனது 24 ஆம் வயதில் துணைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்று தன் புது மனைவியான ஒலிவியாவுடன் பினாங்கிற்குப் புறப்பட்டார். கிட்டத்தட்ட ஆறுமாதக் காலக் கப்பல் பயணம். புது மாப்பிள்ளையான ராஃபிள்ஸ் தன் மனைவியுடன் தேனிலவைக் கொண்டாட ஒரு அருமையான வாய்ப்பு என்று எண்ணவில்லை. அப்போது புதிதாக கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து மலேயா தீபகற்பத்திற்குச் சென்று கொண்டிருந்த அலுவலுக அதிகாரிகள் கொண்ட குழாமில் யாருக்கும் மலாய் மொழி தெரியாது. இதை உணர்ந்த ராஃபிள்ஸ் அந்த ஆறு மாதப் பயணத்தை தனக்கு மலாய் மொழி கற்கக் கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு என்று தன் சொந்த முயற்சியால் மலாய் மொழியைப் பேசவும் படிக்கவும் கற்றுக் கொண்டார். இதனால் பினாங்கு போனதும் துணைச் செயலாளராக வேலைக்குச் சேர்ந்தவர் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றார். அதனுடன் உள்ளூர் மக்களுடன் ஆங்கிலேய ஆளுனர்களும் பிரபுக்களும் பேசிப் பழக மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

[You must be registered and logged in to see this image.]

1807ஆம் ஆண்டிலிருந்து 1819 ஆண்டுவரை பன்னிரெண்டு ஆண்டுகளில் பினாங்கில் ஐந்து ஆளுனர்கள் மாறி மாறி ஆட்சி செய்தனர். இத்தனை ஆளுனர்கள் மாறியதற்கு என்ன காரணம்? ஐரோப்பிய மித தட்ப வெப்பப் பருவ நிலையில் பிறந்து வளர்ந்த ஆங்கிலேயர்களால் மலேயா தீபகற்பத்தின் கடுமையான வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. மழைக்காடுகள் நிறைந்த மலேயா தீபகற்பத்தில் பல வகையான தாவரங்கள், விலங்குகள். இவை இறந்து மக்கிப் போகும்போது ஏற்பட்ட வெப்பம், பல வித உயிரினங்கள் அவற்றை சிதைக்கும்போது திசுக்கள் அழுகலால் ஏற்படும் ஒரு வித முடை நாற்றம், சுகாதாரமற்ற சுற்றுப்புறச் சூழலால் வயிற்றுப் போக்கு,கடுமையான காய்ச்சல், மலேரியா பரப்பும் கொசுக்கள் இவற்றைத் தாங்க முடியாமல் பினாங்குத் தீவுக்கு வந்த ஆளுனர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக மாண்டனர். ஆலோசனை உறுப்பினர்கள், பினாங்குக்கு பிழைப்புத் தேடி வந்த ஐரோப்பியர்கள் எனப் பலர் இத்தகைய ஆரோக்கியமற்ற சூழலால் உடல் நலம் கெட்டு மாண்டனர். இப்படிப்பட்ட சூழலில் ராபிஃள்ஸுக்கும் உடல் நலம் கெட்டது. பினாங்கிலிருந்து மலாக்கா வந்து தங்கினார். அப்போது மலாக்காவை ஆங்கில அரசுக்குக் கீழ் கொண்டு வந்தால் அது மலேயா முழுதும் ஆங்கில ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரும் திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று பரிந்துரைத்தார்.

உலகிலேயே மிக அதிகமான உயிரினங்கள் வாழ உகந்த இடம் வெப்பமண்டல மழைக்காடுகள் கொண்ட இடங்கள். பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தப் பிரதேசங்களில் வருடம் முழுவதும் மழை. எனவே தேவைக்கு அதிகமாகத் தண்ணீர். பருவ நிலை மாற்றம் இல்லாமல் வருடம் முழுவதும் சீரான வெப்பம். பலவித தாவரங்கள், விலங்குகள் வாழும் இந்தப் பிரதேசம் ஐரோப்பியர்கள் வாழ உகந்ததாக இல்லை. இதனால் பல ஆளுனர்கள் இங்கிலாந்திலிருந்து தென்கிழக்கு ஆசியாவுக்கு வரப் பயந்தனர். வந்தவர்களும் எப்போது இங்கிலாந்து திரும்பிச் செல்வோம் என்று காத்திருந்தனர். ராபிஃள்ஸுக்கும் இதைப் போன்ற ஒரு காத்திருத்தலின் முடிவில் அவரது முடிவும் அமைந்தது.
(தொடரும்)
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர் Empty Re: சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர்

Post by ஸ்ரீராம் Fri Apr 05, 2013 10:15 pm

நல்ல தொடர் தம்பி.... தொடருங்கள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர் Empty Re: சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 06, 2013 9:54 am

வளர்ந்து உச்சத்தில் இருக்கிறது... உச்சத்தில் இருப்பது எதுவும் பின்னர் வீழும் என்பதும் உண்மையே... பார்ப்போம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர் Empty Re: சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர்

Post by மகா பிரபு Wed Apr 10, 2013 5:11 pm

சென்ற பதிவில் ராஃபிள்ஸ் சிங்கப்பூர் என்ற இயற்கையாக அமைந்த துறைமுகத்தை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பதைப் பார்த்தோம். சிங்கப்பூருக்குத் சற்று தெற்கே அமைந்திருந்த கரீமூன் தீவு சிங்கப்பூரைப் போல வளர்ந்திருக்க வேண்டிய சாத்தியங்களைக் கடந்து அது அப்படியே இருக்க, இன்று சிங்கப்பூர் கதையைப் படிக்கும் அளவிற்கு சிங்கப்பூர் வளர்ந்திருக்கிறது.

அக்கால கடலோடிகள் தாங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த நாட்டிற்கு இவர்களாக முயன்று ஒரு கடல் வழிப் பாதை கண்டுபிடித்துச் சென்றடைந்தனர். கொலம்பஸ் இந்தியாவுக்கும் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கடல் வழியே செல்வதற்கு ஒரு புதிய பாதை கண்டுபிடிக்க முயன்று அமெரிக்காவை அடைந்தார். அந்தப் புதிய பூமியை அவர் தான் சாகும் வரை ஆசிய கண்டத்தின் ஒரு பகுதியாகவே, ஆசியாவின் கிழக்குப் பகுதி என்று நினைத்திருந்தார். அங்கே ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினர் சற்று செந்நிறமாக இருந்ததால் சிவப்பிந்தியர்கள் என்று அழைத்தார். கொலம்பஸ் அமெரிக்கா என்ற புது உலகத்தை மட்டும் ஐரோப்பியர்களுக்கு அறிமுகம் செய்யவில்லை. சிஃபிலிஸ் என்ற பால்வினை நோயையும் ஐரோப்பா முழுவதும் அறிமுகம் செய்தார். 13 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் சிஃபிலிஸ் என்ற பால்வினை நோய் பரவி பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர் என்று வரலாற்றுக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

ஐரோப்பாவிலிருந்து இப்படிப் பல கடலோடிகள் ஆசியா கண்டத்திற்கு ஒரு எளிமையான கடல் வழிப்பாதை கண்டுபிடிப்பதற்காகப் புறப்பட்டு வேறு பல தீவுகளுக்கும், நாடுகளுக்கும் சென்றிருக்கின்றனர். அப்போது அவர்களுக்குக் கடலைப் பற்றி அறிந்து கொள்ள இருந்த ஒரே கருவி வானம்தான். நிலவு, நட்சத்திரங்கள், கோள்கள், பருவ நிலை மாற்றங்கள் இவற்றைப் பார்த்து தங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்தனர். மேலும் உலகம் உருண்டையானதா தட்டையானதா போன்ற கேள்விகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வந்தது. உலகம் உருண்டைதான் என்று கடலில் நீண்ட தூரம் செல்லும் கடலோடிகள் உணர்ந்தார்கள். தரையைப் போல் கடலில் பயணம் செல்லும் தூரத்தை அளக்கக் கருவிகள் கிடையாது. திசை காட்டும் காந்த ஊசி, கையால் வரையப்பட்ட வரைபடங்கள் போன்ற குறைந்தபட்சக் கருவிகளோடு கப்பல் பயணம் தொடங்கிவிடும். திரும்பி வரும் நாள் யாருக்கும் தெரியாது. நாள் கணக்கில், மாதக் கணக்கில், வருடக் கணக்கில் தொடரும் இந்தத் தேடல் பயணம். உயிருடன் சொந்த நாட்டிற்குத் திரும்பி வருவார்களா இல்லை, போன இடத்திலேயே தங்கி எஞ்சிய வாழ்நாளை கழித்து விடுவார்களா என்பது யாருக்கும் தெரியாது. கப்பல் புயலில் சிக்கி எப்போது வேண்டுமானாலும் மூழ்கி விடலாம். தரையிறங்கிய புதிய நிலத்திலும் இவர்கள் வரவேற்கப்படுகிறார்களா இல்லை எதிரிகள் என்று நினைத்து அந்நிலத்து மக்களால் கொல்லப்படுவார்களா போன்ற நிச்சயமற்ற முடிவுகள். இவை அனைத்தையும் மீறி எதற்காக ஐரோப்பியர்கள் ஆசிய நாடுகளைத் தேடி அலைந்தார்கள்? முதலில் புதிய இடங்களைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம். தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்கள், வைரம், மரகதம், ரத்தினம் போன்ற விலை மதிப்பற்ற கற்கள், பட்டுத் துணிகள், மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, ஜாதிக்காய் போன்ற உணவுக்கு அதிக சுவை ஊட்டும் பொருட்கள், மேலும் உணவைப் பதப்படுத்த உதவும் நறுமணப் பொருட்கள் இவை ஐரோப்பாவில் கிடைக்காத அதிசயப் பொருட்கள். இவற்றைத் தேடி வியாபாரம் செய்ய வந்தவர்கள், வந்த நாட்டில் இருக்கும் உள் நாட்டு அரசியல், பதவிப் போராட்டங்கள், உள்ளூர் மக்களின் அறியாமை போன்றவற்றைப் புரிந்துகொண்டு தாங்கள் விரும்பிய பொருட்களை வாங்கிச் செல்லும் வர்த்தகர்களாக மட்டும் இல்லாமல் அந்த நாட்டையே விலை பேசி வாங்கும் அளவிற்கு முன்னேறினார்கள் என்பதைக் கடந்து வந்த சரித்திரம் சொல்கிறது.

ராஃபிள்ஸ் இங்கிலாந்திலிருந்து ஒரு சாதாரண எழுத்தர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு புது மாப்பிள்ளையாகத் தன் மனைவியுடன் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் பயணம் செய்து பினாங்கிற்கு வந்து சேர்ந்தார் என்பதை முதல் அத்தியாயத்தில் படித்தோம். அப்போது மலாய் மொழியைக் கற்றுக் கொண்டதோடு, மலாயா சரித்திரத்தையும் படித்திருக்கலாம். அப்போதே அவர் மனதில் சிங்கப்பூரைப் பற்றிய ஒரு சித்திரம் உருவாகியிருக்கலாம். ராஃபிள்ஸ் சிங்கப்பூரை விலைக்கு வாங்ககியதற்கு முன்னால் சிங்கப்பூர் என்னவாக இருந்திருக்கும். அவர் பார்த்தபோது வெறும் மழைக் காடுகள் மண்டியிருந்த நிலம். கடற்கரையோரமாகச் சில மீனவர்கள். ஆனால் பத்தாம் நூற்றாண்டில் சில சீனக் கடலோடிகளின் குறிப்புகளில் தெமாசிக் என்ற தீவைப் பற்றிய குறிப்புகள் இருந்தன. தெமாசிக் என்றால் கடல் நகரம் என்று பொருள். கப்பலில் நெடுந்தூரம் பயணம் செய்பவர்கள் இளைப்பாறுவதற்கு ஒரு இடமாக இருந்தது. தெமாசிக் ஒரு மீன்பிடிக் கிராமமாகவும் இருந்து வந்தது.

1299-1347 ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் : சங் நீல உத்தமா என்று அழைக்கப்பட்ட திரி புவனா என்ற இளவரசன் தெமாசிக் என்ற பெயரை மாற்றி சிங்கப்பூர் என்று பெயர் வைத்தான். இன்றைய இந்தோனேசியா, அன்று சுமத்ரா தீவுகள் என்று அழைக்கப்பட்ட தெற்கு சுமத்ராவில் இருக்கும் பெலம்பானைத் தலைநகரமாகக் கொண்டு ஸ்ரீ விஜயாப் பேரரசு ஆட்சி செய்து கொண்டிருந்தது. அந்த வம்சத்தில் வந்த இளவரசன் சங் நீல உத்தாமா கப்பலில் புதிய இடங்களைக் காணும் ஆவலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது தெமாசிக் என்ற தீவுக்குப் பக்கத்தில் கப்பலை நிறுத்தும்படி ஆணையிட்டான். அப்போது கப்பல் பெரிய புயலில் சிக்கிக் கொண்டு தத்தளித்தது. கப்பலில் கடல் நீர் புகுந்தது. கப்பலில் இருக்கும் பொருட்களையெல்லாம் கடலில் வீசியெறிந்தும் கப்பல் மூழ்குவதை நிறுத்த முடியவில்லை. அப்போது சங் நீலா உத்தாமாவாவின் மந்திரி அரசரின் தலைக் கிரீடத்தை எடுத்து கடலில் வீசியெறியச் சொன்னார். உடனே கப்பல் மூழ்காமல் நின்றது. தெமாசிக் தீவுக்குப் பக்கத்தில் இருக்கும் தீவில் தரையிறங்கியதும் கண்ணுக்குத் தெரிந்த காட்டுப் பகுதியில் சிவப்பு நிறத்தில் சிங்கம் போன்ற ஒரு விலங்கைப் பார்த்தான். அது என்ன மிருகம் என்று கேட்டான். உடனே அந்த மந்திரி அந்த விலங்கைச் சிங்கம் என்று சொன்னார். வலிமையின் சின்னமான சிங்கத்தை அந்தத் தீவில் பார்த்தது அவன் வெற்றிக்கு ஒரு நல்ல சகுனமாக நினைத்து அந்தத் தீவை சிங்க நகரம் என்ற பொருளில் ‘சிங்கப்பூரா’ என்று பெயரிட்டான். அன்று முதல் சிங்கப்பூரா ஸ்ரீ விஜயா பேரரசின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. கடல் வழி வாணிகத்தின் முக்கிய மையமாக இருந்தது. சங் நீலா உத்தாமா கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் சிங்கப்பூரை ஆட்சி செய்தான். பெலம்பான், பின்டான், சிங்கப்பூர் என்ற மூன்று நாடுகளின் அரசன் என்ற பொருள் வரும் படி தன்னை திரி புவனா பரமேஸ்வரா என்று அழைத்துக் கொண்டான். அதன் பிறகும் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஸ்ரீ விஜயா அரசின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் இருந்தது.



அதே கால கட்டத்தில் மஜாபாஹிட் என்ற அரசவம்சம் ஜாவாப்பகுதியை ஆண்டு வந்தது. அவர்கள் படையெடுத்து ஸ்ரீ விஜயா வம்சத்தினர் ஆட்சி செய்த சுமத்ரா பகுதியைக் கைப்பற்றத் தொடங்கினர். மாஜாபாஹிட் அரசுக்கு எதிராகப் போர் செய்து தோற்றுப்போன பரமேஸ்வரா சிங்கப்பூரில் வந்து தங்கினான். பெலம்பானைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த ஸ்ரீ விஜயா வம்சத்தைச் சேர்ந்தவன் பரமேஸ்வரா. திரி புவனா சங் நீலா உத்தாமாவாவின் கொள்ளுப் பேரன். அந்தக் காலகட்டத்தில் சயாமியப் படையினர் சிங்கப்பூரைக் கைப்பற்றி தமாகி என்ற ஆளுநரை சிங்கப்பூரை ஆட்சி செய்ய நியமித்தனர். அவருடன் நட்புறவுடன் பழகிப் பின்னர் அவரைக் கொலை செய்த பரமேஸ்வரா சிறிது காலம் சிங்கப்பூர் அருகில் வரும் கப்பல்களைச் சூறையாடி ஒரு கடல் கொள்ளைக்காரன் போல் வாழ்ந்து வந்தான். மீண்டும் மஜாபாஹிட் படையெடுப்பினால் மலாயாவில் இருக்கும் மூவாரில் ஒளிந்து கொண்டு தனக்கென்று ஒரு அரசு அமைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். பின்னர் சிறு கிராமமாக இருந்த மலாக்காவைத் தலைநகரமாக நிர்மாணித்து ஆட்சி செய்தான். ஒரு இஸ்லாமிய இளவரசியைத் திருமணம் செய்து கொண்டதால் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி இஸ்கந்தர் ஷா என்று பெயர் மாற்றிக் கொண்டான்.

மலாக்கா சுல்தானுக்குச் சொந்தமாக இருந்த சிங்கப்பூர் கடைசியாக ஜோகூர் சுல்தானுக்குச் சொந்தமாயிற்று. 1511 ஆம் ஆண்டு மலாக்கா போர்த்துக்கீசியர்களின் குடியேற்றப் பகுதியாக மாறியதும் சிங்கப்பூரின் முக்கியத்துவம் குறைந்தது. மீண்டும் ஒரு சிறிய மீன்பிடிக் கிராமமாக மாறியது.

இந்த பழைய கதைகள் சில மாற்றிச் சொல்லப்பட்டு வருகின்றன. சங் நீலா உத்தாமா தான் வேட்டையாடும்போது பார்த்த விலங்கு சிங்கம் என்று நினைத்ததால் சிங்கப்பூர் என்ற பெயர் வந்தது என்று எளிமையாக ஒரு கதை சொல்லப்படுகிறது. இவை நாடோடிக் கதைகள் போல் வாய் வழியாகச் சொல்லப்பட்டவை. ஆனால் கண்டிப்பாக சிங்கம் போன்ற ஒரு விலங்கைப் பார்த்ததால்தான் சிங்கப்பூர் என்று பெயர் மாற்றம் கண்டது. இத்தனை முறை சிங்கம் என்று குறிப்பிட்டிருந்தோமே உண்மையில் சிங்கங்கள் சிங்கப்பூர் காடுகளில் வசித்ததா? கண்டிப்பாக இல்லை. புலிகள், சிறுத்தைகள், காட்டுப் பூனைகள் போன்ற விலங்குகள் இருந்தன. 1920 ஆம் ஆண்டு வரை புலிகள் வேட்டையாடப்பட்டு வந்தன. புலி வேட்டை, பின்னர் எலி வேட்டை போன்றவை நடந்தன. ஏதோ தூரத்தில் திரிந்த ஒரு மிருகத்தைப் பார்த்து இது என்ன மிருகம் என்று உத்தாமா கேட்க, பக்கத்தில் இருந்த மந்திரி அல்லது கப்பல் தலைவன், மாலுமி, அவனது வேலைக்காரன் இவர்களில் யாராவது அதைச் சரியாகப் பார்க்காமல் சிங்கம் என்று சொல்லியிருக்கலாம். எப்படியோ இந்தத் தவறு புலியூரா என்ற பெயர் கிடைக்காமல் சிங்கப்பூரா என்று பெயர் கிடைத்தற்குக் காரணம் ஆயிற்று.

மலாக்கா என்ற பெயர் கூட மெலாக்கா என்ற மரத்தின் பெயர். மெலாக்கா மரம் என்ன மரம் என்று யோசிக்க வேண்டாம். அந்த ஓசைக்கு ஒத்ததாக ஒரு மரத்தின் பெயர்தான். அது நெல்லிக்காய் மரம். பரமேஸ்வரா இந்த நெல்லிக்காய் மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருக்கும்போது ஒரு சிறிய மான் தன்னைத் துரத்திய வேட்டை நாயிடமிருந்து சண்டையிட்டு தப்பித்து அந்த வேட்டை நாயைப் பக்கத்தில் இருந்த ஆற்றில் தள்ளி விட்டது. இதைப் பார்த்த பரமேஸ்வரா ஆஹா இந்த ஊரில் இருக்கும் மான் குட்டிக்குக் கூட இத்தனை துணிச்சல், வீரம் இருக்கிறதே, இந்த ஊரையே தன் வசிப்பிடமாகக் கொள்ளலாமே என்று தான் தங்கியிருந்த மரத்தின் பெயரையே அந்த ஊருக்கு வைத்து அது பின்னர் மலாக்கா என்ற பெரிய துறைமுகப் பட்டணமாக சரித்திரத்தில் இடம் பெற்றது.

கதை தொடரும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர் Empty Re: சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum