தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம்: கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன்

View previous topic View next topic Go down

நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம்: கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன் Empty நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம்: கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன்

Post by Guest Wed Jul 21, 2010 9:16 am

நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம்: கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன்


சென்னை, ஜூலை. 20-
நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணமாக கிடந்த சிறுவன் சென்னையைச் சேர்ந்ததவன் என்று தெரியவந்துள்ளது.
சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகர் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது பூர்வீகம் கேரளா. இவர் தி.நகர் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிதி நிறுவனத்தில் நிதிப்பிரிவில் மேலாளராக உள்ளார். ஜெயக்குமாரின் மனைவி ஆனந்தி. இவர் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் நிவேதிதா. இவர்களுக்கு 4 வயதில் ஆதித்யா என்ற மகனும் இருந்தான். இவன் விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி. படித்து வந்தான்

ஜெயக்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு டாடா இன்சூரன்ஸ் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலூர் மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த பூவரசி (வயது 26) என்பவர் வேலை பார்த்தார். எம்.எஸ்.சி. பட்டதாரியான பூவரசி, கடன் கேட்கும் நபர்களை விசாரித்து, தகுதி இருப்பவர்களை கண்டறிந்து பேசி கடன் வழங்கும் பணியை செய்து வந்தார். அந்த பிரிவில் ஜெயக்குமார் உயர் அதிகாரியாக இருந்தார். இதனால் ஜெயக்குமாரும், பூவரசியும் அடிக்கடி பேசிக்கொள்ள வேண்டியதிருந்தது. நாளடைவில் அவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. திருமணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தந்தை என்று தெரிந்த பிறகும் ஜெயக்குமாரை பூவரசி திருமணம் செய்து கொள்ள விரும்பினார். பூவரசி வற்புறுத்தலால் ஜெயக்குமாரும், சரி உன்னையும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். இதனால் அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகரித்தது. பல இடங்களுக்கு பூவரசியை ஜெயக்குமார் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் பூவரசி கர்ப்பமானார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் ஜெயக்குமார், அவரை சமரசம் செய்து கர்ப்பத்தை கலைக்க வைத்துவிட்டார்.

பூவரசி, அடிக்கடி விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயக்குமார் வீட்டுக்கு செல்வதுண்டு. ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் என்ற காரணத்தால் பூவரசி மீது ஜெயக்குமார் மனைவி ஆனந்தி சந்தேகப்படவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பூவரசி, ஜெயக்குமாருடனும், அவரது மகள், மகனுடனும் நெருங்கிப் பழகினார். ஜெயக்குமாரின் மகன் ஆதித்யாவை அடிக்கடி வெளியில் அழைத்து சென்று வரும் அளவுக்கு அவர் நெருக்கமாகி இருந்தார். இந்த நிலையில் ஜெயக்குமாரிடம் பூவரசி, தன்னை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். பூவரசியின் பேச்சு ஜெயக்குமாருக்கு இம்சை கொடுப்பதாக இருந்தது. எனவே அவர், எனக்கு குழந்தைகள் உள்ளனர். உன்னை எப்படி நான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறி தட்டிக்கழித்தப்படி இருந்தார்.

திருமணம் ஆகாததால் பூவரசி சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்து பணி புரிந்து வந்தார். கடந்த 17-ந்தேதி காலை ஜெயக்குமாரிடம் பூவரசி போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜெயக்குமார், நான் தி.நகர் ஆபீசில்தான் இருக்கிறேன். பள்ளிக்கூடம் லீவு என்பதால் என்னுடன் ஆதித்யாவும் வந்துள்ளான் என்று கூறி உள்ளார். உடனே பூவரசி, அப்படியா, சரி உங்களிடம் பேச வேண்டும். நான் தி.நகருக்கு வருகிறேன் என்று கூறி புறப்பட்டுச் சென்றார். அங்கு ஜெயக்குமாரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு நான் தங்கி இருக்கும் விடுதியில் விழா ஒன்று நடக்கிறது. சிறுவர்களுக்கு பொம்மை கொடுப்பார்கள். ஆதித்யாவை அழைத்து செல்லட்டுமா? என்று கேட்டார். பூவரசி மீது எந்தவித சந்தேகமும் வராததால் ஜெயக்குமாரும் அவருடன் மகன் ஆதித்யாவை அனுப்பி வைத்தார்.

அன்று மாலை நீண்ட நேரமாகியும் பூவரசியும் ஆதித்யாவும் திரும்பவில்லை. இதனால் பூவரசி செல்போனுக்கு ஜெயக்குமார் தொடர்பு கொண்டார். போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதற்றம் அடைந்த ஜெயக்குமார் வேப்பேரி விடுதிக்கு வந்து விசாரித்தார். அங்கு பூவரசியைக் காணவில்லை. அவரது அறை பூட்டப்பட்டு கிடந்தது. விடுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, பூவரசி ஒரு ஆஸ்பத்திரியில் மயங்கிய நிலையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறினார்கள். இதையடுத்து ஆதித்யா கதி என்ன ஆயிற்று என்ற பதற்றம் ஜெயக்குமாரிடம், அதிகரித்தது. அவர் பதறியடித்தப்படி அந்த ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பூவரசி படுக்கையில் இருந்தார். அவரிடம் என்ன நடந்தது? என்று ஜெயக்குமார் விசாரித்தபோது, நானும் ஆதித்யாவும் பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள அந்தோனியார் கோவில் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தோம். நான் திடீரென்று மயங்கி விழுந்துவிட்டேன். என்னை இந்த ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். ஆதித்யா என்ன ஆனான் என தெரியவில்லை என்று கூறி கதறி அழுதார். இது ஜெயக்குமாருக்கு, கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆதித்யாவை மர்ம மனிதர்கள் யாராவது கடத்திச்சென்று இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டார். இதுபற்றி எஸ்பிளனேடு போலீசில் ஜெயக்குமாரும், பூவரசியும் புகார் செய்தனர். எஸ்பிளனேடு போலீசார் 17-ந் தேதி இரவு விசாரணையை தொடங்கினார்கள். பூவரசியிடம் விசாரணை நடத்திய பிறகு இரவு 11 மணிக்கு விடுதிக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
இந்த நிலையில் மறுநாள் (18-ந்தேதி) நாகை பஸ் நிலையத்தில் ஒரு சிறுவனை யாரோ கொலை செய்து, சூட்கேசில் பிணத்தை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கேட்பாரற்று கிடந்த அந்த சூட்கேசில் துணியால் அந்த சிறுவன் உடல் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவன் நீலநிற டி-சர்ட்டும், நீலம் மற்றும் வெள்ளை கலர்களில் பேண்டும், நீலக்கலரில் பூப்போட்ட உள்ளாடையும் அணிந்திருந்தது தெரியவந்தது. இந்த தகவலை நேற்று காலை செய்தித்தாள்களில் பார்த்த போலீசார் அது, ஆதித்யாவாக இருக்குமோ என்று சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து எஸ்பிளனேடு போலீசார் ஜெயக்குமார் மனைவி ஆனந்தியை நாகை அழைத்து சென்றனர். நாகை பஸ் நிலையத்தில் சூட்கேசில் இருந்த சிறுவனின் உடல் நாகை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று சிறுவன் உடலை பார்த்த மறுவினாடியே, அய்யோ இது மகன்தான் என்று ஆனந்தி கதறித் துடித்தார். ஆசை, ஆசையாக வளர்த்த செல்ல மகன், கொடூரமாக கொல்லப்பட்டு, பிணக்கோலத்தில் கிடப்பதை கண்டு தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார். மயக்கம் தெளிந்து எழுந்ததும் ஆனந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கடுமையான சோகம் காரணமாக ஆனந்தியால் நிதானமாக போலீசாரிடம் எந்த தகவலையும் தெரிவிக்க இயலவில்லை.

சிறுவன் ஆதித்யா மிக, மிகக்கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தான். அவனது கண்கள் தோண்டி எடுக்கப்பட்டிருந்தன. நாடா கயிற்றால் அவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தான். அதன் பிறகும் அவன் உயிர் பிழைத்து விடக்கூடாது என்பதற்காக அவன் முகம் பாலிதீன் கவரினால் மூடி கட்டப்பட்டிருந்தது. அவனை, யார், எதற்காக கடத்தி கொலை செய்தனர்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். ஆதித்யாவை அழைத்து சென்ற பூவரசி மீது போலீசாருக்கு தொடக்கத்தில் இருந்தே சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசவுந்தரி விசாரணையை தீவிரப்படுத்தினார். நேற்று முழுக்க அவர் விசாரிக்கப்பட்டார். அப்போது சில கேள்விகளுக்கு அவர் முன்னுக்கு பின் முரணாக உளறியபடி பதில் அளித்தார். ஆதித்யாவை வெளியில் அழைத்து சென்றது ஏன் என்ற கேள்விக்கு அவர் 2 விதமான பதில் சொன்னார்.
விடுதியில் நடக்கும் விழாவுக்காக ஆதித்யாவை அழைத்து செல்வதாக கூறிய பூவரசி, போலீசாரிடம் கூறுகையில், பாரிமுனை அந்தோனியார் கோவில் விழாவுக்கு அழைத்து சென்றேன் என்றார். இந்த பதில்தான் பூவரசி மீது போலீசாருக்கு முதன் முதலில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசாரிடம் அவர், பாரிமுனையில் எந்த இடத்தில் மயங்கி விழுந்தாய் என்று கேட்டனர். அதற்கு பூவரசி, நான் மயங்கி விழும் முன்பு அரண்மனைக்காரன் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது இன்சூரன்ஸ் கடன் வாங்க விண்ணப்பித்திருந்த ஒருவர் எதிர்திசையில் தெருவின் அடுத்த பக்கத்தில் வந்து கொண்டிருந்தார். நான் ஆதித்யாவை தெருவின் ஒரு பக்கத்தில் நிற்க சொல்லிவிட்டு, அவரிடம் போய் பேசி விட்டு வந்தேன். திரும்பி வந்தபோது ஆதித்யாவை காணவில்லை என்றார்.

பூவரசியின் பதில்கள் மீண்டும் முரண்பாடுகளாக இருந்ததால், ஆதித்யாவை அவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். ஆனால் நேற்றிரவு வரை பூவரசி ஆதித்யாவை யாரோ கடத்தி சென்று கொன்றிருக்கிறார்கள் என்று கூறியபடி இருந்தார். இதையடுத்து போலீசார் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் பிறகு ஆதித்யாவை கொலை செய்ததை பூவரசி ஒத்துக்கொண்டார். ஜெயக்குமாருக்கும், பூவரசிக்கும் இடையே இருந்து வந்த கள்ள உறவே ஆதித்யா உயிர் பறிக்கப்பட காரணமாகி விட்டது. ஜெயக்குமாரை திருமணம் செய்து சொந்தம் ஆக்கிக்கொள்ள ஆதித்யா இடையூறாக இருக்கக் கூடாது என்ற வெறியால் பூவரசி ஈவு, இரக்கம் இல்லாமல் கொலை செய்துள்ளார்.

பூவரசி இன்று முறையப்படி கைது செய்யப்பட்டார். ஆதித்யாவை கொலை செய்தது எப்படி என்பதை அவர் போலீசாரிடம் விளக்கமாக கூறினார். வாக்குமூலமும் கொடுத்தார். இதையடுத்து அவரை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். சிறுவன் ஆதித்யா முகத்தை சுவரில் மோத செய்து, பூவரசி கொன்றுள்ளார். அந்த இடத்தையும் போலீசார் பார்வையிட்டு தடயங்களை பதிவு செய்தனர்

அடுத்தக்கட்டமாக போலீசார் இன்றே பூவரசியை நாகை அழைத்து செல்கிறார்கள். அங்கு ஆதித்யா உடல் வீசப்பட்ட இடத்துக்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர். இந்த கொலை வழக்கு விசாரணையை நாகை போலீசார் மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது. இதற்காக பூவரசியை சென்னை போலீசார், நாகை போலீசாரிடம் ஒப்படைப்பார்கள் என்று தெரிகிறது.
சிறுவன் ஆதித்யாவை கொலை செய்தது எப்படி என்பது குறித்து பூவரசி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:-

எனது பெயர் பூவரசி எம்.எஸ்.சி. படித்துள்ளேன். வேலூர் மாவட்டம் ஆரணி எனது சொந்த ஊராகும். எம்.எஸ்.சி. படிப்பை முடித்த பிறகு வேலை தேடி சென்னை வந்தேன். டாடா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. கடன் கேட்டு வருபவர்களை விசாரித்து, கடன் வழங்கும் பணியை நான் செய்து வந்தேன். அந்த நிறுவனத்தில் எனக்கு உயர் அதிகாரியாக ஜெயக்குமார் இருந்தார். கேரளாவை சேர்ந்த அவரும் படித்து முடித்ததும், அந்த வேலைக்கு வந்திருந்தார். எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. என்னையே திருமணம் செய்து கொள்வததாக அவர் கூறினார். இதை நம்பி என்னையே அவரிடம் கொடுத்தேன். பல ஊர்களுக்கு சென்று நாங்கள் ஒன்றாக இருந்துள்ளோம். இதனால் ஒரு தடவை நான் கர்ப்பம் அடைந்தேன். உடனே என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர் எப்படியோ என்னை ஏமாற்றி என் கர்ப்பத்தை கலைக்க வைத்து விட்டார்.

சில ஆண்டுகள் கழித்து ஜெயக்குமார், ஆனந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதோடு அவர் டாடா நிறுவனத்தில் இருந்து ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு பணிமாறி சென்றுவிட்டார். இதனால் எனக்கும் அவருக்கும் இடையே இருந்த தொடர்பு குறைந்தது. இதற்கிடையே எனக்கு டாடா நிறுவனத்தில் இருந்த வேலை போய்விட்டது. எனக்கு வேறு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் நான் ஆரணிக்கு சென்றுவிட்டேன். சில ஆண்டுகள் நானும் அவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. அந்த இடைப்பட்ட காலத்தில்தான் அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் பிறந்திருந்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி செல்போனில் பேசிக்கொள்வோம். ஒரு நாள் அவர், சென்னைக்கு வந்து விடுமாறு கூறினார். தான் வேலை பார்க்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அவரை நம்பி நான் சென்னை வந்தேன். மீண்டும் அவர் என்னுடன் நெருங்கிப் பழகினார். 2-வதாக உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். அதை நான் முழுமையாக நம்பினேன்.

சமீபத்தில் ஒரு நாள் சீக்கிரம் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றேன். அதற்கு அவர், எனக்கு குழந்தைகள் இருக்கிறார்களே உன்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்றார். ஜெயக்குமாரின் இந்த பதில் எனக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. காதலித்து, நன்கு அனுபவித்துவிட்டு, வாழைப்பழத்தோலை தூக்கி எறிவது போல நம்மை தூக்கி எறிகிறாரே என்று வேதனைப்பட்டேன். 2 தடவை ஜெயக்குமார் ஏமாற்றி விட்டாரே என்ற எண்ணம் எனக்குள் வெறியாக மாறியது. பல தடவை கெஞ்சிக்கேட்டும் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்தார். இது எனக்குள் வெறியை அதிகரித்தது.

ஜெயக்குமார் தன் மகன் ஆதித்யா மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவனுக்காக அவர் எதுவும் செய்வார் என்று எனக்குத் தெரியும். ஆதித்யா உயிருடன் இருக்கும் வரை அவர் நம்மை திரும்பிப் பார்க்கமாட்டார் என்று நினைத்தேன். எனவே ஆதித்யாவை கொலை செய்து விட முடிவு செய்தேன். ஆதித்யா செத்துவிட்டால் நம்மை திருமணம் செய்வார் என்று நினைத்தேன். இதனால் ஆதித்யாவை பார்க்கும்போதெல்லாம் என் மனதுக்குள் கொலைவெறி ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக ஆதித்யாவை எப்படி கொலை செய்வது என்று திட்டம் தீட்டினேன். ஆதித்யா உடலை என்ன செய்ய வேண்டும் என்றும் மனதுக்குள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டேன். ஆதித்யாவை கொலை செய்வதற்கு சரியாக சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன்.

கடந்த 17-ந்தேதி ஆதித்யா என்னிடம் சிக்கினான். அன்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் அவன் ஜெயக்குமாருடன் தி.நகரில் உள்ள அலுவலகத்துக்கு வந்திருந்தான். இது பற்றி அறிந்ததும் நான் தி.நகர் சென்றேன். ஜெயக்குமாரிடம், நான் தங்கியுள்ள விடுதியில் ஆண்டு விழா நடக்கிறது. சிறுவர்களுக்கு நிறைய பொம்மைகள் கொடுப்பார்கள் எல்லாரும் தங்கள் உறவினர் குழந்தைகளை அழைத்து வந்துள்ளனர். நான் ஆதித்யாவை அழைத்து செல்கிறேன். சாயங்காலம் கொண்டு வந்துவிட்டு விடுகிறேன் என்றேன். ஜெயக்குமாரும் என்னை நம்பி ஆதித்யாவை என்னுடன் அனுப்பி வைத்தார். நான் தங்கி இருந்த விடுதிக்கு அவனை அழைத்து வந்தேன். கயிற்றால் அவன் கழுத்தை இறுக்கி கொன்றேன். சுவரில் அவன் தலையை மோத செய்தேன். பிறகு அவன் முகத்தை பாலிதீன் வைத்து இறுக்க கட்டினேன். பிணத்தை எப்படி அப்புறப்படுத்துவது என்பதை ஏற்கனவே நான் யோசித்து வைத்திருந்தேன். அதன்படி ஆதித்யா பிணத்தை சூட்கேசுக்குள் திணித்து அடைத்தேன். பிறகு பாரிமுனை சென்று தெருவில் மயங்கி விழுந்து விட்டதாவும், ஆதித்யாவை காணவில்லை என்றும் நாடகம் ஆடினேன். ஜெயக்குமார் வந்ததும் நானும் அவரும் எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தோம். 17-ந்தேதி இரவு 11.30 மணி வரை போலீசார் என்னை விசாரித்தனர். மறுநாள் காலை வரும்படி என்னை அனுப்பி விட்டனர்.

விடுதிக்கு நள்ளிரவு திரும்பிய நான் ஆதித்யா உடல் இருந்த சூட்கேசை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தேன். அப்போது வாசலில் இருந்த காவலாளிகள் இருவரும் என்னம்மா, இந்த நேரத்தில் வெளியில் செல்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு நான் ஊரில் ஒருவர் இறந்துவிட்டார். அவசரமாக புறப்பட்டு செல்கிறேன் என்று கூறிவிட்டு வந்தேன். ஆட்டோ பிடித்து கோயம்பேடு வந்தேன். அங்கிருந்து புதுச்சேரிக்கு பஸ்சில் எடுத்துச் சென்றேன். புதுச்சேரி பஸ் நிலையத்தில் நிறைய போலீசார் நின்று இருந்தனர். எனவே பயந்துபோய் புதுச்சேரியில் இருந்து வேறொரு பஸ்சில் நாகை சென்றேன். 8 மணி நேரமாக பிணத்துடன் பஸ்சில் பயணம் செய்து நாகை சென்றேன். அங்கு கழிப்பிடம் அருகில் சூட்கேசை வைத்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன். 17-ந்தேதி நள்ளிரவு புறப்பட்ட நான் 18-ந்தேதி அதிகாலை நாகையில் ஆதித்யா உடலை வைத்துவிட்டு உடனே அடுத்த பஸ் பிடித்து சென்னை வந்து விட்டேன். அந்த சமயத்தில் என் செல்போனை சுவிட்ஆப் செய்து வைத்திருந்தேன்.

18-ந்தேதி காலை போலீசார் என் செல்போனை தொடர்பு கொண்டார்களாம். என் போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்ததால் என் மீது அவர்களுக்கு சந்தேகம் அதிகமாகிவிட்டது. என்றாலும் தப்பிவிடலாம் என்றே நம்பினேன். 18-ந்தேதி முழுவதும் ஜெயக்குமாருடன் சேர்ந்து நானும் ஆதித்யாவை தேடுவது போல நடித்தேன். ஒரு கட்டத்தில் எனக்கே விரக்தி ஆகிவிட்டது. 19-ந்தேதி காலை மெரீனா கடற்கரைக்கு சென்று அமர்ந்து தன்னந்தனியாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது போலீசார் என்னை போனில் தொடர்பு கொண்டு எங்கு இருக்கிறாய் என்று கேட்டனர். கடற்கரையில் இருக்கிறேன் என்று சொன்னதும் என்னை வந்து பிடித்துச் சென்றனர். கடைசி வரை எதுவும் தெரியாத மாதிரி சமாளித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் 19-ந்தேதி காலை தினத்தந்தியில் ஆதித்யா உடல் படமும், சூட்கேஸ் படமும் வந்ததால் நான் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு பூவரசி கூறினாள்.
Anonymous
Guest
Guest


Back to top Go down

நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம்: கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன் Empty Re: நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம்: கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன்

Post by மலையப்பன் Thu Jul 22, 2010 10:35 am

ஒரு சிறுவனை கொள்ளும் அளவிற்கு கள்ள காதல் கண்ணை மறைத்து விட்டது ....
எல்லாம் காலக் கொடுமை................
அவளுக்கு என்ன தண்டனை தான் கிடைக்கிறது என்று பார்க்கலாம் ....
avatar
மலையப்பன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 28

Back to top Go down

நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம்: கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன் Empty Re: நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம்: கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன்

Post by Admin Thu Jul 22, 2010 11:24 am

எப்படிப்பா இந்தக் கொடுமையை செய்ய தோனுது?????????
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம்: கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன் Empty Re: நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம்: கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன்

Post by kavitha Thu Jul 22, 2010 11:27 am

Admin wrote:எப்படிப்பா இந்தக் கொடுமையை செய்ய தோனுது?????????

நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம்: கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன் 917967
avatar
kavitha
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 101

Back to top Go down

நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம்: கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன் Empty Re: நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம்: கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன்

Post by இனியவளே Thu Jul 22, 2010 5:20 pm

எப்படிப்பா இந்தக் கொடுமையை செய்ய தோனுது ?
அவள் பெண்ணே கிடையாது மனித பிறவியே இல்ல அவளின் போட்டோ பார்த்தல் மிருகம் போல தான் இருக்கு ச்ச ச்ச இப்படியும் இருப்பாங்களா ?
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம்: கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன் Empty Re: நாகை பஸ்நிலையத்தில் சூட்கேசில் பிணம்: கொலையுண்ட சிறுவன் சென்னை அதிகாரி மகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum