தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மறுமலர்ச்சிக்காக ஒரு புது முயற்சி!

View previous topic View next topic Go down

மறுமலர்ச்சிக்காக ஒரு புது முயற்சி! Empty மறுமலர்ச்சிக்காக ஒரு புது முயற்சி!

Post by நாஞ்சில் குமார் Thu Oct 23, 2014 6:37 pm

மறுமலர்ச்சிக்காக ஒரு புது முயற்சி! 24vl6va

நவரத்தினம்: ஷில்பி கபூர்

விருப்பப்பட்ட படிப்பு, படித்ததற்காக ஒரு வேலை என மும்பையை சேர்ந்த ஷில்பி கபூரின் வாழ்க்கையும் மிகச் சாதாரணமாகவே ஆரம்பித்திருக்கிறது. திடீரென அவர் மனதில் எழுந்த ஒரு சின்ன மாற்றம், லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் இருண்ட வாழ்க்கையில் ஒளி ஏற்றக் காரணமாகியிருக்கிறது!

மாற்றுத்திறனாளிகளை மாற்றாந்தாய் பிள்ளைகளாகப் பார்க்கும் சமூகப் பார்வையை சகித்துக் கொள்ள முடியாத ஷில்பியின் ஆற்றாமையில் உதித்திருக்கிறது ‘பேரியர் பிரேக்’ நிறுவனம்!

தடைகளைத் தகர்த்தெறிகிற அந்தப் பயணத்தின் தொடக்கத்துடன் பேச ஆரம்பிக்கிறார் ஷில்பி.‘‘படிப்பை முடிச்சதும் ‘ஷில்பி சில்க்ஸ்‘ என்ற பேர்ல பட்டுப்புடவை கடை ஆரம்பிச்சேன். டிசைனர் பட்டுப் புடவைகளையும் நகைகளையும் மும்பை மற்றும் லண்டன்ல வித்துக்கிட்டிருந்தேன். கம்ப்யூட்டர்ல உள்ள ஆர்வத்தினால புரோகிராமிங்லயும் நெட்வொர்க்கிங்லயும் கிளாஸ் எடுத்தேன். கூடவே அமெரிக்கன் கம்பெனியில பார்ட் டைம் கன்சல்டன்ட்டா வேலை பார்த்தேன்.

நான் வேலை பார்த்த இடத்துல என்னோட சூப்பர்வைஸர், பக்கவாதத்தால பாதிக்கப்பட்டவர் என்ற விவரமே எனக்கு ரொம்ப லேட்டாதான் தெரிய வந்தது. கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் அவர்கூட போன்லயே பேசிட்டிருந்த எனக்கு அவரோட பிரச்னை, அவரோட வேலைக்கோ, திறமைக்கோ எந்த வகையிலயும் தடையா இல்லைங்கிறதே பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. பக்கவாதம் வந்த ஒருத்தரும் பார்வை இல்லாத ஒருத்தரும் டெக்னாலஜிங்கிற விஷயத்தால எப்படிப்பட்ட அதிசயங்களை நிகழ்த்த முடியும்கிறது ஆச்சரியமா இருந்தது.

விண்டோஸ் 95 அறிமுகப்படுத்தப்பட்ட டைம் அது... ‘பார்வை இல்லாத அல்லது பார்வைத்திறன் கம்மியா உள்ள ஒருத்தரால கம்ப்யூட்டரை ஆபரேட் பண்ண வைக்க முடியுமா’னு யோசிச்சேன். அது தொடர்பான ஆராய்ச்சிகள்ல இறங்கினேன். இந்த விஷயங்களோட தாக்கத்தால, லண்டனுக்கு போய், பார்வையில்லாதவங்களுக்கான கம்ப்யூட்டர் பயிற்சி பத்தின ஒரு கோர்ஸ் படிச்சிட்டு, இந்தியா வந்ததும் அதை அறிமுகப்படுத்தினேன். முதல் கட்டமா பார்வையில்லாத ஒருத்தருக்கு என் வீட்லயே ஒரே ஒரு கம்ப்யூட்டரை வச்சு வாரத்துக்கு 2 மணி நேரம் கம்ப்யூட்டர் பயிற்சி கொடுத்தேன்.

‘இது மட்டுமே போதாது’னு என் ஃப்ரெண்ட் சொன்னதும் என் தேடல் அதிகமாச்சு. நிறைய என்ஜிஓக்களை அணுகி, பார்வை இல்லாதவங்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி கொடுக்க இடம் கேட்டேன். பில்கேட்ஸ் ஃபவுண்டேஷனோட நிதி உதவியோட ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தைத் தொடங்கி, பார்வையில்லாதவங்களுக்கு பயிற்சி கொடுக்கிற பயிற்சியாளர்களுக்கு நான் கத்துக் கொடுத்தேன். இந்த விஷயம் நிறைய பேர் வாழ்க்கையில ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி னாலுமே, பயிற்சி எடுத்துக்கிட்ட பலருக்கும் வேலை வாய்ப்புங்கிறது கேள்விக்குறியாவே இருந்தது.

அப்பதான் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிற மாதிரியான ஒரு கம்பெனியை ஆரம்பிக்கிற எண்ணம் வந்தது. ‘பேரியர் பிரேக் உருவானது அப்படித்தான்...’’ - நீள அறிமுகம் கொடுக்கிற ஷில்பியின் அடுத்தடுத்த முயற்சிகள் அத்தனையும் ஆச்சரிய அணிவகுப்பு. ‘‘மாற்றுத்திறனாளிகளுக்கு நம்ம சமுதாயத்துல சரியான அங்கீகாரம் இல்லை. அவங்களைப் பத்திப் பேசவோ, அவங்களோட கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்கவோ, அவங்களோட வேலை வாய்ப்பு பத்தி யோசிக்கவோ இங்கே யாருக்கும் பொறுமை இல்லை. உலகம் முழுக்க 90 கோடி பேர்... இந்தியாவுல மட்டுமே 9 கோடி பேர்மாற்றுத்திறனாளிகளா இருக்காங்க. அவங்களை எப்படி அலட்சியப்படுத்த முடியும்?’’ - கோபம் அடங்காமல் கேட்கும் ஷில்பி, அந்த அலட்சியத்தைத் தடுத்து நிறுத்தும் வழிகளுக்கான முதல் விதையையும் தானே நட்டிருக்கிறார்.

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் மொபைல் மற்றும் இணைய தளங்களை மாற்றி வடிவமைப்பது, கேட்கும்
திறனற்றவர்களுக்குப் புரியும் வகையில் சைகை மொழியுடன் கூடிய வீடியோ பதிவுகள், பார்வையற்றவருக்கு உதவும் வகையில் ஆடியோ வசதியுடன் கூடிய வீடியோ பதிவுகள், டிஜிட்டல் டாக்கிங் புத்தகங்கள்... இப்படி சீனியர் சிட்டிசன்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்படும் வகையில் தொழில் நுட்பங்களை மாற்றி வடிவமைத்துக் கொடுப்பதுடன், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கும் ஏற்பாடு செய்து தருவதே ‘பேரியர் பிரேக்கின் நோக்கம்.

‘‘அரசு நிறுவனங்கள், கார்பரேட் அலுவலகங்கள், என்ஜிஓ, கல்வி நிறுவனங்கள்னு உலகம் முழுக்க பலரோட இணைஞ்சு இயங்கிட்டிருக்கோம். இந்தியாவுலயும் வெளிநாடுகள்லயும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் நூலகங்களோட இணைஞ்சு கடந்த வருஷத்துல மட்டுமே 15 லட்சம் பக்கங்களை டிஜிட்டல் டாக்கிங் புத்தகங்களாவும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவான பிடிஎஃப் முறையிலயும் மாத்திக் கொடுத்திருக்கோம். இந்தியாவுலயே முதல் முயற்சியா நாங்கதான் இந்தச் சேவையை ஆரம்பிச்சிருக்கோம். திறமைக்கும் ஊனத்துக்குமான இடைவெளியை இணைச்சு, மாற்றுத்திறனாளிகளோட திறமையை உலகத்துக்கு அறிமுகப்படுத்த நினைக்கிறோம். அதுக்கான விழிப்புணர்வையும் பரவலா ஏற்படுத்திட்டிருக்கோம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை வசதிகளும் மாடிப்படிகள்ல ஏறி, இறங்கறதுக்கான பிரத்யேக வசதிகளும் எத்தனை முக்கியமோ, அதைவிட முக்கியம் அவங்க நடத்தப் படற விதம்... அவங்களும் மனுஷங்கதானே? மாற்றுத்திறனாளிங்கிறதால அவங்க வேற மாதிரி நடத்தப்படக் கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கோம். எங்களோட நிறுவனத்தைப் பொறுத்தவரை மாற்றுத்திறனாளிகள்கிட்ட அன்பா பேசவும் மீட்டிங்ல அவங்களை முதல் வரிசையில உட்கார வச்சு முக்கியத்துவம் கொடுக்கவும் வேலையாட்களைப் பழக்கியிருக்கோம். ஆனாலும், நான் எதிர்பார்த்த அளவு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த முடியாத வருத்தம் எனக்கு இருக்கு.

அரசு, சட்டத் துறை, கல்வித்துறைனு பல மட்டங்கள்லேருந்தும் இன்னும் நிறைய மாற்றங்களும் உதவிகளும் செய்யப்பட்டால்தான் இது சாத்தியமாகும். ‘ஐ.டி. ஹப் னு இந்தியாவைக் கொண்டாடறோம். அதை மாற்றுத்திறனாளிகளுக்கான ஹப்பாகவும் பேச வைக்கணும்...’’ மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தத் துடிக்கிற ஷில்பியின் முயற்சிகளுக்கு தலை வணங்குவோம்!

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum