தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரு பக்க கதைகள் ...!!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 23, 2013 3:37 pm

First topic message reminder :

கல்யாண புரோக்கர் ரகுபதியிடம் வந்தார். நீட்டினார்
ரகுபதி அலசினார். ஒன்றைத் தேர்வுசெய்தார்
-
“ரவி, இந்த இடம் நல்லாயிருக்கு, பார்த்து ஓ.கே. சொல்லு”
என்றார்,  பிள்ளையிடம் தந்தார்.
-
“ப்ச், பொண்ணு சுமார் அழகு, வேண்டாமே”
-
“டேய்…அழகு சோறு போடாது, பொண்ணு வீடு நல்ல வெயிட்
ஏகத்துக்கு நிலம் ,நீச்சு  இருக்கு.., யோசி…”
-
ரவி தலையாட்டினான். தாலியைக் கட்டினான்.
ஒரு மாதம் கடந்தது. ரவியின் புது மனைவி எகிறினாள்.
-
‘இந்தாங்க..இனமேயும் தாங்காது! என் அப்பா வீட்டுகிட்ட
தனிக்குடித்தன்ம போயிடலாங்க…”
-
‘ஒரு மாசத்துலயா? ஊர் சிரிக்கும்டி, என் அப்பா எவ்ளோ
கஷ்டப்படுவார்…?”
-
‘ஊர் வாய் துட்டு தராது, சொந்தம் சொத்து தராது.
என் அப்பா தருவார், யோசிங்க…”
-
ரவி மீண்டும் தலையாட்டினான்…நடையைக் கட்டினான்.
-
அப்பா விதிர்த்து போய் நின்றார்…!
-
———————————–
>ச.பிரசன்னா
-


Last edited by கவிஞர் கே இனியவன் on Tue Jul 23, 2013 4:40 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 12:50 pm

கொள்முதல் – ஒரு பக்க கதை
*****************************************
இங்கிலீஷ் பேப்பர் கிலோ ஒன்பது ரூபாய்
தமிழ் பேப்பர் நாலு ரூபாய்’ என்பதைப் பார்த்ததும்
தனது குறுகிய புத்தியை செயலாற்றத் துவங்கினாள்
சாந்தி
-
இங்கிலீஷ் பேப்பபரின் இடை இடையே தமிழ் பேப்பரை
வைத்துக்கட்டி பேப்பர்காரனுக்குப் போட்டாள்
-
எல்லாம் இங்கிலீஷ் பேப்பர்பா, பார்த்து நல்லா எடை
போட்டு எடுத்திட்டுப் போப்பா…!
-
சரிங்கம்மா, மொத்தம் பத்து கிலோகிட்ட வருது,…இந்தாங்கம்மா
தொண்ணூறு ரூபாய் என அவன் கொடுத்து சென்றான்
-
ஏதோ …சாமர்த்தியமாய் சாதித்ததாய் பூரித்துப் போனாள்
சாந்தி!
-
மாலை அதே பேப்பர்காரனைப் பார்த்ததும் கொஞ்சம்
வெல வெலத்துப்போனாள்…
-
என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்க…? பேப்பருக்கு இடையில…!
-
அவன் பேப் பேச சாந்திக்கு வியர்த்தது!
-
‘இந்த அஞ்சு பவுன் செயின் இருந்தது, பவுன் விற்கிற
விலைக்கு, இப்படியா அலட்சியமா இருக்கிறது|?
இந்தாங்கம்மா…! என எடுத்து நீட்ட….
-
அவன் தங்கமாகவும் தான் கிழிந்த பழைய பேப்பருமாக
மாறி இருந்ததை சாந்தியால் உணர முடிந்தது
———————————
>நா.கி.பிரசாத்
நன்றி: குமுதம்
-
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 12:53 pm

குறளும் காந்தி சொன்னதும்

ஈரங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு
திருக்குறள்
**********************************************************
"ஆகஸ்ட் போராட்டம்' என்று, அழைக்கப்பட்ட, 1942ம் ஆண்டு நடந்த போராட்டம் தான், இந்தியாவில் நடந்த இறுதி கட்ட சுதந்திரப் போராட்டம்.

ஜூலை மாத இறுதியில் காந்திஜி, "அரிஜன்' பத்திரிகையில், "முடிந்த வரை, இப்போராட் டத்தை, அமைதியான முறையில் நடத்தவே முயற்சிப்பேன். ஆனால், பிரிட்டிஷ் அரசையும், அதன் நேச சக்திகளையும், இந்த போராட்டம் கவர தவறினால், நான் எந்த எல்லைக்கும் செல்ல வேண்டி இருக்கும். அதன்பின், இந்தியாவில் நடக்கிற காரியங்கள் அனைத்திற்கும், பிரிட்டிஷ் அரசு பொறுப்பேற்க நேரிடும். நான் பொறுப்பேற்க இயலாது...' என்றார்.

அதைத் தொடர்ந்து, காந்திஜியின் சீடரான, கிஷோரி லால் மஷ்ருவாலா என்பவர், அதே, அரிஜன் ஏட்டில், "சதிச் செயல்களும் கூட, சாத்வீக போராட்டத்தில் அடங்கும். பாலங்களை தகர்ப்பது, தபால், தந்தி தொடர்புகளை துண்டிப் பது போன்ற மனித உயிர்களுக்கு, ஆபத்து ஏற்படுத்தாத செயல்களும், சாத்வீக போராட்டத்திற்கு உட்பட்ட செயல்கள் தான்...' என்று எழுதியிருந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது, காந்திஜியின், அனுமதியோடு தான் எழுதப்பட்டது.

ஆகஸ்ட் 7ம் தேதி, காந்திஜி, பத்திரிகை நிருபர்களை சந்தித்தார். ஒரு நிருபரின் கேள்விக்கு, "பிரிட்டிஷ் அரசு, முன்கூட்டியே, என்னை கைது செய்தால், நான், கைதான இரண்டு வாரங்களுக்குள்ளேயே, நாடு முழுக்க போராட்டம் துவங்கி விடும். அந்தப் போராட்டம் துவங்கியவுடனேயே, பலாத்கார செயல்கள், நாடு தழுவிய அளவில் வெடித்தெழும். இம்முறை, அப்படிப்பட்ட பலாத்கார புரட்சி ஏற்பட்டால், நான், அதை பொருட்படுத்த மாட்டேன்...' என்றார் காந்திஜி.

மும்பையிலிருந்து வெளிவரும், "நியூஸ் கிரானிகிள்' பத்திரிகையில், காந்திஜி விடுத்த அறிக்கையில், "ஒரு வெகுஜன இயக்கத்தில், பலாத்காரப் போராட்டங்களும், செயல்களும் அங்கீகரிக்கப்பட்டவை தான்...' என்று கூறியிருந்தார்.

அதே நாளில், காந்திஜிக்கு நெருங்கிய தோழரான, பட்டாபி சீத்தாராமையா, ஒரு சுற்றறிக்கையை, மாகாண காங்கிரஸ் தலைவர்களிடம் கொடுத்து, அதில், குறிப்பிட்டுள்ள போராட்ட முறைகளை, தத்தம் மாநிலங்களில் அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

"ஆந்திரா சுற்றறிக்கை' என்று, அழைக்கப்பட்ட அந்த அறிக்கையில், காங்கிரஸ்காரர்களை, "தந்திக் கம்பிகளை அறுக்கவும், தபால் ஆபீசுகளை கைப்பற்றவும், தண்டவாளங்களையும், பாலங்களையும் வெடி வைத்து தகர்க்கவும்...' என, கேட்டுக் கொண்டது.

நன்றி —"வரலாறு படைத்த வழக்குகள்' நூலிலிருந்து...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 12, 2013 11:43 am

நாயின் வால்-அறிவுக்கதை
****************************************
ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்­கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?
இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது...

நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில்
சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.

இந்த மனிதனை இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.

விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க்
கொண்டிருக்கிறார். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.

கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

நன்றி ; கதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 3:58 pm

வசதியான வீடு!(குட்டிக்கதை)
***********************
ஓரளவு வசதி படைத்த ஒருவர், தம்முடைய வீட்டை விற்று விட்டு அதை விட வசதியான ஒரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார். உடனே தரகரிடம் சென்று வீட்டை விற்றுத் தருமாறு கேட்டார்.


உடனே தரகர், "நானே பத்திரிகையில விளம்பரம் செய்து வித்துத் தரேன் சார்" என்று கூறியதுடன், அழகிய வாசகங்களுடன் பத்திரிகையில் விளம்பரம் செய்தார். அடுத்தநாள் தரகர் சுமார் பத்து முறை வெவ்வேறு ஆட்களை அழைத்து வந்து வீட்டை சுற்றிக் காட்டினார்.

வீட்டின் சொந்தக் காரருக்கு ஆச்சரியம். உடனே பத்திரிகையில் வெளியான விளம்பரத்தைப் பார்த்தார். அதில் குறிப்பிட்டிருந்த தன் வீட்டின் வசதிகளைப் பார்த்த அவர், "அடடா, நம்ம வீட்டுலயும், வீட்டைச் சுத்தியும் இவ்ளோ வசதிகள் இருக்கா...இப்பத்தானே வீட்டோட அருமை தெரியுது" என்று ஆச்சரியப்பட்டு, உடனே தரகரிடம் சென்றார்.

"வீட்டை விக்கற யோசனையை நான் கைவிட்டுட்டேன். இனி எப்போதும் விக்கறதா இல்லை. மன்னிச்சுடுங்க" என்று சொல்லி விட்டு வந்தார். இன்றைக்கு நம்மில் பலரும் இதே மனநிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறோம்.

நமது பலம் என்ன என்பது நமக்கே தெரியவில்லை. பலவீனங்களையே நமது மனம் அதிகமாக படம் பிடித்துக் காட்டுகிறது. அதன் காரணமாகவே வாழ்க்கையில் சோர்ந்து போகிறோம். அறிவின் வெளிச்சத்தில் நடைபோடுகிறபோது, இப்படிப்பட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்படுவதில்லை.

நன்றி ; கதைகள் தளம்
நியூ மன்னர் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 4:03 pm

கவனச்சிதறல் தோல்வியைத் தரும்(குட்டிக்கதை)
**********************************************************
ஒரு ஜென் துறவி அவரது சீடன் ஒருவன் தோட்டத்தை சுத்தம் செய்வதை பார்த்து கொண்டிருந்தார். அவன் அதிக நேரமாக ஒரே வேலையை செய்தும் சுத்தம் இல்லாமல் இருந்தது

ஜென் மாஸ்டர் அவனை அருகில் அழைத்து ஒரு கதையை கூறினார். அது, "ஒரு முறை ஓர் சிறந்த ஓவியன் அவருடைய திறமையை முன்வைத்து ஒரு ஓவியத்தை வரைந்து, பின் அவருடைய சக தோழனிடம் "எப்படி இருக்கிறது" என்று கேட்டார்.

தோழனும் "இது நன்றாக இல்லை" என்று கூறினார். மீண்டும் மீண்டும் அந்த ஓவியர் வரைந்தவற்றை சரிசெய்ய, தோழனோ நன்றாக இல்லை என்று சொல்லி கொண்டு இருந்தார்.

அதனால் அந்த ஓவியர் தன் தோழனிடம், "நீ போய் எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா!" என்று தோழனை அனுப்பி விட்டு, பின்பு அவர் ஓவியத்தில் முழு கவனம் செலுத்தி ஓவியத்தை வரைந்தார்.

தண்ணீர் கொண்டு திரும்பிய தோழன், அந்த ஓவியத்தை கண்டு ஆச்சரியத்துடன் "படு சூப்பர்" என்று சொல்லி, அவரை பாராட்டினான். ஆகவே "எந்த ஒரு செயலையும் நாம் நம் முழு கவனத்துடன் செய்வதால் வெற்றி நிச்சயம்.

அதைவிட்டு அவ்த செயலை பிறர் பார்கின்றனரே என்று ஒரு பயத்துடன் செய்தால், அது ஒரு முழுமையை தராது" என்று ஜென் மாஸ்டர் அந்த சீடனுக்கு இந்த கதையின் மூலம் உணர்த்தினார்.

நன்றி ; கதைகள் தளம்
நியூ மன்னர் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 4:06 pm

சிறுமீன்(குட்டிக்கதை)
*********************************
அந்த ஊரில் ஒரு குளமிருந்தது. அதில் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கான மீன்கள் வசித்தன. எங்கிருந்தோ தினமும் ஒரு கொக்கு அங்கே பறந்து வந்து மீன்களைப் பிடித்துத் தின்னத் துவங்கியது. அந்தக் கொக்கு அலகில் மீனைப் பிடித்து வைத்துக் கொண்டு கொல்வதற்கு முன்பு கடுமையாக பரிகாசம் செய்வதுண்டு.

உங்களை ஏன் கொல்கிறேன் தெரியுமா. உங்களால் ஒரு நாளும் வானத்தில் பறக்க முடியாது. இந்தக் குளத்தைத் தாண்டி வெளிஉலகம் தெரியாது. காடுகள், மலைகள் நகரங்கள் என எதையும் கண்டதேயில்லை. எல்லாவற்றையும் விட நீங்கள் அழுக்கை சாப்பிட்டு வளரும் அற்ப உயிர்கள். உங்களை நான் கொன்றால் கேட்பதற்கு யார் இருக்கிறார்கள். என்னை எதிர்க்க உங்களால் இயலுமா. உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை அதனால் தான் உங்களைக் கொல்கிறேன். என்று கேலி செய்தது.

இப்படி தினம் கேலியும் அவமானமும் பட்டு சாவதை நினைத்து மீன்கள் மிகவும் வருத்தம் கொண்டன.

ஒருநாள் அந்தக் கொக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு சின்னஞ்சிறு மீன்குஞ்சு ஒன்று குளத்தில் இருந்து தாவி மண்ணில் விழுந்து துடித்துச் சாக முயன்றது.

அதைக்கண்ட கொக்கு சிறுமீனே..உனக்குச் சாவதற்கு அவ்வளவு விருப்பமா. அல்லது என்னைக் கண்டு பயமா, நீ நன்றாக வளரும் வரை பிழைத்து இருக்கட்டும் என்று தானே விட்டுவைத்திருக்கிறேன், அதற்குள் என்ன அவசரம் என்று கேட்டது.

அதற்கு மீன்குஞ்சு சொன்னது.

கொக்கே,, வானத்தில் பறக்கின்ற பறவைகள் என்றாலே உன்னதமானவை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எளிய உயிர்களைக் கொன்று தின்னும் அற்பங்கள் கூட வானில் பறக்கின்றன என்று உன்னைப் பார்த்த பிறகு தான் அறிந்து கொண்டேன்.

ஒற்றைக் காலில் நிற்பதால் நீ துறவியுமில்லை. வெண்ணிறமாக இருப்பதால் நீ தூய்மையானவனுமில்லை. தோற்றத்தைப் பார்த்து உன்னை அமைதியின் உருவம் என நம்புபவர்கள் முட்டாள்கள். உன்னிடம் சிக்கி உயிரை இழப்பதை விட நானாகச் செத்துமடிவது மேல்.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள். எந்தக் கொக்கும் வயதாகி தானாகச் செத்துப் போவதில்லை. எவராலோ கொல்லப்படத்தான் போகின்றன. என்றபடி வீழ்ந்து இறந்தது சிறுமீன்


நன்றி ; கதைகள் தளம்
நியூ மன்னர் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 4:09 pm

அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? (நீதிக்கதை)
****************************************************************
ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

நீதி: வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

நன்றி ; கதைகள் தளம்
நியூ மன்னர் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 4:13 pm

புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முக்கியம்(குட்டிக்கதைகள்)
*******************************************

ஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார். அவர் தினமும் "கடவுளே என்னை இப்படிப் படைத்து விட்டாயே...உனக்கு கண் இல்லையா? தினமும் நான் கஷ்டப்படுகிறேனே..." என்று புலம்பியபடி கடவுளைத் திட்டிக் கொண்டேயிருந்தார்.


அவனது திட்டு பொறுக்க முடியாமல் கடவுள் ஒருநாள் அவன் முன் தோன்றி, "நான் கடவுள் வந்திருக்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். ஆனால் ஒரு நிபந்தனை. ஒரே ஒரு வரம் மட்டும்தான் கேட்க வேண்டும்." என்றார்.

பார்வையற்றவரும் அதற்கு ஒப்புக் கொண்டு சிறிது நேரம் யோசித்தார். பின்பு சிறிது நேரம் யோசித்து கீழ்கண்ட வரத்தைக் கேட்டார்.

"ராஜவீதியில் தங்கத் தேர் ஓட்டி விளையாட, அவனைப் பெற்ற தாய் வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டுவதை என்னுடைய வீட்டின் ஏழாவது மாடியிலிருந்து நான் பார்த்து மகிழ வேண்டும்."

இந்த வரத்தில் பார்வை இல்லாதவன் , தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை வாழ வேண்டும், நூறாண்டு வாழ வேண்டும், ஏழு மாடி வீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான்.

அவனுடைய புத்திசாலித்தனமான பதிலைப் பாராட்டிய கடவுள் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து மறைந்தார்.புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முன்னேற முக்கியம் என்பது உண்மைதானே?

நன்றி ; கதைகள் தளம்
நியூ மன்னர் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by sawmya Sun Oct 13, 2013 4:29 pm

 எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!
சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 13, 2013 4:34 pm

nanri thamiz ungkalukkum varaathaa..?
கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 15, 2013 4:52 pm

கலைச்சிடு...யாருக்கும் பிரச்சினை இல்லை” என்றான் கோட்டி... “என்ன பேசறீங்க கலைக்குறதுக்கு இது என்ன ஆட்சியா?.குழந்தைங்க.என் வயித்துல வளர்ற குழந்தைக்கு நீங்கதான் அப்பா”


"அதுக்கு சாட்சி இருக்கா?ஒண்ணு தெரியுமா.. நாம காதலிச்சதுக்கு எந்த ஆதாரமும் உன்கிட்ட கிடையாது.இந்த 365 நாள்ல லவ் லெட்டர் அனுப்பினதும்,உன்னையே கொடுத்ததும் நீதாண்டி மக்குப்பெண்ணே....சோ...356வது விதியின்படி கலைச்சுடு!”

அரசியல்வாதியின் மகனாக பேசினான்.ஆட்சி மாற்றம் அவணுள் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்தாள் அகிலா.

“வரேண்டி என் அப்பாவிப்பெண்ணே...”

பல்சரை எடுத்துக்கொண்டு பறந்தான்.ஹோட்டல் லீ மெரிடியன் தாண்டி வளைவில் திரும்பியபோதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.

குறுக்கே வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டான் கோட்டி.

பாலாஜி ஹாஸ்பிட்டல்..
ஆபரேசன் முடிந்து வெளியே வந்த டாக்டரை பதற்ற முகத்துடன் நெருங்கினார் எம்.எல்.ஏ.அப்பா .

“உயிருக்கு பிரச்சினை இல்லை.காப்பாத்திட்டோம்.பட்,ஒரு வருத்தமான விசயம் முக்கியமான இடத்துல அடி பட்டதால இனி அவரால தாம்பத்ய வாழ்க்கையில முதல் இரவில் ஈடுபட முடியாது.ஒரு குழந்தைக்கு அப்பாவாகிற தகுதியை அவர் இழந்துட்டார்” என்றார் டாக்டர்.

நன்றி ;கதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 15, 2013 4:55 pm

ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யவே இல்லை.அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.மக்கள் பசியால் வாடினார்கள்.

நல்ல உள்ளம் படைத்த செல்வர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி வந்தனர்.ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியை பொருத்து கொள்கிறோம்.சிறுவர்கள்,குழந்தைகள் என்ன செய்வார்கள். நீங்கள்தான் எதாவது உதவி புரிய வேண்டும் என வேண்டினார்கள்.

இரக்க உள்ளம் படைத்த அந்த பெரியவர் “இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன்.என் வீட்டிற்கு வந்து எடுத்துச்செல்லுங்கள் என்றார்.”


மாளிகை திரும்பிய பெரியவர் தன் வேலைக்காரனை அழைத்தார்.”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக்கொள்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும்.கூடவும் கூடாது.குறையவும் கூடாது” என்று கட்டளையிட்டார்.

வேலைக்காரனும் அப்ப்டியே ஆகட்டும் ஐயா என்று கூறினான்.
வேலைக்காரன் அனைவருக்கும் ரொட்டி வாங்கிக்கொண்டு வந்து மாளிகை வாசலில் குழந்தைகளின் வரவுக்காக காத்திருந்தான்.

சிறிது நேரத்தில் ஊரில் உள்ள குழந்தைகள் அனைவரும் வேலைக்காரனை சூழ்ந்து கொண்டு பெரிய ரொட்டியை எடுப்பதில் குழந்தைகள் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர்.ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள்.எல்லோரும் எடுத்து சென்றது போக மிஞ்சி இருந்த ஒரு சிறிய துண்டை எடுத்தாள்.அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள்.

இப்படியே நான்கு நாட்கள் நிகழ்ந்தது.எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் பெரியவர்.ஐந்தாம் நாளும் அப்படியே நிகழ்ந்தது.எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி.

தன் வீட்டிற்கு வந்த அந்த சிறுமி.அந்த ரொட்டியை தன் தாய்க்கு கொடுத்தாள்.ரொட்டியை பிய்த்தாள் தாய் அதில் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்த தங்கக்காசை எடுத்துக்கொண்டு சிறுமி பெரியவரின் வீட்டிற்கு ஓடி வந்தாள்.”ஐயா இது உங்கள் தங்கக்காசு ரொட்டிக்குள் இருந்தது பெற்றுக்கொள்ளுங்கள்” என்றாள் அந்த சிறுமி.

‘சிறுமியே உன் பொறுமைக்கும் நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்த தங்கக்காசு,மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்!’ என்றார் பெரியவர்.

துள்ளிக்குதித்தபடி ஓடிவந்த அவள் நடந்ததை அப்படியே தன் தாயிடம் சொல்லி குதூகலித்தாள்!!!

நன்றி ;கதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by மகா பிரபு Tue Oct 15, 2013 6:09 pm

சிறந்த கதைகள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 15, 2013 6:16 pm

பாராட்டுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by முரளிராஜா Wed Oct 16, 2013 12:43 pm

 கதைகள் அருமை 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 10:23 am

இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப் பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக் கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன.

ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.

'எழுந்திருடா' பூட்ஸ் கால் ஒன்று விலாவில் பட்டுத் தெறித்தது.

துடித்துப் பதைத்துக் கைகளை ஊன்றி எழுந்திருக்க முயற்சி செய்தான். 'சுள்' என்று முழங்கால் மூட்டு வலித்தது. அடிக்கு மேல் அடிவாங்கிய அந்த உடம்பிற்கு, எங்கே வலிக்கிறது என்பதைக்கூட உணர முடியாமல் இருந்தது. வீங்கிப்போன கால்கள் எழுந்து நிற்கமுடியாமல் துவண்டு சரிந்தன. வந்தது யாராய் இருக்கும் என்று ஊகித்ததில் நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது.

'வெளியே வாடா நா..!' தொண்டை கிழிய அவன் கூச்சல் போட்ட போது அவனது குரலை இவனால் இனம் காண முடிந்தது. அவனது கண்களில் இவன் படும் போதெல்லாம் இப்படித்தான் கொச்சைத் தமிழில் கூச்சல் போட்டுக் கத்துவான். ஒரு போதும் அவனது வாயிலிருந்து நல்ல சொற்கள் உதிர்ந்ததை இவன் கேட்டதில்லை.

தள்ளாடியபடியே வெளியே வந்து, அச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சப்பாத்துக் கால்களைப் பின் தொடர்ந்தான். இரும்புக் கதவுகள் பல திறந்து, மூடப்பட்டு இறுதியில் ஒரு அறைக்குள் இருந்த அதிகாரி முன் நிறுத்தப் பட்டான். இந்தச் சிறைக்கு மாற்றப்பட்ட நாளில் இருந்து யாரையுமே நிமிர்ந்து பார்க்க அவனுக்குப் பயமாக இருந்தது.

'நீ நடேசுதானே..?'

எப்போவோ மறந்துபோன அவனது பெயர் நினைவுவர மெல்ல தலை நிமிர்த்திக் குரல் வந்த திசை நோக்கிப் பார்வையைச் செலுத்தினான். அவனைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய ஆவணமாய் இருக்கலாம், அந்த அதிகாரிக்கு முன்னால் மேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்தது. அதுவும் இவனது கடந்த கால நிலையற்ற வாழ்க்கைபோல, மின்விசிறிக் காற்றில் அடிபட்டுத் துடித்துக் கொண்டிருந்தது.

எதுவும் பேசாது தலையாட்டிக் காளைபோல, இவன் தன்னிச்சையாய் தலை அசைத்தான்.

'உனக்கு விடுதலை, கையொப்பம் போட்டு விட்டு நீ போகலாம்..!'

அவனுக்குத் திக்கென்றது. விடுதலையா? எனக்கா? அவன் ஒருபோதும் விடுதலை வேண்டும் என்று கேட்கவே இல்லையே..? விடுதலை என்று கையொப்பம் போட்ட பல தமிழ் இளைஞர்கள் வீடுபோய்ச் சேரவில்லை என்பது இவனுக்குத் தெரியும். இவனைக் கொண்டே அப்படிப் பலரின் சடலங்களைப் புதைத்தால் என்றாவது தெரியவருமென்று, அடையாளம் தெரியாமல் எரிக்கப் பண்ணியிருக்கிறார்கள்.

கையிலே ஒரு பையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். கையெழுத்துப் போட்டுவிட்டு பிரித்துப் பார்த்தான். இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் இவன் கைதானபோது அணிந்திருந்த வேட்டியும், சேட்டும் இவன் நினைவுகளைப் போலவே அவையும் கசங்கி மங்கிப்போய்க் கிடந்தன. சேட்டை உதறி மாட்டிப் பார்த்தான். தொளதொளத்துப் போயிருந்தது. தாடியும், பரட்டைத் தலையும் தெருப் பிச்சைக்காரனை அவனுக்கு ஞாபகமூட்டியது.

பலியாடு போலப் பின்தொடர, இராணுவ தடை முகாமிற்கு வெளியே உள்ள வீதியில் அவனைக் கொண்டு வந்து விட்டார்கள். இவனது இளமைக் காலத்தை முற்றாகக் கொள்ளையடித்த அந்த இராணுவ முகாமை வெறுப்போடு திரும்பிப் பார்த்துக் கொண்டே உயிர் வாழும் ஆசையில் அந்த இடத்தை விட்டு வேகமாய் நடந்தான்.

இனி எங்கே போவது? யாரிடம் போவது? உள்ளே இருக்கும்வரை இல்லாத பிரச்சனை இப்போ பூதாகரமாய் தலை தூக்கி நின்றது. காலையில் இருந்து பட்டினி கிடந்ததால் பசி வயிற்றைக் கிண்டியது. உள்ளே இருந்திருந்தால் ஒருவேளை கஞ்சியாவது கிடைத்திருக்கும். உடலும் உள்ளமும் சோர்ந்து போக அப்படியே தெருவோர மரத்தடியில் உட்கார்ந்தான்.

மழை வரும்போல, ஆங்காங்கே வானம் கறுத்திருக்க குளிர் காற்று சில்லிட்டது. சூடாக ஏதாவது குடித்தால் இதமாக இருக்கும்போல் தோன்றிற்று. யாரோ பாதி குடித்துவிட்டுக் கீழே போட்டு நசுக்கிவிட்ட பீடித்துண்டு ஒன்று குழி விழுந்த தெருவில் அரை உயிரோடு இழுப்பு வந்ததுபோல இழுத்துக் கொண்டு கிடந்தது.

அதை எடுத்து அதில் ஒட்டியிருந்த மண் துகள்களை ஊதித் தள்ளிவிட்டு வாயில் வைத்து உதட்டைக் குவித்து ஒரு இழுப்பு இழுத்தான். இழுத்த இழுப்பில் இதமான சூடு உள்ளே உடம்பெல்லாம் பரவ, நரம்புகள் புடைத்து நிற்பதை இவன் உணர்ந்தான். அந்த பீடித்துண்டு கொடுத்த உட்சாகத்தோடு மீண்டும் எழுந்து தள்ளாடியபடி நடந்தான்.

எங்கே போவது என்று தெரியாமல் கால்போன திசையில் விச்ராந்தியாக நடந்தான். கனமான பூட்ஸ் கால்கள் பதிந்த இடமெல்லாம் திட்டுத் திட்டாய் வீங்கிப் போயிருந்தன. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் வேதனை தாங்காது 'விண் விண்' என்று மூட்டுக்கள் வலித்தன. காலாகாலமாய் முடிவின்றி நடந்ததுபோல கால்கள் துவண்டு போயின. இன்னும் எவ்வளவு தூரம்..?

எப்படியோ யாரையோ எல்லாம் கெஞ்சி மன்றாடி, மாடுகள் சோடைபிடித்துப் போவதுபோல கடைசியில் இவனும் தான் பிறந்த மண்ணுக்கு வந்து சேர்ந்தான். இருபத்திரண்டு வருடங்களுக்குமுன் இருந்த கிராமம் எப்படியோ எல்லாம் மாறிப்போயிருந்தது.

பெட்டிக்கடை மளிகைக் கடையாய் மாறி இருப்பதை அதிசயமாய்ப் பார்த்தான். குழந்தை பசியிலே வீரிட்டதைத் தாங்கமுடியாமல் ஊரடங்குச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல் தெருவைக் கடந்து பின்பக்கத்தில் இருந்த பெட்டிக் கடைக்குப் பால்மா வாங்கச் சென்ற பொழுதுதான் இவன் இராணுவத்தால் பிடிக்கப்பட்டான்.

அப்புறம் வேண்டாத குற்றமெல்லாம் இவன்மீது சாட்டி இவனையும் கும்பலோடு கும்பலாகக் கொண்டு போனார்கள். ஒவ்வொரு முகாமாக இவனைக் கொண்டு திரிந்து, அலைக்கழித்து இவனது குடும்பத்திற்கு கண்ணாமூச்சி காட்டினார்கள். பணவசதியோ செல்வாக்கோ இல்லாததால் இவனை வெளியே கொண்டுவர இத்தனை காலமாகியும் இவனது குடும்பத்தால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது.

யார்யாரையோ எல்லாம் விசாரிக்க, கடைசியில் கடைக்கு முன்னால் உள்ள மரத்தடியில் கண்ணாடியோடு உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த வயோதிபர்தான் அவனை யார் என்று அடையாளம் கண்டு கொண்டார்.

'தன் கணவன் உயிரோடு இருக்கிறான்' என்ற ஒரு நல்ல வார்த்தையைக் கேட்பதற்காக ஒவ்வொரு முகாமாக இவன் மனைவி அலைந்து திரிந்து உயிர் உருக அரசிடம் யாசித்தது அவர் மனக்கண்முன் நிழலாய் வந்தது.

நடேசு தனது குடும்பத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தான். அவர் கொடுத்த தகவலின்படி அவனது மனைவி இறந்து போனதும், மகள் பாட்டியோடு வளர்ந்து வந்ததும், இப்போ திருமணமாகி அந்த ஊரிலேயே தங்கி இருப்பதும் தெரியவந்தது.

''நீ திரும்பி வருவாய் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை நடேசு!'' அவனது மகள் குடியிருக்கும் ஒதுக்குப் புறமான ஒரு குடிசைக்கு அவனை அவர் அழைத்துச் செல்லும் போது அவர் ஆச்சரியமாய்ச் சொன்னார்.

வாசலில் சொறி நாய் ஒன்று கண்மூடிப் படுத்திருந்தது. நாயைச் சுற்றி ஈக்கள் வட்டமிட்டு மொய்த்துக் கொண்டிருக்க, மெல்லிய உறுமலோடு தலை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டது. அறிமுகம் இல்லாத இவனைப் பார்த்துக் குரைக்காமல் விட்டதே இவனுக்கு மிகப்பொரிய ஆறுதலாக இருந்தது.

'சரசு..!' என்று பெரியவர் வெளியே நின்றபடி குரல் கொடுத்தார்.

இருபத்திமூன்று, அல்லது இருபத்திநாலு வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி வெளியே வந்தாள். அவளின் முந்தானையைப் பிடித்தபடி நாலு, ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றும் தொடர்ந்து வந்தது.

நடேசு ஆச்சரியத்தோடு வெயியே வந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான். இருபத்திரண்டு வருடங்களுக்குமுன் மனைவியைப் பார்த்த ஞாபகம் சட்டென்று வந்தது.

'சரசு, இது யார் என்று தெரியுதா..?'

அவள் நடேசுவைச் சலனமற்ற ஒரு பார்வை பார்த்துவிட்டு 'தெரியாது' என்பது போலத் தலையசைத்தாள்.

'இதுதான் உன்னோட அப்பா, நடேசு..!'

அவள் அந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவளது முகபாவத்தில் இருந்து அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவள் இல்லை என்பது இவனுக்குப் புரிந்து போயிற்று. அவளோ வேண்டாத சந்தேகத்தோடு நடேசுவைப் பார்த்தாள்.

'அவர்தான் செத்துப் போயிட்டாரே..?' புதிதாக ஒருவனை ஏற்கமுடியாத நிலையில் வார்த்தைகள் இழுபட்டன.

'இல்லை சரசு, தொலைந்து போனவன், செத்துப் போயிட்டான் என்றுதான் நாங்க எல்லோரும் நினைச்சு கருமாதி எல்லாம் செய்திட்டோம். ஆனால் இத்தனை வருடமாய் மாறிமாறி ஒவ்வொரு தடைமுகாமிலையும் இருந்திருக்கிறான். இப்பதான் நாட்டிலே சமாதானம் என்று சொல்லி இவனை விடுதலை செய்தார்களாம்.'

அவள் இடையிலே வந்த இந்தப் புதிய உறவை ஏற்றுக் கொள்ள முடியாதவளாய், இந்தக் கதை எல்லாம் எனக்கு வேண்டாம் என்பது போலப் பிடிவாதமாய், அவரது கூற்றை மறுப்பதுபோலத் தலையசைத்தாள்.
'அப்பா என்கிற உறவே என்ன என்று தெரியாமல் நான் இத்தனை வருசமாய் வளர்ந்திட்டேன்;. பாட்டி போனதுக்கப்புறம் வேளாவேளைக்குச் சாப்பிடக்கூட வழியில்லை. கூலி வேலை செய்து இந்தக் குழந்தையை வளர்த்து எடுக்கவே என்பாடு சங்கடமாய் இருக்கு. இப்போ புதிதாய் இந்த வயதிலே அப்பா என்று இவர் உறவு முறை சொல்லிக் கொண்டு வந்தால் நான் என்ன செய்ய..? இருக்கிற சுமையே எனக்குப் போதும் சாமி, இனி என்னாலே புதிதாய் வேறு ஒரு சுமையையும் தாங்கமுடியாது!'

இது போலக் கௌரவமாக வாழ்ந்த இப்படி எத்தனை ஆயிரம் குடும்பங்கள் அந்த மண்ணிலே சிதைக்கப்பட்டு அவர்களின் எதிர்காலக் கனவுகள் எல்லாம் பெரும்பான்மை இனத்தவர்களால் கொள்ளை அடிக்கப் பட்டிருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்க நடேசுவுக்கு ஓவென்று அழவேண்டும் போலிருந்தது. ஆழமாக நினைவுமுள் கிழித்த வேதனையில் காலில் இருந்த வலி மறந்துபோக, தன் எதிர்காலம் குறித்த கவலை இப்போது அவனைப் பிடித்துக் கொண்டது.

'பாட்டிக்கு என்னாச்சு..?' பெரியவர் கேட்டார்.

'பாட்டி போனவருடம் செத்துப் போயிட்டா.' என்றாள் சரசு.

'அப்போ உன் புருசன்..?'

'மூன்று வருடமாச்சு, இவனுக்கு சாப்பிட ஏதாவது கடையிலே வாங்கிக் கொண்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு கடைப்பக்கம் போனவர்தான் அப்புறம் திரும்பி வரவே இல்லை..!' என்றாள்.

எங்கே போயிருப்பான் என்பதுதான் எப்போதுமே விடை தெரியாக் கேள்வியாய்த் தொக்கி நிற்கிறது. தன்னைப் போலவே தொலைந்து போனவர்களின் பட்டியலில் அவனது பெயரும் எங்கேயாவது எழுதப்பட்டிருக்கலாம் என இவன் நினைத்தான். இன்று நாட்டில் இருக்கும் சூழ்நிலையில் அவன் உயிரோடு இருப்பானோ என்பதுகூட இவனுக்குச் சந்தேகமாய் இருந்தது.

'ஏதோ பெற்றெடுத்த கடமைக்காக என்றாலும் காய்ச்சிற கஞ்சியோ, கூழோ மிச்சம் இருக்கிறதைக் கொடுத்தால் போதும் சரசு, உனக்கு ஒருகாலும் நடேசு பாரமாய் இருக்கமாட்டான்.' வேலி ஓலையில் பிய்த்து எடுத்த ஈக்குச்சியால் பல்லைக் குடைந்து கொண்டிருந்த நடேசுவிற்காகப் பெரியவர் பரிந்துரைத்தார்.

கனவு கண்டுகொண்டு வாசலில் படுத்திருந்த நாய் திடீரென எழுந்து தன் இருப்பை உறுதி செய்ய ஒரு உசுப்பல் உசுப்பி சோம்பல் முறித்தது. நடேசுவைக் கண்டு கொள்ளாமல், ஒரு பாய்ச்சல் பாய்ந்து எதிர் வீட்டுக் கோழியை விரட்டிக் கொண்டு ஓடியது. வாசலின் வெறுமையில் கலைந்துபோன ஈக்கள் எல்லாம் இப்போ நடேசுவைச் சுற்றி மொய்க்கத் தொடங்கின.

குரு அரவிந்தன்
கனடா
நன்றி : கனடிய தமிழ் வானொலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 10:27 am

தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது.
எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும் தர்மசங்கட நிலை ஏற்படும்போது சிலர் தெரியாதமாதிரி, கண்டும் காணாததுபோல முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவி விடுவதும் உண்டு.

சிலர் வேறு வழியில்லாமல் ''சார் எப்படி இருக்கிறீங்க, சௌக்கியமா..?'' என்று பட்டும் படாமலும் குசலம் விசாரித்து விட்டு விலகிச் செல்வதும் உண்டு. இன்னும் சிலர் உண்மையாகவே குரு பக்தியோடு, நலம் விசாரிப்பதில் அக்கறையோடு நின்று நிதானமாக பேசுவதும் உண்டு.

'இத்தனை வருடங்களுக்குப் பின்னும் என்னுடைய பெயரை ஞாபகம் வைச்சிருக்கிறீங்களே, எப்படி சார்..?' என்று வேறுசிலர் ஆச்சரியப்படுவதும் உண்டு.

'உங்கவீட்டிற்கு குடும்பத்தோடு ஒரு நாளைக்கு வரணும் சார், உங்களைப் பற்றி தினமும் வீட்டிலே சொல்லுவேன், இது நீங்க கொடுத்த வாழ்க்கை.' கைகளைப் பற்றிக் கொண்டு டாக்டர் சுந்தர் சென்றவாரம் கண்கலங்கச் சொன்னபோது எனக்கும் கண்கள் கலங்கிவிட்டன.

வீட்டைவிட்டு வெளியே உலாவந்தால் என்னிடம் படித்த மாணவர்கள் நிறையவே தென்படுவார்கள். இப்படி என்னிடம் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று டாக்டகளாகவோ, அல்லது உயர் பதவி வகிப்பவர்களாகவோ இருந்து கொண்டு சென்ற இடமெல்லாம் என்னிடம் நலம் விசாரிக்கும்போது,

இந்த சமுதாயத்திற்கு முடிந்த அளவு நல்லதொரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கிக் கொடுத்த எனது கடந்தகால வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருப்பதாக எனக்குள் ஒரு பெருமிதம் தோன்றும். என்னுடைய மாணவன் என்று சொல்லிக் கொள்வதில், அறிமுகம் செய்வதில் மனசெல்லாம் பூரித்துப் போகும். இவன் மட்டும் எந்த வகையிலும் சேராமல் வித்தியாசமாய், மரியாதையின் நிமிர்த்தம் சட்டென்று வாயிலே இருந்த சிகரட்டை எடுத்து பின்னால் மறைத்துக் கொண்டு நின்றான்.

வாய்க்குள் இருந்த புகையைக் கஸ்டப்பட்டு மென்று விழுங்குவது தொண்டைக் குழி அசைவில் தெரிந்தது. பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம். தர்மசங்கடமான அந்த நிலையில் தன்னைத்தானே மாட்டிக் கொண்டு விழித்தான். அந்த இறுக்கத்தைத் தணிக்க, எதிர்த்தாற்போல் நின்ற அவனிடம் 'எப்படி இருக்கிறாய்,..?' என்று குசலம் விசாரித்தேன்.

என்னுடைய கல்லூரி வாழக்கையில் வந்துபோன பலரில் இவனும் ஒருத்தனாய் இருந்தான். நல்ல நிறமாய், மிக நேர்த்தியாக உடை அணிந்து இருப்பான். அன்று மாணவனாய் இருக்கும் போது பார்த்த அதே அலட்சிய் பார்வை. உருவம் மட்டும் கொஞ்சம் மாறி இருந்தது. புத்தகமும் கையுமாய் அதே மூக்குக் கண்ணாடியோடும், கீழ்க்கண் பார்வையோடும் காட்சி தந்தான்.

வெகுநாட்களாகத் தூங்காதவன் போல முகம் களைத்திருந்தது.
'சார் நல்லா இருக்கிறீங்களா..?' என்று ஒரு சொல்லாவது அவன் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. எனக்கேன் இந்த ஆசை என்பது எனக்கே புரியவில்லை. எதையுமே நிலையாக உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் அவன் தற்போது இல்லை என்பது அவனை அருகே பார்த்தபோது புரிந்தது. தள்ளாத வயதில் எதிர்பார்புகள் அதிகமாக இருக்குமோ?

மேளனத்தின் இடைவெளியைத் தவிர்ப்பதற்காக,
'என்ன இந்தப் பக்கம்..?' என்றேன்.

'சும்மா.. லைபிரரிக்கு..!'

அந்த ஒற்றைச் சொல்லுக்கு மேலே அவன் எதுவும் சொல்லவில்லை.
அந்த ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு இவனைப் பற்றிய முழுவதுமான எந்த ஒரு முடிவிற்கும் என்னால் வர முடியாமல் இருந்தது.
காற்றின் சுழற்சியில் சிகரட் புகை மேலே எழும்பி முதுகைத் தாண்டி தலைக்குமேலால் சுருண்டு போனது. விரல் இடுக்கில் இதுவரை பின்னால் மறைத்து வைத்திருந்த சிகரட் விரலைச் சுட்டிருக்க வேண்டும்.

அப்படியே கீழே நழுவவிட்டான். விழுந்த இடத்தைப் பார்க்காமலே வெகுலாவகமாக குறி வைத்துச் செருப்புக் காலால் மெல்ல நசித்து விட்டான். அது நசுங்கிய வேகத்தில் வித்தியாசமான ஒருவித மணம் பரப்பி வண்டிச் சக்கரம்பட்ட தேரைபோல இறுதி மூச்சை விட்டுப் பிதுங்கிப் போனது. என் மீது இருந்த பார்வையை எடுக்காமலே தன்னிச்சையாகவே அத்தனையையும் செய்து முடித்தான்.

ஒருவேளை இவனது கடந்தகால வாழ்க்கையும் இப்படித்தான், புரியாத தெரியாத காரணங்களால் அடிபட்டு நசுங்கிப் போயிருக்குமோ..?
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, இவன் முதன் முதலாக அட்மிஷன் கேட்டு வந்தபோது அவனது தாயும் கூடவே வந்திருந்தாள். கேட்டதற்கு மட்டும் இவன் தலையசைத்தான், பாரம் நிரப்புவது முதற்கொண்டு மிகுதி யாவற்றையும் தாயே செய்து முடித்தாள். போகும்போது 'என் பையன் டாக்டராகணும், அது உங்க பொறுப்பு என்று வேறு சொல்லிவிட்டுச் சென்றாள்.

மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்ற ஆதங்கம் அவள் பேச்சிலும் செய்கையிலும் தெரிந்தது.

அவனுக்கு கணிதம் நன்றாகவே வந்தது. ஆனால் விஞ்ஞானம் புரியவே மாட்டேன் என்றது. பொறியியல் துறையில் அவனுக்கு இருந்த ஆர்வம் விலங்கியல் துறையில் வரவேயில்லை. ஆனாலும் எப்போதும் புத்தகமும் கையுமாய் படித்துக் கிழிப்பவன் போல் வெறும் பாவனை செய்வான்.
தாயின் கனவுகள் வெறும் பகற்கனவாய்ப் போகப் போகிறது என்பது எனக்குச் சீக்கிரமே புரிந்து போயிற்று. காலத்தை விரயமாக்க வேண்டாம், அவனுக்குப் பிடித்தமான துறையில் அவனைச் செல்ல விடும்படி ஜாடைமாடையாக தாயிடம் சொல்லிப் பார்த்தேன்.

கேட்பதாக இல்லை. மகனை டாக்டராக்கிப் பார்ப்பதைத் தவிர வேறு லட்சியமே தனக்கு இல்லை என்பது போல, நான் சொன்னது எதையுமே அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கடைசியில் காலம்தான் பதில் சொன்னது. தாயின் கனவு கலைந்தபோது, அவன் எதுவுமே இல்லாமல் வெறும் பூஜ்யமாய் இருந்தான்.

'உன் அம்மா..?' சட்டென்று தாயின் ஞாபகம் வரவே விசாரித்தேன்.
'அம்மாவிற்கென்ன என்னை தனியே நடுத்தெருவில் விட்டிட்டு மகாராசியாப் போயிட்டா.' சட்டென்று சுதாரித்துக் கொண்டு, கைகளை உயர்த்தி மேலே காட்டிச் சொன்னான். பார்வை எங்கோ வெறித்தது.

'ஐயாம் சொறி..!' அனுதாபப்பட்டு ஆறுதல் கூறினேன்.

கனவுகளை யதார்த்தம் என்று நம்பி ஏமாந்தவள் இவனின் தாய். இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றவள் மகாராசியாய் எப்படிப் போயிருக்க முடியும், பரிதவித்துத்தான் போயிருப்பாள் என்று, அவனது பதில் என்னை எண்ண வைத்தது.

என்னுடைய கடந்தகால ஆசிரியர் தொழில் அனுபவத்தில், இப்படி எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் பெற்றோரின் வீண் பிடிவாதத்தால், தவறான பாதையில் வழிகாட்டப்பட்டு கடைசியில் ஒன்றுமே இல்லாமற் போவதைப் பார்த்திருக்கிறேன். இவன் மட்டும் என்ன விதிவிலக்கா?

கொஞ்சக் காலம் என்னிடம் படித்தவன் என்ற முறையில், அவனது இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமோ என்று மனசு சங்கடப்பட்டது.

'நேரம் இருந்தால் எங்க வீட்டுப் பக்கம் ஒரு நடை வாவேன்' என்றேன்.
'எங்கே இருக்கிறீங்க..? முகவரியைக் கொஞ்சம் கொடுங்களேன்' என்றான்.
முகவரியைச் சொன்னேன். பவ்வியமாய் ஒரு துண்டுப் பேப்பரில் குறித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான்.

'கட்டாயம் வரணும் சரியா?' என்றேன்.

'கட்டாயம் வர்றேன், ஆனால் நீங்க யார் என்று இன்னமும் சொல்லவே இல்லையே..?' என்றான்.

அவனது காலடியில் கிடந்த நசிக்கப்பட்ட சிகரட் துண்டு என் பார்வையில் பட்டது. அந்த சிகரட் புகையின் நாற்றம் என் உடம்பு முழுவதும் சட்டென்று படிந்து விட்டது போல ஏனோ என் உணர்வு சங்கடப்பட்டது.

குரு அரவிந்தன்
கனடா
நன்றி : ஆனந்தவிகடன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 10:36 am

கல்லட்டியல்
**********

துகிலுரித்த மரங்களின் நிர்வாண அழகை ரசித்தது போதுமென்று நினைத்ததோ இயற்கை, மரங்களுக்கெல்லாம் பனிப்போர்வை போர்த்திக் கொண்டிருந்தது. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசிவது போல், இயற்கையின் இந்தச் சொரிவில் வீடுகளின் ஓடுகளும் வீதிகளும் கூடப் பனிப் போர்வைக்குள் தம்மை ஒளித்துக் கொண்டன.

எங்கு பார்த்தாலும் வெண்மை. வானம், பூமி, மரங்கள், வீடுகள் எல்லாமே வெண்பனிப் போர்வையில் கண்களைக் கொள்ளை கொண்டன.

இந்த அழகையெல்லாம் ரசிக்க பெண்களுக்கெங்கே நேரம்! அழகிய வெண்பனிக் குவியலுக்குள் எழுந்து நிற்கும் வீடுகளுக்குள் எல்லாம் பெண்கள் அவசரமாய்த்தான் திரிவார்களோ?!

காலையின் கருக்கலைக் கூடத் துடைத்தெறிந்த பனியின் வெண்மையில் ஒளிர்ந்திருந்த ஜேர்மனியின் நகரங்களில் ஒன்றான ஸ்வெபிஸ்ஹாலின் மலைச்சரிவொன்றில் அமைந்திருந்த அந்தச் சாம்பல் நிற வீட்டுக்குள் லலிதா பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தாள்.

எல்லாப் பெண்களுக்குமுள்ள அதே அவசரம். அதே வேலைச் சுமைகள். ஊதிப் பற்ற வைத்த அடுப்பு மின்சாரத்தில் இயங்கினால் என்ன! ஆட்டுக்கல்லும், குளவியும் கிரைண்டர் ஆனால் என்ன! பெண்களுக்கு வேலைக்குக் குறைவில்லை.

சுந்தரேசனை மட்டும் இந்தக் காலைப் பரபரப்பு எதுவுமே செய்ததாகத் தெரியவில்லை. லலிதா போட்டுக் கொடுத்த தேநீரை உறிஞ்சி உறிஞ்சிச் சுவைத்த படி, அவன் அன்றைய பத்திரிகையை நிதானமாக வாசித்துக் கொண்டிருந்தான்.

ஒரு வேளை சுந்தரேசனுக்கு மனைவியாக லலிதா வாய்த்தது போல், லலிதாவுக்கும் ஒரு மனைவி வாய்த்திருந்தால் லலிதாவின் காலைகளும் நிதானமாக விடிந்திருக்குமோ?!

லலிதா, தேநீர், சாப்பாடு எல்லாவற்றையும் ஆயத்தப் படுத்தி மேசையில் வைக்கும் போதே பிள்ளைகளிகன் அறைகளில் அலாரங்கள் அலறின. அலாரங்கள் எப்படித்தான் அலறினாலும், லலிதா போகாமல் அவர்கள் எழும்ப மாட்டார்கள்.

லலிதா பிள்ளைகளின் அறைகளுக்குள் விரைந்தாள். மூத்தவன் மணிக்கூட்டின் அலார பட்டனை அழுத்தி விட்டு, மீண்டும் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தான். சின்னவனோ அலாரத்தின் அலறல் பற்றிய எந்த பிரக்ஞையும் இன்றி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். நடுவனோ "அம்மா..! இன்னும் கொஞ்சம் படுக்கப் போறன்." என்று கெஞ்சினான்.

மூன்று பேரையும் எழுப்பிக் குளிக்க வைத்து, சாப்பாடு கொடுத்து, பாடசாலைக்கு அனுப்பி, சுந்தரேசனையும் வேலைக்கு அனுப்புவதற்கிடையில் லலிதாவுக்குப் போதும் போதுமென்றாகி விட்டது.

நேரமும் 7.30 ஐத் தொட்டு விட்டதால் அப்பாடா என்று அமரக் கூட முடியாமல் அவசரமாய் தலை சீவி, சப்பாத்தையும் போட்டு, ஜக்கெற்றையும் போட்டுக் கொண்டு, கைப்பையுடன் லலிதா படிகளில் ஓடி இறங்கினாள்.

வாயிற் கதவைத் திறந்ததும், ஜில்லென்ற குளிர்ந்த காற்று முகத்திலறைய, காது மடல்கள் விறைக்க வேறு வழியின்றி, லலிதா பனிக்குவியலுக்குள் காலை வைத்த போது, இடது பக்கமிருந்து வந்து கொண்டிருந்த றூடியுடன் மோதப் பார்த்தாள். ஆனால் மிகவும் பிரயத்தனப் பட்டு மோதுவதைத் தவிர்த்துக் கொண்டாள்.

ஓடி வந்த வேகத்தில் மூச்சிரைத்தபடி ஜக்கெற்றைக் கூடப் பூட்டாமல் விரையும் அவளைச் சிரிப்புடன் பார்த்த றூடி,
"உன்னோடு மோதியிருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும். ஒரு இனிமையான நிகழ்வைத் தவிர்த்து விட்டாயே!" என்று சலிப்படைந்த பாவனையுடன் ஜேர்மனிய மொழியில் சொன்னார்.

63 வயது நிரம்பிய ஜேர்மனியரான றூடியின் குறும்பு எப்போதும் இப்படித்தான் இருக்கும். றூடியின் குறும்பு லலிதாவை என்றுமே கோபப் படுத்தியதில்லை. காரணம் லலிதாவின் அப்பாவின் வயதுதான் றூடிக்கும். `அப்பாவைப் போலவே எப்போதும் குறும்பு.´ நினைத்துக் கொண்டவள் சிரித்தாள். சற்று நேரத்துக்கு முன்பு வரை அவளுள் இருந்த இறுக்கமான நிலைமாறி மனசுக்குள் ஒரு மகிழ்வு ஓடியது.

காரில் குவிந்திருந்த பனியை வழித்தெறிந்து, இறுகப் படிந்திருந்த பனியைத் தேய்க்கும் போது, குளிரில் லலிதாவின் கைவிரல்கள் கொதித்தன. விரல்களை ஊதிவிட்டு, ஊதிவிட்டு பனியைச் சுரண்டியெறிந்து விட்டு காரினுள் ஏறினாள். ஹியரிங்கைப் பிடித்த போது ஏற்கெனவே குளிரில் கொதித்த விரல்களும் கைகளும் நடுங்கின. கார் கண்ணாடிகளைப் புகார் மறைத்தது. லலிதாவுக்கு எதுவுமே தெரியவில்லை. நெஞ்சுக்குள் குளிர்ந்தது.

"வேளைக்கே வெளிக்கிட்டு பஸ்சிலேயே போயிருக்கோணும். கராச் இல்லாமல் வின்ரரில் கார் சரி வராது." அவளின் மனசு முணுமுணுத்தது. குளிரில் உடம்பே நைந்து போனது போல இருந்தது. கைவிரல்களின் நுனிகள் வெடித்து இரத்தம் பீறிடத் தயாராக இருந்தது. இந்த வதைகளைத் தாங்க மாட்டாத லலிதா `என்ன வேலை அதுவும் இந்தக் குளிரிலை. பேசாமல் வீட்டிலை நிண்டு வானொலி கேட்டு, புத்தகங்களை வாசிச்சுச் சந்தோஷமாக வாழ முடியாமல் வேலை வேலையெண்டு... என்ன வாழ்க்கையோ..!´ மனதாரச் சலித்தாள்.

கார் கண்ணாடியைக் கீழே இறக்கி விட்டாள். றூடி நிதானமாகத் தனது பென்ஸ் காரைத் தேய்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் விடைபெற கையைக் கூடத் தூக்க முடியாத நிலையில் தலையை மட்டும் ஆட்டி விடை பெற்ற லலிதாவுக்குக் கார் ஓட்டுவதே கஷ்டமாக இருந்தது. குளிர் புகாராகக் கண்ணாடிகளை மறைத்தது. கார்வெப்பமூட்டியின் வெப்பத்தில் புகார் விலகி கார்க் கண்ணாடிகள் தெளிவாகும் வரை அவள் மிகுந்த சிரமப்பட்டு விட்டாள்.

தெளிந்த கார் கண்ணாடிகளினூடே பனிப்பூக்கள் பூத்த மரங்கள் மிகவும் அழகாகத் தெரிந்தன. லலிதாவின் மனமோ ஊரிலிருக்கும் அப்பாவிடம் தாவி மெல்லிய சோகத்துள் ஆழ்ந்து போனது.

ஸ்மார்ட்டாக காரின் பனியைத் தேய்த்துக் கொண்டிருந்த றூடியையும், முந்தநாள் தபாலில் வந்த புகைப்படத்தில் இருந்த அப்பாவின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்த்ததின் விளைவே லலிதாவின் சோகம்.

லலிதாவின் அப்பாவும் ஒரு காலத்தில் ஸ்மார்ட்டாகவும், குறும்பாகவும் இருந்தவர்தான். பெண்களைப் பெற்றதால் வாழ்க்கையின் வசந்தங்களைத் தொலைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அவர் வாழ்க்கையை அநுபவிப்பதில் ஆசை கொண்டவர். ஆனால் பெண்களின் பிறப்பே, இன்னொருவனின் கையில் ஒப்படைக்கப் படுவதற்காகத்தான், என்று கருதும் சமுதாயத்தில், அவர் நான்கு பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்தது அவர் செய்த தப்பு. அதற்குத் தண்டனையாக நகைக்கும், வீடு, வாசல்களுக்குமாய் பெண்களைப் பெற்ற எல்லா அப்பாமார்களையும் போல அவரும் தன்னையும் தன் தனித்துவமான ஆசைகளையும் கரைத்துக் கொண்டது நியம்.

இந்த நியம்தான் லலிதாவுக்குப் பிடிக்கவில்லை. சமுதாயக் கோட்பாடுகளில் நெரிபட்டவர்கள் பெண்கள் மட்டுந்தானா? பெண்களைப் பெற்றவர்களும்தான். சமூகத்தின் மேல் அவளுக்குக் கோபந்தான் ஏற்பட்டது.

லலிதாவுக்கு இப்பவும் நல்ல ஞாபகம். லலிதாவின் அப்பாவுக்கு சுற்றுலா என்றால் நிறையவே பிடிக்கும். இலங்கையின் எல்லாப் பாகங்களையும் மனைவி, குழந்தைகளுடன் சுற்றிப் பார்த்து விட்ட அவருக்கு இந்தியாவின் மகாபலிபுரம் போன்ற அழகிய இடங்களையும் மனைவி குழந்தைகளுடன் சுற்றிப் பார்த்து விட வேண்டுமென்ற அளவிலாத ஆசை.

அப்போ அவருக்கு சம்பளத்துடன் அரியஸ் ஆக ஒரு தொகைப் பணம் வந்திருந்தது. அப்பணத்தில் சுற்றுலாவை மேற்கொள்வதாய்த்தான் அவர் எண்ணியிருந்தார். அரியஸ் பணத்துடன் வீட்டுக்கு வரும்போதே அவர் முகத்தில் உற்சாகம் பொங்கியிருந்தது.

அந்த நேரம் பார்த்துத்தான் லலிதா பூப்பெய்த வேண்டுமா? வீட்டிலே நடந்த ஒரு சந்தோசத்தில் இன்னொரு சந்தோசம் கரைந்து விட்டது. பெரியவளாகி நிற்கும் லலிதாவையும், தொடர்ந்து வரிசையில் நிற்கும் மூன்று பெண் குழந்தைகளையும் காட்டி நகை, நட்டு, காணி, வீடு என்று அவர்களுக்கு சேர்க்க வேண்டிய கட்டாயத்தையும் கூறி லலிதாவின் அம்மா, அப்பாவின் சுற்றுலா ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டா.

லலிதாவின் அம்மாவின் விருப்பப்படி அப்பணத்தில் லலிதாவுக்குக் கல்லட்டியலும், மிகுதியில் தங்கைமாருக்குச் சில நகைகளும் செய்வதாகத் தீர்மானிக்கப் பட்டது.

சில நாட்களில் அப்பாவின் அரியஸ் பணம் சிவப்பு வெள்ளைக் கற்களுடன் அழகிய அட்டியலாகவும், சங்கிலிகளாகவும், காப்புகளாகவும் மாறிவிட்டது. லலிதா அட்டியலைப் போட்டுக் காட்டிய போது அவள் அப்பாவின் முகத்திலும் பூரிப்புத் தெரிந்தது. ஆனாலும் அப்பாவின் சுற்றுலா ஆசை அட்டியலுக்குள் தொலைந்து விட்டதே என்ற கவலை லலிதாவைப் பற்றிக் கொண்டது.

தொடர்ந்த காலங்களிலும் அப்பாவுக்கு வரும் பணமெல்லாம் காணி வாங்குவதில், வீடு கட்டுவதில், நகைகளில், ஒவ்வொரு பெண்ணினதும் கல்யாணச் செலவில் என்று கரைந்தது. வேலையும், ஊதியமும் கடமையாய், கட்டாயமாய் என்றாகி விட்டது.

லலிதா வேலை செய்யத் தொடங்கி வெகு நேரமாகியும் அப்பாவின் நினைவாகவே இருந்தாள். மாலை வேலை முடிந்து வீடு திரும்புகையிலும் அவளின் நினைவுகளின் ஓரத்தில் சோகம் இழைந்தோடிக் கொண்டிருந்தது.

நாங்களாவது பக்கத்திலிருந்திருந்தால் அப்பா பேரப் பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவி சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்திருப்பார். பொல்லாத நாட்டுப் பிரச்சனை, அதற்குக் கூட வழியில்லாது செய்து விட்டதே. பேதலித்த மனதுடன் காரை விட்டு இறங்கினாள்.

முன்னாலிருந்த சிறுவருக்கான விளையாட்டு மைதானத்தில், குளிரையும் பொருட்படுத்தாது, சில ஜேர்மனியக் குழந்தைகள் பனிகளைச் சேர்த்து பெரிய ஐஸ் மனிதன் ஒன்றைச் செய்து விட்டு சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். இன்னும் சில குழந்தைகள் ஐஸ் கட்டிகளை உருட்டி, உருட்டி ஒருவரையொருவர் கலைத்துக் கலைத்து எறிந்தார்கள்.

அவர்களின் விளையாட்டில் லலிதா தன்னை மறந்து லயித்திருந்த அந்தக் கணத்தில் ஒரு சிறிய ஐஸ்கட்டி ஜில்லென்று அவளை உரசிச் சென்றது. திடுக்கிட்டுத் திரும்பினாள். றூடி ஒரு பெரிய ஐஸ் உருண்டையுடன் நின்று, லலிதாவுக்கு எறியப் போவது போலப் பாவனை காட்டினார்.

Nein... Nein.... (நோ.. நோ.. ) லலிதா சிரித்தவாறு கத்திக் கொண்டு வீட்டுக்குள் ஓடினாள்.

அவளுக்குள் இருந்த இறுக்கம் கலைந்து மீண்டும் அவள் மனசு இலேசாகியிருந்தது. அந்த உஷாருடன் வீட்டுக்குள் மீண்டும் பம்பரமாய் சுழலத் தொடங்கினாள்.


சந்திரவதனா
ஜேர்மனி
2000
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 10:41 am

நூல் ஏணி
****************
பெண்ணே நீ: ஓட்டல் ஆகாஷ் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை.

பொன்னுத்தாய்க்கு ரத்தம் கொதித்தது. கொழுந்தன்காரனை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.

"பாவிப்பய.... என்னமா நம்புற மாதிரி பேசுறான்...?'

இப்பவும் நமட்டுச் சிரிப்போடு அவளையே பார்க்கிறான். கண்களில் அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒரு குள்ளநரித்தனம்!

அவள் ஒரு பொருட்டே இல்லை என்பதுபோல் அவன் தொடர்கிறான்.... ""ஆமாப்பா.... அந்த மூர்த்தி ஒரு பொம்பள பொறுக்கி.... அங்க என்ன பாடமா நடத்துறான்...? ஒரே பாட்டும் கூத்தும்தான். அவனுக்கிட்டே இதுகளுக்கு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு...''

பொன்னுத்தாய்க்குக் கண்களில் மளுக்கென்று நீர் எட்டிப் பார்த்தது. ""நேத்து பேஞ்ச மழயிலே மொளச்ச காளான்.... எப்படியெல்லாம் எடுத்துக்கட்டி பேசுறான்...? நான் மாலையும் கழுத்துமா இந்த வீட்டு வாசப்படி மிதிச்ச மக்கா நாளே "அத்தாச்சி.... ஆய கழுவி விடு...'ன்னு வந்து நின்ன வாண்டு.... இன்னிக்கி வளந்துட்டானாம்.... என்ன வேணாலும் பேசுவானாம்... அவுக ஆயி அப்பன் அதக்கேட்டு பூரிச்சுப் போவாகளாம்.... நான் கேனமாரி கேட்டுக்கிட்டு நிக்கணுமாம்... இருக்கறவுக இங்க இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா?''

அவள் எண்ண ஓட்டம் புரிந்ததுபோல் மாமனாரின் குரல் வந்தது. ""அவன் என்ன சொல்லீட்டான்னு இப்ப நீலீக்கண்ணீர் வடிக்கிறே? அவன் சொன்னாலும் சொல்லாட்டியும் நாஞ்சொல்றேன்.... இனிமேட்டுக்கு நீ அங்க போகக்கூடாது.... மீறிப் போகணுமின்னா நடையக் கட்டிக்க.... நாங்களும் சொல்ற எடத்திலே சொல்லிக்கிறோம்....''

பிறவிக் குருடனுக்கு ஒருநாள் பார்வை வந்து மறுநாளே பறிபோனது போல் துடித்துப் போனாள்.

"இங்கேருந்து கூப்புடு தூரத்திலே இருக்கற எடத்துக்கு படிக்கப் போனது இவ்வளவு பெரிய குத்தமா...?'

இரண்டு மாதங்களுக்கு முன்னால் மருதாயி மதினி களையெடுக்கும் இடத்தில்தான் அதைச் சொன்னாள்.

"ஊரே கொள்ளுன்னு கிடக்குடி... பொம்பளையெல்லாம் கூடிக் கூடிப் பேசிக்காளுக... போயி ரெண்டு நாளைக்கி ஒக்காந்தா போதுமாம்.... அம்புட்டு படிப்பையும் படிச்சிரலாமாம்.... ஒரு மாத்தையிலே கடிதாசி கிடிதாசியெல்லாம் எழுதலாமாம்....''

பொன்னுத்தாய்க்கு எழுத்து சுலபமாக வசப்பட்டது. சொல்ýக்கொடுக்க வந்த மூர்த்தியே அவளின் அறிவுப்பசி பார்த்து அசந்து போனான்.

இரண்டு மூன்று எழுத்துகளை ஒன்று சேர்க்கும்போது அது ஒரு உருவம் பெற்றுவருவது புதுமையாகவும், விளையாட்டாகவும் இருந்தது. மளிகை மடித்து வந்த காகிதங்களோடு அவள் மல்லுக்கு நின்றாள். சுவரொட்டிகளெல்லாம் அவளோடு சொந்தம் கொண்டாடியது. மனசின் மர்மப் பிரதேசங்களில் எல்லாம் விளக்கெரிந்தது. சதா குத்தம் சொன்ன வீடுகூட அவளுக்கு இப்பொழுது சொர்க்கபுரியாகிவிட்டது. சுவரில் கோடு போட்டு வைத்திருந்த பால்கணக்கை நோட்டில் எழுத முயன்றாள்... வீட்டின் சுவரிலெல்லாம் பொன்னுத்தாய்..... முத்துச்சாமி... மயிலி... என்று கரிக்கட்டை எழுத்துகளால் கோணல் மாணலாய் எழுதப்பட்டிருந்தது. சதா உர்ரென்று ஒரு மாமனார்.... எதைச் சொன்னாலும் குத்தம் சொல்லியே பழக்கப்பட்ட கொழுந்தன்... இந்த வயசிலும் மாமனாரைப் பார்த்து பயப்படும் மாமியார்.... எதையாவது "லவட்டிக்' கொண்டு போவதற்காகவே வரும் கட்டிக்கொடுத்த நாத்தனார்....

"மூணாப்பு' படிக்கும் மகள் மயிலி இருந்தாளோ அவள் பிழைத்தாளோ? எல்லோருடைய குற்றங்குறைகளும் பொன்னுத்தாய்க்கு மறந்தே போனது.... பின்னே என்ன.... முன்னே மாதிரி வீட்டு வேலையப் போட்டுப் போட்டு பத்துப் பதினோரு மணி வரைக்கும் பாக்க முடியுமா? எட்டு மணிக்கு வகுப்பு... அதற்குள் எல்லா வேலையையும் முடிக்க வேணாமா?

பொன்னுத்தாய் ஓடி ஓடி வேலை செய்தாள். ஆறு மணிக்கெல்லாம் மாலைச் சமையல் முடிந்துவிடும். ஏழு மணிக்குள் கோழி கவுத்து மாடு தண்ணி காட்டி வைக்கோல் போட்டு வீடுகூட்டி எட்டு மணிக்கெல்லாம் எல்லோருடைய வயித்தையும் ரொப்பி.... முதல் ஆளாய்ப் போய் உட்கார்ந்து விடுவாள். அவளுக்குப் பின்தான் ஒவ்வொருவராய் "படிக்க' வருவார்கள்.

கணவன் முத்துச்சாமி வந்தால் கிடைக்கும் வீட்டு அன்னியோன்யம் அவளுக்கு அந்த இடத்தில்தான் கிடைத்தது. அவன் வந்துவிட்டுப் போகும் ஓரிருமாதங்கள் பட்டாம்பூச்சியாய்த் திரிவாள்.... அவன் மறுபடி கிளம்பிப் போய்விட்டால் அடுத்து அவன் வரும்வரை அவன் வருகைக்கான தவம்....

அவன் சம்பாத்தியத்தில்தான் நாத்தனாரை நல்லாச் செஞ்சு கட்டிக்கொடுக்க முடிந்தது.... காடுகரைகளை வாங்க முடிந்தது..... மகள் மயிýக்கென்று ஓரிரண்டு நகை சேக்க முடிந்தது...

எங்கோ தூரதேசத்தில் தன் கணவன் உடம்பைக் கடம்பாய் அடித்து வேலை செய்கையில் அவளுக்கு சிரிப்பு எங்கிருந்து வரும்? திருமணமாகி ஆறாம் மாதமே அவன் பிழைப்புக்காக வெளிநாடு போய்விட்டான்.... அங்கு என்ன கலெக்டர் உத்யோகமா? கப்பலில் சரக்கு ஏற்றும் சாதாரண கூலி.... வாயக்கட்டி வயித்தக்கட்டி தன் குடும்பத்திற்காக உழைத்தான்....

நல்லவன்தான்.... கொஞ்சம் சங்கோஷி.... திருமணமான இந்த பத்து வருடங்களில் பொன்னுத்தாயிடம் எத்தனை வார்த்தை பேசியிருப்பான் என்று எண்ணி விடலாம்.... வீட்டுக்கு எழுதும் கடிதங்களிலும் எல்லோருக்கும் போல பொன்னுத்தாய், மயிலி சுகமா? என்று ஒரேயொரு வார்த்தைதான்....

அவளுக்கோ அவனிடம் சொல்ல ஆயிரமாயிரம் சேதிகள் இருந்தது.

எல்லாவற்றையும் மானசீகமாக அவனோடு பேசிக் கொண்டிருப்பாள்... அவனிடம் நேரில் சொல்ல வேண்டுமென்று மனசு பரபரத்துக் கிடந்தது மயிýயை "உண்டாகி' இருந்த பொழுதுதான்.... அப்பொழுதுதான் அவன் முதன்முறையாய் போயிருந்தான். அவன் கிளம்பும்போது மெய்யோ பொய்யோவென்றிருந்தது. வயிற்றில் உதைக்கும் பிஞ்சுக் கால்களின் குளுமை, ஆணா பெண்ணா என்ற செல்லச்சண்டை, பேரு வைப்பதில் போட்டி....

எல்லாவற்றையும் கணவனிடம் கற்பனையிலேயே பகிர்ந்து கொண்டாள். அவன் நேரில் வரும்போது குழந்தைக்கு வயது ரெண்டரை! அது மட்டுமா? தீபாவளிக்கு வரிசை கொண்டு வந்த அண்ணனை மோதிரம் கொண்டுவரவில்லையென்று மானங்கண்ணியாய் பேசி அண்ணாவை கை நனைக்காமலேயே அனுப்பிவிட்ட மாமனாரின் பவிசை புருஷனிடம் சொல்ல எப்படித் துடித்திருப்பாள்?

நல்ல வசதியான வீட்டில் வாக்கப்பட்டு போனாலும் அப்பப்போ வந்து ஏதாவது சாக்குச் சொல்லி ஆயிரம், ரெண்டாயிரமுன்னு புடுங்கற நாத்தனாரைப் பத்தி யாரிடம் சொல்ல? அவளின் எல்லா ஏக்கங்களுக்கும் வடிகாலாய் அந்த அறிவொளி மையம்தான் இருந்தது. தான் கற்றுக்கொண்டதை கணவனிடம் காண்பிக்க வேண்டுமே.... எடுத்தாள் ஒரு காகிதம்.... தப்பும் தவறுமாய் எழுதினாள் ஒரு கடிதம்..... என்ன ஆச்சரியம்!

அந்தக் கடிதமும் அவனுக்குப் போய்ச் சேர்ந்து பதிலும் எழுதிவிட்டானே.... அது மட்டுமல்ல.... அவள் கடிதம் எழுதியதை ரொம்பவும் சிலாகித்து எழுதியிருந்தான்... பொன்னுத்தாய் கூத்தாடாத குறைதான்.... கடிதத்தில் ஆங்காங்கே அவளின் ஆனந்தக்கண்ணீர் பட்டு எழுத்துகளே உருமாறி இருந்தது.

கொழுந்தன் தன் சிம்மாசனமே பறிபோய் விட்டதாய் சோர்ந்து போனான். இதுவரை வந்த கடிதமெல்லாம் அவன் பெயருக்குத்தான் வரும்.... வந்தவுடன் உடனே படிக்கமாட்டான்.... கண்களாலேயே கெஞ்சும் அண்ணியின் பார்வையை அலட்சியப்படுத்தி மனசுக்குள்ளேயே படித்துவிட்டு பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு ஊர்சுத்தப் போய்விடுவான்.... அவனிடமிருந்து கடிதச் செய்தியை கறப்பதற்குள் அவளுக்குப் போதும் போதுமென்றிருக்கும்... அவர்கள் வாழ்க்கைச் சரித்திரத்தில் முதன்முறையாய் அவளுக்கு லெட்டர்!

இப்பொழுதும் அவள் எழுதியிருப்பாள் என்று அவன் நம்பவில்லை. யாரையோ எழுதச் சொல்லி அனுப்பி இருக்கிறாள் என்றுதான் நம்பினான்.... அந்த "யாரோ' அவள் போகும் தெருமுனைக் கூட்டத்தில்தான் இருக்க வேண்டும் என்று நம்பினான்.

அவன் குறுக்கு மூளை உடனடியாக வேலை செய்தது... அங்கே எல்லோருமே பெண்கள்..... அடுப்பு நோண்டிகள்... அரைகுறைகள்.... எல்லோருக்கும் சொல்ýக் கொடுக்கிறேன் பேர்வழி என்று பேர் பண்ணிக் கொண்டிருக்கும் மூர்த்தி மட்டும்தான் கடிதம் எழுதுமளவிற்குப் படிப்பாளி...

அவனுக்கும் ஊரையே தன் தோளில் தாங்குவது போல ஒரு நினைப்பு... அப்பா திடீரென்று செத்ததும் குடும்பத்தைக் காப்பாத்த படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு ஒரு வீடியோ கடைக்கு வேலைக்குப் போனவன்....

பார்க்கும் நேரமெல்லாம் எதையாவது படித்துக் கொண்டே இருப்பான்.... பேச்சில் கலெக்டர் கெட்டான் போங்கள்... அவனைச் சுத்தி அவன் பேச்சையும் கேக்க ஒரு கூட்டம்.... சதா கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டே இருக்கும்.... அவனோடு பேசும்.... சிரிக்கும்.... சண்டை போடும்.... சிக்குத்தலையும், வியர்வை நாத்தமும், கிழிந்த ஆடைகளுமாய் அந்தப் பரதேசிக் கூட்டத்திற்கு இவர்தான் ஏகபோக மகாராஜா!

அவனிடம் மாட்டிக் கொண்டால் போச்சு..... சிகரெட் பிடிக்காதே.... தண்ணி அடிக்காதே.... ஒரே அட்வைஸ் மழைதான். இவன் அரிச்சந்திரனா இருந்தா எனக்கென்ன? அதுக்காக ஊரு பொம்பளைகளையெல்லாம் சொல்ýக் கொடுக்கிறேன் பேர்வழின்னு தூண்டி விடுறதா?

என்ன செய்யலாம்...? என்ன செய்யலாம்...?

தெருமுக்கில் வரும்போது மறைந்திருந்து ஒரு கல்லை வீசினால் என்ன? ஒருவேளை மாட்டிக் கொண்டால்...? மூர்த்தியின் ஆஜானுபாகுவான உடம்பு ஒரு கணம் மின்னி மறைந்தது. எப்படி எப்படியோ யோசித்தும் ஒரு வழியும் கிடைக்கவில்லை. ஒரே வாரத்தில் அந்த சந்தர்ப்பம் வந்தது. அந்தக் கூட்டத்துக்குள் ஒரு பொண்ணுக்கும் மூர்த்திக்கும் "இது'வாம்... அவனுக்குத் தோதாய் அது வளர்ந்தது... கண், காது ஒட்டவைத்து கோள்மூட்ட ஒரு காரணம் கிடைத்துவிட்டது. "மூர்த்தி ஒரு பொம்பள பொறுக்கி....' எப்படியோ குறுக்குச்சால் ஓட்டி தன் காரியத்தை சாதித்து விட்டான்.

அவளை மையத்திற்குச் செல்லவிடாமல்தான் தடுக்க முடிந்ததேயொழியே, தன் பசிக்கு அவள் வீட்டுக்குள்ளேயே இரை தேடிக் கொண்டது அவனுக்குத் தெரியாது. மகள் மயிலியின் பாடப்புத்தகங்கள் பொன்னுத்தாயின் விரல்களால் புனிதம் பெற்றது.

கணவனுக்கு மற்றொரு கடிதத்தையும் எழுதி அனுப்பிவிட்டாள். இதற்கிடையில் முத்துச்சாமி தெரிந்த இரு நண்பர்கள் மூலமாக இரண்டு கைக்கடிகாரங்களை அனுப்பியிருந்தான். ஒன்று தம்பிக்காம்... இன்னொன்று அவளுக்காம்....

ஆனந்தத்தில் அவள் திக்குமுக்காடிப் போனாள்! "பெரிய பெரிய டீச்சரம்மாக்களும், பெரிய வூட்டுப் பிள்ளைகளும் போடுற அந்த தங்கக்கலர் கெடியாரம் எனக்கே எனக்கா?'

கையில் மேலாக வைத்து அழகு பார்த்தாள். இருண்ட வானில் நிலவைப் போல அவளின் கறுத்த கையில் ஜொலித்தது! குழந்தையைப் போல குதூகýத்தாள். மயிýயை விட்டு பெட்டிக்கடையிலிருந்து கலர் வாங்கிவரச் சொன்னாள். அப்போதுதான் கறந்து வந்திருந்த பாலில் காபியும் போட்டாள்.

வந்திருந்தவர்கள் எதைக் குடிப்பது என்று முழித்தாலும் அவளின் உற்சாகம் அவர்களை புன்னகைக்க வைத்தது. புதிய கடிகாரத்தை இயக்கும் விதம் பற்றி சொல்லிக் கொடுத்ததோடு கையில் கட்டவும் உதவி புரிந்தார்கள். இரவு சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டுமென்று எல்லோரும் வற்புறுத்தியதில் மறுக்கத் தோன்றாமல் இசைந்தார்கள். சாதம் வைக்கும்போதும் குழம்பு ஊற்றும் போதும்கூட கெடிகாரத்தை அவள் கழற்றவேயில்லை.

சதா அவள் உதடுகளில் சிரிப்பு தவழ்ந்து கொண்டே இருந்தது. தலையில் இடித்துக் கொண்டதற்கு கூட சிரித்தாள். கொழுந்தன் குரோதம் வழிய முறைத்தான். ஒரு வழியாக இருவரும் கிளம்பினார்கள். மாமனாருக்கும் மாமியாருக்கும் அவர்களைவிடவே மனசில்லை. அவளுக்கும்தான். வாசல்படியில் நின்று அவள் பிரியாவிடை கொடுத்தாள். அவர்கள் நாலெட்டு நடக்கும்போது சட்டையை மாட்டிக்கொண்டே போன கொழுந்தன் சொன்னான்.

"எட்டு மணிக்குத்தான் பஸ்.... நிதானமா நடக்கலாம்...''

""இப்ப மணி என்ன?'' ஒருவர் கேட்க இன்னொருவர் மணிக்கட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்.

இருட்டில் தெரியவில்லை போலும்....

கொழுந்தன்காரனின் குரல் வாசல்படியில் நிற்கும் பொன்னுத்தாயை நோக்கி நக்கலும் குத்தலுமாய் வந்தது....

""அத்தாச்சி மணி என்ன?''

பொன்னுத்தாயி நடுங்கிப் போனாள்.

"நானா? என்னையா மணி கேட்கிறான்...?'

பரிகாசமாய் சொல்வது போல் அவன் குரல் கலகலவென்று வந்தது.

""இது என்ன ஜிமிக்கி கொலுசுன்னு நினைப்பா போட்டு அழகு பாக்க.... கெடிகாரமத்தாச்சி.... போட்டா மணி பாக்கத் தெரியணும்....''

பொன்னுத்தாயி அவனை உறுத்து விழித்தாள். அவன் விழிகளில் தெரிந்த நக்கல்.... நையாண்டி....

இம்மாதிரி சந்தர்ப்பங்களில் சட்டென்று குளம் கட்டும் கண்ணீர் ஏனோ வரவில்லை. இறுகிய உதடுகளில் வன்மம். மணிக்கூண்டு கடிகாரம் அவளுள் படமாய் விரிந்தது. மணிக்கூண்டின் ஒவ்வொரு எண்ணும் அவளுடைய கைக்குள் அடைக்கலமாகி கோடுகளாய் விரிந்தது.

மந்திரம் போல் அவள் வாய் அட்சர சுத்தமாய் சொன்னது.

"ஏழு மணி.... முப்பது நிமிடம்.... அதான் ஏழரை மணி....''

சொல்லிவிட்டு சட்டென்று கொழுந்தனைப் பார்த்தாள். அவளின் கம்பீரத் தலைநிமிர்வில் அவன் தலை கவிழ்ந்தான்.

ஐந்தே வினாடிகளில் இழந்த சிரிப்பை அவள் உதடுகள் மீண்டும் பெற்றது.


நன்றி
ஆர். நீலா
Quelle - பெண்ணே நீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by kanmani singh Fri Oct 18, 2013 11:49 am

ஒற்றைக் காலில் நிற்பதால் நீ துறவியுமில்லை. வெண்ணிறமாக இருப்பதால் நீ தூய்மையானவனுமில்லை. தோற்றத்தைப் பார்த்து உன்னை அமைதியின் உருவம் என நம்புபவர்கள் முட்டாள்கள்.

அருமையான தத்துவம்..

கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by sawmya Fri Oct 18, 2013 1:04 pm

அருமை! அருமை!கைதட்டல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:27 pm

nanRi கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 3:51 pm

சுஜாதா
************
மெல்லிய தேகத்தில் - தமிழ்
சொல்லிய இதழோடு - நெஞ்சை
அள்ளிய அழகோடு - மெல்ல
துள்ளி ஓடும் பருவப் பெண்...!!!

கல்லூரி மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தாள்.
கல்லூரி முடிந்ததும் அவளுக்கு திருமணம் முடிக்க, வரதராஜன் , அவளது அப்பா முடிவு பண்ணி இருந்தார்

காதல் கடிதங்கள் நிறைய வந்தும் - அவற்றை கண்டு கொள்ளாமல் - படிப்பில் மட்டுமே கவனத்தில் வைத்திருந்தாள் சுஜாதா....

மேலே படிக்க வேண்டும் நிறைய சம்பாதிக்க வேண்டும் - இது மட்டுமே அவளது கனவாக இருந்தது......

கல்லூரி முடிந்து - காம்பஸ் நேர்முகத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல வேலையில் சேர்ந்து மாதம் 50000 ரூபாய் சம்பாத்யத்தில் சேர்ந்து விட்டாள்

வரதராஜன் அவளுக்கு வரன் தேடத் தொடங்கினார்

ஆனால் - சுஜாதா கல்யாணப் பேச்சு எடுக்கும்போதெல்லாம் எரிந்து விழுந்தாள்.....

சரி யாரையாவது காதலிக்கிறியா சொல்லு அவனையே பேசி முடிச்சிரலாம் - வரதராஜன் வெளிப்படையாக கேட்டும்

அதுல்லாம் ஒன்னும் இல்ல - கல்யாணமும் வேண்டாம் ஒரு கருமாதியும் வேண்டாம் - சட்டென்று எரிந்து விழுந்தாள் சுஜாதா

மகளின் இந்தப் போக்கு அப்பாவுக்கு மனக் கஷ்டத்தை கொடுக்க - எவ்வளவோ திருத்த முயன்றும் - முடியாமல் இறுதியில் வரதராஜன் இறந்தே போனார் - மகளின் கல்யாணத்தை பார்க்காமல்.....

வருடங்கள் பல உருண்டோடியது......

தலை நரைத்து - கண்கள் குழி விழுந்து - தோல் சுருங்கி படுக்கையில் கிடந்தாள் சுஜாதா......

கவனிக்க பணியாளர்கள் இருந்தும் - அவர்கள் பண ரொட்டிக்காக அலையும் மனித நாய்களாக ( நாய்கள் மன்னிக்க....!!! நீங்கள் நன்றி உள்ளவர்கள் )
தென் பட்டார்கள்....!!!

அவளது மனம் நினைக்கத் தொடங்கியது.....

பெரிய தவறு செய்து விட்டேனே....!!!

காதல் கடிதம் வந்தபோது காதலித்தால் கல்யாணம் செய்யனும் - பிறகு கர்ப்பம் - செலவு - செலவு - செலவு - செலவு - செலவு - பணம் பறி போய்விடும் என்று பணத்தாசையில் - முட்டாள் தனமாக என் வாழ்வை சீரழித்து விட்டேனே.....

சுயநலமாக வாழ்ந்து என்ன சுகத்தை நான் கண்டு விட்டேன் ...?

இப்படி எண்ணிய படியே வெறித்திருந்தது சுஜாதாவின் இமைகள் விட்டத்தை வெறித்த படி

அவள் எப்போதோ இறந்து போய் இருந்தாள்......

பெட்டியில் அவளது தங்க நகைகள்......
அனாதையாக இல்லாமல் இன்னுமொரு சோம்பேறிக் கூட்டத்தை தயார் படுத்த தன்னை ஆயத்தப் படுத்தியது.......

வரவு செலவு கணக்கில் - நிச்சயம் பணம் தேவையா ? கொஞ்சம் நாமும் சிந்திப்போமா ?

நன்றி ; கதைக்களம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 11:29 am

பாகப்பிரிவினை
************************
விவசாயி ஒருவன் இறக்கும் தறுவாயில் தன மூன்று மகன்களையும் கூப்பிட்டு, தான் இறந்த பிறகு,தான் எழுதியுள்ள உயிலில் கண்டவாறு அவனுடைய உடைமைகளைப் பிரித்து எடுத்துக் கொள்ளச் சொன்னான்.சிறிது நேரத்தில் அவன் உயிர் பிரிந்தது.கடமைகளை முடித்தபின்,மூன்று மகன்களும் உயிலில் கண்டபடி சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு வந்தனர்.

இறுதியாக பதினேழு பசு மாடுகள் இருந்தன.உயிலில்,பசுமாடுகளில் இரண்டில் ஒரு பங்கு மூத்த மகனுக்கும் மூன்றில் ஒரு பங்கு இரண்டாவது மகனுக்கும்,ஒன்பதில் ஒரு பங்கு கடைசி மகனுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.பதினேழு பசு மாடுகளை இந்த விகிதத்தில் எப்படிப் பிரிப்பது?ஒரே குழப்பம்.இது சம்பந்தமாக அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு,அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடலானர்கள்.

அப்போது ஒரு பெரியவர் அந்தப் பக்கம் வந்தார்.பிரச்சினை என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அவர் அதைத் தான் தீர்த்து வைப்பதாகக் கூறினார்.அவர்கள் சம்மதம் தரவே அவர் சொன்னார்,''உங்களிடம் பதினேழு பசுக்கள்உள்ளன.என்னிடம் உள்ள பசு ஒன்றையும் இவற்றோடு சேர்த்துக் கொள்கிறேன்.ஆகப் பதினெட்டு பசுக்கள் இருக்கின்றன.

உயிலின் படி இரண்டில் ஒரு பங்கு,அதாவது ஒன்பது பசுக்கள் மூத்தவனுக்கு சொந்தம்.மூன்றில் ஒரு பங்கு,அதாவது,ஆறு பசுக்கள் இரண்டாமவனுக்கு சொந்தம்.ஒன்பதில் ஒரு பங்கு,அதாவது இரண்டு பசுக்கள் மூன்றாமவனுக்கு சொந்தம்.மூவருக்கும் பதினேழு பசுக்கள் கொடுத்தபின் ஒரு பசு மீதமிருக்கிறது.

அது நான் கொண்டு வந்த பசு.அதை நான் எடுத்துக் கொள்கிறேன்.இப்போது உங்கள் பிரச்சினை தீர்ந்ததா?''மூவருக்கும் மிக்க மகிழ்ச்சி.ஆனால் கடைசி வரை இது எப்படி சாத்தியமாயிற்று என்று அவர்களுக்குப் புரியவில்லை.உங்களுக்குப் புரிகிறதா?

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 11:31 am

ஏலம்
***********
பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவர் மதன் மோகன் மாளவியா.பல்கலைக் கழகத்தை ஆரம்பிக்க அவர் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்பட்டார்.

அவர் மனம் தளராது ஊர் ஊராகச் சென்று,செல்வந்தர்களையும்,பெரிய வணிகர்களையும் நேரில் சந்தித்துநிதி உதவி கோரினார்.இதற்காக அவர் ஹைதராபாத் நவாபையும் பார்த்து நிதி உதவி கோரினார்.நவாப் கோபத்துடன்,''என்ன தைரியம் இருந்தால்,என்னிடம் வந்து,ஒரு இந்துப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்க நிதி கேட்பாய்?''என்று கேட்டவாறே அவர் காலிலிருந்த செருப்பைக் கழட்டி மாளவியாவின் மீது எறிந்தார்.

மாளவியா ஏதும் பேசாமல் அந்த செருப்பை எடுத்துக் கொண்டு கடை வீதிக்கு வந்து,''இது நவாப் அவர்களின் செருப்பு.இப்போது இதை நான் ஏலம் விடப் போகிறேன்,''என்று கூவி அழைத்தார்.தகவல் நவாபுக்கு எட்டியது தன செருப்பு குறைந்த விலையில் ஏலத்தில் சென்றால் தனது கௌரவத்திற்கு இழுக்கு என்று எண்ணிய நவாப் உடனே தன ஆட்களிடம் ஒரு பெரிய தொகையைக் கொடுத்துவிட்டு செருப்பை ஏலத்தில் எடுக்கச் சொன்னார்.

மாளவியாவும் தன காரியம் பலித்தது என அந்தத் தொகையை பல்கலைக் கழக நிதியில் சேர்த்துக் கொண்டார்.

ஒருவனை முன்னேற விடாமல் தடுப்பது,அவனது திறமையின்மையோ,தகுதிக் குறைவோ கூட அல்ல.இனி தனக்கு வாய்ப்பே இல்லை,விடிவு காலமே இல்லை என்று ஒரு முடிவுக்கு வருவதுதான்.

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு பக்க கதைகள் ...!!! - Page 2 Empty Re: ஒரு பக்க கதைகள் ...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum